Friday, 20 June 2014

அம்மா-அப்பா

அம்மா-அப்பா

தங்க தமிழில் தாய்மையை போற்றும் அம்மா என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தையும், அப்பா என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தையும் காண்போம்.,

அம்மா- அ+ம்+மா

- உயிர் எழுத்து, தாயானவள் தன் உயிரை பங்கிட்டு தன் கருவிற்கு தருகிறாள் என்பதை குறிக்கிறது.
ம்- மெய் எழுத்து, தாயானவள் தன் மெய் எனும் உடலை உருக்கி, தன் கருவிற்கு, புது சதை வடிவம் கொடுக்கிறாள் என்பதை குறிக்கும்.,
மா- நெடில் உயிர்மெய் எழுத்து, தாயானவள் பல பாடுகள் பட்டு, அந்த கருவை உயிரும்,மெய்யும் கலந்த குழந்தையாக உலகிற்கு கொடுக்கிறாள் என்பதை குறிக்கிறது......
- என்னும் எழத்து மெல்லினத்தை சேர்ந்ததாகும், இது தாய்மையின் மென்மையை குறிபதர்க்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அம்மா என்னும் ஒற்றை வார்த்தையில் தாய்மையின் ஒட்டுமொத்த போராட்டங்களையும் சொல்லிய உலகின் ஒரே மொழி தமிழாகும்.,
அதே போல் அப்பா என்னும் தமிழ் சொல்லின் அர்த்தத்தையும் காண்போம்.,

அப்பா- அ+ப்+பா

- உயிர் எழுத்து, தந்தையானவர் உயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவே தாயினுள் கருவாய் உருபெருகிறது என்பதை குறிக்கிறது.
ப்- மெய் எழுத்து, தன் குழந்தை வளர்ச்சிக்காக தன் மெய்வருத்து உழைப்பவன் தந்தை என்பதை குறிக்கும்.
பா- நெடில் உயிர்மெய் எழுத்து, தந்தையானவர் தன் வாழ்நாள் முழுவதும், தன் உயிரிலும், உடல் உழைப்பிலும் தன் குடும்பத்தை சுமப்பவர் என்பதை குறிக்கிறது.
- என்பது வல்லினத்தை சேர்ந்ததாகும், இது தந்தை தன் குடும்பத்தை பாதுகாக்க உழைப்பவர் என்பதை குறிக்கும்.......

வேறு எம்மொழியிலவது இத்தகைய அர்த்தத்தை தன் மொழியில் வழங்கப்படும், தந்தை, தாய்க்கான, சொல்லடளுகான அர்த்தத்தை தர இயலாது என்பதே உண்மை......!

வாழ்க என் தமிழும், அதன் தொன்மையும்.............!

இப்படிக்கு.,

நான்.............!

Sunday, 4 May 2014

தோல்வி என்னும் மாயை.

தோல்வி என்னும் மாயை...
தோல்வி:
              உலகத்தில் போராட தயங்குகிற எல்லாரிடமும் சொல்லப்படாத, அல்லது சொல்லத் தயங்குகிற மற்றும் நிதர்சன உண்மையானது தோல்வி..
            இந்த உலகத்தில் தோல்வி என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா என்கிற என் சிந்தனை ஓட்டத்திற்கு பல அறிவாளிகள் அல்லது மேதைகளின் எழுத்துக்களில் இருந்து என்னால் விடை அறிய முடிந்தது, உண்மையில் தோல்வி என்பது மிகபெரிய மாயை மட்டுமே............

நான் கண்ட ஒரு சிறிய வாக்கியம் 

Am not failured,
   My success is just postponed....!
என்று ஒரு வாக்கியம் என்னை அதிகம் ஈர்த்த ஒன்றாகும், ஏனெனில் இதன் அர்த்தம் நீங்கள் புரிந்து கொள்ளும் போது நான் குறிபிட்டது போன்று தோல்வி என்பது மாயை என்று உங்களால் உணர முடியும், இந்த உலகம் உங்கள் வெற்றியை நீங்கள் ஒரு முறை இழந்தவுடன் அடுத்து நீங்கள் தொடர்ந்து போராடாமல் இருப்பதையே தோல்வி என்று குறிக்கிறது, தோல்வி என்பது நீங்கள் உங்கள் வெற்றியை விட்டுகொடுத்தல் என்பதே ஆகும்.......

இன்னும் நீங்கள் ஆழமாய் இதை புரிந்து கொள்ளவேண்டுமானால், உங்கள் மொழியில் சில தோல்வியாலர்களின் வாழ்கையை எடுத்துக்காட்ட முனைந்திருக்கிறேன்.

பின்வரும் இவர்களே உலகின் மிக முக்கிய தோல்வியாளர்கள்..........
  • ஆபிரகாம் லிங்கன்
  • ஸ்டீவ் ஜாப்ஸ்
  • தாமஸ் ஆல்வா எடிசன்
  • அப்துல்கலாம்
  • வால்ட் டிஸ்னி........
இன்னும் பலர் இருகின்றனர் இந்த வரிசையில் ஆனால் இவர்கள் வாழ்கையே போதுமானது நீங்கள் புரிந்து கொள்ள என்று எண்ணுகிறேன்..நீங்கள் யோசிக்கலாம் இவர்களை பொய் தோல்வியாளன் என குறிபிடுகிரானே இவன் என்ன முட்டாளா என்று, பதிவை முழுதாய் படியுங்கள் உங்களுக்காய் விளக்கம் காத்திருகிறது...........

ஆபிரகாம் லிங்கன்:
 இன்று உலகின் மிகபெரும் சர்வாதிகார நாடாக இருக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர், அடிமைகளின் சூரியன் ஆபிரகாம் லிங்கன், தன் வாழ்வில் பெரும் வெற்றியாளனாய் இன்று பரிமளித்தாலும், அவர் வாழ்கையின் கடைசி வரை அவரோட இருந்தது, நீங்கள் குறிப்பிடும் தோல்விகள் மட்டும்தான், முதல்முதலில், அவர் தொடங்கிய சுய தொழில் தோல்வியில் முடிந்தது, அவரின் முதல் சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். அவர் கொண்ட காதல் தோல்வியை தழுவியது, அவரது திருமண வாழ்கை பெரும் துன்பமானதாகவே அமைந்தது, அவர் அதிபர் பதவி ஏற்ற மறுநாளே நாட்டில் உள்நாட்டு போர், இதனை தோல்விகளை சந்திதவரைதான் நீங்கள் வெற்றியாளன் என்று நினைகின்றிர்கள், அவர் இத்தனை தோல்விகளை தாண்டி போரடினதால்தான் அவரை இந்த உலகம் வெற்றியாளனாய் கொண்டாடுகிறது,

ஸ்டீவ் ஜாப்ஸ்:
இன்று ஆப்பிள் என்னும் நிறுவனம் உலக கணினி மற்றும், கைபேசி உலகின் கொள்வோட்சி கொண்டிருக்கும், மாபெரும் நிறுவனம், இதை நடத்தி காட்டியவர் ஸ்டீவ் ஜாப்ஸ், சிறுவயதில் படிப்பை கண்டு பயன்தொடியவர், தன் சொந்த நிறுவனத்தில் தாயரித்த முதல் கணினி தனது வாடிக்கையாளர் சொன்ன நேரத்தில் கொடுக்க முடியாமல் அவமானபட்டவர், தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றபட்டவர், மரண வியாதிகளுடன் தன் மரணம் வரை போராடியவர், இத்தனையும் தாண்டிதான் அவரை நாம் வெற்றியாளனாய் கொண்டாடுகிறோம் காரணம், அவர் தான் தோல்வியை கண்டு நின்றுவிடாமல் தொடர்ந்து போராடினார், என்பதே ஆகும்...

தாமஸ் ஆல்வா எடிசென்:
தன் சிறுவயதில் இவனுக்கு படிப்பு வராது  என்று சொல்லி தன் பள்ளியில் இருந்து வெளியேற்றபட்டவர், தன் அடிப்படை கல்விகூட தன் தாயிடமே பெற்றவர், ஒரு முறை இரு முறை அல்ல 10000 முறை முயற்சி செய்து தோல்வி கண்டு இறுதியில் தான் மின்விளக்கை கண்டுபிடித்தார் எடிசென்.
இன்று அவரை தான் நாம் கண்டுபிடிப்புகளின் தந்தை என்று அழைக்கிறோம். காரணம் அவர் தோல்வி கண்டவர் என்பதினால் அல்ல, தோல்வியை ஒரு பொருட்டாய் மதிக்காமல் தொடர்ந்து போராடியதால்........

அப்துல்கலாம்:
இன்று உலகம் அப்துல்கலாமை மிகபெரும் சாதனையாளராய் பார்பதற்கு காரணம், அவர் நிகழ்த்திய ஆணு ஆயுத சோதனையும், ஏவுகணை சோதனைகளும் தான், உங்களுக்கு தெரியுமா, கலாம் அவர்களின் முதல் ஏவுகணை சோதனையான அக்னி ஒன்று மிக பெரும் சோதனையை தழுவியது, ஆனாலும் அதில் நடந்த தவறுகளை சரிசெய்து மீண்டும் போராடி சோதனையில் வெற்றிபெற்றார்.............

வால்ட் டிஸ்னி:
இன்று உலகம் முழுக்க புகழ் பெற்ற டிஸ்னி சித்திர பட நிறுவனத்தை உருவாகியவர்தான் வால்ட் டிஸ்னி ஆவார், அவரது ஆரம்ப நாட்களில் பல பத்திரிக்கை நிறுவனத்திருக்கு தனது குறும்பு சித்திரங்களை, அனுப்பினார் ஆனால் அனைத்தும், சுவற்றில் வீசிய பந்த்தை போல திரும்பி வந்த வண்ணம் இருந்தன, அதில் ஒரு நிறுவனம், இப்படி பட்ட கேவலமான சித்திரங்களை எங்களுக்கும் அனுப்பவேண்டாம் என்றும் அவரை அவமானமும் படுத்திவிட்டது, அவரின் அத்தனை அவமானங்களுக்கும் காரணமான அந்த சித்திரம் தான் பின்னாளில் உலகையே கலக்கிய மிக்கி மௌஸ் ஆகும்.
இவரின் விடாமுயற்சி தான் இன்று அவரை உங்கள் முன் வெற்றியாளனாக மாற்றியுள்ளது.

இப்பொழுது சொல்லுங்கள் உண்மையில் தோல்வி என்பது வெறும் மாயை தானே, அது உங்கள் வெற்றியை கெடுக்கும் வல்லமை கொண்டது என்று நீங்கள் இன்னும் நம்புவீர்களானால் அது உங்கள் அறியாமையே காட்டும்.,

உங்கள் தோல்விக்கு தோல்வியை கற்றுகொடுங்கள்...........!


                                                                   இப்படிக்கு.,
                                                                    நான்.........................!

Wednesday, 26 March 2014

வெற்றி


 

வெற்றிக்கு எதிரான சூழ்நிலை


              உலகில் வெற்றி பெற தயாராய் இல்லாத எல்லோரிடமும் ஒரு காரணம் எப்பொழுதும் தயாராகவே இருக்கும், அதில் பிரதானமான காரணம் சூழ்நிலை, உண்மையில் சூழ்நிலை அத்தனை வலுவானதா..........

         ஜெயித்தவர்களுக்கு மட்டும் இந்த சூழ்நிலை எப்படி, சாதகமாகியது, நமக்கு மட்டும் ஏன் இதனை பாதகமாக மாறியது என்பது உங்கள் கேள்வியாக இருக்கும் பட்சத்தில் இந்த பதிவை தொடர்த்ந்து படியுங்கள் ஒரு வேலை உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

அப்படி என்ன சூழ்நிலை:

               வெற்றியை அடைய முடியாமல் அதை தொடக்கூட முடியாத அல்லது அதற்கு முயற்சிகூட எடுக்க முடியாத படி நம்மை தடுக்கிற சூழ்நிலைகள் கிழே குறிக்க பட்டுள்ளன.
  • குடும்ப பொருளாதாரம் 
  • படிப்பு 
  • உடல் ஊணம்
 நான் அறிந்தவரை வெற்றி எட்டதவர் சொல்கிரகாரணங்கள் இதில் எத்தவது ஒன்றை சார்ந்ததகதான் இருக்கும், அப்படியானால் இந்த சூழ்நிலைகளை வெற்றி கொள்வது தான் எப்படி?

ஒரு கதை:

                      ஒரு கிராமத்தில் பிறந்த இளைஞன், நன்கு படிக்கக்கூடியவன், I.I.T . எனும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் மேலாண்மை படிப்பை படிக்கும் வாய்ப்பை தன் திறமையாலும், படிப்பாலும் பெற்றான், படித்து முடித்ததும் பல லட்சங்களில் வேலை வந்தும், அதை  தள்ளிவிட்டு, இருபது வருடம் தன்னை இட்லி வித்து படாதபாடு பட்டு இன்னும் அந்த இட்லி வியபரதாலையே தன் குடும்பத்தை நடத்திவரும் தன் தாய் இடம் சென்று. அம்மா எனக்காக நீ இருபது வருடம் கஷ்டப்பட்டு என்ன வளத்துட்ட இன்னும் கொஞ்சம் வருஷம் இந்த கஷ்டத்த எனக்காக பொறுத்துக்க அம்மா என்று கூற, தன் மகனின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தார் முடிவு, இன்று இந்திய நாட்டில் உள்ள தலை சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக மாறிபோனர் அவர் வேறு யாரும் அல்ல சரத் பாபு எனும் இளம் தொழிலதிபர்தான் அவர். இவர் வாழ்கையில் இவருக்கு வறுமை ஒரு தடையாய் இல்லை காரணம் இவர் வறுமையை கண்டு பயபடாமல் அதோடு போட்டிபோட்டு ஜெயித்தார்,  இன்று அவர் அம்மாவின் இட்லியை உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்ததோடு foodking என்னும் பட்டத்திற்கும் உரியவரானார்,
திரு.சரத் பாபுவும் அவர் தாயாரும் 

              இவர் மட்டும்மல்ல இந்தியாவில் ஏன் உலக நாடுகள் பலவற்றில் ஜெயித்தவர்கள் தங்கள் வாழ்கையை வறுமையில் இருந்து தான் ஆரம்பித்தனர், பின்பு வறுமை உங்களுக்கு மட்டும்தான் தடையாய் இருக்கிறது என்றால் பிரச்சனை வறுமை அல்ல. நீங்கள் தான் என்பதை உணருங்கள்.

படிப்பு:

                    பலர் தங்களை நொந்துகொள்வதும், தங்களை தாழ்வாக எண்ணுவதற்கும் காரணம் அவர்களிடம் படிப்பு இல்லை என்பதாகத்தான் இருக்கும் என் நண்பர்கள் சிலர் பள்ளி படிப்பை பாதியில் நிறுதினவர்கள், அவர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம் "நானும் உன்னை மாதிரி படித்திருந்தால் இன்னைக்கு வாழ்கைல ஜெய்திருப்பென் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள், உண்மையில் படிப்பின்மை வெற்றிக்கு எதிரியா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது, அதோடு ஜெயித்தவர்கள் எல்லோரும் படிப்பினை கொண்டுதான் வெற்றியை ருசிதார்களா என்ற என் கேள்வியோடு என் தேடலை தொடங்கினேன் அதற்கான பதில் கிழே பதிவிட்டுள்ளேன்.

இவர்கள் படிப்பை ஜெயித்தவர்கள்:

பெருந்தலைவர் காமராஜர்

 

  •   பெருந்தலைவர் காமராஜர் , இவர் 5ம் வகுப்புகூட தாண்டாதவர், ஆனால் இன்று இவரை மறைத்து தமிழகத்தின் வரலாற்றை எழுத எவராலும் முடியாது ர=என்னும் நிலையை ஏற்படுதிருகிறார், இந்தியாவின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேகர் என்னும் புகழுக்கு சொந்தமான காமராஜர் ஒரு படிக்காத ஏழை குடும்பத்தில் பிறந்த சாதாரண தமிழன், அவருக்கு நீங்கள் [பார்க்கும் சுழ்நிலையைவிட பாதகமான சூழ்நிலைதான் அமைந்தது அதை அவர் அறிவுதிறதால் வென்றாரே தவிர படிபில்லையே என்று காரணம் சொல்லி ஓடி ஒளியவில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                                   
    திரு.கோபால்சாமி டி. நாய்டு[G .D .நாய்டு ]
  • திரு.ஜி.டி.நாய்டு, இந்தியாவிற்கு கிடைத்த அறிவு பொக்கிஷம், ஜப்பானியர்களால் இந்தியாவின் ஐன்ஸ்டின் என்று கொண்டடபட்டவர், இவர் படித்து 4ம் வகுப்பு, அப்பொழுதே படிப்பு பிடிக்காமல் வெளியேறிய அவர் கோவையில் பல கடைகளில் வேலை செய்து ஒரு சிறு தொகையை சேர்த்து ஒரு இருசக்கர மோட்டர் வாகனத்தை ஒரு வெள்ளைகாரரிடம் இருந்து பெற்றார், அவருக்கு அதை ஓட்ட தெரியாது இருப்பினும் அதை பலமுறை கழட்டி மீண்டும் ஒன்றுசேர்த்து, அதில் இருந்து யார் உதவியும் இல்லாமல் மோட்டர் தொழிநுட்பத்தை தன் வழியிலேயே கற்றுக்கொண்டார், அது மட்டுமல்ல், இன்று நாம் பயன்படுத்தும் ballpoint pen வெளிநாட்டவர் கண்டுபிடிபென்று பலரும் நினைகின்றனர் உண்மையில் அதை கண்டுபிடித்தவர் திரு.ஜி.டி.நாய்டு, அவர்கள் தான், அவர் வாழ்நாளில் பல சரித்திர சாதனைகளை செய்தவர், அவர் இறந்த பின் அவரது மூளையை ஆய்வு செய்ய ஜப்பானியர்கள் பல முறை கேட்டிருகின்றனர், இப்படி பட்ட அந்த மாமேதை, பள்ளி வாழ்கையை வெறுத்தவர், படிப்பது தன் வெற்றிக்கு தடை என்று தூக்கி எறிந்தவர் அவர். அவருக்கு படிப்பு எந்தவகைலும் தடையாக ம்=நிற்கவில்லை.....            
    அடிமைகளின் சூரியன் அபிரகாம் லிங்கன்
  • அமெரிக்க முன்னால் அதிபர். திரு ஆபிரகாம் லிங்கன், பள்ளி படிப்பை அறியாதவர், சாதாரண செருப்பு தைக்கும் கூலி வேலை செய்பவரின் மகன், செருப்பு தைத்தல், மரம் வெட்டுதல் என்ற ஒரு ஏழ்மை வாழ்வையே வாழ்ந்தவர், ஆனால் இன்று அவரை யாரும் செருப்பு தைப்பவர் என்று சொல்வதில்லை, அடிமைகளின் சூரியன் என்று, உலக மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்க படுகிறார்,இவர் தான் நினைத்த இடத்தை அடைய படிப்பு அவருக்கு உறுதுணையாக இல்லை, ஆனால் அதற்காக அவர் தன் ஓட்டத்தை நிறுத்திடவும் இல்லை, படிப்பை வென்றார் பலர் வாழ்கையையே மாற்றினர் இந்த படிக்காத மாமனிதர்.......
                                                   
                                       இப்படி இன்னும் பலர் உலகில் படிப்பை ஜெயித்து இந்த உலகத்தையே, மாற்றி இருகின்றனர், அவர்களுக்கெல்லாம் தடையை இல்லாத படிப்பு உங்களுக்கு மட்டும் தடையை இருக்கிறது என்றல் தவறு படிபினுடையது அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

உடல் ஊனம்: 

                    மாற்றுதிரனாளிகள் பல பேர் இந்த உலகில் அரிய பெரும் சாதனைகள் படைதுள்ளர்கால் ஆனால் நம்மில் சிலரோ வெகுசிறிய அங்க ஈனத்தை எல்லாம் ஊனம் என்று கருதி, தங்கள் வெற்றியை தாங்களே தொலைதுவிடுகிரர்கள், நான் சிறிது காலத்திற்கு முன்பு ஒரு பார்வை திறம் அற்ற பிள்ளைகள் இருக்ககூடிய விடுதிக்கு அவர்கள் படிக்க உதவக்கூடிய வாய்ப்பு கிடைத்தது, அங்கு இருக்கும் பிள்ளைகள் அனைவரும் பெண்பிள்ளைகள் அத்தோடு முற்றும் பார்வை திறம் அற்றவர்கள், ஆனால் உங்களுக்கு தெரியுமா, அவர்களிடத்தில் ஒருநாளும் தாங்கள் பார்வை திறன் அற்றவர்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்ற போக்கை நான் பார்த்ததே இல்லை, தங்களிடம் உள்ள அந்த குறையை அவர்கள் பெரிதாக அவர்கள் நொந்ததுகூட கிடையாது, அவர்கள் ஒவ்வொருவரும் படிப்பில் படுசுட்டி, அவர்களுக்கு முன்னால் நம் மனன சக்தியும், படிப்பு திறமும், தோற்றுவிடும், அத்துணை அறிவு கொண்டவர்கள்.
                                     இவர்கள் மட்டுமல்ல, இந்த உலகில் பலர் ஊனத்தை வென்று, மன உறுதியை நிலைநாட்டி இருக்கிறார்கள், அவர்களில் ஒருவரை நிச்சயம் நான் உங்களுக்கு சொல்லியே அக வேண்டும். ஒரு அருமையான பெற்றோர், நடுத்தர குடும்பம், அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது, அது நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துவந்தது, ஆனால் அந்த குழந்தையால் நடக்க மட்டும் முடியவில்லை, மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு இளம் பிள்ளைவாதம்[polio ] என்று சொல்லி கை விரித்துவிட்டார், அந்த குழந்தைக்கு உலகம் புரிய ஆரம்பித்த பொது, தன்னால் நடக்கமுடியாது என்கிற கசப்பான உண்மை அந்த பெண்ணை கொன்றது, ஆனாலும், தன் வாழ்கை இதோடு முடிந்துவிட்டது என்று ஓய்ந்துவிடாமல், தன் ஊனத்தோடு போராடினால், முடிவு, நம்மால் கற்பனைகூட செய்யமுடியாத ஒன்று, ஆம் 1956 ஒலிம்பிக் போட்டிகளில், கலந்துகொண்டு, ஓட்டபந்தயத்தில், தங்க பதக்கம் வென்றால், இன்று ஷெரின் எனப்படும் அந்த சாதனையாளர் தன் ஊனத்தை வென்று, இன்று உலகத்திற்கே முன்னுதாரணமாய் இருகின்றார்...

                                 இந்த பதிப்பை படித்த பின்பும், என் சூழ்நிலை உங்களுக்கு வெற்றியை தர தடையாய் இருக்கிறது என்று கூறுவீர்களானால், பிரச்சனை சூழ்நிலை அல்ல, உங்கள் சொம்பரிதனமும், அறியாமையும், முட்டாள்தனமுமே ஆகும்........................

                                                                                                                      இப்படிக்கு,
                                                                                                                         நான்......!

Sunday, 16 March 2014

fear

பயம் 



             இன்று பலர் தங்கள் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாமல் இருப்பதற்கான ஒரே காரணம் இந்த பயம், இந்த பயம் எங்கு எப்பொழுது யாருக்கு ஏற்படும்? நிச்சயம் அனைத்து சமயங்களிலும் அனைவருக்கும் இந்த பயம் ஏற்படும், இதனால் ஒருவன் தன் வாழ்நாளில் காத்திருந்த பல வெற்றிகளை இழந்திருக்கிறான் என்பது, வருத்தத்திற்குறிய செய்தி ஆகும்.

            எதற்கு எல்லாம் மனிதன் பயபடுகிறான், என்று ஒரு அட்டவணை தயார் செய்ய முடிவு செய்தால், அது இந்த நாடு கொள்ளாது, அத்தனை நீளமானது, இந்த பயத்தின் வலிமை, உண்மையில் பயம் என்பது நம்மை நாமே சுற்றி போட்டுக்கொண்ட மாயாவேலி அது இன்று நம்மை அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்பது தான் உண்மை, ஒருவனுக்கு காலையில் எழுந்ததும் ஆரம்பிக்கிறது இந்த பயம், அது இரவு தூங்க போகும் வரையில் நீடித்து கொண்டேதான் இருக்கிறது, இந்த பயமானது, எல்லா மனிதனையும் எதோ ஒரு பரிமாணத்தில் அக்கரமித்து கொண்டுதான் இருக்கிறது, கலையில் எழுந்ததும் இன்று அலுவலகத்தில் நேரம் ஆகிவிடுமே என்ன சொல்வது என்பதில் ஆரம்பிக்கும் பயம் இரவில் மீண்டும், நாளைக்காவது சீக்கிரம் செல்ல வேண்டும் என்று இரவு படுக்கையில் யோசிப்பது வரை தொடர்கிறது,

           எப்படி இந்த பயம் நம்மை அடுத்தநிலை கொண்டுசெல்ல தடையாய் இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம், இந்த பயம் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிடும் என்ற நிலை வரை சரி தான், ஆனால் அதுவே அன்றாட அனைத்து நிகழ்வுகளிலும், பழக்க பட்டுவிட்டால், அது மிகபெரும் ஆபத்தாக முடியும், நாளை உங்கள் அலுவலகத்தில், உங்களுக்கு ஒரு உயர் பதவி கிடைப்பதாக இருந்தால் அதை ஏற்றுகொல்வதின் மூலம், பணி சுமையும், அதனோடு, பொறுப்பும் அதிகமாகிவிடும் என்ற பயம் அங்கு உங்களை தொடர அதிக வாய்ப்பு இருக்கிறது, இதை நான் பல என் சக நண்பர்களிடம் இருந்து தெரிந்துகொண்ட உண்மை, என் நண்பர்கள் பலர் அடுத்த உயர் பதவிக்கு தகுதி பெற்றும், அவர்கள் பணிபுரியும் நிறுவனமே அந்த பொறுப்பை தர முன்வந்தும் ,அவர்கள் அதை மறுத்து, தாங்கள் இருக்கின்ற நிலையிலேயே தொடர முடிவு எடுத்தனர், இந்த நிலைக்கு காரணம், அவர்களது இயலாமை அல்ல, அவர்களது பொறுப்புகள் மீதான பயம். இந்த பயம் அவர்களை, அடுத்த நிலைக்கு துணிந்து செல்ல வழிகொடுக்காமல், ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறது, இது பின்னாளில் அவர்கள் செயல் திறன் அற்றவர்கள் என்ற ஈழி சொல்லையே தேடித்தரும், போராட நினைபவனுக்கு பயம் இருக்க கூடாது, பயம் இருப்பவனால் போராட்டக்களத்தை பார்க்க கூட முடியாது, இன்று உங்களுக்குள் இருக்கும் பயத்தை உணர முயற்சி செய்து பாருங்கள், அது உங்களை எங்கு எல்லாம் தோற்கடித்தது என்ற உண்மை உங்களுக்கு புரியும்,

பயம் என்னும் இருட்டை தன்னம்பிக்கை என்னும் தீக்குச்சியின் வெளிச்சத்தை கொண்டே அகற்ற முடியும்.............!


                                                                                                                                                                                                                                                                               தன்னம்பிக்கையுடன்,
                                                                                                                நான்...............! 


Tuesday, 11 March 2014

love

காதல் 

                          இந்த அற்புத உலகில், அனைத்து இளைஞர்களின் ஓட்டமும், துடிப்பும் ஒன்றை நோக்கியதாகவே உள்ளது. அது இறைவனில் தொடங்கி சாமானியனையும் அடிமை ஆக்கிவைத்து இருக்கிறது, அத பெயர் முன்பு காமமாய் இருந்து, இன்று காதலாய் திரிந்திருகிறது, உண்மையில் காதல் இன்றைய இளையர்களின் உணர்வை இருக்கிறதா அல்லது வெறும் கொண்டடதொடு முடிந்து விடுகிறதா?

                             இந்த கேள்விக்கு விடைகாணும் நோக்கோடு இந்தபதிவை எழுத முடிவு செய்தேன், இடையில் எனக்கு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் காண  வாய்ப்பு கிடைத்தது, அந்த வாய்ப்பு காதலை பற்றிய என் எண்ண ஓட்டத்தையும் சற்று மாற்றிவிட்டது, அதில் இருந்து ஒரு உண்மையும் தெரிந்து கொண்டேன் . காதல் என்பது தாஜ்மஹாலிலும், கடற்கரை , பூங்காலில் சுற்றி திரியும் இளைஞர்களிடமும், திரைப்படங்களிலும், நான் நாம் படிக்கும் கதைகளிலும் இல்லை என்பதை, பின்பு  வேறு எங்கு தான் காதல் இருக்கிறது என்ற உங்கள் கேள்வி நானும் என் மனதிடம் எழுப்பினேன், அதுவும் மிக திடமாக சொன்னது காதல் உன் வீட்டிலேயே இருக்கின்றது என்று..........

                                                                                                                                                                                          ஆம் என்  மனம் இந்த  பதிலை சொல்லியதும் நான் என் வீட்டில் என் அறையை விட்டு வெளிவந்து பார்த்தேன், அங்கு தலைவலியில் படுத்திருக்கும் என் அம்மாவுக்கு மருந்து கொடுத்து தூங்கவைத்துவிட்டு கவலையோடு பார்த்து கொண்டிருந்த என் அப்பாவை, காதல் இதோ என் வீட்டில் என் அப்பாவுக்கும் ,அம்மாவுக்கும் இடையில் சற்றும் இடைவெளிவிடாமல் நிறைந்திருப்பதை கண்டேன், அவர்கள் இருவருக்கும் திருமணமான நாள் முதல் இன்று வரை ஆயிரம் சண்டைகள் வந்திருக்கும், ஆனால் இதுவரை என் அம்மா அவர் பிறந்த வீட்டுக்கு என் அப்பா இல்லாமல் போனதே கிடையாது. இதையெல்லாம் நான் அறிந்தும் காதலை  தேடிய என்னை, என் வீட்டில் ஒளிந்திருக்கும் காதலை நினைவு படுத்தியது, இந்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம், 

                      இன்றைய இளைஞர்கள், திருமணத்தின் பின்பு அவர்களுக்கு இடையேயான யார் பெரியவன் என்ற போட்டியலும், படிப்புதந்த அதிமேதாவிதனத்தால் காதலை தொலைத்துவிட்டு நீதிமன்றம் நாடுகிறார்கள், தயவு செய்து, இன்றைய இளையர்கள் திரைப்படங்களையும், நாவல்களையும், தெருக்களிலும் பார்த்து காதலை தேடாமல், ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, அன்பை பொழியும், நம் பெற்றோரை பார்த்து காதலை கற்றுகொள்வோம்............

                                           ஆதலால் காதல் செய்வீர்.....................! 

                                                                                                                           இப்படிக்கு,
    
                                                                                                                            நான்...........



Sunday, 9 March 2014

போராட்டம்


போராட்டம் 

                                               போராட்டம் 

                     
                         இன்றைய இந்தியாவில் எங்கும், எதற்கும் போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன, ஆனால் இந்த போராட்டங்கள் இந்த  மாற்றங்களை சாத்தியபடுத்தியதா என்றால் நிச்சயம் இல்லை, நம் நாட்டில் போராட்டங்களால் என்ன பயன் என்ற கேள்வி நம்மிடையே எழும்பதான் செய்யும், இந்த சாத்தியமற்ற அல்லது வெற்றியை தராத போராட்டங்கள் நிச்சயம் நம் மனதில் போரட்டத்தின் மீது நமக்குள்ள மதிப்பினை தரம்தாழ்த்த செய்யும், இந்த தோல்விகளுக்கு காரணம் நிச்சயம் போராட்டங்கள் இல்லை, போராடியவர்கள் மட்டும்தான், இது சாத்தியமல்ல போரடுபவர்கள் உணர்வு மதிக்கப்படுவதில்லை என்று நீங்கள் ஆயிரம் விளக்கம்  மொழிந்தாலும், போராடுபவர்களின் ஸ்திர தன்மை இல்லை என்பதே மன்னிக்க முடியாத உண்மை, இது  ஏன் மன்னிக்க முடியாத உண்மை என்றால் போராடும் முனைப்போடு களம் கண்ட பின் பலரும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையும் முயற்சியில்தான் இறங்குகின்றனர் ஆனால், நடுவில் கிடைக்கும் சில தற்காலிகமான முடிவுகளுக்கு சமதித்து, அவர்கள் போராட தொடங்கிய அந்த உயரிய நோக்கத்தை அல்லது வெற்றியை இழந்து விடுகின்றனர், எடுத்த முடிவில் உறுதியான வெற்றிக்கு பதிலாக, தற்காலிக தீர்வை மட்டுமே தேடுகின்ற ஒரு போராட்டமாக இன்றைய போராட்டங்கள் மாறி இருப்பதால், இந்த போராட்டங்களால் நிச்சயம் இந்த இந்திய தேசத்தில் மட்டுமல்ல, அவர்கள் வீட்டில் கூட ஒரு துரும்பையும் அசைக்க எவராலும் முடியாது, எனவே மாறவேண்டியது போராட்டங்கள் அல்ல, போராடுபவர்கள் என்ற உணர்வை நாம் பெற்ற பின்பு, நம் லட்சிய முடிவை எட்டும்வரை நம் போராட்டத்தை தொடர்ந்தால் நிச்சயம் அந்த போராட்டம் இந்த நாட்டை மட்டுமல்ல, இந்த உலகையே மாற்றும்...........................

                  போற்குடியில் பிறந்துவிட்டு.................!
                                                 போர்கலத்தை கண்டு அஞ்சுவதா.................!

                            நான் விஜய் 
 

Saturday, 8 March 2014

Nimirnthu Nil

                                        








                                   நிமிர்ந்து நில் 

                     என் வலைபதிவுகளில் திரைபட விமர்சங்கள் வேண்டாம் என்ற என் முடிவை முதல் நாளே முடித்து வைத்துவிட்டது திரு,சமுத்திரகனி அவர்களின் திரைப்படமான "நிமிர்ந்து நில்" நிச்சயம் மெட்சிக்க வேண்டிய ஒரு தைரிய முயற்சி, என் மனதில் பல நாள் என் மேலும் நான் வாழும் என் சமுகத்தின் மேலும் எனக்கும், எனை போன்றோர்க்கும் இருக்கும் ஒரு கோபத்தினை, இந்த திரை படத்தில் என்னால் உணர முடிந்தது,

                              நிச்சயம் இது வேதனை படவேண்டிய நிலை தான், காரணம் இன்னும் திரைப்படங்களில்  மட்டுமே என் கோபத்தை  பார்த்து அதை பாராட்டிவிட்டு, என் தினசரி அலுவலை பார்க்க கிளம்பிவிடும் அந்த சுயநல மனோபாவம்,  நான் மட்டுமல்ல என்னை போல எத்தனையோ இளைஞ்சர்கள் இந்த பாரத நாட்டின் ஒவ்வொரு தெருவில்லும் ஒளிதிருகிரார்கள்.
      
                             இந்த  திரைபடத்தில் ஒரு வசனம் "நம்ம இனத்தையே அங்க கொன்னுகுவிசுகிட்டு இருந்தப்ப அத பாத்து பதறி பொய், அப்புறம் IPL SCORE பாக்க போய்ட்டோம்" என்று சொன்னது, என்னை நாடு ரோட்டில் நிற்கவைத்து செருப்பால் அடித்தது போன்று இருந்தது, இந்த பதிவு நிச்சயம் இதை படித்தபின்பு நிமிர்ந்து நில் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, பார்த்தல் நன்றாக இருக்கும் என்பதற்காக........................
     
                                                              நன்றி!!!!!!!!!!!!!
                                                                  
                                                                                                                          இப்படிக்கு,
                             
                                                                                                                           நான்.........