Monday, 26 September 2016

என்னமோ போங்க

என்னமோ போங்க...!

                            என்னடா தலைப்பு இதுன்னு யோசிக்குரிங்களா..? அட ஆமாங்க இந்த சமுதாயத்தையும், நம்ம மக்க மனுசங்களையும் பாக்கும்போது அப்புடிதாங்க தோணுது...!    எப்படி என்ன பண்ணிடானு யோசிக்குரிங்கள... அதே தான் நானும் கேக்குறன், அப்புடி என்னதான் நாம பண்ணி கிழிசுட்டோம் சொல்லுங்க....! ஒன்னு இல்ல...! 


                             
அப்ப நம்மாளுங்க ஒன்னுமே பன்னலயானு கேக்குறிங்களா? பண்ணிருக்காங்க, youtube பார்வைகள்ள உலக சாதனை, ட்விட்டர் வலைதளத்துல, உலக அளவுல சில முக்கிய பிரச்சனைகளலாம் கொண்டுபோனது...! அட அதுக்கு அப்புறம் ஏன்பா இப்புடி பேசுறன்னு கேக்குரின்கால, கேக்க தோணுதே, ஏன்னா அவங்க கொண்டு போன  பிரச்சனையும், சாதனை புரிஞ்சு பார்த்த கானோளியும் அப்புடி, கபாலி முன்னோட்டத்தை 10 கோடி பேரு ஒரே நாளில் பார்த்து சாதனை, தெரி முன்னோட்டம், 15கோடி பார்வைகளை தாண்டி இந்திய அளவில் சாதனை, ட்விட்டரில் அஜித் தொப்பையை உலகஅளவில் கிண்டல் செய்து மானத்தை வாங்கிய விஜய் ரசிகர்கள், பதிலுக்கு, விஜய்க்கு முடிகொட்டுதுங்க என்று முக புத்தகத்தில், கிண்டல் பண்ணி பழி தீர்த்த அஜித் ரசிகர்கள், இது தான் நம்ம பயலுக உலகறிய நம்ம மானத்தை காப்பாற்றிய அற்புதமான செயல்கள்....! இதுக்கு கண்டிப்பா பெருமை பட்டு கொண்டாடித்தான ஆகணும்...!


                                     நம்ம ஊரு பெருசுங்களும், இதுக்கு ஒன்னும் சளைச்சவங்க இல்ல, என்ன ஐயா யாருக்கு வோட்டு போட்டிருனு கேட்டு பாருங்க, ஒன்னு அதிமுக சொல்லுவான் இல்லனா திமுக சொல்லுவான், அது இல்லையா அவன் தொகுதில இருக்க அவன் ஜாதி கட்சி பேர சொல்லுவான், ஏன் டா இன்னு அவனுகளுக்கே வோட்டு போடுரிங்கனு கேட்டா, ஒன்னு செத்துப்போன எம்ஜிஆர்காகனு ஒருத்தன் சொல்றான், இன்னொருத்தன் சாகபோற மனுஷன் பதவில சாகட்டும்னு சொல்றான், இன்னொருத்தன், நம்ம சாதி சனம் வந்தாதானைய, நாம நல்ல இருக்க முடியும் சொல்றான், உங்கள தெரியாமதான் கேக்குறன், செத்துபோனவருக்காக வோட்டு போடறனு சொல்றியே, அப்புடி போட்டதுக்கு, செத்துபோனவற்கு பக்கதுல உனக்கு என்ன சிலையாட வைக்கபோரைங்க, இல்ல நாளைக்கு சாவபோரவனு தெரிஞ்சு அவனுக்கு வோட்டேபோட்டுறியே, நாளைக்கு பதவிக்கு வந்து கொஞ்சநாள அவன் மக்கள் பிரச்சனைய பேச, சட்டமன்றத்துக்கு வருவான இல்ல, அவன் பிரச்சனைய பாக்க மருத்துவமனைக்கு அலைவானா, உன் சாதி அதுக்குனு வோட்டு போடறனு சொல்றியே, நாளைக்கு நீ சோத்துக்கு வழியில்லாம, தெருவுல பிச்சை எடுத்தா, உனக்கு 10ரூபா பிச்சை போடுறானான்னு முதலில் யோசிங்க டா....!  

                                   பாக்குற எடமெல்லா தமிழன் அடிவாங்குரன் அத கேக்க நாதியற்ற, அரசு, மத்தியுளையும், மாநிலதுளையும் நமக்கு, ஹிந்தி கத்துகுனாதான், நீ இந்தியன் சொல்றான், அவன் தேசபக்தன், எனக்கு எதுக்குடா ஹிந்தி நான் இருக்குறது தமிழ் நாடுதான சொன்ன எனக்கு மொழிவெறி புடிச்சுருக்கு, உச்ச நீதி மன்றம் சொன்னலும், காவிரி நமது சொல்றவன் தேசியவாதி, அவன்கிட்ட அடிவாங்கி பொத்திகிட்டு இருக்க நாங்க பிரிவினைவாதி, நல்லா இருக்குடா உங்க நியாயம், அப்துல் கலாம், இந்தியன், எ.ஆர்.ரஹ்மான் இந்தியன். அஸ்வின் ரவிச்சந்திரன் இந்தியன், ஆனா, நாகை மீனவர்கள், ராமேஸ்வர மீனவர்கள்,  தமிழர்கள், நாங்க வாய தொறந்தா வன்முறை, எங்க வீர விளையாட்டு, உங்களுக்கு மிருகவதை, ஏன் ஊருல என்ன வெளையாடனும், வேலையாடகூடாதுன்னு  முடிவெடுக்க கண்ட நாய்க்கெல்லாம் உரிமை இருக்கு, எங்களுக்கு இல்ல, ஒருவேளை இந்த இந்திய தாய்க்கு வாய் இருந்த சொல்லி இருக்கும் டா அவல பெத்தது என் தமிழ் தாய்ன்னு, இன்னும் சகாதொரதுவதூடையே நாங்க கை நீற்றோம், ஆனா நீங்க அத பயன் படுத்தி, மறுபடி மறுபடி உங்க பெரம்பாலையே அடிகுரிங்க, 

                                       
  இந்தியால எல்லா மாநிலதுளையும், விவசாயி கடன் தொல்லையால சாவுரன், ஆனா தமிழ்நாட்டுல மட்டும்தான்டா விவசாயமே சாகுது, கெயில் பைப், மீதேன் வாயு, நுட்ரினோ, இப்புடி எங்க விவசாயத அழிக்க கங்கணம் கட்டிக்கிட்டு வந்து நிக்குரிங்கலே டா..! தெரியாமதான் கேக்குறோம், நாங்களும், எல்லாரையும் போல உங்களுக்கு வரிகற்றோம், இன்னு சொல்ல போனா, நாங்க ஒழுங்காவே வரி கட்றோம், நாலு நடிகர்களோட, பிரதமர் போஸ் குடுத்து ஆரம்பிட்சுவேச்ச, தூய்மை இந்திய எழவு வரிவரைகும், ஏன்னு கேக்காம கட்டிக்கிட்டு வரோம், ஆனா நாங்க மட்டும், இந்தியர்கள் ஆகா முடியல, தமிழர்காலாகவே உங்க வோட்டுமொத்த மக்கள், ஊடகம் எங்கள பாக்குதே ஏன்,,,?

                                                     இந்தியாவையும், ஹிந்தியர்கள மட்டும் கொரசொல்லி என்ன பிரயோஜனம், நாம என்ன ஒழுங்கா...? வோட்டுக்கு 500-1000, இதுல, செத்து போன பாட்டி உயிரோட இருக்குனு சொல்லி அதுக்கும் ஒரு அமௌன்ட் தேத்துறது, தெருக்கு தெரு, டாஸ்மாக் இருக்குரதாலதான் இவனுக குடிக்க போரனுங்கலாம், எங்க தெருல கூட ஒரு நூலகம் இருக்கும், ஆனா ஐயோ நூலகம் இருக்கேனு, ஒரு நாயும் படிக்கவர்லையே, அட ச்சி என்ன கேவலமானவங்க டா, கர்நாடககாரன் திட்ட தெரியுது, அதுக்கு பஞ்சாயத்து, பேச ரஜினி போகலன்னு, கோவம், நடிகர் சங்கம் போரடலைன்னு வருத்தம், நான் தெரியாமதான், கேக்குறான், ரஜினிய இப்ப பிரதமரா இருக்காரு, இல்ல நடிகர் சங்க செய்சு ஆட்சி நடத்துதா, அரசாங்கத்த எதிர்த்து, கேள்வி கேக்க வக்கு இல்ல, இளிச்சவாயன் சினிமாகாரன் சொன்னது எரிமிதிக தோனுது, நல்ல வீரம் டா நமது.  ஆத மூடி கள்ள நட்டு ஊருக்கு ஊரு வீடுகட்டிடோம், இப்ப மழை பெஞ்சா, ஐயோ வெள்ளம் வந்துடுசெனு புலம்பவேண்டியது, தாமிரபரணி பாதில கோல கம்பனிகாரன் திருடுறான், அவன் தண்ணிய உரிஞ்சதுகு அப்புறம் இருக்குற மணல இன்னொருத்தன் திருடுறான், அப்புறம் விவசாயத்துக்கு தண்ணி எங்க இருந்து வரும், காமரஜர்க்கு பிறகு, இந்த மண்ணுல எத்தனை, ஏறி தூர்வரபற்றுக்கு, எத்தன புது குளங்கள் வேட்டபற்றுக்கு, எத்தனை அணைகள் கட்ட பற்றுக்கு, தெற்குலையே அதிகமா மழை பொழியுறது நமக்குதான், ஆனா அத சேர்த்து வெச்சு, விவசாயத்துக்கு பயன்பட்ரமாதிரி இதுவரைக்கும் நாம என்ன செஞ்சுருகோம், அதிக பட்சம், எவனோ போட்ட மீமீ பகிர்ந்துருப்போம், அத தவிர...? இவ்ளோ பேசுறியே நீ என்னடா பண்ணணு தான கேக்குறிங்க, நானும் ஒன்னு பண்ணலைங்க, ஆனா ஒண்ணுமே பண்ணாம செத்துடுவேநோன்குற பயதோடவே வாழ்ந்துகிட்டு இருக்கன்...!

                                                 
   இலட்சக்கணகான நம் ரத்த உறவுகள் சாகும்போதும் இப்புடி வாயமூடிக்கிட்டுதான் இருந்தோம், பக்கத்துக்கு மாநிலத்துல அடிக்கும் போதும் இப்புடியேதான் இருக்கோம், ஆனா நாளைக்கு, எறங்கி அடிக்கணும் சொல்லல எதாவது செய்யணும் யோசிக்குரன்....!  நாளைக்கு காலைல வேளைக்கு போரவரைகும்தான் யோசிப்பனு நினைக்குறன்...! என்ன  பண்றது மறதி ஒரு தேசியவியாதி....!

       என்னமோ போங்க பாஸ்...!


                      
                                                                                                                              நான் விஜய்.....!

Saturday, 16 July 2016

The Walk Movie view

பார்த்ததில் ரசித்தது 





The Walk

                       சில திரைபடங்களை காண்பதற்கு முன்பு நமக்கு பல  கேள்விகள் இருக்கும், இதை பார்க்கலாமா வேண்டாமா? பிறர் புகழ்வதற்கு ஏற்றார் போல் அத்தனை நன்றாக இருக்குமா? என்பன போல...!
         
இந்த படம் எனக்குள் அப்படி பல கேள்விகளை எழுப்ப தவறவில்லை, அதற்கு முக்கிய காரணம், கயிற்றின் மேல் நடக்கும் ஒருவர் பற்றிய கதை அதில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருந்துவிட போகின்றது என்கின்ற என்னுடைய புரிதல்தான், மிக சரியாக சொல்லவேண்டும் என்றால் , மிக தவறான புரிதல்.

நமது சிறுவயதில் நாம சிலமுறை circus சென்றிருப்போம், ரசித்திருப்போம் ஆனால் அந்த வாழ்வியலுக்குள் பயணிக்கும் எண்ணமும், தருணமும் நமக்கு வாய்த்திருக்காது, ஆனால் இந்த கதையின் நாயகன், கயிற்றில் மேல் நடக்கும் அவர்களது அசாத்திய திறமைகண்டு, தானே அதை சுயமாக கற்க முயல்கிறான், பின்பு என்ன, அவன் வாழ்க்கையாகவே அது மாற வீட்டின் எதிர்ப்பினால்  வெளியேற்றப்படுகிறான், பின்பு அந்த circus நடந்தும் பெரியவரிடம் முறைப்படி கற்க, அவர்களுக்குள் ஏற்படும் சிறு மனவருத்தத்தால் அங்கிருந்தும் வெளியேறுகிறான், தெருவோரங்களில் வித்தை காட்டுபவனாக புது பரிமாணம் எடுக்கும் அவனுக்கு ஒரு பெண் தோழியும், கூடவே ஒரு லட்சிய கனவும் கிடைக்கிறது, அது அப்பொழுதுதான் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ட்வின் டவர் என்று அழைக்கப்படும் அமெரிக்கா வர்த்தக சபை கட்டிடம், உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்னும் பெருமைக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம்... இந்த இரண்டு கட்டிடங்களுக்கு நடுவே கயறுக்கட்டி அதில் நடக்க வேண்டும் என்பதையே தனக்குண்டான கனவாக மாற்றிக்கொண்டான்.

அந்த கனவில் அவன் எப்படி வெற்றிபெற்றான் என்பது மீதி கதை, இன்னும் தெளிவாக சொன்னால் அதுதான் அந்த படத்தின் கதை கரு, எனவே அதை நீங்கள் பார்த்து உணர உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்...  ஒருவனது கனவு அவனை எந்த நிலையுளையும் அவனை போராட வைக்கும், அது எத்தனை ஆபத்தானதாக இருந்தாலும் சரி, அவனுக்கு அதில் இருக்கும் திருப்தி மட்டுமே பிரதானமானதாக இருக்கும், என்பதற்கு இப்படம் மிக சிறந்த உதாரணம், படத்தின் மிக சிறந்த தருணங்களில் ஒன்று எதிர்மறையான சிந்தனைகளை அவன் எப்போதுமே ஒதுக்கிவைத்தே செயல்படுவான், அதினாலே, இந்த படத்தின் ஆரம்பம் தொடங்கி, நாயகனின் நம்பிக்கை நமக்குள்ளும் சற்றே பூத்திருக்கும், 

ஒரு சாதாரண கயிற்றின்மேல் நடப்பவனின் கதையில் இதை சுவாரஸ்யங்களா...! என்று நம்மை வியக்கவைத்த இயக்குனருக்கும், திரைக்கதை வடிவமைப்பாளருக்கும் நிச்சயம் நாம் நம் பாராட்டை தந்தே ஆகவேண்டும், பில்லிப்ஆகவே வாழ்ந்துருக்கும் அந்த நாயகன், அவனுக்கு தோல்குடுக்கும் நண்பரகள் கூட்டம், அதனை அருமையான நடிகர் தேர்வென்றெ கூறவேண்டும், ஒவ்வொரு நொடியையும் ரசிக்கவைத்த பின்னிசை கோர்ப்பு, அக்கதையை கவிதையாய் மாற்றியது என்று சொன்னால் நிச்சயம் போய் அல்ல, அத்தனை தெளிவான நிழற்பட வடிவமைப்பு, ஒளிப்பதிவு, படத்தின் உணர்ச்சிகளை நம் கையில் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது,  

இறுதி காட்சிகளில் கயிற்றோடு அவன் கொண்டுள்ள காதல், அத்தனை ரம்யமாக வெளிப்படுகிறது, கனவின் நிறைவேறும் தருணம், எந்த தடையும் இன்றி, இறுதியில் அதில் பயணிக்கும்போது ஏற்படும் வெற்றிக்களிப்பு, அத்தனையும் சுமந்து தன் நடிப்பின் மூலம் நம் மூலையில் சேர்க்கும், கதையின் நாயகன், கைது செய்து கீழேகொண்டு வரும் தருணங்களில், அவர் அனுபவிக்கும் அந்த பாராட்டுக்கள், அவரின் வெற்றியின் சத்தமாய் நம் காதுகளுக்குள் ஒலிக்க செய்கிறார் இயக்குனர்...

மொத்தத்தில் "தீ வால்க்" தன்னம்பிக்கையோடு கனவை நோக்கி ஓடும் ஒவ்வொரு மனிதனுக்கும், இன்னொரு நம்பியாகையாளனின் உண்மை கதையின் உத்வேகமாக அமையும்...


Monday, 16 May 2016

கிறுக்கல்கள்

தொலையாத கனவுகள் 



ஏதோ ஒரு முறை, ஒரு சீண்டல் பார்வையில், விழ்த்திய என்னை, மீண்டும் எழுப்பாமல் போனதேன்னடி....!
இதயம் தவித்து, துடிதிருக்கும்படி நான் செய்த தவறுதான் என்ன என்று கொஞ்சம் சொல்லடி...!
கண் இமையில் கருத்தொன்றை மறைத்து, அதை என்னிடம் சொல்லாமலே சென்றதேனடி....!
தோணாமலே, என் உள்ளகீற்றை பிரித்து, அதில் காதல் தேனை மட்டும் உறிஞ்சு, விட்டு சென்றதேனடி...!
இதழ் பசித்து காதல் சொல்லவரும் வேளையிலே, நா கடித்து, அதை மறைக்கும் சோதனை ஏனடி...!
விட்ட இடம் தொடரும் ஏன் காதலும், தொட்டவுடன் மலரும் உன் பெண்மையும், இணைவதெப்போது சொல்லடி...!

காத்திருப்பேன் உன் காதலுக்காக...!
                                 என் காலம் முடிந்தபின்னும், இம்மண்ணில் உரமாய்...!


                                                                                                             !...............நான் விஜய் 

Sunday, 15 May 2016

Charlie Movie View







சில நேரங்களில் சில படங்கள், படம்என்பதை தாண்டி ஒரு அனுபவமாக ஒட்டிக்கொள்ளும், அப்படி எனக்குள் ஒட்டிக்கொண்ட ஒரு படம் முன்பு நண்பன் இன்று சார்லி....!
பார்வதி அந்தபெயர்தெரியாத, உருவம் தெரியதா ஒருவனை தேடும்போது, நானும் இணைந்து கொண்டேன், எனக்குள் நான் வெகுநாட்களாய் ஒலி[ளி]த்திருக்கும் அந்த நபரை தேடுவதற்காக,
பிறருக்கு உதவுவது, அல்லது மற்றவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது, நாம் பிறருக்கு செய்யும் உதவிமட்டும் அல்ல, நமக்குள் ஒளிந்திருக்கும் நம் ஆத்மதிருப்தியை வெளிக்கொணரும் ஒரு முயற்சி அவ்வளவே, சார்லி பிறரின் சிரிப்பில் தன் வாழ்கையை திருப்தி படுத்திகொள்ளும் ஒரு மிகஎளியமனிதன், நான் ஆகாமுயற்சி செய்து கொண்டிருக்கும், ஒருஅசாதாரண சாதனை.....!
இது நிச்சயம் விமர்சனம் அல்ல....!
எனது ஏக்கங்களின் பதிவு அவ்வளவே....!

Tuesday, 5 April 2016

Rabne Banathi Jodi Movie View

பார்த்ததில் ரசித்தது....!


ரப் நே பனாதி ஜோடி...

ஏதோ ஒரு படம் பார்ப்போம் என்றும் கணினியில் உள்ள திரைப்பட வரிசைகளில் சிலநாட்களாய் பார்காமலே வைக்கபட்டிருந்த படம்தான் "ரப் நே பனாதி ஜோடி"      என் நண்பன் பெரியதாக இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியது நினைவுக்கு வந்தது.. இதுதான் நான் படம் பார்க்க தொடங்கி கதை..

மிக எளிய கதை ஆனால் ஒரு திரைப்படமாக சொல்ல நிச்சயம் எளிதான கதை அல்ல, திரைகதை கொஞ்சம் சொதப்பினாலும் கதையின் கருவே கலைந்துவிடும்.. ஆனால் இயக்குனர் அங்குதான் தான் தன் கொடியை உயர்திபிடிதிருகிறார் என்றும் சொல்லும் அளவுக்கும் அற்புதமான திரைகதை அமைப்பு, அதிலும் காட்சி படுத்திஇருக்கும் முறை மேலும் சிறப்பு...!

தானி[அனுஷ்கா ஷர்மா] சந்தோசத்தின் உச்சத்தில் தான் காதலித்தவனையே திருமணம் செய்துகொள்ளும் சொந்தசதில் இருக்கிறார்... தன் ஆசிரியர் மகளான தானியின் திருமணத்திற்கு வந்து சேர்கிறார் சுரிந்தர்[ஷாருக்கான்] 
எதிர்பாராத விபத்தில் மாப்பிள்ளை விட்டில் அனைவரும் ஒரு விபத்தில் மரணிக்க.. இதை அறிந்த தானியின் அப்பாவும் நோய்வாய் படுகிறார் பிறகு, தன் மாணவனான சுரிந்தரிடம் தன் மகளை திருமணம் செய்யுமாறு கேட்க... அவரும் சம்மதிக்க.. தானியும், சுரிந்தரும் அவரின் அந்த இறுதி ஆசையை நிறைவேற்றி வைக்கின்றனர்... பின்புதான் கதையே தொடங்குகிறது... சிரித்து பேசி சந்தோசமாய் இருந்த தானி மீள முடியாத சோகத்தில் இருப்பதை பார்க்கும் தானி அவள் இயல்புநிலைக்கு கொண்டுவந்து தன்னை காதலிக்ககவைக்கும் போராடும் கற்பனைதான் இந்த திரைப்படம்

சுரிந்தர் என்னும் ஒருவர் தன் கணவர் என்பதைத்தாண்டி எந்த ஈர்ப்பும் இல்லமால் வாழத்தொடங்க முடிவு செய்கிறாள் தானி... முதல் பார்வைலையே அவளை காதலிகதொடங்கிய சுரிந்தர் அவளை பழைய நிலைக்கு கொண்டுவந்து தன் காதலை புரியவைக்க... அவள் ரசித்து பார்த்த ஒரு திரைபடநாயகனை போல் தன்னை மாற்றிக்கொள்ள, வந்திருப்பது தன்கணவன் என்றுதெரியாது... வேறுஒருவராக நினைத்து பழகதொடங்குகிறாள் தானி... இதையே பயன்படுத்தி அவள்மீது கொண்டுள்ள காதலையெல்லாம் கொட்டித்தீர்க்க தொடங்குகிறான் சுரிந்தர்... இறுதியில் அவள் காதலை சுரிந்தர் எப்படி பெற்றான், அந்த வேடம் என்ன இன்னல்களை கொண்டுவந்தது என்பது மீதிகதை...!

ஷாருக்கான் சுரிந்தராக நம்மை அனுதாப படுத்தி பின்பு, ராஜ் வேடத்தில் கலக்குகிறார், இடைவேளையில் ராஜ் தன் காதலை சுரிந்தர் சொல்லி பெருமைப்படும்போதும், தானி சுரிந்தரை விரும்பாமல் ராஜ் விரும்புவதை நினைத்து வேம்பும்போது நடிப்பில் பின்னி எடுக்கிறார், ராஜ் காதலிபதாக தானி சொல்லும்போது தன்னுள் இருக்கும் சுரிந்தரை மறைத்து ராஜ் மாறி பேசும் தருணம்... அந்த வலியை நமக்கும் உணரவைத்துவிடுகிறார், தன்னால் வெளிபடுத்த முடியாத காதலுக்கு வேஷமிட்டு அதை ரசிக்கும்போது, அந்த வேஷம் தன்னையே வெற்றிகொள்கிறது என்னும்போது வலிகொளோடு சிரிக்கும்போதும்... ஷாருக்கான் நடிப்பில் தன்னை யாரென்று மீண்டும் ஒருமுறை நிருபித்துவிடுகிறார்....

மிக சிறந்த காதல் திரைப்படமாய்... நான் பார்த்ததில் ரசித்தது....


                                                                                                     நான் விஜய்............!

Thursday, 31 March 2016

நாளை நமதே





        நாளை நமதே...!


                    இன்னும் ஒரு மாத காலம்தான் மீண்டும் அடுத்த 5 வருடம் நம்ம தலைஎழுத்த முடிவுபண்ண... என்ன பண்ணபோறோம்....! இதுவரைக்கும் இந்த நாட்டை மாத்திடலாம் கிழிசுடலம்லா வெட்டி பேச்சு பேசி பொழுத கழிச்சாச்சு.. அடுத்து.. அட போப்பா இவனுகளுக்கு வோட்டு போட்டு நா மறுபடியும் முட்டாள் ஆகா விரும்பல பேசமபோய் ஏன் வேலைய பாக்க வேண்டியதுதான் அப்புடின்னு கேளம்பிடலாமா...! கேளம்பிடலாம் ஆனா அந்த முட்டாளுங்க நம்ம வோட்டையும் சேர்த்து போட்டுட்டா என்ன பண்றது... கழுதை பொய் தொலையுதுன்னு விற்றவேண்டியதுதான்... கரெக்ட்டு போய் தொலையட்டும் எவனோ ஒருத்தன் வாழ்ந்துட்டு போட்டும்னு விட்ருவோம்....!


இப்படி எதாவது யோசனைல இருந்திங்கான... இது உங்களுக்காகத்தான் மறக்காம ஒருதடவ படிச்சுடுங்க... ! உங்களுக்கு [புதுசா கல்யாணம் ஆகுது... 
பொண்ணு சும்மா அனுஷ்கா மாதிரி அப்புடி ஒரு அழகு...! நெறைய கனவுகளோட முதல் இரவு அறைக்குள்ள நுழைஞ்சா அங்க ஆர்யா மாதிரி ஒரு பையன் உக்காந்துகிட்டு.... "பாஸ் உங்களுக்கு பதிலா நா இன்னைக்கு முதல் இரவு முடிசுகுறேனு சொன்ன... என்ன பண்ணுவிங்க...! அட போப்பா வேற வேலை இல்ல நீயே பாத்துகனு விற்றுவின்களா இல்ல... செவ்வுலு மேலையே நாலு வெச்சு ஊரக்கூட்டி பஞ்சய்யத்து பண்ணுன்வின்களா...? 


இப்படி கேட்டதுக்கு என்ன மன்னிச்சுடுங்க....! ஆனா வோட்டு போற்றங்கறது, நம்ம உரிமை மட்டும் இல்ல நம்ம கடமையும் கூட..., ஒரு குடிமகனா ஒவ்வொரு 5 வருசமும் இத நாம தவறாம செய்ஞ்சு நல்ல தலைவர்கள தேர்ந்தெடுக்கணும்...! அப்புடி நிக்குற வேட்பாளர்கள்ள உங்களுக்கு யாரையும் புடிக்கலையா... நோட்டாகு வோட் பண்ணிடுங்க...! ஆனா நீங்க வோட்டுபோடாம இருந்து ஒரு கள்ளவோட்டுக்கு வழிகுடுதுடாதிங்க......!


                                                                                                            நான் விஜய்............!