Tuesday, 7 March 2017

பெண்மை

பெண்மை 


                                        சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது நூறுமடங்கு உண்மை.. பெண் என்பவள் நம் தமிழ் மொழிப்போல், எப்பொழுதும் அவளால் தனித்து இயங்ககூடும்... ஆனால ஆண் அப்படிப்பட்டவனல்ல, ஏதோவொரு வகையில்.. எங்கோ ஒரு இடத்தில் நிச்சயம் அவன் ஒரு பெண்ணை சார்ந்தே ஆகவேண்டும். பெண் ஒரு வியத்தகு சக்தி... கொடுமை என்னவெனில் பல பெண்களே இதுவரை அதை உணர்ந்ததில்லை... அறம், அன்பு யாவும் பெண்ணிடமே தொடங்குகிறது... அழகு மொத்தம் அவளுகானது... அறிவு அவளிடமே அடங்குகிறது...!
                              
                                        பெண்ணின் புனிதம் அறியாத ஆண்.. இவ்வுலகின் சாபம்.. இன்னும் தன்னை ஆணுகுநிகறாய் மாற்ற துடிக்கும் பெண்களின் அறியாமை என்பது கொடுமை... பெண்ணே ஆணாவால், துணையற்று நிற்கும் தன் குழந்தைகளுக்கு... ஆனால் எத்தருணத்திலும், ஒரு ஆணால், தாய்மையின் இனிமையை தந்திட இயலாது... உலகின் கடைசி நிமிடம் வரை முகம் சுழிக்காமல் உழைக்கும் ஒரே உழைப்பாளியும் பெண்ணே ஆவாள்... கணவன், தாய் தந்தை, பிள்ளைகள் என எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், அதனையும் பகுத்தறிந்து செயலாற்றும் ஒவ்வொரு பெண்ணும், ஒரு தலைமைத்துவத்தின் அதிகாரபுத்தகங்கள்...

                                          தன் ஆசை கொன்று குடும்பம்காக்கும் அவளை விட சிறந்த தியாகி வேறு யார் இருக்க முடியும்... பாற்கண்ட பாரதி தன் வழிதனை பாட்டில் கரைத்தான், உலகம் மறந்தான்... ஆனால் அவன்கண்ட கண்ணம்மாலோ அவன் குடும்பத்தை செழிக்க செய்தால்... அவன் கனவு காண அவன் பொறுப்புகளை தன் தோளில் தூக்கி சுமந்தால்... உலகின் கடினம் என்பது பாரதியாய் வாழ்வதல்ல... அவன் மனைவியாய் வாழ்வது... எத்தனை வேதனை சுமந்தாலும்... தன்னை சார்ந்தவனை விட்டுகொடுகாதவள் மனைவி... ஆயிரம் பேர் எதிர்த்தாலும் அவனுக்காய் உடன் நிப்பால் தாய்... எத்தனை புகார்கள் பகர்ந்தாலும், அவன்மேல் கொண்ட நம்பிக்கையில் சற்றும் பின்வாங்கமட்டால் சகோதரி... 

                                           இன்று உலகம் இயங்க ஆண் ஓடினால்.. அவன் இயங்க சாட்டை சொடுக்குகிறாள் பெண்... வளைந்து நெளிந்து வாழும் வாழ்வில் அவள் நதியாவாள்... உள்ளம் கொண்ட உயரத்தில் அவள் சிகரம் ஆவாள்... அன்பு நிழல் பரப்புவதில்... அவளே மாமரமும் ஆவாள்.. கற்ப்பு நெறியில் தீயாவாள்... கொடை பார்வையில் நிலவாவாள்... உலகின் யாவும் அவளே... பெண்மை போற்றிட வேண்டியது மட்டுமின்றி கொண்டடப்பட வேண்டியது... பெண்மை வெறும் வார்த்தையல்ல.. அது உலகத்தின் அச்சாணி.. அதை [பிடிங்குட எண்ணுவது.. உலகவோட்டத்தை  நிறுத்துவதற்கு சமமாகும்... 

                                           அவள் கலவி கருவியல்ல.. காக்கபடவேண்டியவள்... அவள் வேலைகாரியல்ல.. நம்வேலைகளை நமக்காய் செய்யும் அக்கறை கொண்டவள்...  மண் மாறினால் மலர்கூட மாண்டுபோகும்.. ஆனால் இவளோ இல்லம் விட்டு இல்லம் வந்து அதையும் வசந்தம் ஆக்குகிறாள்... அவள் இடும் சண்டைகள்.. அவள் அகங்காரத்தின் வெளிபாடள்ள.. எதோ ஒரு வகையில் உங்கள் அன்பை இழந்ததின் வலி.. அவள் காட்டும் காதல்.. வரமாகும்.. அவள் தாய்மை தெய்வீக தன்மை கொண்டது,,, பெண்மை அது அற்புதம்..


                                           தாய்மையின் பிறப்பிடமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்...  


                                                                                                ................நான் விஜய்