சிதறும் மனிதம்
ஓர் இன அழிப்பின் வலியை, தமிழனை தாண்டி பெருதாய் இங்கு யாரும் உணர்ந்திட முடியாது என்றே தோன்றுகிறது... ஏனெனில் ஏதோ ஒரு மூலையில் கண்ணிற் சிந்தும் ஒரு குழந்தையின் புகைப்படம், அந்த நாட்டிற்கான அமைதியை பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணத்தை சும்மக்க செய்துவிட்டது ஒவ்வொரு தமிழனையும்... இவ்வுலகம், என் இலங்கை சகோதரனை, சகோதரியை, என் வீட்டு சிறுபிள்ளைகளை, கொன்றுகுவிக்கும்போது வேடிக்கை மட்டுமே பார்த்தது, ஆனால், இன்று உலகின் எந்த மூலையில், எந்த குழந்தை அழுதாளும், அதற்கான முதல் எதிர்ப்புக்குரலை பதிவான் தமிழன்... அப்படித்தான் இன்று அந்த சிரிய நாட்டு குழந்தைகளின் வலியை கண்ட ஒவ்வொரு தமிழனும், தன் பிள்ளை வலியில் துடிப்பதுபோல் உணர்கிறான்...
என்னதான் நடக்கிறது சிரியாவில் :
சிரியாவில் நடக்கும் படுகொலைக்கு காரணம், அந்த நாட்டின் போராளிகள், அரசாங்கம் என்றும் என்ன சொன்னாலும், பின்னால் இருப்பது இரண்டு சர்வாதிகார பெரும் பணக்கார நாடுகளின் திருட்டுத்தனம் மட்டுமே...
ஆம், அமெரிக்கா மற்றும் ரஷ்சியாவின் சதுரங்க வேட்டைதான் இந்த மனித உயிர்களை காவுவாங்கும் கோரம்... எண்ணெய் வளம் மிக்க நாடுகளான ஈரான், ஈராக், அரேபியா, சிரியா போன்ற நாடுகள் முழுக்க இஸ்லாமியர்களால் நிறைந்தது, இந்நாடுகளை கட்டுக்குள் கொண்டுவந்து, அவர்களின் எண்ணெய் வளங்களை சூறையாடும் பெரும் திட்டத்தின், சிறு பங்கிடுதான் இந்த சிரியா போர்,
அரபு நாடு சன்னி பிரிவு முஸ்லிம்களை கொண்டது, ஈரான் சியா பிரிவினை உடையது, இவர்களின் இந்த பிரிவினையை பயன்படுத்தி ஆட்டத்தை தொடங்கியது அமெரிக்கா, ஈரானுக்கும் அரபுக்கும், இருக்கும் பனிப்போரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பற்றவைத்துக் கொண்டே இருந்தது... அமெரிக்காவின் ஆதரவு என்கிருகிறதோ அதற்க்கு நேர் எதிராக செயல்படுவதையே தனது லட்சியமாய் கொண்டுள்ளது ரசியா... அவர்களும் நெடுங்காலமாய் இந்த விளையாட்டுகளை கவனித்தே வந்தனர்..
அரேபியர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டது அமெரிக்கா, உடன் அவர்களுக்கு பாதுகப்பாக இருப்பதாக கூறி, அவர்களின் மொத்த எண்ணெய் வளத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் வந்தது... இதனிடையில் ரசியா தனது நேசக்கரத்தை ஈரானுக்கு கொடுத்தது... இது அவர்களின் தொழில் போட்டி என்பதை தாண்டி , தன் பலத்தை நிருபிக்கும் களமாக மாற்றப்பட்டது.. இடையில் இருக்கும் சிரியா சன்னி பிரிவு மக்களையும், சியா பிரிவு ஆட்சியாளர்களையும் கொண்டது, எனவே சிரியா அவர்களின் பலம் நிருபிக்கும் களமாக மாற்றப்பட்டது, சிரியாவில் ஏற்க்கனவே அதிகாரத்தில் இருந்தவர்களின் மேல் மக்களுக்கு இருந்த கோவத்தை, அரபு தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது, அங்கு இருக்கும் சில இயக்கங்களை தூண்டிவிட்டு, புரட்சிகளையும், வன்முறைகளையும் நிறுவ தொடங்கியது அரபு.
2011-மார்ச் 15 சிரியா அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சி ஏற்ப்பட்டு அது ராணுவத்தால் அடக்கப்பட்டது, அதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், பலர் பெரும் அளவில் தாக்குதலுக்கு உள்ளானர். இதுவே இன்று நடக்கும் சிரியா போரின் ஆரம்ப புள்ளியாகும். இதன் பின், ஈரான் சிரியா அரசாங்கத்திற்கும் ஆதரவாக களத்தில் இறங்க, அரபு கொஞ்சம் தைரியமாகவே புரட்சியை தூண்டும் பணியில் இறங்கியது, இதில் உண்மை என்ன வென்றால், இந்த போரை தொடங்கியதும், நடத்துவதும், சிரியாவோ அல்லது அரபோ, ஈரானோ அல்ல, உலகின் தங்கள் வல்ல ஆதிக்க சக்தியை நிருப்பிக்க எதையும் செய்ய தயங்காத அமெரிக்காவும், ரசியாவும் தான்...ஈரான் மூலமாக சிரிய அரசாங்கத்தை தூண்டுவது ரசியா, சிரியா மக்களை தூண்டுவது அரபு வேடம் போட்டு கொண்டுள்ள அமெரிக்கா, சிரியா யார் வசம் வருகிறதோ, அவர்களால் எளிதில் சிரியா கடல் வழியாக எண்ணெய் உட்பட அனைத்தையும் பிறநாடுகளுக்கு வாணிபம் செய்ய முடியும், மிக முக்கியமாக யார்க்கும் அடங்காத இஸ்ரேலை மிரட்ட அதன் பக்கத்தில் இருக்கும் இராக், சிரியா அவர்கள் வசம் இருப்பது மிக அவசியமாகும். இவை எல்லாவற்றிகாகவும் தான் இந்த மத போர் மாயை தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது.
ஐ.நா. அறிக்கை படி ஜூன் 2013 நடந்த போரில் சிரியாவில் ஏறத்தாழ 1லட்சம் பேர் கொல்லப்பட்டனர், அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 1.2லட்சம் பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், 10,000 போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டனர், 20 லட்சம் பேர் அகதிகளாயினர், 40 லட்சம் பேர் தங்கள் சொந்த இடம் விட்டு வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தனர்... இதே ஆண்டில் அல்-குவைதா அமைப்பில் இருந்து ஐ.எஸ்.ஐ.எல்/எஸ் என்ற பிரிவு வெளியனுப்பப்பட்டு அது சிரியாவில் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தனி பெரும் தீவிரவாத இயக்கமாய் 2014 உருவெடுத்தது.
எது எப்படி ஆகினும், வெறும் இரு நாடுகளின் அதிகார அரிப்புக்கு இத்தனை லட்சம் மக்கள் கொள்ளபடுவது என்பதும், அதற்கும் காரணமாக ஒரு மதம் சாடபடுவதும் எவ்வகையிலும் அந்த கடவுளாலேயே பொறுத்துக்கொள்ளப்படாது.. உலகின் எந்த இனமும், தன் சொந்த இனத்தை வெறும் பேருக்கும், பொருளுக்கும் கொள்வதில்லை மனிதனை தவிர, இவ்வுலகின் வேறு எவரையும் விட, இந்த வலியை புரிந்துகொண்டு குரல்கொடுக்க கூடிய ஒரே இனம் நம் தமிழினம் மட்டுமே, என்இனம் அழியும்போது இவ்வுலகம் சிந்தாத அந்த அத்தனை துளி கண்ணீரையும், கோவபார்வையையும், எம்மினம் தகித்து கொண்டே இருக்கும், இவ்வுலகில் எவ்வினதிர்க்கு அத்தீங்கு ஏற்ப்பட்டாலும்.
தமிழனாய்,
நான் விஜய்