Friday, 16 December 2022

அவதார் 2 - பார்வை

இது திரைப்பட விமர்சனம் அல்ல.. ஒரு அனுபவ பகிர்வு அவ்வளவே..

முதல் முதலில் அவதார் முதல் பாகம் பார்க்கும் போது தோன்றியது இதுதான்.. இப்படி ஒரு உலகம் இப்படியும் சில மனிதர்கள் எப்படிபட்ட கற்பனை இது.. ஒரு மனித சிந்தனை எந்த அளவுக்கு ஒரு உலகத்தை உருவாக்கி அதற்குள் தன்னைப்போலவே பிறரையும் கடத்தி, லைக்கவைத்து, ஒரு புது அனுபவத்தை கொடுக்க செய்கிறது என்று வியந்து போனேன், நான் மட்டுமல்ல உலகின் பல மாந்தர்களின் வியப்பும் அதுவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அதுமட்டும் தான் அந்த படம் சொன்னதா என்றால் இல்லை, என்னளவில் நான் உணர்ந்தது, இந்த மனிதன் இந்த இனம் சுயநலம் பிடித்தது, அனைத்தையும் தனக்கென்று எடுத்துக்கொண்டு பிற உயரிகளின் வாழ்வியலை விழுங்குகிறது.. அது சகமனிதனாக இருந்தாலும் சரி, ஏதொரு ஒரு பிறந்தநாள் உயிரினமாக இருந்தாலும் சரி, அந்த கொடுங்கோன்மையை எதிர்த்து யாரேனும் போரிட்டால், எதிர்த்து நின்று வென்றால் மனிதன் என்ன ஆவான் என்பதாய் எனக்கு அந்த படம் அமைந்தது..

இந்த இரண்டாம் பாகமும் கிட்டத்தட்ட அதே கதைக்கலம் தான், ஆனால் இதில் மனிதனின் வன்மம் தீர்க்கும் உணர்வு குடும்பம் என்று பல உணர்ச்சிகளை கடத்த முயன்றிருக்கிறது, ஆனால் அந்த முயற்சி வெற்றி அடைந்ததா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பது தான், 3 மணிநேரம் வேறு ஒரு உலகம், நாம் அறியாத உயிரினங்கள் கற்பனையின் உச்சத்தில் வாழ்ந்து திரும்பும் ஒரு அனுபவம், அதை தவிர வேறு என்ன இருக்கிறது இதில் என்று கொஞ்சம் அழுத்தி சிந்தித்தால், மனிதனில் இருந்து நாவியாக மாறிய ஜாக்கெயின் மன நிலை, தன்னை நம்பி இருந்த கூட்டத்தை கைவிட்டுவிட்டு தப்பி தன் குடும்பத்தை மட்டும் காக்க எடுக்கும் முயற்சி, அதற்காக இன்னொரு இனத்தை சிக்கலில் சிக்க வைப்பது என்பது போன்ற கதை அமைப்பு, சென்ற பாகத்தில் ஜாக்கெயின் மீது ஏற்பட்ட நம்பிக்கையை இந்த பாகம் உடைத்துவிட்டது..

நேத்ரி ஒரு கணவனுக்கு அடங்கிய மனைவியாய், தன் சொந்த இனத்தை விட்டு செல்லும் குற்றவுணர்ச்சி என்று தென்பட்டாலும், இறுதி காட்சிகளில் அம்மாவாய் மாறி எதிரிகளை வேட்டையாடும் காட்சி அற்புதமாய் இருக்கிறது.. ஆனாலும் அவள் ஒரு பெண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று இங்கும் ஒரு வரைமுறை புகுதி அவளது முடிவுகளை அவன் சார்ந்து இருப்பது போலவே சித்தரிப்பது என்பது நேத்ரி போன்ற ஒரு ஆளுமை மிக்க போராளிக்கு கொஞ்சமும் ஓட்டவில்லை என்றே தோன்றுகிறது..

கடல் உயிரினங்கள் மேல் கடல் வாழ் நாவிகள் கொண்டுள்ள பாசம் அழகு, oru காட்சியில் தூக்கன்ஸ் உடன் அந்த இனகுழு தலைவி நடத்தும் பேச்சுவார்த்தை ரசனை மிக்கது, அதன் மரணத்தின் போது அவள் பேசும் உணர்வுகள் அழகானது, ஆனால் இது இன்னும் ஆழமாய், சொல்லபடாமல், அந்த உலகத்தின் காட்சி அமைப்பிலே பெரும்பாலும் நேரம் செலவிட்டது தான் கொஞ்சம் அயற்சியை கொடுத்துவிட்டது..

சக உயிரை நேசி என்பது தான் இந்த பாகமும் சொல்லும் கதை என்றாலும், முதல் பாகம் அந்த கதை சொல்லும்விதத்தில் ஜெயித்தது, அந்த இடத்தில் இந்த படம் சற்றே சறுக்கிவிட்டது என்றே தோன்றுகிறது..

ஜாக் குடும்பதலைவனாக ஜெயித்தாலும், ஒரு இனத்தின் தலைவனாக தோற்றுவிட்டான்... என்ன இருந்தாலும் அவனும் மனிதன் தானே...

#NaanVijay #avatar #AvatarTheWayOfWater #experience

Wednesday, 2 November 2022

தோட்டியின் மகன் - புத்தக பார்வை

#NaanVijay

நான் விஜய்

#தோட்டியின்_மகன்

1946ல் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய நூல் இது 1952ல் திருமதி.தகழி அவர்களின் அனுமதியோடு சுந்தர ராமசாமி அவர்கள் இந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார், அவர் 1952ல் மொழி பெயர்த்தாலும் இந்த கதை 1956ல் தான் தமிழில் முதல் முறையாக அச்சு ஏறியது, சரஸ்வதி என்னும் இதழில் 1957 வரை தொடராக வந்த இந்த நூல் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பின் புத்தகமாகியது அதாவது தோட்டியின் மகன் புத்தகம் முதல் பதிப்பு 2000ல் நடந்தது.. இந்த புத்தகம் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது, காரணம் புத்தகத்தின் பெயர், ஒரு நாள் ஒரு கம்யூனிஸ்ட் தோழர் இந்த மொழி பெயர்ப்பை படித்துவிட்டு பல கேள்விகள் கேட்டுவிட்டு கடைசியில் சொன்ன பதில் இந்த புத்தகத்திற்கு வேறு பெயர் வைத்து பதிப்பிடுங்கள் என்பது தான்.. ஒரு கம்யூனிஸ்ட் தோழரே இப்படி சொல்லும் அளவுக்கு இந்த பெயரின் பின்னால் இருக்கும் அரசியல் நமக்கு புரியவைக்கிறது.. இனி கதை பற்றி பார்ப்போம்.

ஆலபுழ நகரில் வசிக்கும் ஒரு தோட்டிக்கு உடல் நிலை மோசமடைய தன்னிடத்திற்கு தன் மகனை அனுப்புகிறார், தோட்டியின் மகன் தோட்டியாகதான் இருக்க வேண்டுமா என்ற பாரத்தோடு அவனும் வேலைக்கு செல்கிறான், அன்றுதான் அந்த ஊர் முதல் முறை ஒரு வித்தியாசமான தோட்டியை பார்க்கிறது, அவன் மற்ற தோட்டிகளை போல் அல்ல, அவன் காசு சேமிக்கிறான், அவனுக்கு எந்த தவறான பழக்கமும் அல்ல, மிக முக்கியமாய் தன் தோட்டி வாழ்க்கை தன்னோடு முடியவேண்டும் என்பதில் அவன் உறுதியாய் இருக்கிறான்,

தன் தகப்பன் இறப்பதும், அதன் பின் ஒரு தோட்டியின் பிணத்திற்கு ஏற்படும் அவமானமும் அவனை உடைக்கிறது, தோட்டியின் மகனின் மகன் தோட்டியாய் இருக்க கூடாது என்று முடிவுகட்டுகிறான்... சொந்த இனத்திற்கு எதிராகுகிறான், பெற்ற பிள்ளையயை தூக்க கூசுகிறான், பிள்ளையை படிக்கவைக்க வேறு பெயரை, பெற்றவர்கள் என்று போடுகிறான் இறுதியில் தன் தொழிலை கூட மாற்றி மரணத்தை தொடுகிறான், இருப்பினும் தோட்டியின் மகன் மீண்டும் தோட்டியாகிறான்..

ஒவ்வொரு பக்கமும் உங்கள் மனதை செதில் செதிலாய் அறுக்கும் எழுத்துக்களை கொண்டது, தோட்டியின் பிணம் கூட இங்கு இந்த பூமியில் அனுமதிக்கபடுவதில்லை, அவன் பிள்ளைக்கு ஒரு நல்ல பெயர் வைத்தால் உலகம் அவனை பார்த்து சிரிக்கும், அவன் நல்ல உடை அணிந்தாலும் தோட்டியென்றால் நாறவே செய்கிறான், எனில் தோட்டி கடைசிவரை தோட்டியாக மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுகிறான், தோட்டியாய் பிறந்தது அவன் தவறில்லை என்ற போதிலும் அது தன் பிள்ளைக்கு தன்னைப்போல நடக்க கூடாது என்று நினைக்க ஒரு தோட்டி தகப்பனுக்கு உரிமை இல்லை.. தோட்டிகள் படிக்க சென்றுவிட்டால் இனி தோட்டி வேலையை யார் பார்ப்பது என்ற கேள்வி வந்திடவே, அந்த கேள்விக்கு பதிலாய் தோட்டி கடைசி வரை தோட்டியாகவே இருக்க வேண்டியுள்ளது..

இந்த கதையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒரு பெயர் இருந்தும் இங்கு மீண்டும் மீண்டும் நான் தோட்டி என்றே எழுத காரணம் இந்த புத்தகம் அந்த பெயருக்காக தான் ஒதுக்கப்பட்டது என்ற வேதனையால், இங்கு யாரும் தோட்டியின் வாழ்க்கையை படிக்க கூட தயாராகவில்லை என்கிற கசப்பு உறுத்துகிறது..

வள்ளியும் சுடலையும் தன் மகனின் எதிர்காலத்தை பற்றி பேசும் பக்கங்கள், தோட்டியின் வாழ்க்கையின் வலிகளை கண்முன்னே நிறுத்துகிறது, என்ன ஆனாலும் அவன் தோட்டியின் மகன்தானே என்ற வார்த்தை சுடலை எப்படி சுக்கு நூறாய் கிழித்திருக்கும் என்பதை நான் உள்ளுர உணர்ந்தேன்.. ஒரு பிள்ளைக்கு அப்பனாய் அந்த பிள்ளையை ஒரு முத்தம் கொஞ்சாமல் கூட இருந்த அந்த அப்பனின் கனவு எவ்வளவு வைராக்கியம் கொண்டது என்று உணரும் போது தோட்டியாய் அவன் அடைந்த அவமானங்கள் கண்முன்னே வந்து போகிறது..

இறுதியில் தோட்டியின் மகன் அவன் இந்த சமூகத்திற்கு எதிரான போரில் இரங்குகிறான், தங்களை எய்த்தவர்களை எதிர்க்கிறான், மரணிக்கிறான், ஆனால் அவன் மரணம் அர்த்தமுடையது, அடுத்த தலைமுறையை உசுப்பகூடியது.. ஆனால் இப்படி மரணித்துதான் இந்த சமூகம் அவர்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? 

ஒவ்வொருமுறையும் எதோ ஒரு காரணத்தால் தோட்டிகள் 40வயது கூட தாண்டாமல் மரணத்தை ஏற்கிறார்கள் அதில் தன் பிள்ளைகளின் குடும்பங்களை நிற்கதியில் விட்டு செல்லும் வேதனைகள் புத்தகம் நமக்கு அப்படியே கடத்துகிறது.. இந்த புத்தகம் இன்னும் பல பதிப்புகளை கடந்து அடுத்த தலைமுறைக்கு கடந்த தலைமுறையின் கொடுமைகளை நிச்சயம் சொல்லவேண்டும்.. அது அவசியம், அது நமது கடமையும் கூட.. 

நல்லதொர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ..!

மகாகவி பாரதி

புத்தகம் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலசுவடு
பக்கங்கள் : 176
விலை : 200

Tuesday, 1 November 2022

கார்பொரேட் கோடாரி - புத்தக பார்வை

104/110

#NaanVijay

நான் விஜய்

எப்பொழுதும் போல் எனது வாசிபிற்கு நெருக்கமான எழுத்தாளர் தோழர். நக்கீரன் அவர்களின் புத்தகம்.. ஒவ்வொருமுறையும் இவரது புத்தகங்களை திறக்கும் போதும் மனம் ஒரு வகை பதற்றதுக்குள்ளகிறது, மனம் ஒரு வலியை சுமக்கிறது.. நமது மண்ணுக்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகங்களை படிக்கும்போது ஏதும் செய்யாமல் நிற்கின்றோம் என்கிற குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

கார்பொரேட் நிறுவனங்களின் லாப வெறிக்கும் எத்தனையோ நாடுகளும், காடுகளும் பலியகிறது, அதை அரசு சாமரம் வீசி நிற்கிறது... நமது நாடு மட்டுமல்ல உலகின் உள்ள எல்லா வளந்த நாடுகளும் வளரும் நாடுகளின் கழுத்தை அறுத்துதான் தன் கோர பசியை தீர்த்துக்கொள்கிறது.

உலக வர்த்தக கட்டிடம் இடிப்பிற்கும் மண்ணின் மரணத்திற்கும் உள்ள தொடர்பில் தொடங்குகிறது இந்த புத்தகம், தன்னை பெரிய அறிவாளியாய் காட்டிக்கொள்ளும் அமெரிக்க விஞ்ஞான மூலை காட்டின் ஒரு மூலையில் வாழும் ஆதிக்குடிகளின் முன்னாள் தொற்றுப்போனது ஒரு செய்தியை ஆணி அடித்தாற்போல் சொல்கிறது.. நமது அறிவியல் அறிவை விட அவர்களின் மண் பற்றிய அறிவு மேலானது..

வெறும் பறவை எச்சத்திற்காக பல நாடுகள் சண்டையிட்டதும் காத்திருந்து வாரி சென்று ஒரு நாட்டை காவு வாங்கியதும் மலைக்க வைத்த செய்தி.. நைரேட் கொடுக்கும் விவசாய மண்ணிற்காக ஏற்பட்ட போறும் அது தொடர்ந்திருந்தால் ஏற்படவிருந்த அபாயமும் பயமுறுத்துகிறது

பச்ச மாமா சாக்ர அறிவு வியப்புன் உச்சம், அமெரிக்க அறிவியல் மூலைகளால் அரியமுடியாததை அவர்கள் நிகழுத்தி காட்டிகொண்டிருந்தனர், அவர்களை நம்பாமல் அந்த அரசு அமெரிக்காவிடம் கை ஏந்தியது கேவலத்திலும் கேவலம்,

உயிர் எரிபொருள் என்னும் நிலத்தின் மீதான உழவர் மீதான வன்முறை ஒரு அதிகார வெறிதான்.. நாட்டில் சோற்றுக்கு கிடைக்க வேண்டிய நிலம் நாளை பிடுங்கி வண்டிகள் ஓட மட்டும் பயன்படபோகிறது என்பது இன்றே சிந்தித்து எதிர்வினை ஆற்ற வேண்டிய விஷயம்..

உயிர் எரிபொருளுக்கு அடுத்து உயிர் நெகிழி என்னும் அடுத்த ஆபத்தையும், தன் உண்மையையும் விளக்கிய கட்டுரை நம்மை இந்த விளம்பர உலகம் எப்படியெல்லாம் ஏமான்றுகிறது என்பதை திரைவிலக்கி காட்டுகிறது.. பசுமையை காக்கிறோம் என்ற பெயரில் மண்ணை அழித்து, உழவை கெடுத்து உணவில்லா ஒரு நிலையை உருவாக்கும் இப்படிப்பட்ட வளர்ச்சிகள் தேவையில்லாத ஆணிகள்..

உலகின் செயற்கையாய் உருவாக்கபட்ட ஒரு பாலைவனம் அது கடலைவிட 3மடங்கு உப்பு தன்மை கொண்டிருப்பதும் அதனால் பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் விவசாய நிலம் மலடாவதும் ஏதேச்சையாய் நடந்தது போல காட்டப்பட்டாலும் அதற்கு பின் இருக்கும் உண்மை பருத்தி உற்பத்தி.. பணப்பயீர் என்கிற பெயரில் நடக்கும் அதிகார தாண்டவம், அதிலும் இதெல்லாம் நடப்பது தன்னை எளிய மக்களின் நாடக அடையாளபடுத்திகொண்ட சோவியட் ரசியாவில்.. எந்த கொள்கை ஆனாலும் காசுக்கு முன் எதுவும் நிற்காது என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய சான்று..

ஊர் மயமாக்கள் என்ற பெயரில் விளையும் மண்ணில் இருந்து அதன் பூர்வ குடிகளை துரத்திவிட்டு, கார்பொரேட் கூட்டிக்கொடுக்கும் கேடுகெட்ட உலக அரசாங்கங்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யவேண்டும் என்பதே புரிவதில்லை.. உலகத்தை பட்டினி போட்டுவிட்டு இவ்வளவு வளர்ச்சி அடைந்து என்ன செய்யபோகிறோம்.. இன்று காசுக்காக எல்லாவற்றையும் அழித்துவிட்டு நாளை அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான உலகை பரிசளிக்க போகிறோம் என்ற கேள்விகள் உள்ளுற உறுத்துகிறது..

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்..

மகாகவி . பாரதி

புத்தகம் : கார்பொரேட் கோடாரி
ஆசிரியர் : எழுத்தாளர் நக்கீரன் 
பக்கங்கள் : 70
விலை : 70
பதிப்பகம் : காடோடி

Monday, 31 October 2022

நண்பனின் தந்தை - புத்தக பார்வை

103/110

#NaanVijay

நான் விஜய்

எழுத்தாளர் அசோக மித்திரன் அவர்களின் இரண்டு குறுநாவலும், 3சிறுகதையின் தொகுப்பே இந்த புத்தகம்,

வேறு மண்ணில் பிறந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்கே தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராய் நிலைநிறுத்தி கொண்டவர் ஆசிரியர், இவரின் பல படைப்புகள் இந்திய மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கபட்டுள்ளது, இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர்..

ஒரு நாவல் என்பது அல்லது சிறுகதை என்பது அது எழுதப்பட்ட காலத்தின் பிரதியாகும், நமக்கு 2ம் உலகப்போரை பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதை சிலவரிகளில் கடந்து இருப்போம், அந்த போர் நடக்கும் போது இந்தியா எப்படி இருந்தது, இங்கிருந்த மக்களின் மன நிலைமை என்ன? இங்கு இருந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு நம்மிடயே பதில் இருக்காது.. அந்த கேள்விக்கான பதில் என்பது அந்த காலத்தை மையமாக கொண்ட எழுத்தாளர்களின் எழுத்துகளே ஆகும்,

சங்ககாலம் என்பதையும் அதற்கு முட்பட்ட காலத்தையும் நம்மிடையே இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் எப்படி ஆதாரமாய் நின்று விளக்குகிறதோ, அது போல ஆசிரியரின் பம்பாய் 1944 என்கிற குறு நாவல் அன்றைய மக்களின் ஆசாதாரண சூழலை பேசுகிறது, அவர்களின் உணர்வுகளை நமக்கு கடத்துகிறது...

லீவ் லெட்டர் எனப்படும் இன்னொரு குறு நாவல் ஒரு சிறுவனை கதை சொல்லியாக்கி அவனை கொண்டு தன் அப்பாவின் பணி சூழலை புரியவைக்க முயற்சி செய்வதும், 2மனைவிகளை உடைய ஒருவரின் மன நிலையையும் ஓர் குடும்பம் அதனால் சந்திக்கும் சிக்களையும் அதையும் மீறி இருக்கும் ஒரு துளி காதலையும் இயல்பாக பேசி இருக்கிறது,

இவைகள் இல்லாம இன்னும் 3 சிறுகதைகளும் இருக்கிறது நண்பனின் தந்தை என்னும் கதையில் ஒரு எல்லாவற்றையும் இயல்பாக கடக்கும் ஒருவன் தன் தந்தை மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறான் என்பதை 3நபராய் நின்று பார்த்து கதை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்

ஹார்மோனியம் வாசிக்கும் ஒரு ஏழை யாசகனின் சில நொடி சந்திப்பை, அவனின் திறமை என்று 2பக்கங்களில் ஒரு சிறு ஆய்வு போல அந்த நொடிகளை விளக்கி, அதன் வலியையும் நமக்கு கடத்த முயற்றிருக்கிறார்,

மூன்றாவது கட்டைவண்டி என்னும் சிறுகதை, இந்த மூன்று சிறுகதைகளும் அந்த 2குறு நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்மட்டில், 2-3 பக்கங்களில் முடிந்தாலும் ஒரு செய்தி சொல்லி கடந்துபோகும் ஒரு நிகழ்வு போல இருக்கிறதே அன்றி ஒரு கதையாய் மனதில் நிற்கவில்லை, இது என்னுடைய புரிதல், ஆனால் 2 குறு நாவல்களும் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார், என்ன மாதிரியான மன நிலைமையை பேசுகிறார் என்பதை மிக தெளிவாய் புரியவைக்கிறது..

இந்த குறு நாவலும், சிறுகதைகளும் 2010-11 காலகட்டத்தில் எழுதப்பட்டவை, இந்த காலகட்டத்தில் அமர்ந்து 2ம் உலகப்போரின் நிகழ்வுகளை கதையாக்கி இருப்பது அவரது மனோபலத்தின் வலிமையை புரியவைக்கிறது.

புத்தகம் : நண்பனின் தந்தை
ஆசிரியர் : அசோக மித்திரன்
பக்கங்கள் : 112
விலை : 100
பதிப்பகம் : நற்றிணை

Saturday, 29 October 2022

தேசாந்திரி - புத்தக பார்வை

100/100

#NaanVijay

நான் விஜய் 

உலகம் முழுக்க சுற்றி வரவேண்டும் என்பது பலபேரின் கனவு, சிறுவயதில் ஜாக்கி சான் நடித்த அரௌண்ட் த வேர்ல்ட் என்ற திரைப்படம் எப்படி பட்ட ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று வார்த்தைகளால் விளக்க முடியாது, இன்றும் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில் 7உலக அதிசயமும், கடைசியில் வந்த டைனாசூரும் தான் மனதில் ஆழ நின்றயிருக்கிறது, பயணங்கள் தான் உலகின் பெரிய மாற்றங்களை, போர்களை, கொடூரங்களை,  நம்பிக்கைகளை, வாழ்க்கையை தந்திருக்கிறது என்று அறுதியிட்டு கூறுபவன் நான், நீங்கள் எவ்வளவு பயணம் செய்கிறீர்களோ அவ்வளவாய் வாழ்ந்திருக்கிறீர்கள், புத்தகங்களும், பயணங்களும் மட்டுமே உலகை மனிதனுக்கானதாய் மாற்றுகிறது, அந்த நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டேன் இந்த புத்தகத்தின் மூலம்.. 

ஒரு பயணம் என்பது புகைப்படம் எடுக்க மட்டுமல்ல, பல நாட்கள் என் நண்பர்கள் ஒரு பகுதிக்கு சென்றதும் கேமரா ஓன் செய்து முன்னாடி நின்று அந்த இயற்கையை கொஞ்சமாய் படம் பிடித்துவிட்டு அங்கிருந்து நகர்வர், அதை முற்றுமாய் வெறுப்பவன் நான், நின்று நிதானித்து ரசிக்கவே பயணங்கள், ஒரு பயணம் அந்த இடத்தை பற்றியது மட்டுமல்ல அது ஒரு வாழ்வியலை பற்றியது, அங்கிருக்கும் ஒரு உலகம் ஒரு வியப்பு அதை புரிந்துகொள்ளுதல் அவசியம் ஆகிறது... 

ஒரு இடத்தில் ஆசிரியர் சொல்கிறார் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மேகங்கள் என்று எத்தனை உண்மை, மழைக்கால மேகம் கூட சென்னையில் ஒன்றாய் ஊட்டியில் ஒன்றாய், மும்பை ஒன்றாய் இருப்பதை நேராக பார்த்திருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒரு பிரம்மாண்டம் இயற்கையின் அதிரூபம்..
சில இடங்களில் பயணங்கள்  மனிதர்களை காட்டும், சில மனிதர்கள் பயணங்களை காட்டுவார்கள், இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என் பயணங்களை நினைவு படுத்தியது, ஆசிரியர் போல இந்தியாவை குறுக்கும் மருக்குமாய் நான் அலைந்தது இல்லை, ஆனால் என் வரையில் சில பயணங்கள் கொடுத்த அனுபவங்களை இங்கே ஏக்கதோடு திரும்பி பார்த்துக்கொள்கிறேன்,

ஒரு பயணம் கலை சார்ந்தோ எதோ ஒரு நோக்கம் சார்ந்தோ கூட இருக்கலாம், ஆனால் அதில் நீங்கள் இதை பெற்றுக்கொள்ள போகிறீர்கள் என்பது பயணம் தான் முடிவு செய்யும், சிற்பங்களை, ஓவியங்களை பார்க்க சென்ற ஆசிரியருக்கு பயணம் அறிமுக படுத்தியது டீ கடை நடத்தும் ஒரு வயதானவரை, பஸ் ஸ்டாண்டில் உடல் நலமற்று கிடந்தவரை சரி செய்த அந்த நல்ல உள்ளத்தை அந்த சிற்பங்களும், ஓவியங்களும் மறைக்க முடியவில்லை, அந்த பயணம் அந்த நல்ல மனிதரை ஆசிரியர்க்கு அறிமுகபடுத்தி இருக்கிறது... இப்படி ஒரு பயணம் அது தரும் அனுபவத்தை அதன் முடிவில் மட்டும்தான் அவதாணிக்க முடியும், சில முடிவுகளை பயணங்கள் தான் எடுக்கும்,  இவைகள் தான் என் பயணங்களும் இந்த புத்தகமும் எனக்கு சொல்லி கொடுத்தவை

இறுதியில் ஆசிரியர் சொல்லி இருப்பார் எல்லா பயணங்களும் என் வீட்டில் வாசலில் இருந்துதான் உலகம் தொடங்குகிறது என்பதை காட்டுவாதாக எத்தனை சத்தியமான வார்த்தை, பல நாட்கள், மும்பையிலும், அஹமடாபாத் இருந்து மீண்டும் சென்னை திரும்பும் போது சென்னை உங்களை வரவேற்கிறது என்கிற வார்த்தை பலகை மனதுக்கு தரும் ஒரு நிம்மதி எப்படிபட்டது என்றால், பல நாள் தாயை பிரிந்த கன்று மீண்டு சந்திக்கும் போது ஒரு ஏக்க ஓசை எழுப்பும், ஒவ்வொருமுறை சென்னையை சில நாட்கள் கழித்து பார்க்கும் போது என் மனம் அதே ப்ரேமையில் சிக்கி கொண்டிருந்ததை ஒவ்வொருமுறையும் உணர்ந்திருகிறேன், இல்லம் வருவதும் பயணத்தின் ஒரு பகுதிதான் ஆனால் எந்த முறையும் அது எனக்கு வேறொரு உணர்வை கொடுத்ததில்லை, ஒவ்வொருமுறையும் என்னை ஏற்றுக்கொள்ளும் இல்லம் ஒரு தாய் மடியாகவே அரவனைக்கிறது..

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே...!
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ?
 மன காட்சி பிழைதானோ..?

மகாகவி பாரதி

புத்தகம் : தேசாந்திரி
ஆசிரியர் : எஸ். ரா
பக்கங்கள் : 257
விலை : 275
பதிப்பகம் : தேசாந்திரி

Thursday, 27 October 2022

பண்பாட்டு அசைவுகள் - புத்தக பார்வை

99/100

#NaanVijay

நான் விஜய்

எப்பொழுதும் கல்கியின் பித்தால் நாவல்கள் மட்டுமே படித்துகொண்டிருந்த எனக்கு ஒரு நாள் சுயமுன்னேற்ற புத்தகங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது அதற்கு காரணம் என் பணி சூழல், அதோடு சில லைட் ஹெர்டிட் கட்டுரை புத்தகங்களையும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது அதன் நீச்சியாக ஒரு Raghu Raavan அறிவுரை படி தொ. ப படிக்க ஆரம்பித்தேன், அன்றுதான் உண்மையில் நான் சரியான முறையில் புத்தகங்கள் படிக்க தொடங்கியதாய் உணர தொடங்கினேன், ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எல்லாமும் எளிதாய் கிடைகின்ற ஒரு நாகரிகத்தில் தில்லைய்துகொண்டிருக்கிறோம், எல்லாமும் எளிதாய் நடந்துவிட்ட ஒரு வாழ்வியலை அடிப்படையாய் கொண்டிருக்கிறோம், ஆனால் இதன்பின் உள்ள அரசியல் என்ன? நாம் தொலைத்த மரபு என்ன? நான் பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கை எப்படிபட்டது? நான் வணங்கும் கடவுளர்கள் யார்? ஏன் ஒரு கடவுள் ஊருக்கு வெளியில் உள்ளது? ஏன் எல்லோரும் எல்லா கடவுளையும் வணங்குவதில்லை? ஏன் சில கடவுள்கள் மட்டும் கோட்டை போன்ற கோவில்களில் இருக்கின்றன? ஏன் சில கற்கள் கடவுளாக்க பட்டிருக்கிறது? நான் நம்பும் புராணத்திற்கும் இன்றைய கடவுளுக்கும் என்ன தொடர்பு? இந்த கடவுளுக்கும் என் வாழ்வியளுக்கும் என்ன தொடர்பு?

என் உணவு முறை இப்படி இருக்க காரணமென்ன? என் முந்தைய தலைமுறை என்ன உண்டிருக்கும்? அவர்களாய் விரும்பி உண்ணார்களா? அல்லது திணிக்கப்பட்டதா? இந்த உடைகள் எப்படி மாறியது? இப்படி கேள்விகள் நீள தொடங்கியது... எங்கோ நடக்கும் ஒரு கூட்டத்தில் ஒருவர் போட்ட கையெழுத்து ஒரு சமூகத்தையே மாற்றுமானால் அதன் விளைவுகள் தெரிவிக்க படுவதில்லையே ஏன்? யாருக்காக இந்த அரசியல் என்று மனம் தவிக்க தொடங்கியது அதற்க்கான பதிலை இன்றைய நாட்களில் தேடினால் எப்படி கிடைக்கும் அதன் வேரில் அறிதல் வேண்டும் அதற்கு வானமாமலை, தொ. ப, பக்தவச்சல பாரதி, அ. க பெருமாள் போன்றோர் துணை தேவைப்படுகிறது..

பண்பாட்டு அசைவு என்பது அறியப்படாதா தமிழகம் மற்றும் தெய்வங்களும் சமூக மரபுகளும் என்னும் இரண்டு புத்தகங்களின் தொகுப்பாகும், இதை மக்கள் பதிப்பாய் முயல் கூடு பதிப்பகம் 75ரூபாய்க்கு வெளியிட்டது 208 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய தகவல் களஞ்சியம் இந்த விலைக்கு என்பது பாராட்டதக்க முயற்சி, நல்ல தரமான தால்களில் வெளியிட்டிருக்கின்றனர் ஆயினும் சிறிய மனவருத்தம், என் கண்ணுக்கே புலப்படும் அளவுக்கு அத்தனை எழுத்து பிழை, ஒரு பெரிய எழுத்தாளர்க்கு மரியாதை செலுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முயற்சியில் இது ஒரு சிறிய தவறாக கருத்த முடியவில்லை, இதை பதிப்பகத்தார் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகும்

அறியப்படாதா தமிழகம் பற்றி ஏற்கனவே என் பார்வையை தனிப்பதிவாக போட்டிருப்பதால் எஞ்சிய பகுதியான தெய்வங்களும் சமூக மரபுகளும் பற்றி என் பார்வையை இதில் முன்வைக்கிறேன்

தெய்வம் என்றால் என்ன எத்தனை வகை தெய்வம் உள்ளது, எதானல் ஒரு தெய்வம் பெரியது என்று இன்னொன்று சிறியது என்று அழைக்கப்படுகிறது அதற்கு பின் இருக்கும் இலக்கிய சான்றுகள் என்று ஒரு குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போல் ஆரம்பம் முதல் தாய் வழி மரபில் தொடங்கி இன்றைய தெய்வ வழிபாடு வரை அழகாக சொல்லி இருக்கிறார்

சிறுதெய்வங்கள் யார் இந்த சொல்லாடல் எங்கிருந்து வந்தது, யாரெல்லாம் சிறுதெய்வம், சிறுதெய்வம் யாருக்குறியது, என்னென்ன வழிபாடுகள் இருக்கின்றன, எவையெல்லாம் இன்று எஞ்சி இருக்கிறது என்பதை பற்றிய விளக்கங்கள் தெளிவு பெறவைக்கிறது

பலராமன் என்பவன் ஒரு தசவதாரம் என்றும் அதை சுற்றிய சில கதைகள் மட்டுமே தெரிந்த எனக்கு, இந்த புத்தகம் பல ஆச்சரியங்களை வைத்திருக்கிறது.. இரு வகை தொழில்கள், அவர்களை குறிப்பால் உணர்த்தும் இரண்டு கடவுள்கள், அவர்களுக்கு இந்திரன் என்னும் கடவுளோடு இருக்கும் பகை அதற்கு பின் இருக்கும் அன்றைய காலகட்ட அரசியல் என்று திணறவைக்கிறார், தாய்வழி சமூகத்திற்கும் தந்தை அதிகார சமூகமாற்றத்திற்கும் பலராமன் கதையை கொண்டு சொல்லும்போதுதான் அந்த கதையின் உண்மை அர்த்தம் புரிகிறது, கோவர்த்தன மலையை தூக்கிய கண்ணனுக்கும் இந்திரனுக்கும் உள்ள சண்டையின் உள்ளர்த்தம் இதுவரை நான் கேள்விப்படாத ஒன்று, இப்படி அநேக ஆச்சரியங்கள் இந்த அத்தியாயத்தில் வைத்திருக்கிறார்.

அழகர்கோவில் இதுவரை நான் நேரில் கண்டதில்லை, ஆனால் அதை கண்முன்னே ஒரு முப்பரிமான வடிவமாக கற்பனை செய்யும் அளவுக்கு அங்குல அங்குலமாய் விலகி இருக்கிறார், அதனுள் இருக்கும் வைணவ மத நிறுவனத்தின் அரசியலையும், அந்த அமைப்பில் இருக்கும் பல ஆகம விதி மீரல்களையும், இருந்து வைணவம் அதை கொண்டாடுவதற்க்கான காரணமும் இன்னொரு வகையான மத போட்டியை புரியவைக்கிறது, இந்த மத போட்டியில் சாமானியனின் உணர்வுகள் எப்படி கைப்பற்ற பட்டது சைவத்திற்கு எதிராக தன்னை நிறுத்திக்கொள்ள அழகர் கோவில் போன்ற நிலையங்கள் எப்படி பயன்பட்டன என்பது போன்ற தகவல்கள் இனி அந்த கோவிலை பார்க்கும் பிம்பதையே மாற்றி விடும்

கள்ளர் இனத்திற்கும் அழகருக்கும் உள்ள சம்மந்தம் என்ன? கோவிலில் உள்ள 100ம் மேற்பட்ட கல்வெட்டு ஒன்றில் கூட கள்ளழகர் என்ற சொல் இல்லாத போது வழக்கத்தில் வந்தது எப்படி? மேல்நாட்டு கள்ளரின் உடைகளுக்கும் அழகருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? வேறு எந்த சமூக மக்களெல்லாம் அழகரின் வழிபாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் ஏன்?, அழகருக்கு மட்டும் இப்படியா வேறு ஏதேனும் வைணவ தளங்களும் இப்படி முரண்பட்ட, வேதங்களை மீறின வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றனவா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் உள்ளே பதில் இருக்கிறது..

தாய்வழி சமூகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி நில உடைமை அல்லது சொத்ததிகார சமூகத்தில் வந்திருக்கும் நாம், அந்த உரிமை அதிகாரம் கோவிலுக்குள் எப்படி போனது அங்கிருந்து அது எப்படி மீட்க பட்டது, ஏன் சிவ பெருமான் உடையார் ஆனார், ஏன் விஷ்ணு ஆழ்வார் ஆனார் இந்த பெயர்களுக்கும் உடைமை அதிகாரத்துக்கும் என்ன சம்மந்தம், நாட்டார் வழகியலில் இவைகள் ஏன் முக்கியம் பெறுகின்றன, இவைகளை பல ஆதரங்களுடன் ஒவ்வொன்றாய் விளக்குகிறார் ஆசிரியர். அதோடு உடைமைக்கும் ஒழுக்கத்திற்கும், ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும், பெண்ணுக்கும் உள்ள தொடர்புகளை புரியவைக்கிறார், பரத்தையர் என்ற பிரிவு ஏன் மத நிறுவனங்களால் கொண்டுவரப்பட்டது, அதன் பின் இருக்கும் அதிகார காரணம் என்ன, என்று ஒரு பெரிய ஆய்வயை மிக எளிதாய் புரியவைக்க முயண்டிருக்கிறார்..

வைணவம் இங்கிருந்த பல சமயங்களோடு சண்டையிட்டு தன்னை எப்படி நிறுத்திகொண்டது, சைவம் போல தமிழ்நாட்டில் அரசு உதவி பெறாமல் சாமானியர்களை எப்படி ஈர்த்தது, எப்படியெல்லாம் சாதிய நிறுவனத்திற்கு வாழைந்துகொடுத்து தன்னை காத்து கொண்டது, ராமானுஜர் போன்ற ஞானிகள் அந்த மதத்தை எப்படியெல்லாம் நிலை நிறுத்தினர், அனைத்து மக்களையும், முக்கியமாக தன்னை ஒரு நாட்டார் வழக்கியல் பிரிவோடு இணைத்து கொண்ட மதமாக வைணவம் எப்படி செயல்பட்டது என்றெல்லாம் பல நிகழ்கால செய்திகளை கொண்ட புரியவைக்கிறார்.

பார்ப்பனர் என்பர் யார்? அந்த பெயருக்கானா அர்த்தம் என்ன? அவர்கள் வருகைக்கு முன்பு இங்கு பூஜித்தவர்கள் யார்? இளையர் பார்ப்பனர் என்றால் அவர்களின் மூத்தவர் யார்? பறையரும் பார்ப்பனரும் ஒரு தொழில் புரிந்தவர்கள் என்பதற்கு இன்றும் பல திருவிழாக்களில் பறையர் சமூக மக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை அடையாலமாக எஞ்ஜி இருக்கிறது, எனில் அவர்கள் இடத்தை பார்ப்பனர் பிடித்தது எப்படி? இப்படி கேள்விகள் நீள அழகான விளக்கங்கள் தரப்பட்டிருக்கிறது

1939ல் அரிசன ஆலய பிரவேசம் நடக்கிறது, இதற்கு காரணம் காந்தி அதை எதிர்த்தவர் அம்பேத்கர், சொல்லும் பொழுதே வினோதமாய் இருக்கிறதல்லவா, ஆமாம் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்திய அரிசன ஆலய நுழைவுக்கும் பூனா ஒப்பந்ததிற்கும் உள்ள தொடர்பை இந்த பகுதியில் ஆசிரியர் விளக்குகிறார், பட்டர்பிளை எபெக்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு, அதாவது எங்கோ நடக்கும் சிறு விஷயம் இன்னொரு இடத்தில் நடக்கும் பெரிய மாற்றத்திற்கு காரணம் ஆகும், இதுவும் அப்படியே, அம்பேத்கார் ஆலய நுழைவு எனக்கு இப்போது அவசியமற்றது, எங்கள் மக்கள் முதலில் படிக்கட்டும், நல்ல வேளையில் அமரட்டும் ஆலய நுழைவு தானாய் நடக்கும் என்று காந்தியின் ஆலய நுழைவு போராட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார், அதே சமயம் ராஜாஜி தன்னுடைய ஆதரவாலரான வைத்தியநாத அய்யரை கொண்டு மதுரையில் ஆலய நுழைவு போராட்டம் நடத்திக்காட்டுகிறார், இவைகள் ஒன்றோடுன்று தொடர்பு கொண்ட காங்கிரஸ்ஸின் சித்து விளையாட்டுக்கள், காந்தியின் பூனா ஒப்பந்ததை மறைக்க செய்த முயற்சிகள், இன்னும் இதைப்பற்றி பலவிளக்கங்களும் அதானல் மதுரையில் நடந்த வினோத சம்பவங்களையும் ஆசிரியர் விளக்கி இருக்கிறார்...

இன்னும் நமது சமூகத்தை தெரிந்துகொள்ள இதை போன்ற புத்தகங்கள் அவசியம் ஆகிறது.. இவைகள் தான் நாம் யார் என்கிற அடையாளத்தை நமக்கு கொடிட்டு காட்டுகிறது.

புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்
ஆசிரியர் : தொ. ப
பக்கங்கள் : 208
விலை : 75
பதிப்பகம் : முயல் கூடு

Wednesday, 26 October 2022

ஜானு - புத்தக பார்வை

98/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியா என்னும் நாட்டின் இறையான்மை என்னும் பொய்யை சில புத்தகங்கள் முகத்தில் காரி உமிழ்ந்து கிழிதெரியும், சில கட்சிகள் தங்களை பாமரர்களின் கட்சிகள் என்று மார்தட்டிக்கொள்ளும் போது நெஞ்சில் மிதித்து கேள்விகேட்கும், சில மாநிலத்தின் அழகில் நாம சிலாக்கிது நிற்கும் போது அதன் கொடூரபக்கங்களை நம் கண்முன்னே வரிவரியாய் காட்டும், இதையெல்லாம் ஒரே புத்தகம் செய்தால் அந்த புத்தகம் ஒருவரின் வாழ்வின் பயணங்களாய் இருந்தால்...

ஸி. கே ஜானு வயநாட்டின் போராளி பெண், இதற்க்கு முன்பு இப்படி ஒரு பெயரை கேட்டிருக்கிறீர்களா, நான் கேள்விக்கூடபட்டதில்லை, ஆனால் இன்று வியந்து பார்க்கிறேன், இந்தியாவின் மலையின மக்களின் முகவரியாய் ஐ. நா. வின் படிக்கலை ஏறிய ஒரே இந்திய பெண், இவர் வாழ்வியலை படியுங்கள் பின்பு கேரளா கடவுளின் தேசமாய் தெரியாது, பிணம் தின்னி கழுகின் கூடாரமாய் தெரியும், கம்யூனிஸ்ட்கள் போராளிகளாக தெரிய மாட்டார்கள், கொடூர பொறுக்கிகளாய் தெரிவார்கள்...

இந்த புத்தகம் காட்டை பற்றி ஆரம்பிகிறது, அதன் வாழ்வியலை பேசுகிறது, அதன் அழகை காட்டுகிறது, அங்கிருப்பவர்களின் தனித்தன்மையை போற்றுகிறது, மலையின மக்களை வாழ்த்துத்துகிறது...

கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் காட்டு வேலை போக மீதி நேரத்தில் பண்ணையாரிடம் செய்த வேலைகளை பேசுகிறது, அப்படி வேலை செய்யும் போது எங்கிருந்தோ வந்த கட்சியினர் அவர்களை வாழ்க ஒழிக கோசம் போட வண்டியில் ஏற்றி சென்றதை கூறுகிறது, அந்த கட்சியின் கொடியில் இருந்த சுத்தியலும் அறிவாலும் எதோ ஒன்றை பேச, எதற்கென்றே தெரியாமல் நின்ற மலையின மக்களின் அறியாமையை பேசுகிறது..

உங்கள் நிலத்தை காப்பற்றுகிறோம் வா போராடுவோம் என்றது கட்சி, உனக்கு சம்பள உயர்வை தருகிறேன் வா போராடுவோம் என்றது கட்சி, உன் வாழ்க்கையை வசந்தமாகிறேன் வா என்றது கட்சி, இதையெல்லாம் அழிப்பவர்கள் பண்ணையார்கள் என்றது கட்சி... ஆவேசம் பொங்க அந்த கூட்டம் போராட்டத்திற்கு போனது... போனபின் ஒவ்வொருவர் முகத்தை பார்த்து இப்படியாய் பேசிக்கொண்டது, ஏலே மேடையில இருக்கிறது உங்க பண்ணையாருதான, அட ஆமாம், பக்கத்துல பாரு உன் பண்ணையாரு உக்காந்துட்டு இருக்காரு... அட இது என்னப்பா அவங்கள எதிர்த்து போராட அவங்களே வந்திருக்காங்க என்று ஆச்சரிய ஓசைகள்...

சிகப்பு நிற கொடி கட்சியின் தலைவர்கள் அவர்கள் மேடையில் அமர்ந்த பண்ணையார்கள், இதுதான் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மலையின மக்களுக்கு செய்த போராட்ட வல்லமை..

ஒரு காலத்தில் கட்சி ஆட்கள் மலையின மக்களின் ஆண்களை எங்கோ கூட்டி சென்றார்கள் வகை வகையாய் மது வாங்கி கொடுத்தார்கள், பல வித புகையிலை கொடுத்தார்கள் பதிலுக்கு அந்த ஆண்களின் நிலங்களை பெற்றார்கள், அவர் வீட்டு பெண்கள் கட்சிகாரர்களின் பிள்ளைகளை பெற்றார்கள், இருந்து அந்த கட்சிகள் இவருங்களுக்கானது என்று சாராய வாடையில் நம்ப வைத்திருக்கிறார்கள்,

இந்த பெண்கள் என் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற அதிமேதாவிதன கேள்விகள் எழுவது இயல்பு, விடிந்தால் கட்சி காரர்களின் தோட்டத்தில் தான் வேலை, அவர்கள் கொடுப்பதுதான் சம்பளம், தங்கள் நிலத்தில் இன்று கூலியாய் வேலை செய்ய அவர்கள் அனுமதி வேண்டும், எனில் இந்த அரசாங்கம் என்ன செய்கிறது...

மலையின மக்கள் யானைக்கூட்டத்திற்கு தொந்தரவாய் இருக்கின்றனர் என்று அவர்களே சில யானைகளை ஊருக்குள் புகவிட்டு அவர்களை விரட்டுகிறது, அவர்களே காட்டு தீயை உண்டாக்கி, உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று துரத்துகிறது, அதையும் மீறி போக வில்லை என்றால் இவர்கள் தான் கொளுத்தினார்கள் என்று பழியிட்டு உள்ளே தூக்கி போட்டு மிதிக்கிறது.. மீறி இருந்தால் ஒரு நாள் காட்டுதீ அவர்கள் குடிசையை லாவகமாக எரிக்க உதவியாய் இருக்கிறது...

மழையினமக்கள் தங்கள் பிணங்களை எரிக்கும் இடம் கூட இன்று பட்டா போட்டு கட்சிக்கும் பண்ணையார்களுக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது, 1856ல் வெள்ளையர்கள் மலையின மக்களை துரத்தி அடிக்க பயன்படுத்திய காட்டு பாதுகாப்பு சட்டத்தை இன்று பத்திரப்படுத்தி அவர்களை சரியான முறையில் விரட்டிகொண்டிருக்கிறது..

இதில் சிலரே எதிர்த்து நிற்கிறார்கள் அதில் ஒருவர் தான் ஜானு, தன் மக்களுக்காய் அதிகாரத்தை கேள்விக்கேட்டார், கட்சியை தூக்கி எரிந்தார், முதல்வர் வீட்டு வாசலில் நின்று நியாயம் கேட்டார், தலைமை செயலகத்தின் வாசலில் கூடாரமிட்டு அதிகாரத்தை அலறவிட்டார், இவரின் குரல் ஒருவேளை நமக்கு கேட்காமல் போய் இருக்கலாம், ஆனால் உலகம் கேட்டது ஐ. நா கவுரவம் கொடுத்தது.. சக போராளிகளை அவரிடம் கொண்டுவந்து நிறுத்தியது, ஒரு அரசாங்கத்தை தனிடம் ஒப்பந்தம் போட வைத்தது, அந்த ஒப்பந்ததை அரசு மீறும் போது அதிரடியாய் அதை நிறைவேற்றும் வலிமையை அந்த குழுவுக்கு கொடுக்க வைத்தது,

ஒரு பெண் எழுத்தறிவில்லாமல் தானே படித்து தானே கற்று, தானே சொல்லிக்கொடுத்து, தானே போராடி, தானே எதிர்த்து, தானே நின்று, தானே உலகை திரும்பிபார்க்க வைத்திருக்கிறார்... ஆனால் இந்த புத்தகம் அவரது குரலில் ஒரு மழலை வடிவமாய் கேட்கிறது, எல்லாமும் எளிதாய் நடப்பதைப்போல கடக்கிறது, தன்மேல் விழுந்த அடிகளில் மருத்துப்போய் சுரைனையில்லாததாய் வெளிப்படுகிறது..

ஜானு மலையின பெண்களில் ஒரு விடிவெள்ளி... மக்களை ஏமாற்றும் ஆணவ அரசுக்கு எதிரான கோடாரி காம்பு...

புத்தகம் : ஜானு
ஆசிரியர் : பாஸ்கரன்
பக்கங்கள் : 80
பதிப்பகம் : காலசுவடு
விலை : 40

Tuesday, 25 October 2022

பாரபாஸ் புத்தக பார்வை

97/100

#NaanVijay

நான் விஜய்

இம்ப்ரெவாய்ஸ் என்ற சொல்லாடல் சமீப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிகம் கேட்டிருக்க வாய்ப்புண்டு, ஆனால் இது இலக்கிய உலகில் பலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது, ஒரு சம்பவதையோ, அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலையோ, கவிதையோ எடுத்து அதில் ஒருபகுதியையோ அல்லது அதன் ஒரு குறிப்பிட்ட மனிதரின் வாழ்வியலையோ ஒரு தனி பதிவாக வெளியிடுவது தான் அது...

தமிழிலும் இப்படி பல நூல்கள் வந்திருகின்றன, பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக பலபேர் நாவல்களை எழுதி இருப்பதை நாம் அறிந்திருகிறோம், பாரதி கூட பெரிய மஹாபாரததின் துரோபதி துகில் உரியப்படும் நிகழ்வை மட்டும் தனியே கொண்டு பஞ்சாலி சபதம் எழுதி உள்ளார். இப்படி கையாளப்பட்ட நூல்தான் இந்த பரபாஸ்..

பரபாஸ் ஒரு ஸ்வீடேன் நாவல், எழுத்தாளர் பேர் லாகர் குவிஸ்டு என்பவரால் 1950ல் வெளியிடபட்ட நூல் இது, இதற்காக அவர் இலக்கியத்திற்கன நோபல் பரிசை 1951ல் பெற்றார், அப்படி என்ன சிறப்பு இந்த நாவலுக்கு என்று பார்க்கும் போது, முதல் செய்தியே இது பரபாஸ் பற்றியது என்பது இன்னொன்று இது விவிலியத்தின் பல கேள்விகளை சாமானியனாக கேட்கிறது.. இயேசுவின் கடவுள் தன்மையை பற்றி பேசுகிறது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

யார் இந்த பரபாஸ்? இயேசுவிற்கு பதில் சிலுவையில் இருந்து விடுதலை பெற்ற கொடூரமானவன், பல கொள்ளை கொலைகளை செய்தவன் என்று சில வரிகளில் விவிலியத்தில் கடந்து போனவன், அவ்வளவு தரவுகளே அவனைப்பற்றி விவிலியத்தில் உங்களுக்கு கிடைக்கும், The Passion of The Christ என்னும் அகாடமி விருது பெற்ற ஒரு ஹாலிவுட் படம், அதில் ஒரு காட்சி இந்த புத்தகத்தை படிக்கும் போது நினைவுக்கு வருகிறது, இயேசுவிற்கு பதில் மக்கள் பிளாதுவை எங்களுக்கு பரபாஷை விடுதலை செய் என்று கோசமிடுவார்கள், பரபாசும் விடுதலை அடைந்த மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து ஓடுவான், அப்படி ஓடும்போது இயேசுவை தாண்டும் அந்த ஒரு நொடி அவன் பார்வையில் ஒரு மாற்றம் வரும், இவரா எனக்கு விடுதலை கொடுத்தவர் என்பது போல ஒரு பார்வை வீசுவான், அந்த ஒற்றை பார்வை தான் எனக்கு இந்த மொத்த புத்தகமாக தெரிகிறது.

பரபாஸ் நாவல் இயேசுவின் இறப்பிற்கு பின் என்ன நடந்திருக்கும் என்று விவிலியம் சொல்லாத ஒரு களத்தை காட்டுகிறது, அங்கிருக்கும் சாமானியர்கள் என்ன பேசி இருப்பார்கள், அவரை கொண்டாடியவர்கள் என்ன நினைத்திருப்பார்கள், பரபாஸ் மனநிலை எப்படி இருந்திருக்கும், அவன் இதை எப்படி ஏற்றுக்கொண்டிருப்பான், இவையெல்லாம் அந்த கணத்திலே கொண்டுப்போய் நிறுத்துகிறது,

பரபாஸ் கடவுள் நம்பிக்கை கொண்டவனில்லை, ஆனால் அவன் இயேசுவை நம்பினான என்றால் இல்லை, அவன் நம்ப முயற்சி செய்து கொண்டிருந்தான், அவனுக்கு அதிசயங்கள் நடந்ததா என்றால் ஆம் நிச்சயம் நடந்தது, ஆனால் அவன் அதை அதிசயம் என்று நம்பினான என்றால் அவனுக்கு அதில் பெரிதாக நாட்டமில்லை, அவன் கடவுளை நம்பவில்லை ஆனால் இயேசுவுக்காக எதையும் செய்ய ஒருக்கட்டத்தில் தயாராகிவிட்டான், எனில் அவன் கிறிஸ்தவனா இல்லை, இன்னும் கடவுளை தேடிகொண்டிருப்பவன், கிறிஸ்தவர்களால் வெறுக்கப்பட்டவன்.

இந்த பரபாஸ் நாவல் என்பது மதில்மெல் பூனை போல, மிகவும் கவனமாக எழுதப்பட்ட ஒன்று என்றே நம்புகிறேன், ஒருவனின் கடவுள் நம்பிக்கையயை இந்த புத்தகம் கேள்விகேட்கவில்லை, அதே சமயம் எல்லாவற்றையும் உண்மையைன்று வாதிடவும் இல்லை, இது மிகுந்த சிரமமான ஒரு முயற்சி, கொஞ்சம் பிசகினாலும் உலகின் மிக பெரிய மதத்தை இழிவு செய்த பழி ஆசிரியர் தலையில் விழுந்துவிடும், அப்படி இருக்க, இத்தனை நம்ப தன்மையோடு இதை கையாண்டதை புகழ்ந்தே ஆகவேண்டும்,

பரபாஸ் தனிமையை அனுபவிக்கும் போது இந்த நாவலில் நீங்களும் அதை உணர்வீர்கள், அவன் ஒவ்வொரு உணர்ச்சிகளிலும் நீங்கள் பயணப்படுவீர்கள் அதுவே இந்த புத்தகத்தின் மிகப்பெரிய வெற்றி, அவனின் பயணம் அன்றைய இயேசுவை நமக்கு அடையாளம் காட்டுவத்தோடு, அன்றைய மத அரசியலின் வீரியத்தையும் புரியவைக்கிறது, ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்பது எவ்வளவு புதிய கொள்கை அந்த காலத்திற்கு என்பதை இந்த நாவல் புரியவைக்கிறது, அன்பே பிறதானம் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் மரணம் இன்னொருவனை என்னலாம் செய்திருக்கிறது என்ற கற்பனை எழுத்தின் ஆதிக்கமே

தன்னைத்தான் நேசிப்பதைப்போல பிறனையும் நேசிப்போமாக, இதுவே எல்லா கட்டளைக்கும் பிரதான கட்டளையாய் இருக்கிறது
- தோழர். இயேசு

புத்தகம் : பரபாஸ்
ஆசிரியர் : பேர் லாகர் குவிஸ்டு
தமிழில் : க. நா. சு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 128
விலை : 100

Monday, 24 October 2022

எப்போதாவது எண்ணிப்பாருங்கள் - புத்தக பார்வை

95/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியா சுதந்திர போராளிகள், தங்களுக்குள்ளும் தன் குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த புத்தகம், இந்த புத்தகத்தை இந்திய ஒலிபரப்பு அமைச்சகதுக்காக தொகுத்து வழங்கியவர் வானொலி புகழ் சரோஜ் நாராயன்சாமி,

இந்த புத்தகம் மிக முக்கிய கடிதங்களின் கோர்வை மட்டுமல்ல இவைகள் அன்றைய இந்தியாவை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுமைகளை, நம் தலைவர்களின் வீரத்தை பறைசற்றுகின்றது, ஜான்சி ராணி தொடங்கி நேதாஜி வரை ஒவ்வொரு கடிதங்களும் ஒவ்வொரு வரலாற்றை பேசுகிறது, இதில் நான் கற்றுக்கொண்ட அல்லது புரிந்து கொண்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1, மன்னர்கள் காலத்தில் ஆங்கிலயேர்க்கெதிரான போராட்டம் என்பது நாடு தழுவியதல்ல அவைகள் மாகாண போராட்டங்களே, ஒரு குறிப்பிட்ட மாகாண அரசுக்கும் ஆங்கிலேயர் எதிரான போர் மட்டுமே

2, சமஸ்தானங்கள் தங்கள் நலனை கருதியே போரிட்டனவே அன்றி ஒருங்கிணைந்த இந்தியாவிற்கனா போர் அது கிடையாது

3, இணைந்து போறிட்ட மன்னர்களுக்கும் கூட வெற்றிக்கு பின் அதை யார் சொந்தமாக்கி கொள்வது என்பதில் போர் தொடங்குவதற்கு முன்பே சண்டை ஏற்பட்டிருக்கிறது.

4, ஒன்றுபட்ட மன்னர்களுக்கு கூட ஒற்றுமை என்பது துளி அளவுக்கும் இருந்ததாக புலப்படவில்லை, இது சுயநல போராக தான் இருந்திருக்கிறது.

5, பகத் சிங் காலகட்டத்தில் இருப்பெரும் பிரிவு இருந்ததாக தெரிகிறது

6, நாட்டிற்காக போராடி கைது செய்யப்பட்ட புரட்சியாளர்களை காங்கிரஸ் கைவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது.

7, காங்கிரஸ் மனது வைத்திருந்தால் பகத் சிங் உட்பட பல பேர் தூக்கு மேடையில் இருந்து தப்பித்திருக்கலாம் என்பது புரிகிறது.

8, பிச்சை எடுத்து பெரும் விடுதலை தனக்கு எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை பகத் தன்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தெரிகிறது.

9, ஒரு போராளி அரசின் சூழ்ச்சிக்கு வளைந்து கொடுத்து விடுதலைக்கு முயற்சி செய்வதை ஒரு கடிதத்தில் பகத் வன்மையாக கண்டிக்கிறார், இதில் இருந்து அன்றைய புரட்சி கட்சி காரர்களின் மனவலிமை வெளிப்படுகிறது.

10, ராம் பிரசாந்த் பிஸ்மில் கடிதம் அன்றைய காலகட்டத்தில் இருந்த மத வேற்றுமைகளை தோளுரித்து காட்டுகிறது, முக்கியமாக ஆரிய சமேஜம் போன்ற கட்சிகளை அவர் சாடுவதை உணரமுடிகிறது

11, பகத்தும் அவர் சகாக்களும் எழுதிய கடிதங்கள், கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது என்னும் பாரதியின் கவிதையை வெறுக்க வைக்கிறது.

12, சிறைக்கு வெளியில் மட்டுமல்ல சிறைக்குள்ளும் தங்கள் உரிமைக்காக போராடிய பகத், லால், தத், ராம்பிரசாத், யதிந்திர தாஸ் போன்றவர்களின் போராட்டம் வியப்பளிக்கிறது,

13, 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து யதிந்திர தாஸ் சிறையில் மரணம் அடைந்ததும் அந்த அளவுக்கு மதிப்பற்ற முறையில் அன்றைய அரசும், இதைப்பற்றிய எந்த கவலையும் காங்கிரஸ் படவில்லை என்பதும் வேதனை அளிக்கிறது.

14, நேதாஜி கடிதம் அவர் இந்த நாட்டின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை காட்டுகிறது, ஒரு பெரிய பதவியை உதறி தள்ளிவிட்டு இந்த நாட்டுக்காய் அவர் உழைக்க நினைப்பது அவரது கடிதங்கள் சொல்லும் செய்தி

15, எல்லா போராளிகளையும் காக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது என்பது புரிகிறது, புரட்சியாளர்கள் என்று ஒதுக்குவதை அவர் வெறுகிறார் என்பதை அவர் எழுதிய கடிதங்கள் புரியவைக்கிறது.

16, காங்கிரஸ் குறித்த ஒரு பெரிய கனவை நேதாஜி கொண்டிருந்தார் என்பது சிதறஞ்சன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிகிறது.

இப்படி அன்றைய அரசியலின் ஒரு புகைப்படமாய் இந்த புத்தகத்தில் உள்ள கடிதங்கள் நமக்கு வெளிப்படுத்துகிறது.

புத்தகம் : எப்போதாவது எண்ணிபாருங்கள்
தொகுப்பாளர் : சரோஜ் நாராயன்சாமி
பதிப்பகம் : இந்திய ஒலிபரப்பு அமைச்சகம்
பக்கங்கள் : 200
விலை : 55

Friday, 21 October 2022

சாதல் இல்லையேல் காதல் - புத்தக பார்வை

93/100

#NaanVijay

நான் விஜய்

சோ ஏன்னும் நகைச்சுவை நடிகரை உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், அதுமட்டுமல்ல அவர் சிறந்த அரசியல் விமர்சகர் அவருக்கென்று இந்திய அரசியலில் மிக முக்கியமாய் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியவர், ஆனால் சோவின் இன்னொரு பக்கம் இருக்கிறது அவர் ஒரு எழுத்தாளர், மிக பெரிய செய்திகளை மிக அழகிய சொல்லாடலில் எளிதில் புரியவைக்க கூடியவர்...

Comedy is a serious business என்று சொல்வார்கள் ஆனால் அது சோ அவர்களுக்கு casual walk, சோவின் பல கதைகள் புத்தகங்கள் என்பதை தாண்டி நாடகமாவும் திரைப்படமாகவும் மேடை கண்டிருக்கிறது.. இந்த புத்தகமும் ஒரு நாடக வடிவம்

மிக சிறந்த நகைச்சுவை நாடகம் என்றே சொல்லலாம் ஆங்காங்கே அவரது அரசியல் வசனங்கள் அவரது நகைச்சுவையுடன் கூடிய அரசியல் நையாண்டியை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக முதல் காட்சியில் ஒரு கல்லூரியை அறிமுகப்படுத்துவார், அப்போது இங்க மாணவர்கள் நிறைந்திருக்கிறார்கள் எனவே இது நிச்சயம் ஹிந்தி எதிர்ப்போராட்டத்திற்கு முற்பட்ட காலம் தான், என்று சொல்வார், இன்னொரிடத்தில் ஹிந்தி கற்றுக்கொண்டால் பதவி உயர்வு கிடைக்குமாம், 50வயதில் retire ஆகாமல் இவனுங்க ஏன் இப்போ படிக்குறானுங்க தெரியலையே என்று நக்கலடித்திருப்பார், இப்புடி புத்தகம் முழுக்க one liner போட்டு நகைச்சுவை விருந்தே படைத்துவிட்டார்..

இந்த கதையே பல இடியாப்ப சிக்கல் நிறைந்த ஒன்று அதில் தனது வார்த்தை ஜாலங்களை நிரப்பி விருவிறுப்பாய் கொண்டுச்சென்றிருக்கிறார், ஒரு கல்லூரி மாணவன் விளையாட்டை எழுதிய கவிதை அவன் மட்டுமே கலந்துகொண்டான் என்பதற்காக அவனுக்கு பரிசும் கிடைத்துவிடுகிறது, இதை பார்த்த ஒரு பெரிய பணக்கார பெண் அவரை காதலிக்க தொடங்க ஆரம்பமே நகைச்சுவை கலைகட்டிவிடுகிறது, பின்னர் சில காரணங்களால் அந்த பெண்ணின் அப்பா 2மாதத்திற்குள் 10000 சம்பாதிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட ( இந்த கதை நடக்கும் காலகட்டம் 1965களில் அப்போது 10000மிக பெரிய பணம்), அந்த சமயத்தில் தன் பம்பாய் நம்பனை எதிர்பாரத விதமாய் சந்திக்க அவன் பணம் சம்பாதிக்க உதவுகிறான்,

அந்த பணத்தை சம்பாதிக்க நாயகன் செத்துவிட்டதாக ஒரு பொய் செய்தி போட இப்புடி ஏகப்பட்ட கலாட்டாக்கள் கதையில் ஒரு கட்டத்தில் தான் சாகவில்லை என்று நிரூபித்தால் தான் தன் காதல் கைக்கூடும் என்கிற நிலையில் நாயகனும் அவர் நண்பனும் என்ன செய்தார்கள், 10000 பணம் சாம்பாதிதார்களா என்று படுவேகமாய் கதை நகர்கிறது..

ஒரு தரமான விரசம் இல்லாத இந்த காலத்தில் இருப்பது போல், உருவ கேலி இல்லாதா, நல்ல நகைச்சுவைகளை ஒரு சினிமா பார்ப்பதுபோல ரசிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்தை படிக்கவும், நல்ல நகைச்சுவை படம் எடுக்க நினைப்பவர்கள் நிச்சயம் முயற்சிமிக வேண்டிய புத்தகம்...

புத்தகம் : சாதல் இல்லையேல் காதல்
ஆசிரியர் : சோ. ராமசாமி
பதிப்பகம் : அல்லயன்ஸ்
விலை : 140
பக்கங்கள் : 312

Sunday, 16 October 2022

சிறுவர்களுக்கான தத்துவம் - புத்தக பார்வை

92/100

#NaanVijay

நான் விஜய்

இன்றைய கல்வி முறை பிள்ளைகளுக்கு ஒரு சிறைசாலை போல செயல்படுவதாக பலநாள் உணர்ந்தது உண்டு... பள்ளிக்கு செல்வது பிள்ளைகளுக்கு எவ்வளவு ஒரு கடுமையான செய்தி, நாளை பள்ளி விடுமுறை என்பது ஒரு கொண்டாட்டத்திற்கான செய்தியாக இன்று காணப்படுகிறது... அந்த அளவிற்கு பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றனரா என்று சிந்தித்தால், பதில் அதில் பாதி உண்மை என்பதே

பள்ளிக்கூடம் ஒரு மகிழ்ச்சியின் தலமாய் மாறாததற்கு காரணம் எப்படி பள்ளியோ அதே போல தான் பெற்றோர்களும், பிள்ளைகளை வெறும் மதிப்பெண் பட்டியலாய் மட்டும் பார்க்கும் மனநோய் தான் காரணம், எனில் இப்படிபட்ட காலகட்டத்தில் பிள்ளைகளுக்கு பள்ளியை எளிமை படுத்துவது எப்படி என்பதை தான் 8தலைப்பில் இந்த புத்தகம் மிக எளிமையாக சொல்லி இருக்கிறது.. இது குழந்தைகளுக்கான புத்தகம் என்றாலும் அனைத்து பெரியவர்களும் நிச்சயம் படிக்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகளின் கற்றல் பற்றிய தெளிவு பிறக்கும், எப்படி சொல்லி தரவேண்டும் என்ற அறிவு விருத்தி ஏற்படும்

பார்த்தல் என்பது வெறும் பார்த்தல் அல்ல நோக்குதல், அதாவது பார்க்கும் யாவையும் உள்வாங்க வேண்டும், அனைத்தையும் கூடுமான மட்டும் மனதில் பதிய வேண்டும், என்றும் அதை எப்படி செய்வது என்றும் அதற்க்கான பயிற்சிகளும், எடுத்துக்காட்டுகளும் அருமை.

சிந்தித்தல் என்றால் உள்ளுற பேசி பதிலை தேடுதல், தனக்குள் ஒன்றை உள்வாங்கி அதைக்குறித்து தனக்குள்ளே கேள்வி எழுப்பி  அதற்கு தானே பதில் அளித்தல், அதாவது சிந்தித்தல் என்றால் ஒன்றை மனதில் நிறுத்தி தீர ஆராய்தல்

படித்தல் என்பது வேறு பார்த்தல் என்பது வேறு என்று விளக்குகிறார் ஆசிரியர், அர்த்தம் புரியாத ஒரு வார்த்தையை படித்தால் அது வெறும் பார்த்தல் மட்டுமே அது படித்தல் ஆகாது, படித்தல் என்பது அந்த வார்த்தையை பார்க்கும் போது மனம் அதன் அர்த்தத்தை உணர்தல் என்று விளக்குகிறார்.

எழுதுதல் என்றால் தோன்றுவதை எழுதுவது, எழுதியபின் அந்த வாக்கியம் முழுமை பெற்றதா அல்லது அர்த்தமற்று நிற்கிறதா என்ற புரிதலை அடைதல், உணர்வதை சரியான வாக்கியமாய் வடிக்க முடிந்தால் அதுவே சரியான எழுதுதல் ஆகும் என்கிறார் ஆசிரியர் இந்த பகுதி குழந்தைகளுக்கு மட்டுமல்ல தன்னை ஒரு எழுத்தாலனாய் நிறுத்திக்க நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டியது

கணிதம் என்பது ஒரு கடின பாடம் என்பதை இந்த பகுதி எளிமை படுத்த உதவுகிறது, அதை ஒரு கதையாடல் போல எப்படி மாற்றியமைப்பது என்பதை அழகான உதாரணங்களால் விளக்குகிறார் ஆசிரியர்

கலை என்பதென்ன அது ஏன் சுவரஷ்யமாய் பிள்ளைகள் எடுத்துக்கொள்கிறார்கள், அதை போல பிற பாடங்களை பிள்ளைகள் கொண்டாட என்ன வழிமுறை என்று விளக்குகிறார்... சுதந்திரம் என்னும் சிந்தனையின் வலிமையை கலையின் மூலம் எளிமைப்படுத்தி இருக்கிறார்..

எப்படி ஒரு பிள்ளைக்கு நன்மைஎது என்று விளக்க முடியும், எது நன்மை தரும் செயல் என்று பிள்ளைகளை ஏற்க வைக்க முடியும், என்பதை நல்லவறாக இருத்தல் என்னும் தலைப்பில் தக்க உதாரணங்களோடு சொல்லி இருக்கிறார்..

கற்றல் என்றால் என்ன? எது உண்மையில் கற்றல் என்பதாகும், படித்தலும், சிந்தித்தலும் எப்படி கற்றலாய் மாறுகிறது, சரியான கற்றல் என்றால் என்ன? பிறரிடம் இருந்து எப்படி கற்பது, நம்மிடமிருந்து நாம் எப்படி கற்பது என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நம்மை போன்ற பெரியவர்களுக்கும் ஒரு அத்தியாவசிய பாடம்...

உங்கள் வீட்டில் பிள்ளைகள் இருந்தால் அவர்களை புரிந்துகொள்ள நீங்களும், படிப்பை புரிந்துகொள்ள அவர்களும் நிச்சயம் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.

புத்தகம் : சிறுவர்களுக்கான தத்துவம்
ஆசிரியர் : சுந்தர் சருக்கை
பதிப்பகம் : எதிர் வெளியீடு
பக்கங்கள் : 100
விலை : 300

Sunday, 9 October 2022

மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதம் புத்தக அறிமுகம்

87/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியாவின் மிக புகழ்பெற்ற கதைகள் இரண்டு, ஒன்று ராமாயணம், இன்னொன்று மஹாபாரதம், இதில் மஹாபாரதம் என்பது மிக அதிக மாந்தர்களையும், பற்பல கிளைகாதைகளையும் கொண்டவை, அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென சில கதைகள் வழங்கப்பட்டு வருகிறது, இந்த புத்தகம் ஒரு முழு மஹாபாரத கதை அல்ல அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே...

மஹாகவி பாரதியின் பஞ்சாலி சபதம் எனும் இந்த கவிதை காவியம் பாண்டவர்கள் சூது விளையாடி அனைத்தையும் இழந்து இறுதியில், பாஞ்சலியின் சபததோடு முடிவுறும்.. இந்த காதையின் சிறப்பு பாரதி பாஞ்சலியை பாரத தாயாகவும், பாண்டவர்களை இந்தியர்களாகவும், கெளரவர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாகவும் உருவகபடுத்தி எழுதி இருப்பதே,

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இந்த கவிதை வரிகள் மிகப்பெரும் எழுச்சியை மக்களிடம் பரப்பிற்று என்றே கூற வேண்டும், அத்தனை காத்திரமான வரிகளால் பாரதி மக்களின் உணர்வுகளை தூண்டி இருப்பார்.

இந்த புத்தகத்தை பல அறிஞர்கள் மேடையேற்றி இருக்கின்றனர், அதில் ஒருவர் தான் ஐயா முனைவர் ஞானசம்பந்தன், அவரது கல்லூரி நாட்களில் அவர் நண்பர்களோடு அவர் இயற்றிய இந்த நாடகத்தின் வசன குறிப்பு பல வருடங்கள் கழித்து அதே நாடகத்தில் தனது நண்பர் மூலம் பரிசாக கிடைக்க அதை அவர் இன்று புத்தகமாக நம்மிடையே தவழவிட்டிருக்கிறார்..

இந்த புத்தகம் அப்படியே பாரதியின் கவிதைகளை வசனமாக மாற்றாமல், அதற்குள் தன் திறமையை புகுத்தி இந்த கதையை ஆசிரியர் தனதாக்கி கொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும், பாரதியை போல் உருவகங்கள் ஏதுமில்லாமல் பாரத கதையாகவே இதை நாடக வடிவில் மாற்றி இருக்கிறார் ஆசிரியர்.. இந்த புத்தகம் மஹாபாரததின் ஒரு சிறுபகுதியாய் இருந்தாலும் படிப்பதற்கு எளிமையும், சீக்கிரம் முடிந்து விட்டதே என்ற உணர்வையும் நிச்சயம் கடத்துகிறது...

புத்தகம் : மகாகவி பாரதியின் பஞ்சாலி சபதம்
ஆசிரியர் : முனைவர். கு. ஞானசம்பந்தம்
பக்கங்கள் : 72
பதிப்பகம் : செண்பகா பதிப்பகம்
விலை : 45

Wednesday, 5 October 2022

The Adventure of Iron Man 1&2 View

86/100

#NaanVijay

நான் விஜய்

#comics #ironman #FredVanLente

We are the generation may grow up with the comics world like Irumbu kai Mayavi, Sambuvin saathanaigal, and yes the magazine called Ambulimama has special place in it.. But for the 2k generation is more obsessed with DC and Marvel comics and its suoer heroes, when in my teen I have seen Super man and his power, where I related him with our very own super hero Sakthi man, We had a great love to this hero.. Because he do whatever we imagine, he fly, he fight, he can invisible etc..

If anyone ask what is the different between DC and Marvel I could say DC for Matured Kids and Marvel for all kind of kids.. Why because Marvel never get into a very serious stereo type kind of shows.. They keen in to entertain the audience, Yes am a kind of Marvel fan but for not all the characters, and I never followed all characters of Marvel, one fine day whole india is started talking about Spydy, and Am watched the movie only on TV when the Vijay tv got the rights, that time I dont know what is marvel and dc, all I know is Spiderman The new age superhero, and then we slowly start grow up one day my friend introduced me the super hero called Iron Man, and  truely not the fan of Iron man, am a fan of Tony Stark, more then super hero Tony stark the multi millionaire and his ideology, and his vision impressed me in a great way.

When I decided to read a comics after so long time, immensely The Adventure of Iron Man grab my attention, this story is almost similiar to Iron Man movie Part-1, here Tony introduced his new techno marvel SKIN program, where a aged professor scold him that he destroyed his country which is not easily find in the world map, Tony decided to do the fact check on the old professor statement, mean time he decided to do trail drive on a jet which is made with SKIN technology, on this drive he stucked in a storm and the jet get trashed

AIR saved him from the storm and tony find the professor told country is get spoiled by his own technology which is misused by the AIR, and the AIR scientist supremo asked much improvement on his technology to destroy the country are else tony will get died, in the same location they also brought that old professor too.. How tony survived the situation, how he helped the country and how he get back to his place is the simple narration of this small comics..

Generally comics will give the movie effect if its perfectly designed, and of course marvel is master in it... In just 23 pages we had a amazing effect of watching one full Marvel movie.. And in kindle edition it was to great to read comincs.. If ur Marvel fan give a try you will really love it..

Book: Adventure of Iron Man -1, 2
Author : Fred Van Lente
Pages : 50
Price: 163Rs

Friday, 23 September 2022

உயிரினங்களின் தோற்றம் புத்தக பார்வை


85/100

நான் விஜய்

#NaanVijay

கடவுள் இந்த உலகத்தை படைத்தார் திடீரென்று அவருக்கு என்னமோ ஆகி என்னத்தையாவது இன்று பண்ணி தொலைப்போம் என்று தேடும் போது தூரத்தில் ஒரு புள்ளி போல ஒரு வெற்று கிரகம் இருக்க use it என்று அவரது 29492010 மூலை சொல்லவும் டபக்குனு கழுதை இருந்துட்டு போங்க அப்புடின்னு நம்மையெல்லாம் படைத்துவிட்டார்... அதோட அப்போ அப்போ வேற language மக்களுக்கு வேற வேற நாட்டு மக்களுக்கு வித்தியாசமான பெயரில் அவதரித்து, வித்தியாச வித்தியாச சித்து விளையாட்டுக்கலையெல்லாம் செய்து... நீ போய் அவனை உன் மதத்துக்கு மாத்து, அவன் பின்னாடியே நீ போய் அவனை உன் மதத்துக்கு மாத்துனு மதத்துக்கு ஒரு புரோக்கர் செட் பண்ணி அனுப்பி இருக்காரு... இவ்வளவு பண்ணிட்டு கொஞ்சோம் சாயிவோம்னு படுத்தா இந்த டார்வின் உன் இஷ்ட படில நாங்க பொறக்கல நான் பரிணாம வளர்ச்சி படித்தான் பொறந்தோம் வளந்தோம்னு தூக்கிட்டு வந்துட்டான் மனுஷன்... ராஸ்கல்...

Anyway மதவாதிகள் பெரும் பலமாய் இருந்த பிறப்பின் ரகசியத்தை நார்நாராய் கிழித்தெரிந்தது அவரது இந்த பரிணாம கோட்பாடு... உலகின் அனைத்து மக்களும் நம்பிகொண்டிருந்த ஒரு விதியை முற்றிலும் மாற்றி அமைத்தது இந்த பரிணாம கோட்பாடு... இதனால் பல மதங்கள் பலம் இழந்தது... பல பேர் வாழ்க்கை கேள்விகுறியானது... உடன் சிலரின் பிழைப்பை காக்கவும் தவறவில்லை

இந்தியாவை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சியினர் பலநாள் காப்பாற்றியது டார்வின் இந்த பரிணாம கொள்கை தான், அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.. ஆனாலும் நாம் நிச்சயம் புரிந்து கொள்ளவேண்டியது உள்ளது இது ஒரு தியரி அதுவும் முழுதும் நிரூபிக்கப்படாதா, தக்க சான்றுகள் அற்ற ஒரு அரைவேற்காட்டு தியரி, இதை நான் சொல்லவில்லை டார்வின் பக்கத்திற்கு பக்கம் சொல்லி இருக்கிறார்..  இப்படி முழுமை பெறாத ஒரு தியரி உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது காரணம் இதை இல்லை என்று மறுத்து மாற்று சொல்ல வேறு ஒரு நல்ல தியரி நம்மிடம் இல்லை என்பது தான்...

டார்வின் என்ன சொல்கிறார்.. உலகத்தின் அனைத்து இனமும் ஒன்றாய் இருந்து இன்னொன்றாய் பரிணமித்தவை தான், ஆனால் இந்த மாற்றம் நடந்ததற்க்கான சரியான சான்றோ எப்படி நடந்திருக்கும் என்றோ தனக்கு தெரியாது என்கிறார்.

ஒரு இனம் இன்னொன்றாய் பரிணமிக்க அவை ஒரு இடத்திலே பலகாலம் தங்கி இருத்தல் அவசியம் ஆகும்... ஆனால் உலகின் வெவ்வேறு பக்கங்களில் ஒரே போன்ற உயிரினம் காணப்படுகிறது... இந்த நகர்த்தல் எப்போது நடந்தது பரிணாமத்திற்கு முன்பா அல்லது பின்பா என்றால் அதற்கும் பதில் இல்லை..

கலப்பில் பிறந்த விலங்கு அல்லது உயிரினம் எப்போதும் மலட்டு தன்மையுடன் காணப்படும் என்கிறார்.. எனில் எப்படி இத்தனை புதிய இனங்கள் அல்லது உயிர்கள் தோன்றி இருக்க கூடும் என்ற கேள்விக்கு பதில் இல்லை

ஒரு இயலில் பறவைகளால் பல விதைகளை சுமந்து சென்று இன்னொரு இடத்தில் விதைத்து அவை கூட்டமாய் முளைக்க வாய்ப்பில்லை என்கிறார்.. அவரே 13வது இயலில் வாத்தின் பாதத்தில் பல விதைகள் கொண்டு செல்லப்பட்டு பரவுவதை நான் காண்கிறேன் என்று வேறுபடுகிறார்...

ஒரே வகை உயிரினம் வெவ்வேறு இடங்களில் காணப்படுதல் என்பது அரிது அல்லது சாத்தியம் குறைவு என்கிறார்... ஒருவேளை அப்படி இருந்தாலும் குணாதிசயங்கள் மட்டுமே ஒற்றுப்போக வாய்ப்பிருப்பதாக சொல்லுகிறார்.. உலகின் அனைத்து மூளையிலும் மனிதன் என்னும் உயிரினம் இருந்ததை மறந்து... 🤔

இன்னும் இப்படி பல முரண்கள் இருக்கிறது, இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு ஆசிரியரே டார்வின் தான் சொன்ன பல செய்திகளை 2மற்றும் 3,4ம் பதிப்புகளில் மாற்றி இருக்கிறார் என்கிறார்... எனில் டார்வின் தன் தியரி மீது எத்தனை பெரும் நம்பிக்கை கொண்டவராய் இருக்கிறார் என்பது புரிகிறது... எனிலும் இப்படி ஒரு அரைகுறை தியரி உலகையே மாற்ற உலகம் முழுக்க இருக்கும் கேடுகெட்ட மதவாதீகளே காரணம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பரிணாம கோட்பாட்டில் இந்த புத்தகத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் பல வித இன கலப்பு ஏற்பட்டு பல புது இனங்கள் பிறந்திருகின்றன... அதில் வலிமைகுறைந்த இனங்கள் போட்டியிட முடியாமல் அழிந்து போகின்றன.... இதில் ஒரு இனம் தாதோன்றியாக தன்னைத்தானே தகவமைத்து மாறிக்கொள்கிறது என்பதில் எனக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை.  ஆனால் நாம் எதோ ஒரு கலப்பினம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்...

டார்வின் இந்த தியரி தான் சரி என்றால் அதை நிரூபிக்க இதுவரை எந்த சான்றும் இல்லை என்பதை நாம் பகுத்தறிதல் நியாயம் ஆகும், உடன் மனிதன் சிந்திக்க தொடங்கிய இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் எந்த மூளையிலும் எந்த உயிரினமும் தன்னை இன்னொன்றாய் தகமைத்து கொண்டதாய் ஏதும் காணப்படவில்லை...

இதில் பலர் என்னோடு முரண் படலாம் ஆனால் இது என்னுடைய புரிதல் அவ்வளவே...

புத்தகம் : உயிரினங்களின் தோற்றம்
ஆசிரியர் : சார்லஸ் டார்வின்
பதிப்பகம் : விடியல்
பக்கங்கள் : 138
விலை : 100

Saturday, 17 September 2022

எண்ணங்கள் புத்தக பார்வை

84/100

நான் விஜய்

#NaanVijay

நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்
- விவேகானந்தர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
- திருவள்ளுவர்

சிந்தையிலே உயர்வு கொள்ளுதல் வேண்டும்
- பாரதி

கனவு காணுங்கள்
- அப்துல்கலாம்

உங்கள் சிந்தனையில் பாவம் இல்லாமல் இருக்கட்டும்
Bible

இப்படி உலகின் எந்த பக்கம் திரும்பினாலும் பெரும்பாலான தத்துவ மேதைகள் மதங்கள் இப்படி அனைத்தும் சிந்தனையின் முக்கியத்துவத்தை பேசுகிறது..

சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மேலாளர் இருந்தார், அவர் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்.. நேர்மறையான சிந்தனைகளை குறித்து விளக்குவார்.. அவரின் மீது பெரும் மரியாதை எனக்கு உண்டு, அதன் அடிப்படியில் நானும் அதை செயல்படுத்த முயன்றேன் இன்றும் முயற்றுக்கொண்டே இருக்கிறேன்.. ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பதை நடைமுறை வாழ்வில் புரிந்தும் வைத்திருக்கிறேன்..

ஆங்கிலத்தில் " A Power of Thinking Big" Secret போன்ற பல உலக பிரஸிதி பெற்ற புத்தகங்கள் உண்டு ஆனால் தமிழில் அப்படி ஒரு புத்தகம் யாரும் ஏன் இன்னும் எழுதவில்லை என்று பலமுறை தோன்றி இருக்கிறது..

என் அறியாமையை போக்கியது இந்த புத்தகம் 1970களிலே நம் மண்ணில் பிறந்த ஒருவர் இதைக்குறித்து இவ்வளவு தீர்க்கமாய் ஆராய்ந்து எழுதி இருப்பது வியப்பளிக்கிறது உதயமூர்த்தி அய்யாவை குறித்த செய்திகள் நமக்கு இத்தனை நாள் தெரியவில்லை என்பதே நமக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்று சொல்வதை அண்ணியாமாக மாற்றிவிட்டது.இயக்குனர் கே. பாலசந்தர் தனது உன்னால் முடியும் தம்பி படத்தில் இவரை கவுரவ படுத்தவே தனது நாயகனான கமலுக்கு உதயமூர்த்தி என்று பெயரிட்டிருக்கிறார் போன்ற செய்திகள் அதிசயிக்க வைக்கிறது..

நூலின் அம்சங்கள் ஒன்றே நல்ல சிந்தனை.. சிந்தனை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இயங்கும் அதை விளக்கவும் நியாயப்படுத்தவும் பல சான்றிகளையும், சமகால நிகழ்வுகளையும் புத்தகம் முழுக்க வழங்கி இருக்கிறார்.. சிந்தனையால் என்ன நடக்கும் என்ன சிந்தித்தால் என்ன நடக்கும்... நல்ல சிந்தனை எது, கேட்ட சிந்தனை எது, ஏன் கற்பனை அவசியம், எந்த அளவு கற்பனை இருக்க வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் ஒரு தலைப்பை அணுகி இருப்பாரு..

இன்னும் சொல்லப்போனால் இந்த புத்தகம் முதல் பக்கத்திலே முடிந்து விட்டது, அதன் பின் எழுதப்பட்டவைகள் எல்லாம் அதன் நீட்சிகள் மட்டுமே... ஒரு கருத்தை நம் மனதில் சிந்தனையில் ஏற்றும் ஒரு முயற்சியே இந்தபுத்தகம்.

ஏற்கனவே என்னளவில் secret மற்றும் power of positive thinking, போன்ற புத்தகங்கள் படித்ததினால் இதில் எனக்கு புதிய செய்திகள் என்று எதுவும் இருக்கவில்லை  மாறாக இங்க இருக்கும் சில கார்பொரேட் சாமியார்களின் புகழை கொஞ்சம் அதிகம் பூசியது மட்டுமே ஒவ்வாமையாக இருந்தது.. இதுவரை நீங்கள் மேல் குறிப்பிட்ட எந்த புத்தகங்களையும் படித்ததில்லை என்றால் இந்த புத்தகம் நிச்சயம் சிந்தனைகள் பற்றிய ஒரு புதிய சிந்தனையாக இருக்கும்...

புத்தகம் : எண்ணங்கள்
பக்கங்கள் : 168
ஆசிரியர் : உதயமூர்த்தி
பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் 
விலை : 70

Thursday, 1 September 2022

தாயுமானவள்



ரொம்ப கடுப்பான நாள் இன்னிக்குனுக் கூட சொல்லலாம். மாசக் கடைசி சேல்ஸ் க்ளோசிங் , டார்கெட் , அச்சிவ்மென்ட் , யோசிச்சாலே கடுப்பாகுது.
 சின்னதா வொர்க் நடுவுல ஒரு பிரேக் எடுக்கலாம்னு நாங்க தேடிவந்த இடம் தெருமொனை டீக்கடை. எங்கள மாதிரி சேல்ஸ் ரெப்க்கு எல்லாம் இளைபாருற வேடந்தாங்கல் இந்த டீக்கடைதான். பல நாட்கள் எவ்வளவோ மன வேதனையோட இங்க நின்னு டீ குடிசுருக்கோம். எத்தனையோ முறை பயங்கரச் ஜாலியா இங்க நேரம் கழிச்சிருக்கோம்.
 இன்பம், துக்கம் எல்லாத்துக்கும் சிலபேர் வைன் ஷாப் போவாங்க , ஆனா எனக்கு இந்த டீ கடைப் போதும் எல்லாப் பிரச்சனைகளும் ஒரு டீ குடிச்சு முடிக்கறதுக்குள்ள இன்னும் சொல்லப்போன நான் வேலைக்குப் போகத் தொடங்குன காலத்துல ஒரு டீ குடிச்சுட்டு 1 நாள் முழுக்க வேலை செஞ்சிருக்கேன். மதியம் வெளியே சாப்பாடு வாங்கி சாப்புடக் கூட காசு இல்லாம அலைஞ்ச காலம் அதெல்லாம். ஆனா இன்னைக்கு எல்லாம் மாறிடுச்சி காலம் எல்லாத்தையும் கொண்டுவந்துக் கொடுத்துருக்கு வித் டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்னோட .


தூரத்துல யாரோ தெரிஞ்சப் பொண்ணு மாதிரி இருக்குனு மனசு சொல்லுச்சி , டீ ஒரு கப் அடிச்சுட்டு ஒரு நிமிஷம் யோசிச்சேன். மனசு கண்டுபுடுச்சிடுச்சி , வரவ பேரு கவிப்பிரியா , கவினு கூப்பிடுவோம், என்ன ரிஜெக்ட் பண்ண சில பேருல மேடமும் ஒருத்தி .
 என்னைவிடச் சின்னப் பொண்ணுதான் , என்னமோ அவகிட்டப் பேசணும்னு தோணுச்சி . அதுக்கு முன்னாடி அவ யாரு அவளுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்னு யோசிச்சு பார்த்தா ஒரு சம்பவம்தான் நியாபகம் வருது .

2015 என் பிரன்ட்டோட கல்யாணம் திருச்சில , நான் தான் மாப்ளைய சென்னைல இருந்து கார்ல கூட்டிட்டுப் போறேன் , அவனுக்கு அது காதல் திருமணம்தான். பொண்ணு அவன் சொந்த அத்தை பொண்ணு, சொந்த அத்தை பொன்ன லவ் பண்றதுக்கு பேரு எப்போ காதல்னு மாத்துனாங்கன்னு தெரியல? ஆனாலும் இவன் லவ் பண்ணலேன்னா நிச்சயம் அந்த பொண்ண இவனுக்குக் கட்டிவெச்சுருக்க மாட்டங்க . என் நண்பன் கார் மெக்கானிக் , அந்த பொண்ணு காலேஜ் ஆஸ்.lecturer, MPhil, கருப்பா இருந்தாலும் கலையான முகம், ரெண்டுப்பேரும் செம்ம ஜோடிபொருத்தம். முன்னாடி இவங்க லவ்க்காக சென்னை டூ திருச்சி டிரைவர் வேலை பார்த்ததால , கல்யாணப் பொண்ணு எனக்கு ஏற்கனவே தோழியாயிட்டாங்க, அதனால ரொம்பச் ஜாலியா நல்லாப் பேசி போர் அடிக்காம போய்ச்சு அவன் கல்யாணம். அங்கதான் மொதமொதல்ல கவிய பார்த்தோம். எங்கள விட ஒரு 6 வருஷம் சின்னப் பொண்ணு, ரொம்ப அழக.
 என் தோழியோட ஸ்டூடென்ட், இதைக் கேட்டதும் கொஞ்சம் ஜர்க்க் ஆச்சு. ஆனா வயசு ஒன்னும் நமக்கு அவ்ளோ பெருசில்லையேன்னு மனசத் தேத்திகிட்டேன்.

கல்யாண வேலைல என் நண்பர்கள் கூட்டம் மொத்தமும் அந்தப் புள்ளை மேலதான் இருந்திருக்குனு ரூம்க்கு வந்து பேசும் போது தெரிஞ்சுகிட்டேன். பின்ன இருக்காத , அந்தப் இத்துப்போன கல்யாண மண்டபத்துல, பசில இருக்குறவனுக்கு பீப் பிரியாணி கெடைச்சா மாதிரி அப்படி ஒரு பொண்ணு, ஊரே அவளைத்தான் பாத்துருக்கும்.
 நான் பார்த்ததுல ஒன்னும் தப்பு இல்லையே, அப்புறம் ரெண்டுநாள் அந்தப் பொண்ணுகிட்ட வாய்ப்பு கெடைக்கும் போதெல்லாம் கடலை போட்டு, ஊருக்கு போறதுக்குள்ள அவ நம்பர் வாங்கியாச்சு . ஆனா என்ன பேசுறதுனு தெரியல? அதனால அப்புடியே வெச்சுட்டு விட்டுட்டேன், கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் மறந்தும் போச்சு.

அதுக்கு அப்புறம் ஒருநாள் அவன் கல்யாண ஆல்பம் வந்துடுச்சின்னு பாத்துகிட்டு இருந்தோம். அப்போ மறுபடியும் அவ நியாபகம், அவ போட்டவையே திருப்பித் திருப்பி பார்த்துட்டு இருந்தத தோழி கவனிச்சுட்டா, அப்புறம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் விஜய்னு ஒரு மெசேஜ் தோழிகிட்ட இருந்து சரி இதுக்குத்தான் திட்டபோறானு கால் பண்ணா, போன் எடுத்ததும், உனக்கு அவள புடிச்சுருக்கானு முதல் கேள்வி, நான் என்ன சொல்றதுன்னு யோசிச்சு ஒரு மாதிரி மழுபுறத்துக்குள்ள, மறுபடியும் அதே கேள்வியோட எனக்கு நேரடியா பதில் சொல்லுனு சொல்ல, நானு நல்லாத்தான் இருக்கா, புடிச்சுருக்கு பட் நீ நினைக்கிற மாதிரியில்லனு சொன்னேன். உடனே அவ கேட்ட அடுத்த கேள்வி என்ன ஒரு நிமிஷம் தல சுத்த வெச்சுடுச்சி, அவளை நீ கல்யாணம் பண்ணிபியானு கேட்டா, எனக்கு ஒன்னும் புரியல, அப்புறம் அவ அவல பத்தி சில விஷயங்கள சொன்னா.

கவிப்ரியா ஒரு சின்ன கிராமத்துல பொறந்தப் பொண்ணு ரொம்ப திறமைசாலி , ஆனா அவளுக்கு ஒரு சின்ன ப்ராப்ளம், அவளுக்கு உடேரஸ் இல்லை, புரியுறா மாதிரி சொல்லனும்னா அவளுக்கு எப்பவும் பீரியட்ஸ் ஆகாது, அதாவது அவளால எப்பவும் அம்மா ஆகா முடியாது, எல்லாரையும் போல அவளும் ஒரு சாதாரணப் பெண்தான் ஆனா அவளுக்கு பிறக்கும் போதே இந்த மாதிரி ஒரு சின்னக் குறை . இதனால அந்த பொண்ண எப்படி கட்டிக்கொடுகறதுன்னு அவ அம்மா அப்பா என் தோழிகிட்ட பொலம்பி இருகாங்க, என் தோழிகிட்ட என் நண்பனும் என்னப் பத்தி ரொம்ப நல்லவன், முற்போக்கு சிந்தனையாளன்னு ஏத்தி விட , அவ கடைசியா கவிய கட்டிகுறியானு என்கிட்டே வந்து இப்போ நிக்குறா.
 ஒரு நிமிஷம் கூட யோசிக்கல சரின்னு சொல்லிட்டேன், அவளை கட்டிகிட்டா நான் ரெண்டு கொழந்தையை தத்தெடுக்கலாம், இதுதான் என் மைண்ட்ல மொதல்ல ஓடிச்சு , நான் பேசுன நெறைய பொண்ணுங்க சொன்ன ஒரே வார்த்தை , எந்த பொண்ணும் தனக்கு கொழந்தை பொறக்குறத தடுத்துட்டு இன்னொரு கொழந்தைக்கு அம்மா ஆகமாடானு , ஆனா இவ ஆவா , அவளோட ஒரே பிரச்சனை அம்மா ஆக முடியாதுங்குறதுதான் .
 என்னால அவள அம்மா ஆக்கி அழகு பார்க்க முடியும்னு தோணுச்சு.

ஆனா இந்த விஷயம் கேட்டு என் தோழிய என் நண்பன் வருத்தெடுத்துட்டான். 
 எனக்குப் போன் பண்ணி அவதான் சொல்றான உனக்கு அறிவில்லையா , அம்மாக்கு நான் என்னடா பதில் சொல்லுவன்னு செம்ம கத்து , அப்புறம் அவன ஒரு மாதிரி பேசி சம்மதிக்க வெச்சுட்டேன், கடைசியா இபோ அந்த பொண்ணுகூட பேச ஏற்பாடு பண்ணி இருந்தாங்க.
அவகிட்ட நடுவுல கொஞ்சம் மெசேஜ்ல பேசி இருந்தாலும் நேர்ல பேசப்போறது இதுதான் முதல் தடவை. சோ கொஞ்சம் பதட்டமா இருந்தாலும் தையிறியத்த வரவெச்சுகிட்டு போய் பேசுனேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, மன்னிசுக்கங்க நான் உங்கள அப்படி பாக்கள , நான் இன்னொருத்தர லவ் பண்றேன்னு சொல்லிட்டு போய்ட்டா. சரியான பல்பு எனக்கு, பெரிய புரட்சியாளர் அளவுக்கு தோழியும் நண்பனும் கொடுத்த பில்ட்அப் எல்லாம் வேஸ்டா போச்சி. அப்புறம் தோழிகிட்ட விஷயத்த சொல்லிட்டு என் வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் மீட்டிங் நடுவுல ஒரு கால் அவதான், சரி மீட்டிங் முடிச்சுட்டு பேசுவோம்னு கட் பண்ணிட்டேன் , அப்புறம் ஒரு மெசேஜ் நான் சென்னை வந்துருக்கேன் உங்களை பாக்கனும்னு, என்னோட மீட்டிங் நடந்த இடம் கோயம்பேடு பக்கத்துல தான் அதனால , பஸ் ஸ்டான்ட் எதிர்ல இருந்த சங்கீதா ஹோட்டல்ல மீட் பண்ணோம். அன்னைக்கு நடந்ததப் பத்தி சொன்னா. அப்புறம் என் தோழி தான் என்ன அவள பாக்கச் சொல்லி ப்ரொபோஸ் பண்ண சொன்னானு சொல்லி இருக்கா. நான் உங்கள தப்பா நெனச்சுட்டேன்னு சாரி சொன்னா. அப்புறம் அவ யாரையும் லவ்வெல்லாம் பண்ணலைன்னு சொன்னா, கூடவே அதுக்காக உங்கள கல்யாணம் பண்ணிக்கவும் முடியாதுனும் சொன்னா. எனக்கு ஒன்னும் புரியல இத போன்ல சொல்லி இருக்கலாமே இதைச் சொல்ல எதுக்கு இவ்ளோ தூரம்னு கேட்டன்.

இவளுக்கு இப்படி ஒரு ப்ராப்ளம் இருக்குனு தெரிஞ்சதும் நிறைய பேர் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்காங்க . சின்ன வயசுல இருந்தே நெறைய பேரு அவள தப்பா நடத்தி இருகாங்க, இதுல நெருங்குன சொந்தகாரங்க கூட இருக்கானுங்க. இதனாலையே அவளுக்கு ஆண்கள் மேல ஒரு வித வெறுப்பு, லவ் பண்டரங்ற பேர்ல நெறைய பசங்க இதே மாதிரி அவள தொல்லை பண்ணி இருக்கானுங்க .
 என்னையும் அந்த கும்பல்ல ஒண்ணுனு நெனச்சி இருக்கா, அதான் அப்படி பொய் சொல்லி இருக்கா. அப்புறம் என் தோழி என்னபத்தி சொன்னத வெச்சு இன்னைக்கு இதெல்லாம் சொல்லி நேர்ல மன்னிப்பு கேக்கக் வந்துருக்கா.அதான் என்னப் பத்தி புரிஞ்சுடுசே இப்பவும் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாற்றனு கேட்டேன், அதுக்கு அவ சொன்னா, இந்த கல்யாணத்துல லவ் இல்ல, என் மேல உங்களுக்கு இருக்குறது வெறும் இரக்கம் தான், அந்த இரக்கத்தை வெச்சு கல்யாணம் பண்ணிகிட்டா காலம் முழுக்க உங்களுக்கு ஒரு தியாகம் பண்ண ஃபில் கிடைக்கும். எனக்கு நீங்க பெரிய வாழ்க்கை கொடுதிங்கனு ஒரு உணர்வு இருக்கும். ஆனா காதல் இருக்காது, எனக்கு கல்யாணமே ஆகலேன்னா கூடப் பரவல்லா, ஆனா உங்க இயக்கத்தைக் காட்டி எனக்கு கல்யாணப் பிச்சை போடதிங்க , நான் காலம் முழுக்க இப்படியே இருந்துகுறேன். தப்பா நினைக்காதிங்க நீங்க நல்லவருதான் , இத்தனை நாள்ல ஒரு நாள் கூட நீங்க எனக்கு அனுப்புன மெசேஜ்ல எந்த தப்பான எண்ணமும் நான் பாக்கள அதோட அதுல எந்த லவ்வும் இல்ல. நீங்க நல்லவரா இருக்குறது மட்டும் என் வாழ்க்கைக்கு போதுமானது இல்ல, அதுல கொஞ்சம் காதலும் வேணும். சாரி எதாவது தப்பா பேசி இருந்தேன்னா.
 எல்லாத்தையும் சரியா பேசிட்டு போய்ட்டா , அதுக்கு அப்புறம் வாழ்க்கை வேற திசையில் கூட்டிட்டுப் போய்டுச்சி ரெண்டுப்பேரையும் இன்னைக்குத்தான் பாக்குறேன் அதுக்கு அப்புறம் அவள, அந்த தேவதைய .

அவளும் தூரத்துல பார்த்ததும் கண்டுபுடிச்சுட்டா. நேரா வந்து நலம் விசாரிச்சுப் பேச ஆரம்பிச்சா, அவ கழுத்துல தாலி இருந்தது.கல்யாணம் ஆகிடுச்சானு கேட்டேன். ஆமானு சொன்னா, யாரோ ஒரு கவேர்மென்ட் வேலை பாக்குற ஆளுக்கு ரெண்டாம் தாரமா கட்டிகொடுதுருக்காங்க.
 ரெண்டுபேருக்கும் கிட்டத்தட்டப் 15 வருஷ வித்தியாசம் வயசுல, அவர் முதல் மனைவிக்கு ஒரு 5 வயசுல பையன் இருக்கான். அவங்க இறந்து போனதால 2 வருஷம் கழிச்சு இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க.
 உள்ளுக்குள்ள சிரிக்கிறதா, திட்றதா யோசிச்சுகிட்டு இருந்தேன் அதே அவளை புரிஞ்சுக்கிட்டு பேச ஆரம்பிச்சா, நீங்க என்ன யோசிகிறிங்கனு தெரியுது, அவ்வளவ்வு வக்கனையா பேசிட்டு நீ கடைசியா இதா பண்ணியான்னு யோசிக்கிறிங்க, தப்பில்ல நியாயம் தான்னு ஆரம்பிச்சா.

இந்த உலகத்துல 2 வகையான பொண்ணுங்க தான், எந்த குறையும் இல்லாம பொறந்தாலும், தன்னை ஸ்பெஷல்னு காட்டிக்க , இல்ல தனித்துவமா வாழ ஆசைபடுற பொண்ணுங்க. இன்னொன்னு என்ன மாதிரி குறையோடு பொறந்ததும், எல்லோர மாதிரி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப் படுற பொண்ணுங்க. ஆனா எங்களுக்கு இது ரெண்டுமே எப்பவும் அமையாது. எங்களால ஸ்பெஷலா இருக்க முடியாது . என்ன மாதிரிப் பொண்ணுங்க சாதாரண வாழ்க்கைய வாழ்வும் முடியாது, எங்கப் போனாலும் அவளால அம்மா ஆகா முடியாதுன்னு ஒதுக்கியே வெச்சாங்க, பொண்ணா பொறந்தா அம்மா ஆகியே ஆகணுமா என்ன?
 நாங்க மட்டும் ஏன் மலடி , ஆண்களுக்கு இப்படி பிரச்சனை இருந்ததே இல்லையா? உங்கள இந்த சமுகம் ஒதுகுறதே இல்லையே? ஒன்னு கருணையைத் தூக்கிட்டு வர்றிங்க, இல்ல காமத்தோட வரிங்க, நான் ஆசைப்பட்டதெல்லாம் கொஞ்சோண்டு காதல் ஆனா கடைசி வரைக்கும் கிடைக்கல.

இந்த உலகம் என்ன துரத்திகிட்டே இருக்கு , அம்மா ஆகா முடியாதவன்னு , அப்போதான் இவரு வந்தாரு, என் கொழந்தைக்கு அம்மாவ இருக்க முடியுமான்னு கேட்டு, என்னைவிட பெரியவர்தான். அந்த குடும்பம் என்னக் கொடுமைதான் படுத்துது. இவரு டெய்லி சந்தேக பட்டு அசிங்க படுத்திகிட்டுதான் இருகாரு, எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்குறேன். கடைசியா என் பையன் ஓடிவந்து அழாதமான்னு சொல்லுவான்னு, அவனை பொருத்தவரைக்கும் நான்தான் அவனோட அம்மா, இந்த உலகத்துல எவன் எத்துகிட்டாலும் எத்துக்கமா போனாலும், இப்போ நானும் அம்மா, எனக்கும் ஒரு பையன் இருக்கான். நாளைக்கு அவனுக்கு ஒரு நல்லதுன்னா, அவனுக்கு அம்மாவா நான்தான் போய் நிப்பேன். எனக்கு இது போதும். இப்போதைக்கு எனக்கு தேவையான சாதாரண வாழ்க்கை இதுதான். இப்படி அவ பேசி முடிச்சதும் என் உடம்பெல்லாம் புல்லரிச்சு போயிடுச்சி. பெண்ணாய் பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும், சரியாதான் சொன்னான் பாரதி.

அவளும் தாண்டி போயிட்டா, டீ முடிஞ்சுடுச்சி, இனி மறுபடியும் என்னோட இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியதுதான்.

-நான் விஜய்-      

Tuesday, 30 August 2022

கழிவறை இருக்கை புத்தக பகுப்பாய்வு

83/100

#NaanVijay

நான் விஜய்

#பெண்ணியம்

ஒரு புத்தகம் நாம் கையில் எடுத்து முடிக்கும் போது மனதில் பட்ட எதையும் பகுத்தாய்ந்து பதிவிடுவது வழக்கம், ஆனால் இந்த புத்தகம் சுய பகுத்தாய்வு செய்ய என்ன தூண்டிவிட்டது, திருமணம் ஆகி இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத எனக்கு இந்த புத்தகம் நிறைய பதில்களை பரிசளித்திருக்கிறது, என் எண்ண ஓட்டங்களை சீர் செய்ய ஒரு கருவியாய் இந்த புத்தகத்தை நான் எடுத்துக்கொண்டேன்.

கலவி என்பது கொடுத்து எடுத்துகொள்வதல்ல, இருவர் பங்கிட்டு கொள்வது, ஆனால் அந்த பங்கிடு நியாயமாய் நடக்கிறதா என்றால் நிச்சயம் பதில் இல்லை என்பது தான், கலவி அத்தனை முக்கியாம என்றால் ஆம் நிச்சயம் முக்கியமே, காரணம் அடுத்த தலைமுறையின் வரவு என்பதை விட, இன்றைய நாளை மனதார அனுபவித்து வாழ அதுவும் அத்தியாவசியமே.

உணவு இருப்பிடம் போல கலவியும் மனித வாழ்வில் இன்றியமையாதது, ஒரு சிறந்த திருமண வாழ்வில் இருக்கும் பல காரணங்களில் இதுவும் ஒன்று. ஒருவருக்கொருவர் புரிதல் என்பது படுக்கையிலும் இருத்தல் அவசியம் என்பதை உணர்த்துகிறது இந்த புத்தகம்,

ஒரு பெண் கலவியில் என்ன இழக்கிறாள் என்பதை இந்த புத்தகம் ஒரு கண்ணாடி பாகையாய் காட்டுகிறது, ஆணின் அறிவிலித்தனத்தால் ஒரு பெண் அனுபவிக்க அல்லது அடைய வேண்டிய அடிப்படை இன்பத்தைக்கூட வாழ்நாள் முழுவதும் ஒரு வெற்று புன்னகையோடு கடந்து விடுகிறாள் என்பது கொடூரமே.

எல்லா வகையிலும் பாலின உரிமை கோரும் பெண்கள், இந்த இடத்தில் அதை வெளிப்படையாய் பேச விடமால் அவர்களை ஊமையாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகம். அவர்களுக்காக பேச வேண்டும் என்பதை விட, மனதார காதல் கொண்டு அவர்கள் அடையவேண்டிய இன்பத்தை அவர்களுக்கு கொடுப்பது ஒவ்வொரு ஆணின் அடிப்படை கடமை, அது ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை உரிமை.

பெண்களை கொண்டாடும் தேசம் என்று ஊருமுழுக்க வெற்று கூச்சல் போடுவதை நிறுத்திவிட்டு அடிப்படையில் இருந்து மாற்றி அமைப்பது இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.

இந்த புத்தகம் வெறும் கலவியோடு நின்றுவிடுகிறதா என்றால், அதுதான் இல்லை, கலவியை அடிப்படையாய் கொண்டு இங்கு நடக்கும் வாப்புணர்வுகளுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது, அதற்கான காரணத்தை வேரில் இருந்து தேடி விடையளிக்கிறது, ஒரு சரியான கலவி ஒழுக்கம் இல்லாத்தால் தான் இந்த கொடூரங்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் ஆகிறது. சிறுகுழந்தைகள் வரை இந்த வெறிச்செயல் அத்துமீறி போகின்றது.

வெளிமண உறவுகளை பற்றிய என்பார்வையை இந்த புத்தகம் மீளாய்விற்கு உட்படுத்தி இருக்கிறது, காதல் ஒருவரிடம் தான் தோன்றவேண்டுமா அது அப்படித்தான் செயல் படவேண்டுமா போன்ற என் பல கேள்விகளுக்க்கு வெளிப்படையாய் பதில் அளித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அதன் அழகையும் இந்த புத்தகம் மிக அழகாய் பேசுகிறது.

அதோடு குழந்தை வளர்ப்பை பற்றியும், அது சார்ந்த உளவியல் பக்கங்களும் என்னைப்போல அப்பாவாக காத்திருக்கும் பெற்றோர்களுக்கும் மிக அத்தியாவசியமான பக்கங்கள்.

மொத்தத்தில் பெண்களையும், கலவியையும் அறிந்துகொள்ள சென்று, நான் என்னை பற்றிய புரிதலை வளர்த்து கொண்டேன், இதற்கு ஆசிரியற்கு பேரன்புகளும் நன்றிகளும்.

புத்தகம் : கழிவறை இருக்கை
ஆசிரியர் : Latha
பக்கங்கள் : 224
விலை : 225
பதிப்பகம் : Knowrap imprints

Friday, 19 August 2022

கானல் ❤

அம்மா அப்பா, தங்கை, ஒரு மூத்தப்பையன் .. ஒரு எதார்த்த தமிழ் சினிமால வரா மாதிரி ஒரு அழகான சின்னக் குடும்பம் எங்களோடது.
  வாழ்க்கையில் இலட்சியங்கள் எல்லாம் பெருசு பெருசா இருக்கு , அதோட ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதி வேலை .. நல்ல சம்பளம் . பெருசா குடும்பத்துல கடனெல்லாம் இல்லை , போன வருஷம் பிசினஸ் பண்ணபோறேனு நான் உருவாக்குன கொஞ்ச கடனையும் நான் இந்த வேலைக்கு வந்ததும் அப்பாவும் அம்மாவும் பிளான் பண்ணி கட்டிக்கிட்டு இருகாங்க , அதனால கையுளையும் செலவுக்குன்னு கொஞ்சம் காசு தாராளம நிக்கிது . இதாங்க நான்.
 இந்த கதை என்னோடது நான் விஜய் .

டெய்லி காலைல 7.30 என் மேனேஜர் கால் பண்ணி அன்னைக்கு என்னோட வொர்க் பிளான் என்னனு சொல்றதுல இருந்து ஆரம்பிக்குது என்னோட நாள். இன்னைக்கும் அப்புடித்தான் . நாள் நல்லபடியா தொடங்கியாச்சு இன்னைக்கு நான் வேலைக்கு போகப் போற ஏரியா நம்மாழ்வார் பேட்டை, சென்னைதான் ஐயனாவரம் சிக்னல் முன்னாடி இருக்கு இந்த ஏரியா ... இது ஒரு கலப்பு புள்ளை மாதிரி ... அண்ணா நகர் கூடையும் சேர முடியாம சௌவ்கார்பெட்டோட ஓட்டிக்க முடியாம , வியாசர்பாடி கூட சொந்தம் கொண்டாட முடியாதா ஒரு பாவப்பட்ட சென்னையின் கவனிக்கப் படதாபுள்ளை. அங்கதான் இன்னைக்கு நான் டாக்டர்ஸ பாக்க போகணும் . 

மெடிக்கல் ரெப் இந்த வேலை ஒரு ஆப்ஷன் எனக்கு படிக்கும் போது , ஆனா ஊர் சுத்த ரொம்ப புடிக்கும் அதனால கண்ணமூடிகிட்டு ஓகே பண்ணிட்டேன், இது என்னோட 7வது வருஷம் இந்த வேலைல . நெறைய பிராப்ளம்ஸ் , எவ்வளவோ டென்ஷன், ஆனா எல்லாத்தையும் தாண்டி இந்த வேலைதான் எனக்கு எல்லா சந்தோசமும் , பீல்ட்ல இருக்க இந்த நேரங்கள்தான் நான் இன்னும் இந்த வாழ்க்கைய ரசிச்சு வாழுறத்துக்கு காரணம், ஒரு வேலைய ரசிச்சு செய்ய ஆரம்பிச்சுட்டா அதே வேலைல இருக்க உங்க ஜூனியர்ஸ் நீங்கதா ஹீரோ , என் ஏரியால நானும் கிட்டத்தட்ட அப்புடித்தான் , என்ன சுத்தி எப்பவும் கொஞ்சம் தம்பிங்க இருந்துகிட்டே இருப்பாங்க , நாம இல்லாத போதும் நம்மள பத்தி என்ன வேலைல பேச வைக்கணும் அப்படி இருக்கனும் நம்ம வேலை , அப்புடித்தான் இருந்தேன் நானும், ஆனா இந்த கதைக்கெல்லாம் இது தேவையில்லாத டீடைல் , அதனால வாங்க கதைக்குள்ள போவோம் .

அன்னைக்கு வேலைக்குப் போயாச்சு, அங்க ஒரு ஜெயின் டிரஸ்ட் ஹாஸ்பிட்டல் இருக்கு, எப்பவும் நம்ம தம்பிங்க அண்ணே அது வேலைக்கு ஆகதுனே ரொம்ப ஆபர் கேப்பானுங்க நமக்கு செட் ஆகாதுன்னு சொல்லுவானுங்க , ஆனாலும் உள்ள ஒரு நாள் போய் பார்த்துடணும்னு முடிவு பண்ணி இருந்த அந்த நாள் இன்னைக்கு தான் , அது ஒரு 3 ப்ளோர் பில்டிங் , கீழ பார்கிங் , ரிசப்சன் இருக்கும், மொத மாடியில OP 2வது, 3வது மாடியில லேப் டென்டல் டாக்டர் இருபாங்க , மொத மாடிதான் நம்ம ஏரியானு முடிவுப் பண்ணி மேல ஏறலாம்னு போனா , அங்க ஒன்னு நின்னுகிட்டு ஹிந்தில என்னமோ சொல்லுச்சி ஒன்னும் புரியல , அப்புறம் பக்கத்துல இருந்த வாட்ச்மேன் அண்ணன் சொன்னாரு சூ இங்கயே கழட்டிட்டு போக சொல்றாங்க தம்பின்னு ... சரின்னு கழட்டிட்டு மேல போன.

ஒருத்தர் நல்லா இளிச்ச வாயா வந்து உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டாரு, நானும் மெடிக்கல் ரெப் கடைமைய செய்ய விடுங்கனு சொன்னதும், காத்திருக்க சொல்லிட்டு போனாரு , அப்புறம் வந்து மெயின் டாக்டர் இன்னைக்கு பாக்கலைன்னு சொல்லிட்டார், வேற யாராவது இருகாங்கலன்னு கேட்டதுக்கு பக்கத்துல ஒரு ரூம் காட்டி டியூட்டி டாக்டர் இருகாங்க தம்பி பாகுறிங்கலானு கேட்டாரு, சரி வந்ததுக்கு அங்க ஒரு அட்டனன்ஸ போட்டுட்டு போவோம்னு சரின்னு சொன்னேன், அவரும் உள்ள போய் அனுமதி வாங்கிட்டு வந்து உள்ள போகச் சொன்னாரு .

கதவ தொறந்து உள்ள போனா ஒரு நிமிஷம் அப்புடியே ஷாக். என் வயசுல ஒரு புள்ளை , சரியான இலக்கணத்துல எழுதுன கவிதை மாதிரி ஒன்னும் புரியாம முழுசிகிட்டு இருந்துது, எஸ் அப்புடின்னு ஒரு குரல் சர்ருனு வேலை ஆரம்பிச்சாச்சு விசுவல் எய்ட் எடுத்து மொத்தமும் டீடைல் பண்ணிட்டு , ரூம் விட்டு போக மனசு இல்லாம என்னென்னோமோ பேச ஆரம்பிச்சேன் , டாக்டர் நீங்க நிமுசுளைட் உஸ் பன்னுவிங்கலானு கேக்க , அது பான் பண்ணிட்டாங்களே சார் சொல்லுச்சி, பேசி முடிகறவரைக்குமாவது வெச்சுருக்கலாம் எதுக்கு இப்புடி அவசரபட்டனுங்கனு மனசுக்குள்ளையே கேட்டுகிட்டேன், அப்புறம் பேரு கேட்டேன், மொத்தல்ல கேக்க வேண்டிய கேள்வி , சொன்னாளே சுவாதி, சரிதான் ரூம்குள்ள வந்தததுல இருந்து மொத்த சுவாசமும் நின்னுடுச்சி, சரியாதான் வச்சிருக்கானுங்க பேர, அடுத்து திருப்பியும் வேற எங்கையாவது ப்ராக்டிஸ் பண்றிங்கலானு கேக்க , இல்லைங்க ஹவுஸ் சர்ஜன் அப்புடின்னு சொன்னா, அதுக்குள்ள இருமிக்கிட்டே ஒரு பெருசு உள்ள வர , மனசே இல்லாம வெளிய வந்தேன். 

அன்னைக்கு முடிவு பண்ணினேன் இனிமே வாரத்துல ஒருநாள் இந்த ஏரியாலதான் வேலைன்னு , அவல பாக்கத்தான் இந்த கம்பெனி நமக்கு சம்பளம் கொடுக்குதுன்னு நானே உறுதிப்படுத்திகிட்டேன், அன்னைக்கு முழுக்க எதோ ஒரு சிலு சிலுப்பு மனசுக்குள்ள , இனம் புரியாத சந்தோசம் , அந்த நொடி அப்புடியே நின்னுடுச்சி மனசுல , ஒரு அளவுக்கு மேல வேலை செய்ய மனசு போகல சரி சாயங்காலம் வந்து பாத்துக்கலாம்னு வீட்டுக்கு கெளம்புனேன், அதே பக்கம் அந்த ஹாஸ்பிட்டல பாத்துகிட்டே போனேன் , மறுபடியும் அவ முகம் கண்ணுல மின்னுச்சி , தூரத்துல பஸ் ஸ்டாண்ட்ல பாக்குற பொண்ணுகூட அவல மாதிரியே இருந்தது, ஒரு நிமிடம் இருங்க, அதே பொண்ணுதாங்க பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறா, இருங்க பேசிட்டு வந்துடுறேன் .

ஆனா என்னமோ தடுக்குது , அவ டாக்டர் நான் ரெப் , அவ செம்ம கலர் , நாம கருப்புக்கு கொஞ்சம் மேல, நம்மள அவ பாக்குறதே பெருசு , சரி சும்மா பேசி வைப்போம்னு தோணுது. முயற்சி பண்ணிடுவோம். சுடிதார் போட்ட பாபி டால் மாதிரி இருக்கா , என்னனு ஆரம்பிகுறது, பாத்தாலே பதறுது, ரொம்ப உளருவோம் போலையே .சரி பாப்போம் , பக்கத்துல நின்னா , கொஞ்சமா சிரிச்சா , என்ன இங்க நிக்குறிங்க கேட்டேன் , பஸ் சொல்லிட்டு ஒரு மாதிரி கேவலமா பார்த்தா , நியாயமான பார்வை தான் , உளறாதடா டே அப்புடின்னு எனக்கு நானே கிளாஸ் எடுத்துட்டு அவல பார்த்தேன், கார் இல்லையா எதாவது ரிப்பேரா கேட்டேன், ஏனா மொக்கை டாக்டர் கூட சென்னைல அட்லீஸ்ட் மாருதி 800 ஆச்சும் வெச்சுருப்பாங்க. என் தேவதை இங்க பஸ்சுக்கு நிக்கிறதா ஒஹ் மை காட் , கார்ல இல்லைங்க, டெய்லி பஸ்ல தான் போவேன்னு சொன்னா. அவ்ளோ சிம்பிளா நீங்க சூப்பர் அப்புடி சொன்னதும் திருப்பி ஒரு ஏளன சிரிப்பு, நீ எவ்வளவு கேவலமா சிரிச்சாலும் இன்னைக்கு எனக்கு சொரனையே வராதுனு மனசுக்குள்ளையே சொல்லிகிட்டேன், அப்புறம் சொன்னா , அவளும் ரொம்ப கஷ்டபடுற பேமிலிதானாம் , மெரிட்ல மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல படிச்சுட்டு இப்போ ஹவுஸ் சர்ஜென்டா இருக்கா, வேற லெவல்மா நீயுன்னு மனசுக்குள்ள நெனச்சிகிட்டு , அவகதையும் கேட்டதும் ஒரு தைரியம் வந்து அவகிட்ட சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன் , அதோ அவளோட பஸ் வருது , அவளும் ஏறுறா அவசரத்துல இருக்கா , இப்போவே சொல்லவேண்டியதுதான் , அப்போதான் நாளைக்கு பொறுமையா அவ ரூம்ல போய் பதில் தெரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணி பஸ் கிட்ட வரும் போது அவல பாத்து சொன்னேன், உன்ன புடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன், நாளைக்கு என் சம்பெர்ல பதில் சொல்லு , சொல்லிக்கிட்டு இருக்கும் போதே ஒரு வெத்து பார்வை பார்த்து போய்ட்டா.

செஞ்சது தப்பா சரியான்னு தெரியல ஆனா சொல்லணும் தோணுச்சி , சொல்லியாச்சி , என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன், அவ பார்வைல அது சரியா? புடிக்கலையா? ஒன்னும் புரியல, என்ன சொல்லுவான்னு மனசு ஒரு மாதிரி இருந்தது. போய்டலாம் காலைல பதில் தெரிஞ்சிக்கலாம்னு முடிவு பண்ணி தூங்க போயிட்டேன், இல்லைன்னு சொல்லி எதாவது பிரச்சனை ஆகிடுசினா? , பாத்துக்கலாம் இவளுக்காக இதைக் கூட பண்ணலேன்னா எப்படி, காலைல விடுஞ்சுது, வேகமா கெளம்பி அவ 10மணிக்கு வருவான்னு நானும் போயிட்டேன் .

அதே ஆள் வந்தான் ஸ்வாதி பாக்கணும் சொன்னேன் , அவங்க வரமாட்டாங்கனு சொன்னான் , லீவ் கேட்டா? இல்லை இனிமே வரவே மாட்டங்கனு சொன்னான், ஒன்னும் புரியல திருப்பி கேட்டேன் , எதாவது பிரச்சனை ஆச்சான்னு , அதுக்கு அவன் அப்படிலாம் ஒன்னும் இல்லை ,அந்த புள்ளைக்கு நேத்துதான் லாஸ்ட் நாள் டியூட்டி , அந்த புள்ள ஊரோட போய்டுச்சினு சொன்னான் , ஒரு நிமிஷம் அப்புடியே அமைதியா உக்காந்துகிட்டு இருந்தேன், அப்புறம் மனசுக்குள்ள என்னமோ ஒரு சந்தோசம். இனிமே அவளால என்ன வேண்டாம்னு சொல்ல முடியாதுல, மனசாட்சி காரிதுப்புச்சி, நீ வேணும்னு கூட அவளால இனிமே சொல்ல முடியாதுன்னு. இருந்துட்டு போட்டும், இல்லைன்னு அவ சொல்றத விட , இருந்துருந்தா என்ன லவ் பண்ணி இருப்பானு நான் நம்பிகிட்டு போறேனே, எவ்ளோ நாளைக்குனு தெரியல, ஆனா இந்த ஒரு நாள் காதல் கொஞ்சம் அழகாதான் இருக்கு, அப்புடியே இருந்துட்டு போட்டுமே, என்னோட கதைல ஒரு குட்டி கவிதை வரியா.. படிக்கிற நீங்க சொல்லுங்க சரிதானே, எல்லா காதலுக்கும் பதில் கெடைக்கனுமா என்ன? இது கேள்வியோடையே முடியட்டுமே.

நான் விஜய்    

Wednesday, 13 July 2022

இசையின் முகவரி பறை

79/100

#NaanVijay

நான் விஜய்

புத்தர் கலைக் குழு - buddhar kalaikuzhu

சில வருடங்களுக்கு முன்பு Manimaran Magizhini அண்ணாவிடம் தொலைபேசியில் பேசிய அனுபவம் உண்டு, தொடர்ந்து அவருடைய புத்தர் கலை குழுவின் செயல்பாட்டை முகநூலில் தொடர்ந்து கவனித்து கொண்டு வந்திருகிறேன், அந்த இணைப்பு தான் இந்த புத்தகத்தை கையில் எடுக்க முதலில் உந்தியது, சமீப காலமாக சாதியம் சார்ந்த புத்தகங்கள் மிகை படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன், அந்த வரிசையிலையே இந்த புத்தகத்தையும் துறந்தேன், பல புதிய தகவல்களை, ஒரு கலையை பற்றிய அடிப்படை புரிதலை இந்த புத்தகம் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது.

இந்த புத்தகம் மணிமாறன் அண்ணாவின் பயணத்தில் தொடங்கி பறை இசை ஏன் இசைக்க வேண்டும், எங்கு இசைக்க கூடாது, அதன் காரணம் என்ன?, பறைக்கு பின் இருக்கும் சமூக கோவம், சாதியம் என அனைத்தையும் ஒரு எளிய முறை புரிதலுக்கு ஏற்படுத்தி இருப்பது மிக பெரிய எழுத்து வலிமை..

தொடக்கத்தில் வெறும் 6 வகுப்பு பயின்றவனின் எழுத்து என்று அண்ணன் தொடங்கி இருந்தாலும், தொடர்ந்து படிக்கும் போது, ஒரு இடத்தில் கூட அப்படி ஒரு எண்ணம் ஏற்படவே இல்லை, ஒரு தேர்ந்த எழுத்தாளனின் எழுத்தாக முத்திரை பதிக்கிறார், அவரது வாழ்வியலை அவர் எளிமையாக எழுதி கடந்து விட்டாலும், அடுத்த பக்கங்களை கடந்து போகும் போது அந்த பயணத்தின் வரிகளை நமக்கு புரிய வைத்துவிடுகிறார்..

ரெட்டியூர் பாண்டியன் வரலாறு என்பது பறை ஒலியில் கேட்கும் பறை எதிர்ப்பு போராட்டமாகவே கேட்கிறது, இந்த புத்தகத்திற்கு முன்பு இப்படி ஒரு நபரை நான் அறிந்ததில்லை என்பதே நான் வெட்கி கொள்ளும் உண்மை, ஒரு இழி வேலையை எதிர்த்து போராடிய ஒரு மனிதனை இந்த அரசாங்கம் வஞ்சம் வைத்து கொள்ளும் என்னும் கொடூரமும், இசைக்கும் ஒவ்வொரு பறையின் பின்னால் இருக்கும் சாதிய அடக்கு முறையின் கொரமாக உரக்க ஒலிக்கிறது.. பாண்டியனின் கொலை அந்த ஊரில் பறை இசை நிறுத்திவிட்டது வேதனை அளித்தாலும், அதன் பின் இருக்கும் நியாயம் அந்த இசையை விட உயர்ந்ததாக படுகிறது

மரண வீடுகளில் பறை இசைப்பதை அண்ணன் எதிர்ப்பதற்கு பின்னாளான நியாயங்கள் நேர்மையானது, இன்றைய சூழலில் பல நிகழ்ச்சிகளில் பறை இசை ஒலிப்பது அந்த நேர்மையின் தீக்சமாய் கேட்கிறது. கொண்டாட்டத்திற்கான இசையாய் இன்று பறை மாறி இருப்பது இவர்கள் போன்றோரின் ஆக சிறந்த முன்னெடுப்பாளையே சாத்தியம் ஆகிறது.

திரையில் பறை இசை இன்று ஒலிக்க துவங்கி இருப்பது இந்த புத்தகம் புகழுந்தாலும், சினிமா பறை மீது மரணத்திற்கான இசை என்று அங்கீகாரம் இடுவதையும் அந்த அப்பத்தத்தையும் மறைக்கவில்லை என்பது ஒரு எழுத்தாளனின் உண்மையை புடமிட்டு காட்டுகிறது.. அண்ணனின் அந்த நேர்மையான எழுத்துக்கு தனி வாழ்த்துக்கள்.

கானா பழனி அண்ணனின் நினைவு குறிப்புகளும், கானா பாடல்களின் இயல்பயும் சொல்வது, கானாவின் பின் இருக்கும் சமூக பின்னணியும் அதன் பின்னால் இருக்கும் காரணங்களையும் சொல்லிய விதமும், கானா இசை கலைஞர்கள் கடந்து சென்ற பாதையும், என் பல நல்ல பதிவுகளை, அவர்கள் சார்ந்த ஏக்கங்களையும் நமக்கு கொடுத்திருக்கிறார்.

இறுதியில் பல கேள்விகளை கேட்டு அவர் பதில் சொன்ன விதம் பறைபற்றியும், பறை இசை கலைஞர்கள் பற்றிய தகவல்களும் மிக முக்கியமானவை, பல அறிய தகவல்களை அவர் கேள்வி பதிலாய் தொகுத்து கொடுத்திருந்தது மிகவும் எளிமையானதும், பயனுள்ளத்துமாய் இருந்தது.

இதனோடு அடவுகள், சொலவாடைகள், பாடல்கள், என்று இடையில் கச்சேரி கலைகட்டி இருந்தது இந்த புத்தகம், எனவே இந்த புத்தகம் பறைக்கு ஒரு மதிப்புரை என்றே போற்றலாம்.

புத்தகம் : இசையின் முகவரி பறை
ஆசிரியர் : மணிமாறன் மகிழினி
பக்கங்கள் : 143
விலை : 150
பதிப்பகம் : புத்தர் கலை குழு

Wednesday, 1 June 2022

பறை சத்தம் வேண்டும்

இன்றோர் உணர்வு...

யாரவது பறை இசையுங்கள்...
நான் ஆட வேண்டும்..
வெற்று ஆட்டம் அல்ல...

பறை ஓசை காதில் நுழைந்து..
ஐந்து புலங்களையும் அடக்கி..
அதன் இசைக்கெற்ப்பா ஒரு தாண்டவம் ஆட வேண்டும்..

ரத்தங்கள் கொதித்து நித்தம் உண்டான வேதனைகள் மறந்து...
கொட்டும் ஓசையில் கொடியதொரு ஆட்டம் ஆட வேண்டும்...

பற்றும் அற்று.. பரதேசியாய் மாறி..
பக்குவம் தூக்கி எரிந்து, எவனையும் சிந்தியாமல்...
கேட்க்கும் இசையில் எனை மறந்து ஆட வேண்டும்...

கொஞ்சம் கொஞ்சமாய் உள் நுழைந்து..
உதிரம் முழுவதும் பரவி... நாளங்கள் பரபரத்து...
என்னை கேட்காமலே என் கையும் காலும் அதன் இஷ்டத்திற்கு ஆட வேண்டும்...

பார்ப்பவன் திகைக்க வேண்டும்... முனியோ, கருப்பனோ.. பட்டனோ என்று கூற வேண்டும்..
தெய்வம் உடைத்த மிருகமாய்... ஒரு வெறியாட்டம் ஆட வேண்டும்...

உச்சி வெயில் மண்டையில் இறங்கி உடம்பை உறுத்தும் வேளையில்... நிறுத்தாமல் இருக்கட்டும்...
உள்ளிருக்கும் அழுக்குகள் யாவும் வேர்வையாய் ஆடி தீர வேண்டும்...

இன்றோ நேற்றோ நாளையோ எதைக்குறித்த கேள்வியும் அற்று.. ஓசையின் மாயை வேண்டும்...
உணர்வுகள் அற்ற, உறவுகள் அற்ற.. வேற்றுடம்பாய் ஆட வேண்டும்..

படைத்தவன் ஒருவன் இருந்தால் அவனுக்கு என்னோடு ஆட ஆசை வரவேண்டும்..
நானே சகலமும் என்ற கர்வம் உடைக்க ஒரு மரண ஆட்டம் ஆட வேண்டும்...

வேள்வியில் உதித்தவனோ... கேள்வியில் பிறந்தவனோ.. மதியில் சிறந்தவனோ.. எதுவும் மறந்து போக வேண்டும்..
நீயும் நானும் வெற்று ஜடமாகி. லோகத்தின் மோகமாய் ஆட வேண்டும்

கோவிலோ தெருவோ... சேரியோ, அக்ரகரமோ, உயர்வோ, தாழ்வோ.. அற்ற ஆட்டம் வேண்டும்...
பிறந்தவன் இறப்பான் என்ற புரிதல் கொண்ட தறிகெட்ட ஆட்டம் வேண்டும்...

யாரேனும் பறை இசையுங்கள் எனக்கு ஆட வேண்டும்....

#NaanVijay #பறை_இசை நான் விஜய்

Monday, 23 May 2022

கொலைக்களம்

கொலைகள் நடக்க பல காரணங்கள், கதைகள் உண்டு, களம் அதை தீர்மானிப்பதில்லை... ஒவ்வொர் முறையும் ஒரு கொலை நடந்த களம் நம் மனத்துல் எதோ ஒரு உறுதலை உண்டாக்க வாய்ப்புண்டு, கொலைக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லாத போதும் அந்த உருத்தல் பயமாகவோ அல்லது ஏதொரு வடிவில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு... ஆனால் இந்த கொலையில் களமும் என்னுடையது கொலையாளியும் நானே...

    சிறுகதைகளுக்கு நல்ல பேர் வாங்கிய என் பெயர் மாதவி... மணிமேகலையை ஏற்காத மணம் முடிக்காத 30 வயது ஆகியும் எந்த கோவலனையும் சிந்திக்காத மாதவி... சில தெளிவுகள், உணர்ச்சி வயத்தை தாண்டி யோசிக்கும் சிந்தனை பகரும் அற்புத வயதை எட்டிய நான் இந்த சமூகத்துக்கு ஒரு முற்போக்கு சிந்தை எழுத்தாளர்... செயற்பாட்டாலர்... இன்னொரு புறம் ஒற்றை தாயின் அன்பு மகள்... வாழ்க்கை முழுவதும் நான் சுமந்த வெறுமையை வெற்று காகிதங்களில் நிரப்பி சிறந்த படைப்பாய் மாற்றிய எழுத்தாளர்... யார் நான் என்று இன்றும் தேடும் தன்முனைப்பாளர்...

இன்று அம்மாவிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் இதயம் 12 வருடமாய் சொல்ல துடிக்கும் உண்மை... என் ஆழ்மனதில் என்னை தினமும் கொள்ளும் உண்மை, பாவி நான் கொலையாளி எனும் உண்மை... ஆலகால விஷத்தை தொண்டையில் தாங்கி நிற்கும் சிவனை போல், என்னை அறுக்கும் இந்த உண்மையை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்... இது தெரியாமலே கூட காலத்தை கடக்கலாம்.. ஆனால் என் மனம் யாரிடமாவது மன்னிப்பு வேண்ட சொல்கிறது... எனதல்லாத தவறேன்று ஒதுக்கிட முடியவில்லை. அப்படி செய்தால் அது எனக்கு நானே பொழியும் பொய்யாகும்.

சரியாக 12 வருடங்களுக்கு முன்பு என் பதின்ம வயது 12வது படித்துகொண்டிருந்த என் இளம் வயதின் காலங்கள்.. அத்தனையும் அழகாக தெரிந்த காலம், எல்லாமே ஈர்ப்பு விசையுடன் இருந்த காலங்கள்... சொல்ல முடியாத அளவுக்கு பேரழகி இல்லையென்றாலும்... ஆண்களின் பார்வையில் தப்பாத தெருவோற தேவதைகளில் நானும் ஒருத்தி, பார்க்கும் பார்வையில் ஒரு பெருமை சுமக்கும் பல அப்பாவி பெண்களில் நான் விதிவிலகில்லாதவள்... காதல் தோன்ற நேரம் பார்த்து காத்திருந்த கன்னி...

பலர் பார்க்க அவன் மீது மட்டும் ஏன் அத்தனை ஈர்ப்பு... மனதார சிரிக்கும் அந்த முகம் எதோ ஒரு வசிகரிப்பின் முகவரி தான்... பொருந்தாத உடை நிறம் அதிலும் பேரழகாய் தெரியும் அவன்... என் உள்ளத்தின் கிளர்ட்சியை மேலும் தூண்டும் ஆத்தும தோழிகள், சொல்லிய வார்த்தைகளெல்லாம் அவனைப்பற்றியது, பார்க்கும் திசையெல்லாம் அவனையே யோசிக்கவைத்தது... இதுதான் காதல் போல.. உள்ளம் ஏங்கி அவனை தேட தொடங்கியது... என் காதலை ஒத்திசைக்கும் கருவியாய் சினிமா காணங்கள்... என் மனதில் ஒவ்வொர் சினிமாவின் சீருடை காதலும் என் எண்ணத்தில் தவறில்லை என்று அட்சராமிட்டது... ஆணும் பெண்ணும் காதலிக்க வயதென்ன... நானும் அவனும் அன்பை பரிமாற அனுபவம் தேவையா என்ன?

அவனே வந்தான் தடுமாறி, காதல் மொழி பொழிந்தான்... அத்தனை பெருமை, பேரழகிகள் பலர் அவன் மேல் மையம் கொள்ள அவன் தேடி வந்தது என்னை... எத்தனை இனிமையான தருணம்... மொத்த உலகமும் என் காலுக்கடியில் இருப்பதாய் உணர்ந்தேன்... மெல்ல வான் நோக்கி பறந்தேன்... ஹே பறவைகளே இவ்வளவுதானா உங்கள் உயரம் என் இதயம் உங்களினும் மேலே பறக்கிறது பாருங்கள்... அகன்று சுடர்விடும் சூரியனே, வெந்து தனிப்பாய் என்று அருகில் வந்தால்... இத்தனை இனிமையாய் தென்றல் வீசுகுறாயே, என்
இதயம் இப்படி இருமாப்படைந்து அலைந்தது இதற்கு முன்பு எப்போதும் நிகழ்ந்ததில்லை... நிலைக்குற்றி நிலத்தில் நின்றது நான் மட்டுமே.. இதயம் இன்னும் பறந்துகொண்டுதான் இருக்கிறது...

சொல்லிவிட்டானே... என் பள்ளியின் சாகதோழிகள் என்மேல் பொறாமைக்கொள்ள இந்த ஒற்றை நொடி போதாதா... என் கர்வம் தழைத்தோங்க இந்த கணம் போதாதா... ஏற்காமல் இருந்தால் என் மனமே காலத்திற்கும் என்னை மன்னிக்காது... சம்மதித்தேன் அவன் காதல் மொழிகளுக்கு.. மீண்டும் இதயம் பூமி இறங்கியது... என்னை வட்டமிட்ட பெண்கள் கண்ணில் சற்றே பொறாமை தூக்கலாய்தான் இருந்தது... இருந்து விட்டு போகட்டும் இது என்னுடைய நாள்... அழகில் குறைந்தாலும்.. குணத்தில் நிறைந்தவள் என்று என்னவனே கூறிவிட்டான்... ஆம் என்னவன் இந்த கனம் முதல்...

அழகாய் கடந்தன நாட்கள்... காதல் மொழியும், காம மொழியும் கலக்க ஆரம்பித்தன.. தேர்வுகள் முடிந்தது... அவனை பாக்க முடியாத துயர் என்னை என்னவோ செய்தது... இன்னும் அதிகமாய் பேசினோம்... காதலோடு காமமும் அதிகமானது... பேச்சின் திசை சிலநேரங்களில் பிடிக்க வில்லை என்றாலும்.. அவனுக்காக என்னை வார்த்தைகளிலே வாரி கொடுத்தேன்... பல நேரம் நேரில் இந்த காமம் வேண்டும் என்று கேட்டும் முற்றாய் மறுத்தேன், இருப்பினும் அந்த நாள் வந்தது.. அத்துணை நாள் பேசிய காம வார்த்தைகள் செயலாய் மாற நாள் கனிந்தது, என்னுள் சிறு இச்சை எட்டி பார்த்தது உண்மை தான் ஆயினும் என்னுள் அடங்கியே இருந்தேன். உணர்வுகளை காட்டுக்குள்ளே வைத்திருந்தேன், இருப்பினும் அவன் பேசிய வார்த்தைகள் என்னை தலையாட்ட செய்தது. நம்பிக்கை இல்லையா என்றான், மரணிகட்டுமா என்றான், அட உன்னைவிடவா என் கற்பு உயர்ந்ததென்று என்னையே விருந்தாக்கினேன் அவனுக்கு... அவனும் நானும் காமலோகத்தில் திளைத்து களித்து எழுந்தோம்..

இது தொடர்கதையானது, எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் கூடினோம்.. இன்று கல்லூரி முதல் நாள்.. அவன் இல்லாத நாட்கள் கொஞ்சம் வலிக்கவே செய்தன, நீண்ட நாட்கள் பின்பு மீண்டும் வரும் ஞாயிறு சந்திக்க போகிறோம், மனதில் பேரானந்தம், ஆனால் இன்னொரு பயமும் உண்டு எனக்கு நாள் தள்ளி போய்விட்டது.. இதற்கு காரணம் என்னுள் அவன் உயிர் முலைத்திருக்குமோ என்று அச்சம்.. இதுவரை வீட்டிற்கு தெரியாமல் காத்துவிட்டேன்.. நாளை 45வது நாள் நாளை முடிவு தெரிந்துவிடும்... நான் கர்ப்பம் என்றால் அவன் என்னவாக யோசிப்பான், நாங்கள் எப்படி இதை எதிர்கொள்ள போகிறோம்.. அவனை சந்திக்கும் போது இதற்கான விடை தெரியும்.

சந்திக்கும் நாள் வந்தது, என்னுள் இருக்கும் கருவை சொன்னேன், காரணம் நான் அல்ல என்றுவிட்டான், அதோடு நில்லாமல் எனக்கு வேசி பட்டமும் கொடுத்துவிட்டான்.. அந்த உத்தமியின் மகனும் நான் சுமக்கும் கரு வேசியுனடையதானது, இனி என் செய்வேன், மரணம் ஒன்றே வழி, இந்த பழியை சுமந்து இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்வேன், மரணிக்க வேண்டியதுதான் ஒரே வழி... இல்லை அப்படி மரணித்தால், என் கர்ப்பம் பற்றிய உண்மை அம்மாவுக்கு தெரியவருமே.. என்னை நினைத்து தினம் தினம் மரணிப்பாரே... இல்லை மரணம் எனக்கு வேண்டாம்.. அந்த கொடூரன் வாழும் பூமியில் எனக்கு மட்டும் ஏன் மரணத்தண்டனை, இந்த கர்ப்பதை துறப்பேன்.. பெரிதினும் பெரிதாய் ஜெயிப்பேன், இந்த உலகம் என்னை வேசி என்று அடையாளபடுத்தாது, என்னை முன்னுதாரணமாகி கொண்டாடும்.. கொண்டாட செய்வேன்.. அவனிலும் சிறந்த வாழ்வை எனக்கு நானே பரிசளிப்பேன், அவன் என்னை தூக்கி எரிந்தது போல, அவந்தந்த இந்த கருவை நான் எரிவேன்.

காலங்கள் உருண்டோடியாது, காலத்தின் வேகத்தில் போட்டியிட்டு எனக்கான அடையாளத்தை இந்த சமுதாயத்தில் நிலைத்து விட்டேன்.. இதைத்தான் சொன்னேன் என் அம்மாவிடம், கட்டிப்பிடித்து சில மணிநேரங்கள் அழுதார்... தன்னைத்தானே தேற்றி கொண்டு, என்வெற்றியை இணைத்து பெருமிதம் கொண்டார்... மன்னித்தருளினார், அவரிடம் மறைத்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்துவிட்டது ஆனால் உள்ளம் என் கொலைக்கு தண்டனை வேண்டி இப்பொது நிற்கிறது..

அன்பே என் கருவில் உதித்ததை தவிர்த்து வேறென்ன குற்றம் புரிந்தாய்...
என் பாவங்களுக்கு நீ ஏன் சிலுவை ஏறினாய்...
பெற்றெடுத்து அள்ளி அனைத்திருக்க வேண்டிய கரம்தனில்...
உத்திரமாய் நீ வழியும் போது அள்ளி முகம் பூசி அழுதேனே...
கொலைகாரி நானே உன்னை கொள்ளும் தைரியம் கொண்டேனே...
பூவாய் பூத்த உன்னை கொலைகலமாய் மாறி கொன்றேனே..
எத்தனை பிறவி வேண்டும் உன் பாதம் பற்றி மன்னிப்பு வேண்ட..
என்றேனும் ஒருநாள் மன்னித்து அம்மா என்று அழைத்திடுவாய...
படுக்கை அறையில் என்னை கொன்றேன்..
சுயம் கொண்டு எழுந்திருக்கையில் நீ மரணித்துவிட்டாயே அன்பே...

பெண்ணே மரணித்துவிடுவேன் என்று ஒருவேளை அவன் மன்றாடலாம்...
தினம் தினம் நீ இறப்பதற்கு பதில் ஒருமுறை அவன் இறந்து விட்டு போகட்டும்...
என்மீது நம்பிக்கை இல்லையா என்பான்...
வெற்று நம்பிக்கையை வேடனிடத்தில் கொடுத்துவிடாதீர்கள்...
அத்தனையும் காதல் என்றே தோன்றும் வயது...
காக்கும் கரம் கடவுளிடம் இல்லை என்பதை உணருங்கள்...
காதல் காமம் கேட்காது, படுக்கையறை தேடாது...
அது அன்பின் ஊடாக பெண்ணியம் பேசும், கண்ணியம் காக்கும்...

உன்னை நீ காக்காமல் போனால் நீயும் இன்னொரு கொலைகளம் ஆவாய்... என்னை போல...


முற்றும்



-நான் விஜய் -