தோல்வி என்னும் மாயை...
தோல்வி:
உலகத்தில் போராட தயங்குகிற
எல்லாரிடமும் சொல்லப்படாத, அல்லது சொல்லத் தயங்குகிற
மற்றும் நிதர்சன உண்மையானது தோல்வி..
இந்த உலகத்தில் தோல்வி என்ற ஒன்று உண்மையில்
இருக்கிறதா என்கிற என் சிந்தனை ஓட்டத்திற்கு பல அறிவாளிகள் அல்லது மேதைகளின்
எழுத்துக்களில் இருந்து என்னால் விடை அறிய முடிந்தது, உண்மையில் தோல்வி என்பது
மிகபெரிய மாயை மட்டுமே............
நான்
கண்ட ஒரு சிறிய வாக்கியம்
Am
not failured,
My success is just postponed....!
என்று
ஒரு வாக்கியம் என்னை அதிகம் ஈர்த்த ஒன்றாகும், ஏனெனில் இதன் அர்த்தம் நீங்கள் புரிந்து
கொள்ளும் போது நான் குறிபிட்டது போன்று தோல்வி என்பது மாயை என்று உங்களால் உணர
முடியும், இந்த உலகம் உங்கள் வெற்றியை
நீங்கள் ஒரு முறை இழந்தவுடன் அடுத்து நீங்கள் தொடர்ந்து போராடாமல் இருப்பதையே
தோல்வி என்று குறிக்கிறது, தோல்வி என்பது நீங்கள்
உங்கள் வெற்றியை விட்டுகொடுத்தல் என்பதே ஆகும்.......
இன்னும்
நீங்கள் ஆழமாய் இதை புரிந்து கொள்ளவேண்டுமானால், உங்கள் மொழியில் சில தோல்வியாலர்களின் வாழ்கையை
எடுத்துக்காட்ட முனைந்திருக்கிறேன்.
பின்வரும்
இவர்களே உலகின் மிக முக்கிய தோல்வியாளர்கள்..........
- ஆபிரகாம்
லிங்கன்
- ஸ்டீவ்
ஜாப்ஸ்
- தாமஸ் ஆல்வா
எடிசன்
- அப்துல்கலாம்
- வால்ட்
டிஸ்னி........
இன்னும்
பலர் இருகின்றனர் இந்த வரிசையில் ஆனால் இவர்கள் வாழ்கையே போதுமானது நீங்கள்
புரிந்து கொள்ள என்று எண்ணுகிறேன்..நீங்கள் யோசிக்கலாம் இவர்களை பொய் தோல்வியாளன்
என குறிபிடுகிரானே இவன் என்ன முட்டாளா என்று, பதிவை முழுதாய் படியுங்கள் உங்களுக்காய்
விளக்கம் காத்திருகிறது...........
ஆபிரகாம் லிங்கன்:
இன்று உலகின் மிகபெரும்
சர்வாதிகார நாடாக இருக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர், அடிமைகளின் சூரியன் ஆபிரகாம்
லிங்கன், தன் வாழ்வில் பெரும்
வெற்றியாளனாய் இன்று பரிமளித்தாலும், அவர் வாழ்கையின் கடைசி வரை அவரோட இருந்தது, நீங்கள் குறிப்பிடும்
தோல்விகள் மட்டும்தான், முதல்முதலில், அவர் தொடங்கிய சுய தொழில்
தோல்வியில் முடிந்தது, அவரின் முதல் சட்டமன்ற
தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். அவர் கொண்ட காதல் தோல்வியை தழுவியது, அவரது திருமண வாழ்கை பெரும்
துன்பமானதாகவே அமைந்தது, அவர் அதிபர் பதவி ஏற்ற
மறுநாளே நாட்டில் உள்நாட்டு போர், இதனை தோல்விகளை சந்திதவரைதான் நீங்கள்
வெற்றியாளன் என்று நினைகின்றிர்கள், அவர் இத்தனை தோல்விகளை தாண்டி போரடினதால்தான்
அவரை இந்த உலகம் வெற்றியாளனாய் கொண்டாடுகிறது,
ஸ்டீவ் ஜாப்ஸ்:
இன்று
ஆப்பிள் என்னும் நிறுவனம் உலக கணினி மற்றும், கைபேசி உலகின் கொள்வோட்சி கொண்டிருக்கும், மாபெரும் நிறுவனம், இதை நடத்தி காட்டியவர்
ஸ்டீவ் ஜாப்ஸ், சிறுவயதில் படிப்பை கண்டு
பயன்தொடியவர், தன் சொந்த நிறுவனத்தில்
தாயரித்த முதல் கணினி தனது வாடிக்கையாளர் சொன்ன நேரத்தில் கொடுக்க முடியாமல்
அவமானபட்டவர், தான் உருவாக்கிய ஆப்பிள்
நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றபட்டவர், மரண வியாதிகளுடன் தன் மரணம் வரை போராடியவர், இத்தனையும் தாண்டிதான் அவரை
நாம் வெற்றியாளனாய் கொண்டாடுகிறோம் காரணம், அவர் தான் தோல்வியை கண்டு நின்றுவிடாமல்
தொடர்ந்து போராடினார், என்பதே ஆகும்...
தாமஸ் ஆல்வா எடிசென்:
தன்
சிறுவயதில் இவனுக்கு படிப்பு வராது என்று சொல்லி தன் பள்ளியில் இருந்து வெளியேற்றபட்டவர், தன் அடிப்படை கல்விகூட தன்
தாயிடமே பெற்றவர், ஒரு முறை இரு முறை அல்ல 10000 முறை முயற்சி செய்து தோல்வி
கண்டு இறுதியில் தான் மின்விளக்கை கண்டுபிடித்தார் எடிசென்.
இன்று
அவரை தான் நாம் கண்டுபிடிப்புகளின் தந்தை என்று அழைக்கிறோம். காரணம் அவர் தோல்வி
கண்டவர் என்பதினால் அல்ல, தோல்வியை ஒரு பொருட்டாய்
மதிக்காமல் தொடர்ந்து போராடியதால்........
அப்துல்கலாம்:
இன்று
உலகம் அப்துல்கலாமை மிகபெரும் சாதனையாளராய் பார்பதற்கு காரணம், அவர் நிகழ்த்திய ஆணு ஆயுத
சோதனையும், ஏவுகணை சோதனைகளும் தான், உங்களுக்கு தெரியுமா, கலாம் அவர்களின் முதல்
ஏவுகணை சோதனையான அக்னி ஒன்று மிக பெரும் சோதனையை தழுவியது, ஆனாலும் அதில் நடந்த தவறுகளை
சரிசெய்து மீண்டும் போராடி சோதனையில் வெற்றிபெற்றார்.............
வால்ட் டிஸ்னி:
இன்று
உலகம் முழுக்க புகழ் பெற்ற டிஸ்னி சித்திர பட நிறுவனத்தை உருவாகியவர்தான் வால்ட்
டிஸ்னி ஆவார், அவரது ஆரம்ப நாட்களில் பல
பத்திரிக்கை நிறுவனத்திருக்கு தனது குறும்பு சித்திரங்களை, அனுப்பினார் ஆனால் அனைத்தும், சுவற்றில் வீசிய பந்த்தை போல
திரும்பி வந்த வண்ணம் இருந்தன, அதில் ஒரு நிறுவனம், இப்படி பட்ட கேவலமான
சித்திரங்களை எங்களுக்கும் அனுப்பவேண்டாம் என்றும் அவரை அவமானமும் படுத்திவிட்டது, அவரின் அத்தனை
அவமானங்களுக்கும் காரணமான அந்த சித்திரம் தான் பின்னாளில் உலகையே கலக்கிய மிக்கி
மௌஸ் ஆகும்.
இவரின்
விடாமுயற்சி தான் இன்று அவரை உங்கள் முன் வெற்றியாளனாக மாற்றியுள்ளது.
இப்பொழுது
சொல்லுங்கள் உண்மையில் தோல்வி என்பது வெறும் மாயை தானே, அது உங்கள் வெற்றியை
கெடுக்கும் வல்லமை கொண்டது என்று நீங்கள் இன்னும் நம்புவீர்களானால் அது உங்கள்
அறியாமையே காட்டும்.,
உங்கள்
தோல்விக்கு தோல்வியை கற்றுகொடுங்கள்...........!
இப்படிக்கு.,
நான்.........................!