அம்மா அப்பா, தங்கை, ஒரு மூத்தப்பையன் .. ஒரு எதார்த்த தமிழ் சினிமால வரா மாதிரி ஒரு அழகான சின்னக் குடும்பம் எங்களோடது.
வாழ்க்கையில் இலட்சியங்கள் எல்லாம் பெருசு பெருசா இருக்கு , அதோட ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதி வேலை .. நல்ல சம்பளம் . பெருசா குடும்பத்துல கடனெல்லாம் இல்லை , போன வருஷம் பிசினஸ் பண்ணபோறேனு நான் உருவாக்குன கொஞ்ச கடனையும் நான் இந்த வேலைக்கு வந்ததும் அப்பாவும் அம்மாவும் பிளான் பண்ணி கட்டிக்கிட்டு இருகாங்க , அதனால கையுளையும் செலவுக்குன்னு கொஞ்சம் காசு தாராளம நிக்கிது . இதாங்க நான்.
இந்த கதை என்னோடது நான் விஜய் .
டெய்லி காலைல 7.30 என் மேனேஜர் கால் பண்ணி அன்னைக்கு என்னோட வொர்க் பிளான் என்னனு சொல்றதுல இருந்து ஆரம்பிக்குது என்னோட நாள். இன்னைக்கும் அப்புடித்தான் . நாள் நல்லபடியா தொடங்கியாச்சு இன்னைக்கு நான் வேலைக்கு போகப் போற ஏரியா நம்மாழ்வார் பேட்டை, சென்னைதான் ஐயனாவரம் சிக்னல் முன்னாடி இருக்கு இந்த ஏரியா ... இது ஒரு கலப்பு புள்ளை மாதிரி ... அண்ணா நகர் கூடையும் சேர முடியாம சௌவ்கார்பெட்டோட ஓட்டிக்க முடியாம , வியாசர்பாடி கூட சொந்தம் கொண்டாட முடியாதா ஒரு பாவப்பட்ட சென்னையின் கவனிக்கப் படதாபுள்ளை. அங்கதான் இன்னைக்கு நான் டாக்டர்ஸ பாக்க போகணும் .
மெடிக்கல் ரெப் இந்த வேலை ஒரு ஆப்ஷன் எனக்கு படிக்கும் போது , ஆனா ஊர் சுத்த ரொம்ப புடிக்கும் அதனால கண்ணமூடிகிட்டு ஓகே பண்ணிட்டேன், இது என்னோட 7வது வருஷம் இந்த வேலைல . நெறைய பிராப்ளம்ஸ் , எவ்வளவோ டென்ஷன், ஆனா எல்லாத்தையும் தாண்டி இந்த வேலைதான் எனக்கு எல்லா சந்தோசமும் , பீல்ட்ல இருக்க இந்த நேரங்கள்தான் நான் இன்னும் இந்த வாழ்க்கைய ரசிச்சு வாழுறத்துக்கு காரணம், ஒரு வேலைய ரசிச்சு செய்ய ஆரம்பிச்சுட்டா அதே வேலைல இருக்க உங்க ஜூனியர்ஸ் நீங்கதா ஹீரோ , என் ஏரியால நானும் கிட்டத்தட்ட அப்புடித்தான் , என்ன சுத்தி எப்பவும் கொஞ்சம் தம்பிங்க இருந்துகிட்டே இருப்பாங்க , நாம இல்லாத போதும் நம்மள பத்தி என்ன வேலைல பேச வைக்கணும் அப்படி இருக்கனும் நம்ம வேலை , அப்புடித்தான் இருந்தேன் நானும், ஆனா இந்த கதைக்கெல்லாம் இது தேவையில்லாத டீடைல் , அதனால வாங்க கதைக்குள்ள போவோம் .
அன்னைக்கு வேலைக்குப் போயாச்சு, அங்க ஒரு ஜெயின் டிரஸ்ட் ஹாஸ்பிட்டல் இருக்கு, எப்பவும் நம்ம தம்பிங்க அண்ணே அது வேலைக்கு ஆகதுனே ரொம்ப ஆபர் கேப்பானுங்க நமக்கு செட் ஆகாதுன்னு சொல்லுவானுங்க , ஆனாலும் உள்ள ஒரு நாள் போய் பார்த்துடணும்னு முடிவு பண்ணி இருந்த அந்த நாள் இன்னைக்கு தான் , அது ஒரு 3 ப்ளோர் பில்டிங் , கீழ பார்கிங் , ரிசப்சன் இருக்கும், மொத மாடியில OP 2வது, 3வது மாடியில லேப் டென்டல் டாக்டர் இருபாங்க , மொத மாடிதான் நம்ம ஏரியானு முடிவுப் பண்ணி மேல ஏறலாம்னு போனா , அங்க ஒன்னு நின்னுகிட்டு ஹிந்தில என்னமோ சொல்லுச்சி ஒன்னும் புரியல , அப்புறம் பக்கத்துல இருந்த வாட்ச்மேன் அண்ணன் சொன்னாரு சூ இங்கயே கழட்டிட்டு போக சொல்றாங்க தம்பின்னு ... சரின்னு கழட்டிட்டு மேல போன.
ஒருத்தர் நல்லா இளிச்ச வாயா வந்து உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டாரு, நானும் மெடிக்கல் ரெப் கடைமைய செய்ய விடுங்கனு சொன்னதும், காத்திருக்க சொல்லிட்டு போனாரு , அப்புறம் வந்து மெயின் டாக்டர் இன்னைக்கு பாக்கலைன்னு சொல்லிட்டார், வேற யாராவது இருகாங்கலன்னு கேட்டதுக்கு பக்கத்துல ஒரு ரூம் காட்டி டியூட்டி டாக்டர் இருகாங்க தம்பி பாகுறிங்கலானு கேட்டாரு, சரி வந்ததுக்கு அங்க ஒரு அட்டனன்ஸ போட்டுட்டு போவோம்னு சரின்னு சொன்னேன், அவரும் உள்ள போய் அனுமதி வாங்கிட்டு வந்து உள்ள போகச் சொன்னாரு .
கதவ தொறந்து உள்ள போனா ஒரு நிமிஷம் அப்புடியே ஷாக். என் வயசுல ஒரு புள்ளை , சரியான இலக்கணத்துல எழுதுன கவிதை மாதிரி ஒன்னும் புரியாம முழுசிகிட்டு இருந்துது, எஸ் அப்புடின்னு ஒரு குரல் சர்ருனு வேலை ஆரம்பிச்சாச்சு விசுவல் எய்ட் எடுத்து மொத்தமும் டீடைல் பண்ணிட்டு , ரூம் விட்டு போக மனசு இல்லாம என்னென்னோமோ பேச ஆரம்பிச்சேன் , டாக்டர் நீங்க நிமுசுளைட் உஸ் பன்னுவிங்கலானு கேக்க , அது பான் பண்ணிட்டாங்களே சார் சொல்லுச்சி, பேசி முடிகறவரைக்குமாவது வெச்சுருக்கலாம் எதுக்கு இப்புடி அவசரபட்டனுங்கனு மனசுக்குள்ளையே கேட்டுகிட்டேன், அப்புறம் பேரு கேட்டேன், மொத்தல்ல கேக்க வேண்டிய கேள்வி , சொன்னாளே சுவாதி, சரிதான் ரூம்குள்ள வந்தததுல இருந்து மொத்த சுவாசமும் நின்னுடுச்சி, சரியாதான் வச்சிருக்கானுங்க பேர, அடுத்து திருப்பியும் வேற எங்கையாவது ப்ராக்டிஸ் பண்றிங்கலானு கேக்க , இல்லைங்க ஹவுஸ் சர்ஜன் அப்புடின்னு சொன்னா, அதுக்குள்ள இருமிக்கிட்டே ஒரு பெருசு உள்ள வர , மனசே இல்லாம வெளிய வந்தேன்.
அன்னைக்கு முடிவு பண்ணினேன் இனிமே வாரத்துல ஒருநாள் இந்த ஏரியாலதான் வேலைன்னு , அவல பாக்கத்தான் இந்த கம்பெனி நமக்கு சம்பளம் கொடுக்குதுன்னு நானே உறுதிப்படுத்திகிட்டேன், அன்னைக்கு முழுக்க எதோ ஒரு சிலு சிலுப்பு மனசுக்குள்ள , இனம் புரியாத சந்தோசம் , அந்த நொடி அப்புடியே நின்னுடுச்சி மனசுல , ஒரு அளவுக்கு மேல வேலை செய்ய மனசு போகல சரி சாயங்காலம் வந்து பாத்துக்கலாம்னு வீட்டுக்கு கெளம்புனேன், அதே பக்கம் அந்த ஹாஸ்பிட்டல பாத்துகிட்டே போனேன் , மறுபடியும் அவ முகம் கண்ணுல மின்னுச்சி , தூரத்துல பஸ் ஸ்டாண்ட்ல பாக்குற பொண்ணுகூட அவல மாதிரியே இருந்தது, ஒரு நிமிடம் இருங்க, அதே பொண்ணுதாங்க பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறா, இருங்க பேசிட்டு வந்துடுறேன் .
ஆனா என்னமோ தடுக்குது , அவ டாக்டர் நான் ரெப் , அவ செம்ம கலர் , நாம கருப்புக்கு கொஞ்சம் மேல, நம்மள அவ பாக்குறதே பெருசு , சரி சும்மா பேசி வைப்போம்னு தோணுது. முயற்சி பண்ணிடுவோம். சுடிதார் போட்ட பாபி டால் மாதிரி இருக்கா , என்னனு ஆரம்பிகுறது, பாத்தாலே பதறுது, ரொம்ப உளருவோம் போலையே .சரி பாப்போம் , பக்கத்துல நின்னா , கொஞ்சமா சிரிச்சா , என்ன இங்க நிக்குறிங்க கேட்டேன் , பஸ் சொல்லிட்டு ஒரு மாதிரி கேவலமா பார்த்தா , நியாயமான பார்வை தான் , உளறாதடா டே அப்புடின்னு எனக்கு நானே கிளாஸ் எடுத்துட்டு அவல பார்த்தேன், கார் இல்லையா எதாவது ரிப்பேரா கேட்டேன், ஏனா மொக்கை டாக்டர் கூட சென்னைல அட்லீஸ்ட் மாருதி 800 ஆச்சும் வெச்சுருப்பாங்க. என் தேவதை இங்க பஸ்சுக்கு நிக்கிறதா ஒஹ் மை காட் , கார்ல இல்லைங்க, டெய்லி பஸ்ல தான் போவேன்னு சொன்னா. அவ்ளோ சிம்பிளா நீங்க சூப்பர் அப்புடி சொன்னதும் திருப்பி ஒரு ஏளன சிரிப்பு, நீ எவ்வளவு கேவலமா சிரிச்சாலும் இன்னைக்கு எனக்கு சொரனையே வராதுனு மனசுக்குள்ளையே சொல்லிகிட்டேன், அப்புறம் சொன்னா , அவளும் ரொம்ப கஷ்டபடுற பேமிலிதானாம் , மெரிட்ல மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல படிச்சுட்டு இப்போ ஹவுஸ் சர்ஜென்டா இருக்கா, வேற லெவல்மா நீயுன்னு மனசுக்குள்ள நெனச்சிகிட்டு , அவகதையும் கேட்டதும் ஒரு தைரியம் வந்து அவகிட்ட சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன் , அதோ அவளோட பஸ் வருது , அவளும் ஏறுறா அவசரத்துல இருக்கா , இப்போவே சொல்லவேண்டியதுதான் , அப்போதான் நாளைக்கு பொறுமையா அவ ரூம்ல போய் பதில் தெரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணி பஸ் கிட்ட வரும் போது அவல பாத்து சொன்னேன், உன்ன புடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன், நாளைக்கு என் சம்பெர்ல பதில் சொல்லு , சொல்லிக்கிட்டு இருக்கும் போதே ஒரு வெத்து பார்வை பார்த்து போய்ட்டா.
செஞ்சது தப்பா சரியான்னு தெரியல ஆனா சொல்லணும் தோணுச்சி , சொல்லியாச்சி , என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன், அவ பார்வைல அது சரியா? புடிக்கலையா? ஒன்னும் புரியல, என்ன சொல்லுவான்னு மனசு ஒரு மாதிரி இருந்தது. போய்டலாம் காலைல பதில் தெரிஞ்சிக்கலாம்னு முடிவு பண்ணி தூங்க போயிட்டேன், இல்லைன்னு சொல்லி எதாவது பிரச்சனை ஆகிடுசினா? , பாத்துக்கலாம் இவளுக்காக இதைக் கூட பண்ணலேன்னா எப்படி, காலைல விடுஞ்சுது, வேகமா கெளம்பி அவ 10மணிக்கு வருவான்னு நானும் போயிட்டேன் .
அதே ஆள் வந்தான் ஸ்வாதி பாக்கணும் சொன்னேன் , அவங்க வரமாட்டாங்கனு சொன்னான் , லீவ் கேட்டா? இல்லை இனிமே வரவே மாட்டங்கனு சொன்னான், ஒன்னும் புரியல திருப்பி கேட்டேன் , எதாவது பிரச்சனை ஆச்சான்னு , அதுக்கு அவன் அப்படிலாம் ஒன்னும் இல்லை ,அந்த புள்ளைக்கு நேத்துதான் லாஸ்ட் நாள் டியூட்டி , அந்த புள்ள ஊரோட போய்டுச்சினு சொன்னான் , ஒரு நிமிஷம் அப்புடியே அமைதியா உக்காந்துகிட்டு இருந்தேன், அப்புறம் மனசுக்குள்ள என்னமோ ஒரு சந்தோசம். இனிமே அவளால என்ன வேண்டாம்னு சொல்ல முடியாதுல, மனசாட்சி காரிதுப்புச்சி, நீ வேணும்னு கூட அவளால இனிமே சொல்ல முடியாதுன்னு. இருந்துட்டு போட்டும், இல்லைன்னு அவ சொல்றத விட , இருந்துருந்தா என்ன லவ் பண்ணி இருப்பானு நான் நம்பிகிட்டு போறேனே, எவ்ளோ நாளைக்குனு தெரியல, ஆனா இந்த ஒரு நாள் காதல் கொஞ்சம் அழகாதான் இருக்கு, அப்புடியே இருந்துட்டு போட்டுமே, என்னோட கதைல ஒரு குட்டி கவிதை வரியா.. படிக்கிற நீங்க சொல்லுங்க சரிதானே, எல்லா காதலுக்கும் பதில் கெடைக்கனுமா என்ன? இது கேள்வியோடையே முடியட்டுமே.
நான் விஜய்