Saturday, 8 January 2022

இந்தியக் கலைச்செல்வம் புத்தக மதிப்புரை

இந்தியக் கலைச் செல்வம் என்னும் இந்த தலைப்பில் ஆசிரியர் இந்திய சிற்பகலை மற்றும் சித்திர கலை பற்றி விரிவாக பேசி இருக்கிறார்...

ஆரம்பமே அட்டகாசம் என்பது போல்... எல்லோரா, அஜந்தாவை பற்றிய அவரது வர்ணனை அப்படியே கண்முன் காட்சி படமாய் நிறுத்துகிறது... பௌத்த மதத்தில் உள்ள இருவேறு பிரிவுகலான ஹினாயான பௌதம், மகாயான பௌதம் பற்றியும் அதை சார்ந்த தகவல்களும் இந்த புத்தகத்தின் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்தி விடுகிறது,

புவனேஸ்வர் என்னும் ஊரில் மட்டும் 7000 கோயில்கள் இருந்ததாகவும் இன்று அதில் 500 கோவில்கள் மட்டும் மிஞ்சிருக்கிறது என்பது போன்ற தகவல்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டுசெல்கின்றன

ஹோய்சலர் என்னும் இனத்திற்கு அந்த பெயர் காரணம் பற்றி நகைச்சுவை துணுக்குகளையும் தூவிவிட்டு கடந்துவிடுகிறார்... அதுவும் ஒரு அறிய தகவலாகவே மனதில் பதிகிறது

ஒரு கட்டுரையில் ஒரு பெண் முகம்மரைக்காமல் எப்படி பொட்டிடுவது என்று சொல்லும் பொது இது என்ன சம்மந்தமே இல்லமால் உருட்டுகிறார் என்று தோன்றிய பின் அடுத்த நொடியிலே அதை தான் கற்றுக்கொண்டது ஸ்ரீரங்கம் கோவிலில் என்றும் அதே போல் ஒரு சிற்பம் திருநெல்வேலி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருப்பதை சொல்லி பிரம்பிப்பூட்டுகிறார்

அதோடு இல்லாமல் தமிழகத்தில் சிற்பங்கள் மேலை நாடுகள் போல இல்லமால் ஒரு அதீத கற்பனை சக்தியை கொண்டிருப்பதையும் ஒரு கவிதைக்கு ஒப்பாக அதை வர்ணிக்கும் போதும் இனி ஒவ்வொரு கோவில் சிற்பத்தை பார்க்கும் போதும் அதன் பின்னால் உள்ள சிற்பி சொல்ல முற்படும் கவிதையை கேட்க மனம் நிச்சயம் ஆவல் கொள்ளும்.. அதிலும் குறிப்பாக தஞ்சை பெருவுடையார் கோவில் நடராசர் சிற்பத்தின் சிறப்பியல்பை அவர் சொன்ன பிறகே இத்தனை முறை சென்று கவனியாது விட்டோமே என்று மனம் உருத்தியது

அதிலும் நமக்கு தெரிந்தவரை கோவில்கள் இருவகை ஒன்று திராவிட முறைமை, மற்றொன்று ஆரிய முறைமை, ஆனால் இந்தியாவில் மூன்று முறைகளில் கோவில் உள்ளது நாகரம், வேசரம், திராவிடம், அது மட்டும் அல்ல அப்பர் பெருமான் இன்னொரு படி மேலே போய் 7 வகை கோவில்கள் தமிழிலே உண்டு என்றும் அவை
1, மாடகோவில்
2, கரக்கோவில்
3, ஞாழற் கோவில்,
4, கொடுமுடிக் கோவில்
5, இளங்கோவில்
6, மணிக்கோவில்
7, ஆலக்கோவில்
இப்படி விவரிக்க கோவிலை பார்க்கும் பார்வையே இனி மாறப்போகும்

இதோடு இல்லாமல் அங்கங்கே தேவாரம், திருவாசகம், கம்பன், பாரதி, என்று கவிதை தூரல்களை தூவி விடுகிறார்...

ஒரு புள்ளிக்கு மேல் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லும் போது கடைசி சில கட்டுரைகள் கொஞ்சம் கடுப்பேத்துகிறது...

மற்றபடி இந்த புத்தகத்தை படித்த பின்பு நாம் கோவில் செல்லும் போது கோவில் சிற்பங்களில் நம்மை அறியாமல் கவனம் செல்லும், அதன் பின் உள்ள கவிதைகளை நிச்சயம் மனம் தேடும்...

புத்தகம் : இந்தியக் கலைச் செல்வம்
ஆசிரியர் : தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 
பதிப்பகம் : கௌரா புத்தக மையம் (நாம் தமிழர் பதிப்பகம்)
பக்கங்கள் : 130
விலை : 75

Friday, 7 January 2022

பூப்பு புத்தக மதிப்புரை

பூப்பு

மிக பொருத்தமான பெயர்... பூப்பு புத்தகத்தை பற்றி பேசுவதற்கு, இந்த புத்தகம் ஒரு நிகழ்வை மனதில் நிறுத்தி சென்றது.. அதையும் சொல்ல விருப்பம் கொண்டேன்

சென்னை பெரும் மழை வெள்ளத்தில் திருவொற்றியூர் பகுதியில் கிட்டத்தட்ட 8 இருந்து 12 அடி உயரம் வரை வெள்ளம் சூழ்ந்தது இது பெரும் வெள்ளத்தில் கிட்டத்தட்ட 3 நாட்கள் உணவு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை தினம்தோறும் நானும் என் நண்பர்களும் விநியோகித்து கொண்டிருந்தோம், ஒரு நண்பன் அந்த வேளையில் உள்ளே நிறைய பெண்கள் இருக்கிறார்கள் அதில் யாரோ ஒருவர் மாதவிடாய் காலத்தில் இருந்திருக்கலாம் அவர்களுக்கு அணையாடை கிடைக்க வழி இல்லையே நாம் எதாவது செய்தாக வேண்டும் என்று சொல்ல, அதற்கான முயற்சியில் இறங்கினோம்... இரவு 11 மணி அளவில் பெரம்பூர் மாதா கோவில் சில தொண்டு நிறுவனங்கள் அணையாடை இலவசமாக தருகின்றனர் என்று அறிந்து செல்லும் வழி எல்லாம் வெள்ள பெருக்கு இருப்பினும் எப்படியோ கடந்து சென்று அதை வாங்கி கொண்டோம், கிடைத்த அளவு போதுமானதாக தோன்றாத காரணத்தால் கையில் இருந்த காசுகளிலும் எந்தெந்த கடைகளில் கிடைத்ததோ அத்தனையும் வாங்கி கொண்டு களத்தில் இறங்கினோம்...

45 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா கை எடுத்து கும்பிட்டு சொன்னார்... இதை எப்படி கேட்பது என்று விழித்துகொண்டிருந்தோம் கடவுள் போல வந்திங்க... ரொம்ப நன்றிப்பா உங்களுக்கெல்லாம்... என்று சொல்லி அதோட நில்லாமல், ஒவ்வொரு பெண்கள் இருக்கும் வீட்டையும் மாடியில் நின்று எங்களுக்கு காண்பித்தும் அவரே பலபேரை கூப்பிட்டும் வாங்கி கொள்ளும் படி சொன்னார்... சில பேர் தயங்க.. நம்ம வீட்டு புள்ளைங்க வந்துருக்கு தயங்காமல் வாங்குங்க என்று ஒரு குரல் கொடுத்தார்... அன்று பெரும் திருப்தி கிடைத்தது.. இங்கிருந்த மக்களுக்கு உளமார எதோ செய்துவிட்டோம் என்று...

பூப்பு மீண்டும் அந்த அழகிய தருணத்தை நினைவு படுத்திவிட்டது... மாதவிடாய் சிக்கல்களை எந்த தோய்வும் இல்லாமல் சிறந்த நடையில் எளிதில் விளங்கும் படி சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர், ஒரு பெண்ணின் சிந்தனையில் தோன்றும் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்ததோடு... சில வினாக்களை சமூகத்தின் மீதும் விட்டெரிந்திருக்கிறாரார்..

ஒரு சமூகத்தின் மூடத்தனத்தில் பெரும்பாலும் சிக்கி கொள்வது பெண்கள் தான்.. அதிலும் இந்த மாதவிடாய் ஒரு விடாது கருப்பாய் பலகாலமாக பெண்களை தூரத்திக்கொண்டே இருக்கிறது.. இதை வைத்து சமூகம் ஒவ்வொர் முறையும் பெண்ணை ஒதுக்கி, தீட்டு என்று தீண்டிக்கொண்டே இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்து இயம்பிருக்கிறார்...

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல பெரும்பாலான வீடுகளில் இந்த மூடதனம் பெண்ணின் மேல விழ பெண்ணே காரணமாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மை...

எனை பொறுத்தவரை பூப்பு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படிக்க வேண்டிய முக்கிய சிந்தனை...

இன்னும் பல இல்லங்களில் இந்த பூப்பு பூத்து தெளிவை பரப்பட்டும்...

புத்தகம் : பூப்பு
ஆசிரியர் : ரேணுகா தேவி
பதிப்பகம்:  வாலறிவன் பதிப்பகம்
பக்கங்கள் : 48

குற்ற பரம்பரை புத்தக மதிப்புரை

2022 முதல் பொத்தகம்...


குற்றப் பரம்பரை.. ஒரு சாதியல் புத்தகம் என்றால் ஆம் இது அதுதான்... ஒரு வீரனை பற்றிய பொத்தகம் என்றால் ஆம் அதுதான்... இரண்டு பிரிவினரை பற்றிய பொத்தகமென்றால் அதுவும் தான்... இப்புடி பலகோணங்களில் படிக்கும் பொழுதே சிந்திக்கவும் நகர்த்தவும் செய்யும் வல்லமை தோழர். வேல ராமமூர்த்தி அவர்களுக்கு மிக இலகுவாக  அமைந்திருக்கிறது... ஒரு சாதி வன்மத்தை எதிர்த்து மனதில் பதியும் வேயன்னாஇன்னொரு சாதி வன்மத்தாலே மரணிக்கிறார்.. எதை புரிந்துகொள்ள தேடவேண்டும் சாதியத்தையா, காதலையா, தந்தை மகன் பாசத்தையா.. துரோகத்தையா... ஆங்கிலேயரின் பிரித்தாலும் சூழ்ச்சியையா... அந்த ஆங்கிலேயனுக்குள்ளும் சில நல்லோர் இருந்திருப்பர் என்ற புரிதலையா... முழுமையாய் படித்தும் இன்னும் மனதில் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது வையத்துறையின் பாசம்...

இந்த கதையில் எந்த பெயரும் வெறுமனே கடந்து செல்லும் பாத்திரங்கள் அல்ல.. ஒவ்வொருவரும் ஒரு கதை தாங்கி.. கதையை வழிநடத்தும்  தேவையான தூண்களாகவே வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்... ஒவ்வொர் முறையும் வேயன்னா ஏன்னும் பாத்திரம் என் கற்பனையில் வேல ராமமூர்த்தியாகாவே தோன்றியது எனக்கு மட்டும்தானா என்று படித்தவர்கள் சொல்லுங்கள்...

குற்ற பரம்பரை... சிலுவையில் பிறர் பாவங்களுக்காய் தொங்கிய இயேசு

பொத்தக பெயர்- குற்ற பரம்பரை
எழுத்து - ஐயா வேல ராமமூர்த்தி
பதிப்பகத்தார்- Discovery Book Palace
விலை- 400
பக்கங்கள்- 448