அம்மா-அப்பா
தங்க தமிழில் தாய்மையை போற்றும் அம்மா என்னும்
வார்த்தைக்கான அர்த்தத்தையும், அப்பா என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தையும்
காண்போம்.,
அம்மா- அ+ம்+மா
அ- உயிர் எழுத்து,
தாயானவள் தன் உயிரை பங்கிட்டு தன் கருவிற்கு தருகிறாள் என்பதை குறிக்கிறது.
ம்- மெய் எழுத்து,
தாயானவள் தன் மெய் எனும் உடலை உருக்கி, தன் கருவிற்கு, புது சதை வடிவம்
கொடுக்கிறாள் என்பதை குறிக்கும்.,
மா- நெடில் உயிர்மெய்
எழுத்து, தாயானவள் பல பாடுகள் பட்டு, அந்த கருவை உயிரும்,மெய்யும் கலந்த
குழந்தையாக உலகிற்கு கொடுக்கிறாள் என்பதை குறிக்கிறது......
ம- என்னும் எழத்து
மெல்லினத்தை சேர்ந்ததாகும், இது தாய்மையின் மென்மையை குறிபதர்க்காக
பயன்படுத்தப்பட்டுள்ளது.
அம்மா என்னும் ஒற்றை வார்த்தையில் தாய்மையின்
ஒட்டுமொத்த போராட்டங்களையும் சொல்லிய உலகின் ஒரே மொழி தமிழாகும்.,
அதே போல் அப்பா என்னும் தமிழ் சொல்லின்
அர்த்தத்தையும் காண்போம்.,
அப்பா- அ+ப்+பா
அ- உயிர் எழுத்து,
தந்தையானவர் உயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவே தாயினுள் கருவாய்
உருபெருகிறது என்பதை குறிக்கிறது.
ப்- மெய் எழுத்து, தன்
குழந்தை வளர்ச்சிக்காக தன் மெய்வருத்து உழைப்பவன் தந்தை என்பதை குறிக்கும்.
பா- நெடில் உயிர்மெய்
எழுத்து, தந்தையானவர் தன் வாழ்நாள் முழுவதும், தன் உயிரிலும், உடல் உழைப்பிலும் தன்
குடும்பத்தை சுமப்பவர் என்பதை குறிக்கிறது.
ப- என்பது வல்லினத்தை
சேர்ந்ததாகும், இது தந்தை தன் குடும்பத்தை பாதுகாக்க உழைப்பவர் என்பதை குறிக்கும்.......
வேறு எம்மொழியிலவது இத்தகைய அர்த்தத்தை தன்
மொழியில் வழங்கப்படும், தந்தை, தாய்க்கான, சொல்லடளுகான அர்த்தத்தை தர இயலாது
என்பதே உண்மை......!
வாழ்க என் தமிழும், அதன்
தொன்மையும்.............!
இப்படிக்கு.,
நான்.............!
No comments:
Post a Comment