Tuesday, 25 February 2025

குழந்தைகளின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது

 **உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது: பெற்றோர்களுக்கான வழிகாட்டி**


பெற்றோர்களாகிய நாம் அனைவரும் ஒரு தருணத்தை சந்தித்திருப்போம் - நம் குழந்தை ஒரு கேள்வி கேட்கும், அதற்கு எப்படி பதிலளிப்பது என்று நமக்குத் தெரியாது. அது உலகத்தைப் பற்றிய எளிய கேள்வியாக இருந்தாலும் சரி, அல்லது மிகவும் சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும் சரி, நம் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது சவாலான, ஆனால் பலன் தரும் அனுபவமாக இருக்கும்.


இந்த பதிவில், உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு தகவல் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில் பதிலளிப்பதற்கான சில குறிப்புகள் மற்றும் உத்திகளை ஆராய்வோம்.


**கவனமாகக் கேளுங்கள்**


பல பெற்றோர்களின் மிக முக்கிய பிரச்சனை குழந்தைகள் பேசுவதை நான் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை, குழந்தைகளின் கேள்விக்கு நீங்கள் உண்மையில் பதில் அளிக்க விரும்பினால் முதல் அடிப்படை கவனித்தல், உங்கள் குழந்தையின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வார்த்தைகள், தொனி மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பதை உறுதி செய்த பின் விளக்கத் தொடங்குங்கள். ஏன் நாம் கவனிப்பதில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், அது நம்மிடம் உள்ள ஆதிக்க மனநிலை , குழந்தைகளை நமக்கு கீழானவர்களாக எண்ணுவதின் ஒரு வெளிப்பாடு கவனிக்காமல் ஒரு குழந்தையை அணுகுதல், கேள்வியை உள்வாங்காமல் பதில் அளிப்பது என்பது, கேள்வி கேட்டவரின் மேல் நாம் வைத்திருக்கும் மரியாதையின் அளவுக்குறித்து. அது குழந்தைதானே என்கிற நமக்குள் இருக்கும் கீழ்மையை வெளிக்காட்டுகிறது , குழந்தைகளின் கேள்விக்களை கவனிக்காமல் இருப்பது பல வகையில் உங்களுக்கே எதிர்காலத்தில் எதிராக அமையலாம், உதாரணாமாக , உங்கள் குழந்தையின் கேள்வி என்பது அன்றைய மனநிலையின் வடிவம், அதை புரிந்து கொள்ள கவனிப்பதை தவிர சிறந்த வழி எதுவும் இல்லை 


**நேர்மையாக இருங்கள்**


கடினமான விஷயங்களைப் பற்றி பேசும்போதும் கூட, நேர்மை எப்போதும் சிறந்த கொள்கையாகும். உங்கள் பதில்களில் உண்மையாக இருங்கள், ஆனால் உங்கள் குழந்தையின் வயது மற்றும் உணர்திறன் அளவையும் மனதில் கொள்ளுங்கள், நேர்மை என்பது வெளிப்படைத்தன்மையின் கருத்தாக்கம் , உங்கள் குழந்தையின் கேள்விகளுக்கு மதிப்பளியுங்கள், அதன் மூலம் அவர்கள் கற்க போறவைகளை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள் , குழந்தையிடம் எனக்கு இது தெரியாது என்று சில நேரங்களில் ஒத்துக்கொள்ளுவது கூட நேர்மையின் வடிவம் தான் , நான் ஒன்றும் AI இல்லை அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க , எனவே எந்த கூச்சமும் படவேண்டியதில்லை , இன்று நேர்மையின்றி நீங்கள் உங்கள் குழந்தையில் கேள்வியை நீங்கள் அணுகினால் நாளை அது உங்களுக்கே திரும்பும் அபாயம் இருக்கிறது . தெரியும் தெரியாது என்பதிலும் சரி, தெரிந்த சில விஷயங்களை குழந்தையின் வயது காரணமாக மாற்றி கூறும்போது சரி கவனமாக இருங்கள் , வயதின் காரணமாக மாற்றி கூற வேண்டியதில்லை , மேம்போக்காக சொல்லலாம் அல்லது அதற்க்கான சரியான முறையை தெரிந்துகொண்டு கற்பிக்கலாம், நினைவில் கொள்ளுங்கள் சில கேள்விகளுக்கு பிள்ளைகள் வெளியில் பதில் தேடினால் அது நீங்கள் எதிர்பார்க்காத மோசமான விளைவை கூட கொடுக்கலாம் , எனவே பதிலில் நேர்மை மிக முக்கியம்.



**வயதுக்கு ஏற்ற மொழியைப் பயன்படுத்துங்கள்**


உங்கள் குழந்தைக்கு புரியாத சிக்கலான சொற்கள் அல்லது தொழில் நுட்ப சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவர்களின் வயது மற்றும் புரிதல் நிலைக்கு ஏற்ற எளிய, தெளிவான மொழியைப் பயன்படுத்துங்கள். மேலே குறிப்பிட்டது போலதான் நீங்கள் நேர்மையாக அனைத்து கேள்விகளையும் அணுக வேண்டும் உடன் , சரியான வார்த்தைகளை , கூடவே சூழ்நிலைகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும் , உங்கள் பிள்ளைகளால் கிரகிக்க கூடிய எளிய சொல்லை பயன்படுத்துங்கள் , உங்கள் அதிபுத்திசாலித்தனம் என்றைக்குமே குழந்தைகளுக்கு எடுபடாது , அதற்க்காக அவர்கள் முட்டாள்கள் இல்லை, நினைவில் கொள்ளுங்கள் அவர்கள் இன்று உங்களிடம் கேட்கும் பல கேள்விகளுக்கு இன்றும் நீங்கள் விடை தேடிக்கொண்டிருக்கலாம், நீங்க பல வருடத்திற்கு பின்பு புரிந்து கொண்ட பல விடயங்களை அவர்கள் கேள்விகள் சுக்குநூறாக உடைத்தெறியலாம், அதனால் அவர்களுக்கு நீங்கள் புரியவைக்க முயற்சிப்பது என்பது உங்களுக்கே பல பரிமாணங்களை திறந்துகொடுக்கும் வாய்ப்பு , இந்த வாய்ப்பில் சரியான மொழியை பயன்படுத்தும் போது , பல அசவுகரியங்களில் இருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம் .


**எளிமையாக வைத்திருங்கள்**


உங்கள் குழந்தையை அதிக தகவல்களால் திணறடிக்க வேண்டாம். உங்கள் பதில்களை சுருக்கமாகவும், முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தியும் வைத்திருங்கள். பல நேரங்களில் இது ஒரு மிக பெரிய பிரச்சனை, நான் யார் என்று காட்டுகிறேன் என்கிற பேர்வழியாக , அளவுக்கு மீறிய தகவலை குழந்தைகள் மீது திணிப்பது , சில நேரங்களில் அதுவே ஒவ்வாமையாக ஆகிவிடும், பிறகு குழந்தைகள் உங்களிடம் கேள்வி கேட்டு பதில் பெறுவதை விரும்ப வேண்டும், உங்கள் வரலாறால் பயந்து ஓடிவிடக்கூடாது , உங்கள் பண்டிதத்துவதை வாரி இறைக்கும் இடம் குழந்தைகள் அல்ல, அவர்கள் கேள்விக்கும் மட்டும் பதில் அளியுங்கள் போதுமானது . பதிலை எளிமைபடுத்துங்கள், பெரும் பொருளாதார, அறிவியல் ஆய்வு கட்டுரைகளை உங்களுக்கு விளக்கினால் அது எப்படி பட்ட மனநிலை என்பதை புரிந்துகொள்ளுங்கள், கேள்வி குழந்தையிடம் எளிமையானதாக தான் இருக்கும், பதிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் 


**ஆர்வம் தூண்டுங்கள்**


உங்கள் குழந்தை விமர்சன ரீதியாக சிந்திக்கவும், அவர்களின் ஆர்வத்தை ஆராயவும் ஊக்குவிக்க தொடர் கேள்விகளைக் கேளுங்கள். ஒரு கேள்விக்கு சரியான விடை என்பது பல நேரங்களில் இன்னொரு கேள்விதான் , ஒரு வேலை குழந்தைகளை நீங்கள் இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள நினைத்தால், அவர்கள் கேள்விகள் அதற்க்கான பாதையை உங்களுக்கு அமைத்து தரும், அந்த கேள்வி ஏன் தோன்றியது என்பதை இலகுவான கேள்விகள் மூலம் நீட்டியுங்கள், அது உங்கள் குழந்தையுடனான இனிமையான ஒரு உரையாடலாக மாற வாய்ப்புள்ளது, அது உங்கள் பந்தத்தை இன்னும் வலுப்பெற செய்யும், உங்கள் பிணைப்பை உறுதியாக்கும், நல்ல கேள்விகள் நல்ல பதிலை மட்டுமல்ல, நல்ல புரிதலை கொடுக்கும் , உங்கள் குழந்தையில் ஆர்வத்தை நீங்கள் புரிந்துகொண்டு அதனோடு பயணிக்கும் போது , நீங்கள் உங்கள் குழந்தையின் முழுமையான நம்பிக்கையை பெறுகிறீர்கள் . அது உங்கள் உறவில் மிக முக்கியமானது .


**அவர்களின் உணர்வுகளை அங்கீகரிக்கவும்**


உங்கள் குழந்தை உணர்திறன் வாய்ந்த விஷயத்தைப் பற்றி கேட்டால், அவர்களின் உணர்ச்சிகளை ஒப்புக்கொண்டு ஆதரவளியுங்கள். ஒருபோதும் அவர்கள் கேள்விகளை குறித்து அவர்களை ஆராயாதீர்கள் , அவர்களின் அந்த கேள்வியின் அடிப்படையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் மாறாக, அவர்களின் குணம் குறித்த விசாரணைக்கு அதை பயன்படுத்தாதீர்கள் , அந்த கேள்வி எந்த சூழலில் வெளிப்பட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள், இவனோ இவளோ இப்படி ஒரு கேள்வி கேட்டால் இப்படி பட்டவள் தான் என்ற முடிவுக்கு வராதீர்கள் , அந்த கேள்வியின் பின் உள்ள உணர்வை அங்கீகரியுங்கள், ஆனால் அதைவைத்து அவர்களை அளவிடாதீர்கள் , கேள்வியின் உள்ள உணர்வு அந்த நேரத்திற்க்கானது , அது அவர்கள் இயல்பில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள் , அவர்களையும் அவர்கள் கேள்விகளையும் நீங்களே புரிந்துகொள்ளாவிட்டால், பின்பு அவர்கள் யாரிடம் போக முடியும்.


**திறந்த மனதுடன் இருங்கள்**


வெவ்வேறு கண்ணோட்டங்களை கருத்தில் கொண்டு, தீர்ப்புகளைத் தவிர்க்கவும். உங்கள் குழந்தையையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும். அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை, ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் அனுமதி அளியுங்கள் , இது நல்ல கேள்வி, கெட்ட கேள்வி என்கிற பிரித்து பார்த்து ஆராய்ந்து குழந்தைகள் கேள்வி கேட்பதில்லை, மற்றும் ஒரு கேள்வியில் நல்ல கேள்வி, கெட்ட கேள்வி என்று ஒன்று இல்லை, அது அளிக்கப்படும் பதிலாலே அப்படி புரிந்துகொள்ளப்படும், நல்ல பதில் நல்ல கேள்விகளின் வெளிப்பாடல்ல, பதில் அளிப்பவரின் புரிதலின் வெளிப்பாடு , அனைத்து கேள்விகளையும் திறந்த மனதுடன் வரவேற்பு அளியுங்கள், நீங்கள் இன்முகத்துடன், திறந்த மனதுடன் ஏற்கும் கேள்விக்கள் உங்கள் உறவில் ஒரு பெரும் பிணைப்பு என்பதை உணருங்கள், அனைத்து கேள்விகளும் உங்களிடமே வருகிறது என்றால், வாழ்த்துக்கள் இதற்க்கு முன் கேட்கப்பட்ட பல கேள்விகளை நீங்கள் திறமையாக கையாண்டுருக்கீறிர்கள்.


**"எனக்குத் தெரியாது" என்று சொல்லுங்கள்**


உங்களுக்கு ஏதாவது தெரியவில்லை என்று சொல்வது தவறில்லை! பதிலைக் கண்டுபிடிக்க ஒன்றாக முன் வாருங்கள் அல்லது தலைப்பை மேலும் ஆராயுங்கள். நாம் நேர்மையில் பேசியது போல இதில் வெளிப்படை தன்மை அவசியம்,  எல்லா நேரமும் நமக்கு பதில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, தயவு செய்து அதற்க்காக நீங்கள் உங்களை குறைவாக எண்ண வேண்டாம், பதிலை அவர்களோடு பயணித்து கண்டுகொள்ளுங்கள் அது இன்னொரு இனியமையான உறவு பாலமாக அமையும். உங்களின் தெரியவில்லை என்கிற பதில் மட்டும் இங்கே போதாது, அதையும் புரிந்துகொள்ளுங்கள், அந்த பதிலை தேடும் பயணத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், அது உங்கள் பிள்ளைகளுக்கு , நீங்கள் அவர்களின் கேள்வியின் மேல் மரியாதை வைத்திருக்கீறிர்கள், அவர்களை குறித்த உங்கள் எண்ணம் அற்புதமானது என்பதை அவர்களுக்கு உணர்த்தும், உங்களுக்கு ஒரு பதில் தெரியவில்லை என்பது உங்களுக்கு ஒரு வாய்ப்பு அதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்.


**உதாரணங்களைப் பயன்படுத்துங்கள்**


சுருக்கமான கருத்துக்களை உங்கள் குழந்தை புரிந்து கொள்ள உதவும் வகையில் தொடர்புடைய உதாரணங்களைப் பயன்படுத்துங்கள். முன்பு நாம் பேசினதை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் அதிமேதாவிதனம் இங்கு உதவாது, கேள்விக்கு இங்கு நீங்கள் அளிக்கவேண்டியது இயல்பான, இலகுவான , உதாரணங்கள், அது நமது அன்றாட வாழ்வில் இருந்து வருவது முக்கியம், உதாரணம் உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை காண்பிக்கல்ல, அவர்கள் புரிந்துகொள்ள , எனவே எளிமையான , வாழ்வியலில் இருந்து சொல்ல கூடிய எளிய உதாரணங்களையே முடிந்தமட்டும் பயன்படுத்துங்கள்/


**ஆர்வத்தைக் காட்டுங்கள்**


கற்றல் மற்றும் ஆய்வுக்கான உங்கள் ஆர்வத்தை உங்கள் குழந்தையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும்! அவர்கள் கேள்விகளுக்கு நீங்கள் எதோ வேண்டா வெறுப்பாக பதிலளிப்பதாக இருக்கக்கூடாது, புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் எதோ ஒரு ஆர்வத்தில் புதிதாக ஒன்றை உங்களிடம் கற்க போகிறோம் என்பதை நம்பி வருகிறார்கள், அதற்க்கு உங்கள் பதில் ஏனோதானோ என்று இருக்க கூடாது, அந்த கேள்விகளுக்கு மதிப்பளியுங்கள், அவர்களுக்கு பதில் அளிக்க நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கீறிர்கள் என்பதை உங்கள் உடல் மொழியும், சொல்லும் விதம் காட்டிவிடும், அதனால் உங்கள் ஆர்வத்திலும் நேர்மையாக இருங்கள் . புரிந்துகொள்ளுங்கள் அனைத்து கேள்விகளும் உங்களிடமே வருகிறது என்றால், உங்கள் இருவர் உறவும் சிறப்பாக இருக்கிறது. அந்த உறவுக்கு மதிப்பளியுங்கள்.


உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது பிணைப்பு, கற்பித்தல் மற்றும் ஒன்றாகக் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தையுடன் ஆர்வம் மற்றும் திறந்த தொடர்பு கலாச்சாரத்தை உருவாக்கலாம். உங்களிடம் எல்லா பதில்களும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை - ஆனால் நீங்கள் எப்படி பதிலளிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

#TheGreyGuru




Financial Literacy

 

Demystifying Dollars: Your Guide to Financial Literacy

Financial literacy. It sounds intimidating, right? Like some secret code only Wall Street wizards understand. But the truth is, financial literacy is simply about understanding how money works, and it's a skill everyone can – and should – develop.

Think of it like this: you wouldn't drive a car without knowing the basics of how it functions, would you? The same goes for your finances. Understanding the fundamentals empowers you to make informed decisions, build a secure future, and ultimately, achieve your financial goals.

Why is Financial Literacy Important?

In today's complex world, financial literacy is more crucial than ever. It helps you:

  • Make informed decisions: From budgeting and saving to investing and borrowing, you'll be equipped to navigate the financial landscape with confidence.
  • Avoid debt traps: Understanding interest rates and credit scores can prevent you from falling into costly debt.
  • Build wealth: Learning about investing and compound interest can help you grow your money over time.
  • Achieve financial security: A solid understanding of finances provides a safety net for unexpected events and helps you plan for retirement.
  • Reduce stress: Financial worries can be a major source of stress. Taking control of your finances can bring peace of mind.

Where to Start: The Building Blocks of Financial Literacy

So, where do you begin your financial literacy journey? Here are some key areas to focus on:

  • Budgeting:
    • Track your income and expenses.
    • Create a budget that aligns with your financial goals.
    • Learn to distinguish between needs and wants.
  • Saving:
    • Develop a savings habit.
    • Build an emergency fund.
    • Understand the power of compound interest.
  • Debt Management:
    • Understand different types of debt.
    • Learn how to manage credit cards responsibly.
    • Develop a plan to pay down debt.
  • Investing:
    • Learn about different investment options (stocks, bonds, mutual funds, etc.).
    • Understand risk and return.
    • Start investing early and consistently.
  • Credit Scores:
    • Learn what influences your credit score.
    • Understand how to check your credit report.
    • Learn how to improve your score.

Resources to Help You Learn:

Fortunately, there's a wealth of information available to help you improve your financial literacy:

  • Online resources: Websites like Investopedia, Khan Academy, and the Consumer Financial Protection Bureau offer free educational materials.
  • Books: Many excellent books on personal finance are available at libraries and bookstores.
  • Financial advisors: Consider consulting a qualified financial advisor for personalized guidance.
  • Educational workshops and seminars: Many community organizations and financial institutions offer workshops on various financial topics.

Taking the First Step:

The journey to financial literacy is a marathon, not a sprint. Start small, be patient, and celebrate your progress along the way. Even small steps, like tracking your spending for a week or reading an article about investing, can make a big difference.

Remember, financial literacy is a lifelong learning process. By taking the time to educate yourself, you can empower yourself to make sound financial decisions and build a brighter financial future.


#TheGreyGuru