Sunday, 31 December 2023

நோயினைக் கொண்டாடுவோம்

#NaanVijay
#நான்விஜய்

#நம்மாழ்வார்

புத்தகம் : 1

2024 புத்தாண்டில் பின்பற்ற பலா விஷயங்களை நீங்கள் தெரிவு செய்திருந்தாலும் இந்த சிறிய புத்தகத்தையும் ஒருமுறை படித்துவிடுங்கள்

ஒரு நோய் நமக்கு எதற்கு வருகிறது என்பதற்க்கான அடிப்படை புரிதல் இருந்தால் மட்டுமே அதற்க்கான தீர்வை கண்டுபிடிக்க முடியும், அதைத்தான் வள்ளுவர் நோய் முதல் நாடி என்கிறார்.. அதாவது அதன் அடியை வேறை கண்டுபிடிக்க வேண்டும் பின்புதான் அதற்க்கான தீர்வு கிடைக்கும்..

பெரும்பாலும் நமக்கு வரும் எந்த நோய்க்கும் மருந்து அவசியம் இல்லை, அதன் பணியை செய்ய அமைதியாக காத்திருந்தாலே போதுமானது.. ஏனெனில் நாம் நோய் என்று நினைக்கும் பல விஷயங்கள் உண்மையில் நம் உடலை சீர் செய்து கொண்டிருக்கிறது, ஜுரம் ஏன் வருகிறது என்று கவனித்தால் அது உடலை காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றி கொண்டிருக்கிறது என்பது நமக்கு புரியும்.. அதை தடுக்கும் பொழுது தான் உண்மையில் நமக்கு பெரும் பிரச்சனை வரும்.. இதைத்தான் இந்த சிறிய புத்தகத்தின் மூலம் நம்மாழ்வார் ஐயா நமக்கு கடத்த முயற்சிக்கிறார்.

புத்தகம் : நோயினைக் கொண்டாடுவோம்
ஆசிரியர் : கோ. நம்மாழ்வார்
பதிப்பகம் : தன்னறம்
பக்கங்கள் : 25
விலை : 20

Sunday, 3 December 2023

பார்க்கிங் திரைப்படம்

#NaanVijay

#movies

#parking

கடைசியா தோனி தயாரிப்பில் ஹரிஷ் நடித்திருந்த திரைப்படம் LGM எனக்கு பெரிதாக விருப்பமில்லை, இருந்தாலும் ஹரிஷ் கதை தேர்வின் மீது எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு, என்னை பொறுத்தவரையில் இளம் தலைமுறை நடிகர்களில் சிறந்த கதை தேர்வு செய்யும் நடிகர்கள் ஹரிஷ் மற்றும் மணிகண்டன், இருவரும் தனக்கு எதில் சிறந்த பங்கு கொடுக்க முடியும் என்பதில் ஒரு அளவுக்கு தெளிவோடே இருக்கிறார்கள் என்றே தோன்றியது..

பல வீடுகளில் இருக்கும் சிறு பிரச்சனை தான் பார்க்கிங்.. ஒரே வீட்டில் கீழ் மட்டும் மேல் தளங்களில் வசிக்கும் இருவருகிடையில் ஏற்படும் பார்க்கிங் பிரச்சனை தான் இந்த படம், இன்னொரு வகையில் சொல்ல போனால், 60+ மற்றும் 25+ இடையில் இருக்கும் ஈகோ பிரச்சனை இந்த படம், அந்த ஈகோ வெளியில் அப்பட்டாமாக தெரிய பார்க்கிங் ஒரு சின்ன காரணம் மட்டுமே...

Spoiler alert

முதல் நாள் நாயகன் மேல் வீட்டிற்கு குடிவந்ததில் இருந்தே அவரைபற்றிய பெருமையை தனது வீட்டில் இருப்பவர்கள் பாட துவங்குவதில் இருந்து தொடங்குகிறது இந்த பிரச்சனை, தன்னால் தான் எல்லாம் நடக்கிறது, என்ற கர்வமுடைய ஒருவர் முன் அவரால் தான் அந்த குடும்பம் அழகாக இருக்கிறது என்று சொல்லும் போதே இவரின் ஈகோ வெளிப்பட துவங்குகிறது, இருப்பினும் எந்த முகாந்திரமும் இல்லாமல் அதை வெளியில் காட்டவும் முடியாமல் பிறர் மீது எரிந்து விழும் குணம் ஒருநாள் அதை தீர்த்துக்கொள்ள ஒரு சிறிய காரணத்தை பிடித்து கொள்கிறது, அதுதான் பார்க்கிங்...

பாஸ்கர் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஈகோவில் தன்னை பொறுத்திக்கொண்டு குணமாற்றம் அடைவதை நடிப்பில் மிக தெளிவாக காட்டுகிறார்.. அவரின் அந்த நடிப்புதான் இந்த படத்தை சரியான எமோஷனல் ட்ராமாவாக மாற்றுகிறது, அவர்க்கு எதிரில் நின்று அந்த எமோஷனல் moment தாங்கி நிற்பதற்கே ஹரிஷை பாராட்ட வேண்டும், இரு துருவங்களும் அந்த கதாபத்திரத்தில் சரியாக பொருந்தும் போது படம் தன்னை தானாகவே காப்பாற்றிக்கொள்ள தயாராகி கொள்கிறது..

இயக்குனரின் எழுத்தை பார்ட்டியே ஆகவேண்டும், ஒரு சின்ன விஷயத்திற்குள் ஒரு ஆழமான psychology வகுப்பெடுத்திருக்கிறார், இருவரும் கெட்டவர்கள் இல்லை, இருவரும் நல்லவர்களும் இல்லை, இருவரும் சூழலில் தங்கள் மனம் போன போக்கில் தன்னை சுற்றி இருப்பவர்கள், ஏன் தங்கள் நிம்மதி பற்றி கூட கவலைபடாமல் எடுக்கின்ற முடிவுகளால், பல மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர்.. இந்த மன நிலையை தனது தெளிவான எழுதுகல்லாலும், நேர்த்தியான காட்சி அமைப்பாலும் நமக்கு தெளிவாக கடத்துகிறார்.. இதுவே மிக முக்கியமானது.. அதே போல ஒரே கதையில் பயணிக்கிறார்.. எந்த பக்கமும் படம் திசை திரும்பவில்லை, காதல், கல்யாண போராட்டம், குழந்தை சிக்கல் இப்படி பல விஷயங்களை கொண்டு ஒரு இடியப்ப சிக்கல் திரைக்கதை அமைக்க வாய்ப்பிருந்தும், சொல்லவந்த கதையில் மட்டும் கவனம் செலுத்தியது நம்மையும் அந்த கதையில் மட்டும் கவனம் செலுத்த உதவுகிறது...

ஹரிஷ் கல்யான், பாஸ்கர் இவர்களை தாண்டி பாஸ்கர் அவர்களின் மனைவியாக நடித்தவரும் ஒரு இடத்தில்  கணவனை திட்டுவது, ஒரு இடத்தில் கணவனுக்காக திட்டுவது, தன் மகள் விஷயத்தில் பாஸ்கரின் தவறான முடிவை சுட்டிக்காட்டுவது, தன் மகளை கொண்டு நடத்தப்பட்ட நாடகத்தை நிறுத்த தன் சொந்த தம்பியையே விரட்டுவது என்று ஒரு சரியான மனைவி அம்மா கதாபாத்திரதை நடத்தி இருக்கிறார்.. ஹிந்துஜா ஒரு வழக்கமான மனைவியாவே தெரிகிறார்.. இன்னும் கூட கொஞ்சம் காட்சிகள் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றினாலும், அது ஒருவேளை திரைக்கதையை தொய்வில் கொண்டுபோய் இருக்கலாம் என்கிற இயக்குனரின் யோசனையாக இருக்கும் என்றே தோன்றுகிறது..

மொத்தத்தில் மனங்களின் பிரச்சனைகளை பேசும் பார்க்கிங் இந்த வருடத்தின் இன்னுமொரு முக்கிய படம்

#திரைப்படம் : பார்க்கிங்

Friday, 1 December 2023

House of Secretes Documentary

#NaanVijay

#Netflix

#DocumentarySeries

2018ல் டெல்லியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 11பேர் தூக்கில் தொங்கி இறந்திருகின்றனர், மொத்த ஊரும் ஷாக், என்ன நடந்திருக்கும், இது கொலையா, தற்கொலையா என்று பல கேள்விகள் உலாவர தொடங்குகிறது இந்த டாக்குமெண்டரி...

பலகட்ட விசாரணைகள் சோதனைகளுக்கு பிறகு இந்த வழக்கையே திருப்பி போடும் படி சில புத்தகங்கள் கிடைக்கிறது, அது அந்த குடும்பம் தொடர்ந்து 11வருடங்கள் எழுதி கொண்டிருந்த புத்தகம், அதுதான் இந்த கதையை தலைகீழாக திருப்பி போடுகிறது, அந்த புத்தகத்தில் இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று அந்த புத்தகத்தில் இருக்கிறது, அதன்படி தான் அவர்கள் வாழ்கிறார்கள், வாழ்ந்தார்கள், மரணித்தும் போனார்கள், ஆம் அவர்கள் மரணத்திற்கு முன்பு வரை நடந்த அனைத்தும் அந்த டைரியில் எழுதிய படியே நடந்திருக்கிறது...

லலித் என்னும் அந்த வீட்டின் மூத்த மகன் தான் இதற்கு பின்னாளில் இருந்த psycho.. 2007ல் அவன் அப்பா இறந்த சில நாட்களில் அவன் அப்பா தன்னிடம் பேசுவதாக நம்ப தொடங்கியவன், பின்னாளில் தன் மூலமாக தன் குடும்பத்திடம் பேச ஆரம்பித்ததாக நம்பவும் வைத்திருக்கிறான், அவன் மூலமாக அவன் அப்பா பேசுவதை அந்த குடும்பம் நம்ப தொடங்கியதற்கு காரணமும் இருந்திருக்கிறது, அவன் அப்பா சொன்னதாக சொல்லப்பட்ட சில விஷயங்கள் நடக்கவும், அதன் மூலம் தங்கள் குடும்பம் செழிப்பாக மாறுவதாகவும் உணர்ந்ததால் வந்த வினை தான் இந்த கொடூர மரணங்கள்..

சில வருடங்களுக்கு முன்பு லலித் ஒரு விபத்தில் சிக்க அதில் இருந்து மீண்டும் வரும் போது மெண்டல் trauma வால் குரலை இழக்கிறார் அப்போதே அவரை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியும் செய்யாத குடும்பம் விளைவு தொடர்ந்து தந்தையின் மரணம், பின்பு தன்னையே தன் தந்தையின் வடிவமாக நினைக்க தொடங்க, சந்திரமுகி படத்தில் வருவதை போல அவ சந்திரமுகி அறைக்கு போனா சந்திரமுகியா தன்னை நெனச்சுக்கிட்டா சந்திரமுகியாவே மாறிட்டான்..

ஒரு psycho கூட்டிட்டு வந்து அவன் சொன்ன rituals பண்ணிக்கிட்டு கடைசியா அவன் சொன்னான்னு குடும்பமே தூக்குல தொங்கி இருக்கு... இதுக்கு முன்னாடி யாகம்ல பண்ணி கடவுள் கிளைமாக்ஸ்ல வந்து நொட்டுவாருன்னு நம்பி இருந்துருக்கானுங்க.. மூடநம்பிக்கையோட உச்சம் இது.. ஒருத்தனுக்கு மனநிலைமை சரி இல்லைனு சொல்லும் போதே மருத்துவரை பாத்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது, மனநல மருத்துவரை பார்த்தாலே அவன் பைத்தியக்காரனு நம்புற பொது புத்தியால வந்த வினைதான் இந்த மரணங்கள்.

இதில் கொடுமை என்னனா 14வயது குழந்தை உட்பட, ஒரு மாஸ்டர் டிகிரி படிச்ச பொண்ணு இப்புடி பல சமூகத்தால அறிவாளிகளா அடையாளம் காணப்பட்டவர்கள் இந்த குடும்பத்தில் இருந்ததுதான்.. இது மிகப்பெரிய முரண்..

பகுத்தறிவு என்பது படிப்பதால் வரதில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்

#Webseries : House of Secrets
#OTT : Netflix
Language : Tamil Audio available

Friday, 10 November 2023

The Boy Who Harnesses The Wind

#TheBoyWhoHarnessedTheWind

#africanmovies #WilliamKamk #Netflix 

#chiwetelEjiofor

#NaanVijay 

ஒரு வாழும் மனிதனை பற்றி எடுக்கப்படும் ஒரு திரைப்படம் அதுவும் ஆப்பிரிக்கா நாட்டில் ஒரு பழங்குடியினர் பின்னனியில் என்றால் நாம் என்ன எதிர்பார்ப்போம் ஒரு கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை, அல்லது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை, அல்லது ஒரு அழிக்கப்பட்ட இனத்தின் கோரத்தை, ஆனால் இந்த படம் அப்படிப்பட்டது அல்ல, இது நம்பிக்கையை விதைக்கிறது... என்னால் முடியும் போது உன்னாலும் முடியும் என்று கட்டியம் கூறுகிறது..

இது ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞனின் பதின்பருவ சாதனை...

Spoiler alert

ஒரு சிறுவன் ஒரு குட்டி கிராமத்தில், மின்சாரம் கூட இல்லாத ஒரு கிராமத்தில் படிக்கிறான் ஆம் வாழ்கிறான் என்பதை விட படிக்கிறான் என்று சொல்வதே மேல், அவன் கண்முன்னே ஒரு கடும் பஞ்சம் கோரதாண்டவம் ஆடுகிறது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வதை பார்க்கிறான், தன் வீட்டில் ஒருவன் உணவு தானியத்தை திருடி செல்வதை அறிகிறான், அரசு உதவி தங்களை எட்டவில்லை என்பதை புரிந்து கொள்கிறான், பின்பு அந்த கிராமத்தின் தலையெழுத்தை மாற்றுக்கிறான் இதுதான் கதை, இது எப்படி நடந்தது என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு கடுமையான வாக்குவாதம் நடந்திருப்பதை காண்கிறோம், படிப்பு அவசியமா இல்லையா, இந்த படம் அதற்க்கான பதிலை தருகிறது, படிக்க பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவன் தன் ஊரின் வாழ்வியலை மாற்றி தருகிறான், அரசு கைவிட்ட, அந்த ஊர் பெரியவர்களால் முடியாமல் திணறி கொண்டிருந்த போது ஒரு பதின்பருவ சிறுவன் அந்த நிலைக்கு விடை அளிக்கிறான், பின்னர் அவனுக்கு இன்னொரு பள்ளியில் படிக்க வாய்ப்பு வரும்போது அவன் செல்லாமல் விவசாயம் செய்கிறேன் என்று சொல்லு போது அவன் தந்தை நீ படி, நீ படிச்சா இங்க எல்லாம் சரியா நடக்கும்னு சொல்றாரு, படிப்பு தரும் நம்பிக்கையை உலகில் வேறு எதனாலும் தர முடியாது..

இந்த திரைப்படத்தின் இயக்குனர் தான் இந்த படத்தில் சிறுவனின் தந்தையாக நடித்திருப்பார், அதிலும் இது அவருக்கு இயக்குனராக முதல் படம் என்பது ஆச்சரியத்தின் உச்சம், அத்தனை அழகான திரைக்கதை அமைப்பு முதலில் அந்த உலகத்தில் நம்மை பொருத்தி, பின்பு அவர்களின் வலிகளை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு கடத்தி கடைசியில் அந்த சிறுவன் ஜெயித்த பிறகு அவனை அவன் அப்போ ஒரு பார்வை பார்ப்பார், அதே பார்வையில் நம்மையும் அவனையும் பார்க்க வைத்திடுவார், வெய்யிலை இவ்வளவு இதமாக காட்சி படுத்த முடியுமா என்று தெரியவில்லை, அதே போல மழைக்கு கோரமுகம் கொடுத்து அதன் வெள்ளத்தின் ஆற்றமையும் புரியவைக்கிறார், வெறுமனே ஒரு பெரிய கார்பொரேட் கம்பெனி காட்டி இதுதான் எல்லாத்துக்கும் காரணம் என்கிற இந்திய சினிமாவின் கதையாடலாக இருந்திடுமோ என்று நினைக்கும் போது, இவர் சரியான அரசியலை நோக்கி இந்த படத்தை நகர்த்தி இருக்கிறார்..

மொத்தத்தில் புழுதி காற்றில் ஒரு விஞ்ஞானி பிறந்த கதைதான் இந்த திரைப்படம்...

Movie : The Boy Who Harnessed the Wind
Language : English
OTT: Netflix

#நான்விஜய்

Wednesday, 8 November 2023

Scam 2003 - The Telgi Story

#Webseries : 5

#Scam2003 #TheTelgiStory #SonyLIV #NaanVijay 

ஹர்ஷத் மேத்தா கதைக்கு பிறகு அதே குழு மீண்டும் இணைந்து தயாரித்திருக்கும் இன்னொரு உண்மை சம்பவம் இந்த ஸ்கேம் 2003, பள்ளிக்கூட நாட்களில் முத்திரைத்தால் மோசடி என்கிற வார்த்தை மிகவும் பிரபலம், பலமுறை பல செய்தித்தால்களிலும், தொலைக்காட்சியிலும் கேட்டது உண்டு, ஆனால் அதன் பின் இருக்கும் இந்த பிரமாண்ட கதையும் கேட்கும் போது ஒரு நிமிடம் ஸ்ஸ்த்தம்பிதே போய்விட்டேன்.

ரயிலில் பழம் விற்கும் ஒரு பட்டதாரி எப்படி இந்தியாவின் மிக பெரும் ஊழலை செய்தான் என்பதை மிகுந்த சுவரசியமிக்க திரைக்கதையுடன் சொல்லி இருக்கின்றனர், நிஜத்தில் இருக்கும் டெல்கியை போலவே ஒருத்தரை கொண்டுவந்து நம் கண்முன் நிறுத்தியத்தோடு அவரது நடிப்பு திறனும் வியக்க வைக்கிறது..

இதுவும் சரி இதுக்கு முன்பு வந்த ஹர்சத் கதையும் சரி ஒன்றை மட்டும் தெளிவாக விளக்குகிறது அது.. அரசியல்வாதிகள் என்றுமே பாதிக்க படுவதில்லை, அவர்கள் எளிமையாக இதில் இருந்து தப்பித்து கொள்ளுவார்கள்,

இந்த கதையில் ஒரு வசனம் வரும்.. நான் ஒரு எலியாக மட்டும் இருக்கும் வரை இந்த சட்டத்தின் ஓட்டையில் ஓடி ஒளிந்துகொண்டு தப்பித்து கொள்ளுவேன் என்று, ஆனால் அந்த எலி பெரிச்சாளியாக மாறாமல் யானையாக மாறினால் யாரால் தான் ஒளித்து வைக்க முடியும், இன்னும் இது போன்ற எத்தனையோ பெரிச்சாளிகள் கிங் கொங் உருவத்தில் இருந்தும் சட்டத்தின் ஓட்டையில் பெரியதாக்கி கொண்டு தப்பித்து கொண்டுதான் இருக்கின்றன, அதிகபட்சம் இன்னும் சில வருடங்கள் கழித்து இது ஒரு content ஆக மாறி இது போல இணைய தொடறாகவோ அல்லது திரைப்படமாகவோ வரும் போது எப்படில்லாம் பண்ணி இருக்கானுங்க பாரேன் அப்புடின்னு உச்சுக்கோட்ட தான் முடியுமே தவிர வேறு ஒன்னும் செய்ய போவதில்லை..

இந்த ஊழளுக்கெல்லாம் பின்னால் மறைந்து நிற்கும் அரசியல்வாதிகளை மீண்டும் வெட்கம் இல்லாமல் ஒட்டு போட்டு நாமும் பதவியில் உட்கார வைக்கதான் போகிறோம், காரணம் கேட்டால், ஒரு கும்பல் மதத்தை காப்பாற்ற என போகிறது இன்னொரு கும்பல் மதவாதிகளிடம் இருந்து காப்பாற்ற என்று சொல்ல போகிறது, ஆனால் யார் கண்ணுக்கும் பின்னால் நடக்கும் இந்த எகனாமிக்கல் crime எப்போதும் தெரியப்போவதில்லை...

So we will wait for another interesting scam story in coming days

#நான்விஜய்

Monday, 6 November 2023

Never Have I ever

#Webseries #Netflix #NeverHaveIEver

Just trying review in english.. So plz don't search for grammar.. Am out of it..

This series is all about a bunch of teens who doing there schooling, the entire story is around  one girl named Devi Viswakumar,

Spoiler Alert*

Devi Viswakumar is a Indian American actually a Tamil famil girl who switched to america from Chennai.. Devi and her 2friends starting the year with a goal, that is they all three should loose there virginity for sure, yet they don't have any boyfriend stuff, so there primary focus is on find a boy for there love and loose there virginity with him

Actually it's sounds like a proper adult movie content but actually its a Comedy drama,  you will enjoy all there comical expressions and dialogue throughout the webseries, but its actually not bitter or vulgar, its just a usual stuff between the college going adults,

Devi the girl who lost her most lovable father before her eyes, thats actually affected her lot, and she desired to out from the trama, by finding love of her life,

The beautiful things I gathered from the series

The love between the father and a imperfect girl is lit to watch, the way Viswakumar handle his daughter, every father will wish we should like him.

Mother of Devi, who struggled a lot to take her daughter without moral support of her husband, and how she gone through this agony and succed as a great mother for her daughter, and the way she handling the modern society vs Difficult Indian culture, just show how our Indian mothers will react on the modern society.. Its was amazingly screenplayed, where some of the cultural different lag will be there but overall it was fun to watch

Grandma who lost her son, relocating to America from India, and she suddenly adopted to the culture and finding her happiness on there is showing pain of elderly peoples loneliness, all they need is a happy supporting system, if they got, behalf of you they will throw the cultural barriers and its beautifully portrayed

Devi and her friends in the school are the main theme of the story I dont want to reveal this on this short review, because if ur interested to watch, you will defiantly enjoy the drama, and this kids will teach lot about the life, sacrifice, friendship values, and perfection on imperfection, love, sex and lot more.

Totally 4seasons and each seasons have 10episodes, Available in Netflix but tamil audio not available.. And english is very very understandable where as lot of indians acted in the series so Indian assent of English is enough to understand the webseries... Give it a try for a lite hearted series 👍🏽

#NaanVijay

Wednesday, 1 November 2023

கீதையோ கீதை, பைபிலோ பைபிள், குர்ஆனோ குரான்

#புத்தகம் : 25

#NaanVijay #நான்விஜய்

இந்த உலகின் பல பக்கங்களில் பல பிரச்சனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது, இதற்கு என்னதான் அடிப்படை காரணம் என்று தேடினால் கிடைக்கும் பதில் மதம், கடவுள், வேதங்கள், அன்பை பரப்ப வந்திருக்கும் அனைத்து மதங்களும் அதை பரப்ப தன் கையில் ரத்த கரையோடு தான் அந்த பரப்புரையை செய்கின்றனர் என்பதுதான் அபத்தமான உண்மை

தோழர் புவனன் எழுதிய இந்த புத்தகத்தை பற்றி கேள்விப்பட்ட சில தோழர்கள் பல இடங்களில் அலைந்து திரிந்து இதன் பாகங்களை திரட்டி இன்று ஒரு முழு புத்தகமாக நமக்கு திரட்டி தந்திருகின்றனர், இந்த புத்தகம் நான்கு குறு புத்தகங்களின் தொகுப்பாகும், பெரியாரின் சிந்தனையால் ஏற்கப்பட்ட தோழர் மதங்களை அதன் புனித நூல்களை பகுபாய்வு செய்து, அதன் கதைகளை பகுத்தறிந்து விமர்சனம் செய்திருக்கிறார், மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட எவர் இந்த புத்தகத்தை படித்தாலும் இவரை தேடிகண்டுபிடித்து அடிக்க கண்டிப்பாக தேடுவார்கள் என்பது உண்மை, ஆனால் அறிவுள்ளவர்கள் பகுத்தறிய தெரிந்தவர்கள் அதில் உள்ள உண்மையை புரிந்து கொள்வார்கள், வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் மத புத்தகங்கள் வெறும் பிதற்றல்கள் என்று நிரூபிக்கவே ஒருவர் அதை படித்து, அவர் எந்த நோக்கத்தோடு அதை படித்தாரோ அது நிறைவேறிவிட்ட சந்தோசத்தோடு அதை பற்றி பக்கம் பக்கமாக கிழித்து தொங்கவிட்டிருக்கிறார் என்பதே மிக பெரிய உண்மை,

இறுதியில் நாத்திகம் ஏன் தேவை, அதனால் இங்கு என்ன மாற்றம் நடந்திருக்கிறது, என்று பேசுகிறார், அவர் சொன்ன அத்தனையும் உண்மை தான் , இங்கு கலாச்சாரம் என்று சொல்லப்பட்ட பல விஷயங்கள் மாறிவிட்டது, முன்பு போல ஜாதிய கொடூரத்தை வெளிப்படையாக பல ஊர்களில் இன்று செய்ய முடியாது, பெண்களை அடிமைப்படுத்துவது என்பதை இன்று சட்டப்படி குற்றமாகியது, மறுமணம், விவாகரத்து எல்லாம் இயல்பில் வந்துவிட்டது, ஆனால் கடவுள் நம்பிக்கை?

இன்று உண்மையில் எத்தனை பெயர் நாத்திகவாதி, ஏன் தோழரின் கொள்கை குரு பெரியாரை பின்பற்றுவதாக சொல்லும் கட்சியில் யாரால் இன்று வெளிப்படையாக கடவுள் மறுப்பு பேச கூடிய தைரியம் இருக்கிறது, சனாதானத்தை எதிர்க்கிறோம் கடவுளை அல்ல கடவுள் நம்பிக்கையை அல்ல என்று சப்பைகட்டு கட்டும் பெரியாரியக்க தோழர்களை என்ன செய்வது?.. மனிதன் வளர அறிவு வளர்கிறது, அறிவு வளர பல மடைமைகள் உடைக்கிறது, கூடவே கடவுள் வேறு பரிணாமம் கொண்டு இங்கு வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்.. பயம் இருக்கும் வரை கடவுள் இருப்பார்..

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல இன்றைய உண்மையான நாத்திகம் என்பது மனிதன் தன்னம்பிக்கையோடு இருப்பது தான், தன்னம்பிக்கை அற்றவனுக்கு கடவுள் நம்பிக்கை தான் ஒரே பிடிப்பு.. ஆனால் அது பிற உயிரை வாங்கும் அளவுக்கு மூடத்தனம் ஆவதுதான் பயத்தின் உச்சம்..

புத்தகம் : கீதையோ கீதை, பைபிலோ பைபிள், குர்ஆனோ குரான்
ஆசிரியர் : தோழர் புவனன்
பதிப்பகம் : நிகர் மொழி பதிப்பகம்
பக்கங்கள் : 216
விலை : 150

Tuesday, 31 October 2023

காலப்பாணி இணையத்தொடர் விமர்சனம்

காலாபாணி என்றால் கொலை நீர் என்று அர்த்தம், அதாவது ஒரு தப்பி செல்ல முடியாத சுவர், அந்தமான் இருக்கும் செல்லுலர் சிறைக்கு காலப்பாணி என்ற பெயர் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அங்கு இருக்கும் மக்கள் அந்த மொத்த தீவையே அப்படித்தான் பார்க்கின்றனர் என்பதை இந்த இணைய தொடர் பேசுகிறது..

2027ல் நடக்கும் இந்த கதையில் கொரோனா போல ஒரு அசாதாரண சூழல் உருவாகிறது, அதில் சிக்கிக்கொள்ளும் அந்தமான் மக்கள் அதில் எப்படி மீண்டனர், எப்படி அதை சமாளித்தனர், அதன் பின் இருக்கும் அரசியல் என்ன? என்று பல கதாபத்திரங்களை கொண்டு பேசுகிறது இந்த இணைய தொடர்..

இதெல்லாம் ஈர்த்தது என்றால் இந்த கதை களம் அதுவே மிகுந்த சுவரசியமான ஒன்று, அதற்கு எழுதப்பட்ட நேர்த்தியான திரைக்கதை நம்மை ஒவ்வொரு பகுதியிலும் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது

மனைவியின் கட்டளையின் கீழ் குடும்பத்தை நடத்தும் ஒரு தந்தை அங்கே சுற்றுலாவுக்கு வருகிறார், வருகிறவர் இந்த நோய் தோற்று பகுதியில் சிக்கி கொள்ள, அவரது பிள்ளைகள் இன்னொரு பகுதியில் சிக்கி கொள்கின்றனர், அதாவது இவரும் இவர் மனைவியும் நீல் தீவிலும், அவரது பிள்ளைகள் போர்ட் ப்ளாயிர்ம் சிக்கி கொள்கின்றனர், அங்கிருக்கும் தன் பிள்ளைகளை இவர் எப்படி மீண்டும் சந்திக்கிறார், எப்படி திரும்புவார் என்பது அவர் பக்கத்து கதை, இதில் என்ன சுவாரஷ்யம் என்றால், அவர் நோய் தொற்றில் மனைவியை இழந்து விடுகிறார், பின் முதல் முறையாக தண்ணிச்சையாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் ஆளாகுகிறார், இதனால் அவர்பட்ட பாடுகள், ஒரு தந்தையாக அவரது பரிதவிப்பு என்று விகாஸ் நடிப்பில் கலக்குகிறார்,

இன்னொரு பக்கம் தன் கண் எதிரே தான் செய்த தவறுக்காக தன் நண்பனை இழந்த ஜோஸ்னா, அதன் பின் கார் ஓட்ட பயந்து ஒதுங்கி இருக்கிறார், ஆனால் ஒரு புள்ளியில் வேறு வழி இல்லாமல் ஒரு குழந்தையை காப்பாற்ற கார் ஓட்டுவதும் அந்த பிள்ளைகளை பத்திரமாக திருப்பி அனுப்ப போராடுவதும் இடையில் தன் காதலை மீண்டும் தேடி பிடிக்க முயற்சி செய்வதும் என்று அதே கதையில் இன்னொரு பரிணாமத்தில் அருஷி கலக்குகிறார்

மற்றொரு பக்கம் சுற்றுலா வருபவர்களை ஏமாற்றி அவர்கள் மூலம் கடத்தல் வேலை செய்யும் ஒருவன் இறுதியில் தன் உண்மையான பின்புலத்தை கண்டுபிடிக்கும் தருணமும், தன் வாழ்நாள் முழுக்க நான் எடுத்தே பழக்கபட்டுருக்கன், என்ன ஒருவாட்டியாவது கொடுக்கவிடுங்கனு, தியாகம் பண்ண கெஞ்சுற காட்சியிலும் சுகந்த் ஆஹா போட வைக்குறாரு

இந்த தொடரில் மிக முக்கியனான பாத்திரம் ரிட்டு காக்ரா, தன் அப்பா ஒரு மதிப்பு மிக்க உயர் அதிகாரியாக இருந்தும் தலித் என்னும் ஒரு காரணத்திற்காக வாழ்வின் கடைசிவரை நிமிரமுடியாமல் போன வேதனையை பார்த்து வளர்ந்த பெண், நீ எவ்வளவு படிச்சாலும் உன் surname வெச்சு உன்ன கீழ தள்ளிக்கிட்டே இருப்பானுங்க, ஒரு நாள் நீயும் என்ன மாதிரி ஒரு தோத்துப்போனவளா நிப்பன்னு அப்பாவே சொல்ல, அதை ஜெயிக்க ஓடிக்கிட்டே இருக்கா ஒருத்தி, கடைசியா ஒரு கட்டத்துல அவ படிச்சு மேல மட்டும் வரல அந்த படிப்பாள ஜெயிக்கிறா அப்போ அவளை Dr. காக்ரா என்று அழைக்கும் போது உடைந்து அழுது இன்னொரு செய்தியை நம்ம மனசுல ஆழமா பதிய வைக்குறா அது என்னனா, நீ படிச்ச மட்டும் போதாது நீ ஜெயிச்சாகனும் அப்போதான் உன் ஜாதியை தூக்கிட்டு ஒருத்தனும் உன்ன இரக்க முடியாது, மற்ற ஜாதிகாரங்க படிச்சா போதும் ஆனா நாம ஜெயிச்சாகனும், ஏனா படிச்ச போதும்னு நெனச்சோம் அவங்க திருப்பி அதிகாரத்துல உக்காந்துட்டு நசுக்குவாங்க, அதனால இப்போ ஜெயிக்கவும் வேணும், இது ஒருவகையான சமுதாய அழுத்தம் அவர்களுக்கு தெரியாமலே அவங்கமேல விழுந்துருக்குனு ரொம்ப தெளிவா புரியவைக்குது இந்த தொடர்.. Dr. ரிட்டு காக்ராவாக வாழ்ந்து ஆச்சரியப்படுத்திட்டர் ராதிகா

கடைசியா ASOP கேட்டேன், உணவு சங்கிலியில சின்ன பூச்சிங்க தான் முதலில் சாகும்னு உணவு சக்கரத்தோட விளக்கத்தோட சிரிச்சுகிட்டே எல்லாபகுதியிலும் வில்லத்தனத்தை வாரி வழங்குகிறார், என்னை கேட்டால் இந்த மொத்த தொடரிலும் சிறப்பாக நடிச்சவரு கண்டிப்பா இவருதா, ஒரு கார்பொரேட் கம்பெனிக்கு ஓடிப்போய் தானாவே உதவி பண்ற காரியக்கார போலீஸ் காரன், corruption பண்ணி punishment வாங்கி அந்தமானல் சீக்கிட்டு இருக்க அவரு திருப்பி வெளிய வர பண்ற செயல்கள் தான் இந்த மொத்த இணைய தொடர்ல நடக்குற பிரச்சனைக்கும் மூலகாரணம், கிட்டத்தட்ட ஒரு butterfly effect மாதிரி, ஆனா அவரே தான் இந்த pandamic முடிய கண்டிப்பா 2வது சீசன்ல காரணமா இருப்பாருன்னு இப்போவே கணிக்க முடியுது, அமே கேட்டன் சார் வந்து சிறப்பான சம்பவம் பண்ணிருக்காருனு தான் சொல்லணும்..

மொத்தத்தில் காலப்பாணி கண்டிப்பா பாக்கவேண்டிய ஒரு இணையத்தொடர், பல வகையான அரசியலை, உறவு சிக்கல்களை, காதலை, பழி உணர்வை, ஒரு காலாச்சார அழிப்பை இப்படி பல அரசியலை ரொம்ப இலகுவ பேசிட்டு போகுது, இதைவிட சிறப்பான தரமான சம்பவதை இரண்டாம் சீசன் செய்யும்னு நம்புவோம்..

பெயர் : காலப்பாணி
OTT: Netflix

#நான்விஜய் 

Wednesday, 4 October 2023

Sex Education - WebSeries Review

#SexEducation #Netflix #NaanVijay #நான்விஜய் 

Netflix subscription போட்டதும் என்ன பாக்குறதுனு எந்த ஐடியாவும் இல்லாம சுத்திகிட்டு இருக்கும் போது உள்ள இருந்த ஒரு பூனைகுட்டி இந்த பக்கம் கூட்டிட்டு வந்துது.. UK ல ஒரு சின்ன ஊரு அங்க இருக்க ஒரு ஸ்கூல் அதுல பசங்க பண்ற காம அல்சாட்டியங்கள் தான் இந்த மொத்த 4சீசன் கதையும்.. பேர கேட்டதும் சத்தியமா வேற ஒன்ன எதிர்பார்த்துதான் முதல் எபிசொட் பாக்க ஆரம்பிச்சன், ஆனா முதல் எபிசொட் சொல்லிடுச்சு நாம இதுல உண்மையாவே நிறைய கத்துக்க போறோம்னு..

இதுவரைக்கும் sex பத்தின எல்லா புரிதல்களையும் கிட்டத்தட்ட இந்தியன் மெண்டாலிட்டில இருக்க எல்லாத்தையும் இந்த webseries உடைக்குது, நீங்க sex சார்ந்து என்னலாம் தெரிஞ்சுகுவீங்க தெரிஞ்சுக்கணும் ஆசை படுறிங்க எல்லாமே இருக்கு இதுல..

ஒட்டிஸ் ஒரு ஸ்கூல் படிக்குற நைட் 10மணி டாக்டர், ஏன் அப்புடி சொல்றன்னா அந்த டைம்ல நம்மில் பலபேரு ரகசியமா பார்த்த அந்த show எல்லாருக்கும் புரியுற மாதிரி அவன் ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ்க்கு சொல்லி தருவான்.. கண்டிப்பா என்னோட favourite கேரக்டர் without any doubt

ஒட்டிஸ், மேவ் இவங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல் படிக்குறவங்க, மேவ் ஒரு ragged கேர்ள், ஒட்டிஸ் ஒரு சாக்லேட் பாய், mastrubation கூட ஒழுங்கா பண்ண தெரியாத ஒரு உதவாக்கரை.. ஆனா அவனால மத்தவங்க problem solve பண்ண முடியும், ஒரு வித்தியாசமான இன்சிடென்ட்ல ஒருத்தருக்கு அட்வைஸ் கொடுக்க போய் அதனால அவன் லைப்ல வர பெரிய மாற்றத்தை பாக்குற மேவ் ஒட்டிஸ்ச ஸ்கூல்ல ஒரு sex கிளினிக் ஆரம்பிக்க சொல்ற, அதனால நிறைய சம்பாதிக்க முடியும்னு சொல்ற.. இதை ஒரு மனசா ஏத்துகிட்ட ஒட்டிஸ் எப்படி மேவ் கூட சேர்ந்து clients புடிச்சான் அவங்க எப்படி அத ஒரு சக்ஸஸ் கொண்டுவந்தாங்க அப்புடிங்குறது 1st சீசன் கதை அடுத்த வந்த எல்லா சீசணும் அதனால ஏற்பட்ட problems அது அவங்க வாழ்க்கையை எப்புடி மாத்துச்சினு 3 சீசணும் சொல்லும்..

கொஞ்சம் nudity scenes, கொஞ்சம் இண்டிமேஸி சீன்ஸ் இருக்கு ஆனா அதெல்லாம் விட பேசுவாங்க பேசுவாங்க பேசுவாங்க பேசுவாங்க பேசுவாங்க பேசிக்கிட்டே இருப்பாங்க.. உண்மைலையே இந்த சீரிஸ் ஒட மிக பெரிய சக்ஸஸ் காரணம் அவங்க பேசிக்கிட்டே இருப்பாங்க..

LGBTQ இதுல நம்ம எப்பவும் trans and gay, lesbo இவங்கள பத்தி நிறைய பேசி இருப்போம் படிச்சுருப்போம், but queer, Bisexual and assexual இவங்கள பத்தி நாம யோசிச்சுக்கூட பாத்துருக்க மாட்டோம், இந்த சீரிஸ் அவங்க வாழ்க்கையை பத்தின பல முக்கியமான பிரச்சனைகளை பேசுது, அவங்க ரெண்டுக்கும் நடுவுல மாட்டிகிட்டு அனுபவிக்குற வலிகளை விளக்குது.. தன்னை கேனு வெளிய சொல்ல முடியாம ஓடைஞ்சு போற ஒருத்தன் அத ஆமா நான் இப்படித்தானு சொன்னதும் இந்த உலகத்தை ஜெயித்தா ஒரு feelku வரதும், அத கடைசி வரைக்கும் ஒரு குற்ற உணர்ச்சியோட handle பண்ற இன்னொருத்தனோட வலிக்கும் என்ன காரணம், ஒரு பொண்ணு பையனா தன்ன உணரும் போது அதனால அவ பட்ற்ற அவஸ்தைகள், தன்னை ஒரு பையனாவே மற்றவர்கள் முன்னாடி அவளை காட்டிக்க அவ பட்ட கஷ்டங்கள் இதைபற்றியும் பேசுறாங்க..

ரொம்ப வருடமா ஒண்ணா இருக்காங்க ஆனா சந்தோசமா இல்ல ஆனா ரொம்ப வருஷமா ஒண்ணா இருக்குறோமேங்கிற ஒரே காரணத்திற்காக அதை சகிச்சுட்டு இருக்குறது எவ்வளவு பெரிய வலி அப்புடின்னு பேசுது இந்த சீரிஸ், எல்லாத்துக்கும் பின்னாடியும் அவங்க வளந்த விதம் எப்படி காரணமா நிக்கிது அதை நாம கண்டுபிடிச்சி மாத்திக்கணும்னு பேசுது இந்த webseries

ஒரு கதையை சொல்லி அந்த கதைக்குள்ள இவ்வளவு பேரு இவ்வளவு பிரச்சனைகள் இவ்வளவு காரணங்கள் and இது ஒரு எடத்துல கூட போர் அடிக்கல கண்டிப்பா ரொம்ப priechy ஆகவும் இல்ல, well return screen play,

நாம பாக்குறமாதிரி இந்த உலகத்துல எல்லா எடத்துலயும் sex ரொம்ப ஒரு பெரிய புனிதமான அல்லது பாவமான ஒரு விஷயமா பாக்காம, அதை ஒரு உணர்வா handle பண்ணனும் அதைவெச்சு ஒருத்தரோட ஒழுக்கத்தை, வாழ்வியல் நிலையை தீர்மானிக்குறது கேவலமான விஷயம்னு ரொம்ப தெளிவா பேசுது இந்த சீரிஸ், casual sex பல பேருகூட வெச்சுக்குற ஒரு பொண்ணால தான் விரும்புற ஒரு பையன் கூட காதல் இல்லாம அவனை நெருங்க முடியல, பல ஆண்களோடு உறவு கொண்ட ஒரு பெண்ணிடம், அவ அனுமதி இல்லாம அவ மேல ஒருத்தன் mastrubate பண்ணி sperm தெளிச்சது அவளை abuse பண்ணதாதான் பாக்கணும்னு புரிய வைக்குது.. ஏன்னா அது அவ அனுமதி இல்லாம நடக்குது..

ஒரு ஆண்னால ஒரு பெண்ண திருப்தி பண்ண முடியல ஏன்னா அவன் தன் மனைவியை அதிகமா நேசிக்குறான், வயதான காலத்தில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளும் ஒரு தாய் என்னெல்லாம் அவஸ்தை பற்றா அப்புடின்னு ஒரு பக்கம், 12வயசுல தான் அம்மாவோட பாய் friendஆள abuse ஆகுற ஒரு பொண்ணு ஒரே இடமா இருந்த தனக்கு அது திருப்பி நடந்துடும்னு பயந்து தொடர்ந்து இடமாறி ஓடிக்கிட்டே இருக்கா.. அவளுக்கு நம்பிக்கை கிடைக்குற ஒரு இடத்தை தேடி... and இன்னொரு அழகான விஷயம்.. தன் காதளுக்காக தனக்கு கிடைச்ச ஒரு பெரிய வாய்ப்பை தூக்கி போடும் பெண்ணிடம்... நீ கனவ துரத்தி ஓடு உன் காதல் உனக்காக காத்திருக்கும்.. இல்லனாலும் இன்னொரு அழகான வாழ்க்கை அமையும் ஆனா இதுக்காக அதை தொலைச்சுடாதனு சொல்லி தரதெல்லாம், புரிதலின் உச்சம்.. இப்படி நிறைய கத்துக்கவும் சகமனிதர்களை நேசிக்கவும் அவர்களை புரிந்து கொள்ளவும் இந்த சீரிஸ் கண்டிப்பா உதவும்... உங்க கூட இருக்கவங்க LGBTQ இல்ல assexual இல்ல வயதான தாயா இளமையான பொண்ணா, இதெல்லாம் முக்கியம் இல்ல அவங்க அவங்க வாழ்க்கைக்கான போராட்டத்துல இருக்காங்க நாம அவங்களுக்கு உதவி பண்ணலானாலும் அடலீஸ்ட் judge பண்ணாம இருப்போம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Series : Sex Education
OTT: Netflix

Sunday, 9 July 2023

மாமன்னன் பார்வை

குறிப்பு : திரைக்கு பின் எந்த அரசியல்வாதி வரலாறு என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு திரைப்படமாக மட்டும் பார்த்தபோது நான் உணர்ந்தவையை பகிர்ந்துக்கொள்கிறேன், இந்த விலக்கலில் தேவர் மகன் பஞ்சாயத்தும் அடங்கும்..

முதலில் இந்த திரைப்படத்தை இரண்டுவிதமாக அணுகலாம் ஒன்று, மாரிசெல்வராஜ் நேரடியாக பேசிய அல்லது உணரவைக்க முயற்சித்த சாதிய குறியீடுகள் உள்ள திரைப்படமாக, இன்னொன்று ஒரு மகனுக்கும் தந்தைக்கும் இடைப்பட்ட படமாக...

தான் ஒரு வலியை அனுபவிக்கும் போது அதை மகன் தந்தையிடம் சொல்கிறான், அந்த நேரத்தில் தந்தை சிலமுயற்சிகள் எடுக்கிறார் ஆனாலும் அது சாத்தியப்படவில்லை, இதனால் அந்த உறவு முறிகிறது, சில காலத்திற்கு பின்பு அதே போல ஒரு ஆசாதாரண சூழல், இம்முறை அந்த தந்தை அதை தன்னால் சரி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை கொடுக்க, அந்த மகனும் வருகிறான், அங்கு அவர் முயல்கிறார் ஒருவேளை அவர் அதை சரிசெய்திருக்க கூடும், ஆனால் அங்கு மகன் தந்தையின் சுயமரியாதை இழந்த ஒரு நிலையை காண அதை மீட்டு தர வருகிறான், போராடுகிறான் அதில் ஜெயித்தானா இல்லையா என்பதே மீதி கதை..

இன்னொரு பக்கம், காலம் காலமாய் அடிபட்டு அடிமையாக்கப்பட்ட ஒரு சமூகம் மேல வர அவர்கள் குரல், சட்டம் இயற்றப்படும் அரங்கில் ஒலிக்கப்பட வேண்டும் என்னும் உன்னத நோக்கோடு அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள் போராடி தனி தொகுதி என்னும் அமைப்பை தேர்தலில் கொண்டுவருகின்றனர், அது எந்த அளவுக்கு அந்த தலைவர்கள் நினைத்தது போல வலிமையாக செயல்படுகிறது என்பதை தான் இந்த திரைப்படம் கேள்விக்குட்படுத்துகிறது,

Spoiler alert (ஒருவேளை இன்னும் படம் பாக்கலைன்னா)

தான் ஒரு MLA என்ற உணர்வு அந்த MLA வுக்கு இருக்கிறதா என்றால் இல்லை ஏன் இல்லை, ஏனெனில் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர், அவர் அதை இன்னொரு சமூகம் அதை தனக்கு கொடுத்ததாக அதற்கு அவர் நன்றிகடன்பட்டவறாக உணர்கிறார், அந்த உணர்ச்சியை தான், இந்த பதவி என் உரிமைனு தெரியாம அவங்க கொடுத்த பிச்சைனு நெனச்சிட்டேப்பா என்று வடிவேல் பேசும் வசனம் காட்டுகிறது,

நிஜத்தில் இப்படிதானா என்றால் அது அந்த அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வெளிச்சம், ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், அந்த வீட்டிற்க்குள் அவர் உட்காரமாட்டார் அது பழக்கம் என்று சொல்லும் போது, அது என் சுயமரியாதை இழப்பு என்பதை மகன் தந்தைக்கு புரியவைக்கும் அந்த பகுதி கிளாஸ் ரகம், பல வசனங்கள் காட்சிகள் என்று தான் கொட்ட வேண்டிய மொத்த அரசியலை பேசி பேசி தீர்த்திருக்கிறார் மாரி என்றே சொல்லவேண்டும்..

உன்னை உட்காரக்கூடாதுனு சொன்னவன், நாளைக்கு நீ கை காட்டி உட்கார்னு சொன்னாதான் உட்காரணுங்குற அளவுக்கு உயர்ந்து காட்டு என்பது இந்த கதையோட one line சொல்லலாம்..

படமாக எப்புடி இருக்கு?

மூன்று பேர் இந்த படத்தை தோலில் சுமக்கிறார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும், முதலில் வடிவேலு, ஒவ்வொரு காட்சியிலும் மின்னுகிறார், அதிலும் தன் மகன் அடிபட்டு கிடக்க நியாயம் கேட்டு நிற்கும் தந்தையாக, தனது வலி, இயலாமை, கோபம் என்று ஒரே காட்சியில் கலந்துகட்டி எப்படி பட்ட நடிகன் ப்பா அப்படினு கண்டிப்பா சொல்ல வெச்சுடுவாரு... அப்பா உட்காருப்பானு சொல்லும் போதும் உட்கார்ந்த பின்னும் ஏதோ தப்பு பண்ணிட்டோம்னு ஒரு வகை குற்றவுணர்ச்சியில் இருப்பது போன்ற அந்த நடிப்பு அந்த காட்சிக்கே வேற ஒரு ரகம் காட்டிடுது, ரொம்ப அமைதியா நிதானமா யோசிச்சு செயல்படுற ஒரு அரசியல்வாதியா மனதில் நிக்கிறார்,

பகத் பாசில் மனுஷனா இவங்குற அளவுக்கு performance பின்றான் மனுஷன், அவர் அண்ணனை திட்டும்போது ஒரு அதிகார தோரணை, மிக முக்கியமா உங்க அப்பா யார் சொன்னாலும் உட்காராமாட்டார் நீ உட்காருன்னு சொல்லும் போது ஒரு ஏளன சிரிப்பு, அப்புடியே cut பண்ணா பாத்தியாண்ண உட்காந்ததும் வாடா போடான்னு சொல்றங்குற transformation அதுவும் அந்த சீன்னோட மூடுக்கு எற்றாற்போல கொஞ்சம் கொஞ்சமா develop பண்ணி கடைசியா துப்பாக்கி எடுக்க ஓடுற வரை மனுஷன் rule பண்றான் அந்த scene, இரண்டாம் பாதியில கார்ல மிரட்டுற scene, சங்கத்துக்காரங்க கால்ல விழுற scene இப்படி ஒவ்வொண்ணும் நான் யாருனு காட்ரன் பாருங்கடா ரகம்,

அடுத்து கண்டிப்பா ARR மனுஷன் BGM ல சக்கப்போடு போட்டுருக்காரு, படம் ஆரம்பிக்கும் போதே வடிவேலுவோட வாய்ஸ் background கொண்டுவந்து அந்த மனுஷன் இந்த படத்துல சீரியஸ் தான் பாக்கணும்னு ஒரு mindset கொண்டுவந்துடுறாரு, அதே டோன்ல வடிவேலு பாக்குறதால ஆரம்பிக்கும் போதே வடிவேல் கூட நாம ஈஸியா ஒன்றிக்க முடியுது, கிணத்து காட்சி மியூசிக்ல ஒரு elevation கொடுத்து ஏற்கனவே பயங்கர intense இருக்க scene இன்னும் கொடூரமா மாத்திடுறாரு, பாட்டு எல்லாமே பட்டைய கிளப்புது, ஒண்டிவீரன் பாட்டு சிங்கப்பெண்ணேக்கு மேல கொண்டாட படவேண்டிய பாட்டு, நெஞ்சமே நெஞ்சமே ஒரு 90s feel போட்டு தாக்கிட்டான் மனுஷன், வடிவேல் பாடுன பாட்டு கேட்கும்போது இருந்த impression காட்சியா பாக்கும் போது பெருசா எடுப்படலை மற்றபடி மாஸ்டர் அவரு வேலைய வேற level பண்ணி இருக்காரு..

கீர்த்திக்கு பெருசா நடிக்க ஒன்னும் இல்ல படத்துல, படம் முழுக்க உதயநிதி இருந்தாலும், வடிவேல், பகத் ரெண்டுபேரும் அந்த பக்கம் திரும்ப விடாம நம்மள பாத்துக்குறாங்க, அவங்க ரெண்டுபேரும் இருக்கும் போது இவர் நடிப்பு பெருசா எடுப்படலை, ஆனாலும் ரொம்பவே மேனக்கெட்டு சில காட்சிகளெல்லாம் நடித்திருக்கிறார், குறிப்பாக, அப்பாவை உட்கார சொல்லும் காட்சியில் அவர் யார் சொன்னாலும் உட்காரமாட்டாறான்னு ஒரு மூட் elevation கொடுக்கும் போது அங்க இருந்து பகத் அந்த scene அவர் பக்கம் திருப்பிடுறார்..

அடுத்து முழுபடமாக முதல் பாதி கொடுத்த வலியை பாதிப்பை இரண்டாம் பாதி கொடுக்கவில்லை, அது ஏதோ ரெகுலர் cat and mouse போட்டி கதையா மாறிடுச்சு, அந்த intense ரொம்பவே ரெண்டாம் பாதில missing, அது மட்டும் இருந்திருந்தா இது ஒரு வேற level படம், ஆனால் overall ரொம்ப நல்ல மேக்கிங், அருமையான காட்சி அமைப்பு

குறியீடுகள் அநியாயத்துக்கும் போட்டு வெச்சுருக்காரு மனுஷன், அய்யா எங்களுக்கு அவ்வளவு அறிவேல்லாம் இல்லைங்க எத சொல்றதா இருந்தாலும் நேராவே சொல்லிடுங்க, அதை புரிஞ்சு படத்தை follow பண்றதுக்குள்ள அடுத்த show போட்டாங்க.. கொஞ்சம் அடுத்தவாட்டி பாத்து பண்ணுங்க... அப்புறம் உதயன்னா ஏன் பன்னிங்களா செத்துப்போற சீன்ல உள்ள போனதும் சிரிச்சாருன்னு தான் இப்போவரைக்கும் புரியல... அதை அழுகைனு மட்டும் சொல்லி கொலவெறி ஆக்கிடாதீங்க சொல்லிட்டேன்...

நான் விஜய் 

Saturday, 8 July 2023

அமெரிக்காவின் தோள்சீலை போராட்டம்

சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி தமிழ் ஊடகங்கள் இணையத்தில் வெளியிடுகின்றன, அந்த செய்தியின் சாரம் மற்றும் பின்னணியை அறிய google உதவியை நாடியப்போது அதுக்கொடுத்த பின்னணி தகவல்கள்..

அமெரிக்காவில் பல மாகனங்களில் பெண்கள் மேல் ஆடை இல்லாமல் சூரிய குளியல் எடுக்க தடைவிதிக்கபட்டிருக்கிறது, இதை எதிர்த்து maryland என்னும் மாகனத்தில் ஒரு வழக்கு தொடரப்படுகிறது, அதில் ஒரு குழுவை சேர்ந்த பெண்கள் எங்களுக்கு மேலாடை இல்லாமல் கடற்கரையில் குளிக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபடுகிறது, ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து அங்கு மேல்முறையீடு செய்யவும் அனுமதிக்கவில்லை.

இதன்பின் அந்த பெண்கள் குழு வேறு வழியின்றி அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை கொண்டு செல்கிறது, அங்கிருக்கும் நீதிபதிகள், maryland நீதிமன்றம் நடந்த விதம் வருத்தமளிப்பதாக தெரிவித்து, இதை மறுவிசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது, ஆனால் அதற்கு நீதிமன்ற தரப்பு இது கலாச்சாரத்துக்கும், பெண்கள் பாதுகாப்பிற்கும் எதிரானது என்று சொல்லி மறுக்க, வழக்கை உச்ச நீதிமன்றமே கையில் எடுத்து விசாரணையில் இறங்குகிறது, அப்போது தான் அமெரிக்காவின் பிற மாகான பெண்களும் தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று சொல்லி போராட்டத்தில் இறங்குகின்றனர்,

அமெரிக்காவின் ஒரு மிகப்பெரும் தெருவில் பெண்கள் மேலாடை இல்லாமல், நிறங்களால் வரைந்துகொண்டு ஒரு பெரிய பேரணியையும் நடத்துகின்றனர், இதன் விளைவால் சில மாகானங்கள் அந்த இடத்தில் பெண்களுக்கு அந்த உரிமை வழங்க முன்வருகின்றனர், இதை தங்கள் வெற்றியாய் நினைத்து அமெரிக்க பெண்கள் கொண்டாடுகின்றனர்,

இதில் வழக்கீல் முக்கியாமாக வைக்கப்பட்ட வாதம், அமெரிக்கா இன்று ஒரு முன்னுதாரணமான நாடு, செல்வசெழிப்பில் வளர்ந்த நாடு, சமஉரிமை பேசும் நாடு, ஆனாலும் அது பெண்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுகிறது, அதாவது ஒரு ஆணுக்கு கடற்கரையில் மேலாடை இல்லாமல் சுற்றும் உரிமை இருக்கிறது ஆனால் அது பெண்களுக்கு இல்லை, காரணம் கலாச்சாரம், பாதுகாப்பு, அப்படி எங்களை பாதுகாக்க மறைக்க வேண்டும் என்றால், எங்கள் தலைமுடி கழுத்து, தோல்பட்டை என்று அனைத்தையும் மறைத்து உட்கார வேண்டியது தான், அதுதான் இந்த நாடு எங்களுக்கு கொடுக்கும் சமஉரிமையா என்று கேள்விகள் கேட்டு திணறடித்தார், இதன் விளைவு தான் சில மாகனங்களின் இந்த முடிவு, இருந்தும் இந்த வழக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வழக்கை குறித்த செய்தித்தான் தமிழ் ஊடகங்கள் வெளியிட, அதன் comment பகுதியில் நான் பார்த்த சில கருத்துக்கள் என்னை இன்னும் சிந்திக்க செய்தது.. அந்த கருத்துக்களில் பெரும்பாலும் சொல்லப்பட்ட ஒரு வார்த்தை தோல்சீலை போராட்டம்..

நம் நாட்டில் தோள்சீலை அணிய நாம் போராடி, நம் பெண்கள் அந்த உரிமையை பெற்றிருந்தனர், ஆனால் இந்த பெண்கள் கழட்ட உரிமை தேடுகின்றனர், இதற்கு ஒரு முற்போக்கு கூட்டம் முட்டுவேறு கொடுக்கிறது, இவர்கள் எல்லாம் என்னவகை பெண்கள் என்று அடுத்து அந்த பெண்களின் நடத்தையை குறித்து விமர்சனங்கள் வைக்க தொடங்கிவிட்டனர், இதில் ஒருவர் இந்த முற்போக்கு சிந்தனை கொண்டுதான் பல பெண்களை ஆண்கள் முற்போக்கு போர்வையில் அனுபவிக்கிறார்கள் என்று ஒரு குற்றசாட்டையும் வைக்க, அதற்கு பல ஆமாக்களும், லைக்ஸ்யும் தெறித்துகொண்டிருந்தது...

என் சிந்தையில் தோள்சீலை போராட்டமும், இந்த அமெரிக்காப்பெண்களின் topless போராட்டமும் ஒன்றாகத்தான் தெரிகிறது, நீ மறைக்க வேண்டுமா வரிகட்டு என்று சொல்லும்போது, இது என் உடல், இதில் எதை அணியவேண்டும் என்பது என் உரிமை என்று பேசி சண்டையிட்ட உயிரை கொடுத்த அந்த பெண்களின் போராட்டத்தில் எத்தனை நியாயம் இருந்ததோ, அதே நியாயம் இந்த அமெரிக்காப்பெண்களின் போராட்டத்திலும் இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன், எல்லா பக்கமும் வளர்ந்த ஒரு நாடு இன்னும் ஒரு பெண்ணின் உடையில் அதை நியமிக்கும் அதிகாரத்தை தன்கையில் வைத்திருக்க முயற்சிக்கிறது என்றால், இன்னும் அது பெண்களை சரியாக மதிக்கவில்லை என்பதே அந்த நாட்டின் சட்டத்தில் எனக்கு ஏற்படும் புரிதல்,

முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றும் கூட்டம் என்று சொல்பவர்கள் பிரச்னை ஒன்று மட்டும்தான், இந்த முற்போக்கு சிந்தனையால் இன்று பெண்கள் அவர்களுக்கான உரிமைகளை பேச தொடங்கிவிட்டனர், தாங்கள் எப்படி நடத்தபட வேண்டும் என்பதை இன்று அவர்களே முடிவு செய்கின்றனர், இதை பொறுத்துக்கொள்ள முடியாத கூட்டம் எப்போதும் போல் தங்களுக்கு தெரிந்த பெண்களை போக பொருளாக பார்க்கும் அந்த மனோ நிலையை அவர்கள் காமத்திற்காக இப்படி சுதந்திரம் பேசுகின்றனர் என்று திசை திருப்பிவிடுகின்றனர்,

என்னை பொறுத்த வரையில் தோள்சீலை போராட்டம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பெண்களுக்கு இந்த topless போராட்டமும் முக்கியம்.. அது அவர்கள் உடல், அவர்கள் உடை அவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும், நாம் மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்போம், அவர்கள் வெற்றியை கொண்டாடவிட்டாலும், அதற்கு வேறு சாயல் பூசும் கோழைதனத்தை காட்டாமல் இருங்கள் போதும்...

நான் விஜய் 

Sunday, 30 April 2023

மண் சாலை

அழகான மண் சாலை..
வெயிலில் இதமாக காலார
ஒரு நடைப்போடா மனம் ஏங்கியது..

ஊருக்கு உள்ளே செல்லும் சாலை,
நாகரிகத்தை இறுதியில் ஒளித்து வைத்திருந்தது...

அந்த சாலையை கடக்க கணக்கிட்ட நேரம்
அந்த தெருவில் இருப்போருக்கு 10நிமிடங்கள்
என் தெருவில் இருப்போருக்கு 10தலைமுறைகள்

11வது தலைமுறை நான்..
நின்று பார்க்கிறேன்..
என் அப்பன் ஆசை,
என் தாத்தன் ஏக்கம்,
என் பூட்டன் உழைப்பு..

எல்லாம் கலந்து நடக்க சொல்லியது மனம்..
கால் வைத்தால் மரணம்
கால் வைத்தால் சவுகடி
கால் வைத்தால் அபராதம்
கால் வைத்தால் வேலையின்மை
கால் வைத்தால் அவமானம்..

மனம் மட்டும் அப்படியே ஏங்கி கொண்டிருக்கிறது..
சாலையை சுற்றி சுற்றி ஓடினேன்..
சாலையில் கால் வைக்க தைரியம் இல்லை..

சாலை வேண்டுமா படி என்றான் ஒருவன்..
மைல்கள் நடந்து பாடசாலை போனேன்..
ஓரம் உட்கார வைக்கப்பட்டேன்
அடித்து துரத்தப்பட்டேன்
படிக்காது தடுக்கப்பட்டேன்..

இருந்தாலும் சாலையின் மீது ஆசை தீரவில்லை..
எல்லாவற்றையும் தாண்டி படித்தேன்..
படி படியாக படியேறினேன்..

இன்றும் அந்த சாலையில் என் பாதங்கள் பதியவில்லை..
அடிக்க ஓங்கிய கரங்கள் வணக்கம் போட்டது..
துரத்திய முகங்கள் கருணை மனு கொடுத்தது..
இன்றும் சாலையில் என் பாதங்கள் படியவில்லை.

பாட்டனின் உழைப்பு இன்று என் கட்டளையாய் மாறியது..
மண் சாலை தார் சாலையானது..
இன்றும் என் பாதங்கள் பதியவில்லை..

அதிகாரம் வந்தது,
வசதி உயர்ந்தது,
மரியாதை பெறுகியது...
இன்றும் என் பாதங்கள் பதியவில்லை..

ஏன்?

வெறும் பாதங்களில் நடக்க ஆசை கொண்டேன்..
அடித்தனர், துரத்தினர்..
அதனால் இன்றும் என் பாதம் பதியாமல் நடக்கிறேன் என் பூட்ஸ் கால்களோடு..

Wednesday, 1 March 2023

ஹிஜாப் பெண்

சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் பற்றி எழுத்தும் பேச்சும் அதிகமாய் சலசலப்பை ஏற்படுத்தி கொண்டிருந்தன.. அப்போது ஒரு பெயர் ஹிஜாப் பற்றி பேசும் போது மனதில் வந்தது... தான் ஹிஜாப் அணிந்ததால் IS-IS தீவிரவாத இயக்கத்தால் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டார், லெபனான், சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகள் அவரை கண்டித்து அறிக்கைகள் விட்டன.. இத்தனைக்கும் அவர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர்...

அவர் பெயர் மியா கலீபா.. உலக புகழ் பெற்ற வயதுவந்தோர் பார்க்கும் திரைப்பட நடிகை (Adult rated movie actress) அவர் உலக புகழ் பெற காரணமே அவர் ஹிஜாப் அணிந்தது தான்.. 2015ல் வெளியான ஒரு 18+ நிர்வாண திரைப்படத்தில் அவர் ஹிஜாப் அணிந்து நடித்ததுதான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம், இது தவறுதானே என்று சிலர் இங்கு வாதிடலாம், ஆனால் அமெரிக்கா porn இண்டஸ்ட்ரியில் இது சர்வ சாதாரண விஷயம் அங்கு ஒரு பெண் nun அதாவது கன்னியாஸ்திரியாக நடித்து porn திரைப்படம் வெளியிட முடியும், ஏன் இந்தியாவில் கூட பல சாமியார்கள் வேடம் போட்டு பல திரைப்படங்கள் அது போல வெளி வந்திருகின்றன.. இவ்வளவு ஏன் பல பெண்கள் இதற்கு முன்பே இப்படிப்பட்ட காட்சிகளில் நடித்துள்ளனர்..

அப்படி இருக்க மியாவுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை, காரணம் மியா லெபனான்ல் பிறந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர், அதுவும் 7வயதில் பின்பு தனது கல்லூரி காலத்தில் மாடலிங் துறையில் நுழைந்தவர் பின்பு nude மாடலிங் என்று ஆரம்பித்து இந்த துரைக்குள் நுழைந்தார், அப்படி நுழையும் போது அவர் குடும்பம் இஸ்லாமிய முறையில் இது தவறு என்று எதிர்க்க கிறிஸ்தவராய் மதம் மாறினார்... இதுதான் அந்த பிரச்சனைக்கு மூல காரணம். அன்றைய சூழலில் வளர்ந்து வந்த சிரியா பிரச்சனையை திசை திருப்ப பகடை காயாய் உருட்டப்பட்டார் மியா.. உலக மாபியாக்கள் மிரட்டலில் மிரண்டு போய் இருந்தவருக்கு ஆதரவாய் பல இடங்களில் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.. மியா கலீபா பெயரில் ஒரு இசை தட்டு வெளியிட பட்டு அது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.. அதன்பின் தான் அவரை இந்த உலகம் அமைதியாக்கியது... இவ்வளவு பிரச்சனைக்களை கடந்த மியா இறுதியில் தான் porn துறையில் இருந்து விலகுவதாக அறிவிக்க ஒருவாரு பிரச்சனை முடிவுக்கு வந்தது.. ஆனால் அங்கிருந்து தான் மியாவின் ஆட்சி porn இண்டஸ்ட்ரியில் கலைக்கட்ட தொடங்கியது, pornhub என்னும் அமெரிக்கா porn சேனலில் பல வருடம் அவர் ட்ரெண்டிங்கில் இருந்தாரு சில வருடங்கள் ஏன் இன்றும் கூட கூகுளில் தேடப்பட்ட பிரபலங்கள் பெயரில் கண்டிப்பாக மியா பெயர் இருக்கும்.. ஆனால் இதில் பலபேருக்கு மியாவின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாது..

சில ஆண்டுகள் கழித்து பிபிசி மியாவை அழைத்து ஒரு பேட்டி எடுக்கிறது.. மியாவின் இதற்கு முந்தைய பேட்டிகளில் அவர் நிகழ்ச்சியின் நடுவில் ஆடைகளை கலைந்து இறுதியில் நிர்வாணமாய் இருப்பார். அதை போலவே நினைத்து பலரும் அந்த பேட்டியை கண்டனர்.. ஆனால் அதுதான் முதல் முறை மியா porn actor ஆக இல்லாமல் ஒரு மனிஷியாக தன்னை வெளிப்படுத்திய கொண்டார்.. அவர் வாழ்க்கையில் இந்த porn துறையில் அவருக்கு இழைக்கப்பட்ட பல அநீதிகளை கண்ணீரோடு பேசினார், தனக்கு வந்த கொலைமிரட்டள்கள் பற்றி விளக்கினார், இறுதியில் தொகுப்பாளர் இந்த மிரட்டளுக்கு பயந்துதான் விலகிகொண்டீர்களா என்று கேட்கும் போது அவர் சொன்ன பதில் தான் மொத்த நிகழ்வின் பாதையையே மாற்றியது...

இந்த உலகம் என்னை எல்லா இடத்திலும் porn actor ஆகவே பார்த்தது, என் கணவரோடு நான் வெளியில் செல்லும்போது கூட எந்த தயக்கமும் இன்றி என் படுக்கை அறையை பற்றி பொதுவெளியில் கேள்விகேட்கிறார்கள் என்று சொன்னார், நான் விற்கப்பட்டவள் தான் ஆனால் நான் விற்கப்பட்ட இடம் வேறு வாழும் இடம் வேறு, ஒரு கூகிள் தேடலில் உங்களால் என்னை அங்குல அங்குலமாய் காண முடியும் போது பொதுவெளியில் என் தனி உரிமையை இந்த ஆண்கள் பரிப்பது எனக்கு பயத்தை உண்டாக்கியது என்று சொன்னார்.. அவர் எனக்கும் ஒரு குடும்பம் உண்டு அதோடு நான் பயணிக்கும் போது என் பணியை வைத்து என்னை எல்லா இடத்திலும் அழைத்தது என்னை திகைக்க வைத்தது என்று சொன்னார்.. பல தீவிரவாதிகளின் மிரட்டளுக்கு பயப்படாத மியா, விலகி ஓடியது தெருவோரம் இருக்கும் சாமானியரின் பார்வைக்கு என்ற பதில் பலரை வேறுமாதிரி பார்க்க வைத்தது..

அவள் அந்த தொழில் செய்பவள் தானே பின்பு ஊர் அப்படித்தான் பார்க்கும் என்று சொல்லும் பொது புத்திகாரர்களுக்கு, ஒரு மருத்துவர் விடுமுறையில் குடும்பத்தோடு வெளியில் இருக்கும் போது.. நீ டாக்டர் தான எனக்கு ஜுரம் கொஞ்சம் பாரேன்னு ரோட்ல நிக்கவெச்சு உங்களால கேட்க முடியுமா.. Porn actor என்பது அவள் வேலை.. இன்னும் சொல்ல போனால் பொதுவெளியில் தான் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அவள் தான் முடிவு செய்யவேண்டும்..

அவளை ஹிஜாப் போடக்கூடாது என்று சொன்ன அத்தனை ஆண் வேசிகளும் வீட்டில் அவள் காணொளியை கண்டு சுயஇன்பம் அடைந்த பொறுக்கிகள் தான்...

உங்களில் எந்த பாவமும் செய்யாதவன் எவனோ அவனே அவள் மீது முதல் கல்லை எறிய கடவன்...

#நான்விஜய் #MiaKhalifa #PornActor #Star