என்னமோ போங்க...!
என்னடா தலைப்பு இதுன்னு யோசிக்குரிங்களா..? அட ஆமாங்க இந்த சமுதாயத்தையும், நம்ம மக்க மனுசங்களையும் பாக்கும்போது அப்புடிதாங்க தோணுது...! எப்படி என்ன பண்ணிடானு யோசிக்குரிங்கள... அதே தான் நானும் கேக்குறன், அப்புடி என்னதான் நாம பண்ணி கிழிசுட்டோம் சொல்லுங்க....! ஒன்னு இல்ல...!
அப்ப நம்மாளுங்க ஒன்னுமே பன்னலயானு கேக்குறிங்களா? பண்ணிருக்காங்க, youtube பார்வைகள்ள உலக சாதனை, ட்விட்டர் வலைதளத்துல, உலக அளவுல சில முக்கிய பிரச்சனைகளலாம் கொண்டுபோனது...! அட அதுக்கு அப்புறம் ஏன்பா இப்புடி பேசுறன்னு கேக்குரின்கால, கேக்க தோணுதே, ஏன்னா அவங்க கொண்டு போன பிரச்சனையும், சாதனை புரிஞ்சு பார்த்த கானோளியும் அப்புடி, கபாலி முன்னோட்டத்தை 10 கோடி பேரு ஒரே நாளில் பார்த்து சாதனை, தெரி முன்னோட்டம், 15கோடி பார்வைகளை தாண்டி இந்திய அளவில் சாதனை, ட்விட்டரில் அஜித் தொப்பையை உலகஅளவில் கிண்டல் செய்து மானத்தை வாங்கிய விஜய் ரசிகர்கள், பதிலுக்கு, விஜய்க்கு முடிகொட்டுதுங்க என்று முக புத்தகத்தில், கிண்டல் பண்ணி பழி தீர்த்த அஜித் ரசிகர்கள், இது தான் நம்ம பயலுக உலகறிய நம்ம மானத்தை காப்பாற்றிய அற்புதமான செயல்கள்....! இதுக்கு கண்டிப்பா பெருமை பட்டு கொண்டாடித்தான ஆகணும்...!
நம்ம ஊரு பெருசுங்களும், இதுக்கு ஒன்னும் சளைச்சவங்க இல்ல, என்ன ஐயா யாருக்கு வோட்டு போட்டிருனு கேட்டு பாருங்க, ஒன்னு அதிமுக சொல்லுவான் இல்லனா திமுக சொல்லுவான், அது இல்லையா அவன் தொகுதில இருக்க அவன் ஜாதி கட்சி பேர சொல்லுவான், ஏன் டா இன்னு அவனுகளுக்கே வோட்டு போடுரிங்கனு கேட்டா, ஒன்னு செத்துப்போன எம்ஜிஆர்காகனு ஒருத்தன் சொல்றான், இன்னொருத்தன் சாகபோற மனுஷன் பதவில சாகட்டும்னு சொல்றான், இன்னொருத்தன், நம்ம சாதி சனம் வந்தாதானைய, நாம நல்ல இருக்க முடியும் சொல்றான், உங்கள தெரியாமதான் கேக்குறன், செத்துபோனவருக்காக வோட்டு போடறனு சொல்றியே, அப்புடி போட்டதுக்கு, செத்துபோனவற்கு பக்கதுல உனக்கு என்ன சிலையாட வைக்கபோரைங்க, இல்ல நாளைக்கு சாவபோரவனு தெரிஞ்சு அவனுக்கு வோட்டேபோட்டுறியே, நாளைக்கு பதவிக்கு வந்து கொஞ்சநாள அவன் மக்கள் பிரச்சனைய பேச, சட்டமன்றத்துக்கு வருவான இல்ல, அவன் பிரச்சனைய பாக்க மருத்துவமனைக்கு அலைவானா, உன் சாதி அதுக்குனு வோட்டு போடறனு சொல்றியே, நாளைக்கு நீ சோத்துக்கு வழியில்லாம, தெருவுல பிச்சை எடுத்தா, உனக்கு 10ரூபா பிச்சை போடுறானான்னு முதலில் யோசிங்க டா....!
பாக்குற எடமெல்லா தமிழன் அடிவாங்குரன் அத கேக்க நாதியற்ற, அரசு, மத்தியுளையும், மாநிலதுளையும் நமக்கு, ஹிந்தி கத்துகுனாதான், நீ இந்தியன் சொல்றான், அவன் தேசபக்தன், எனக்கு எதுக்குடா ஹிந்தி நான் இருக்குறது தமிழ் நாடுதான சொன்ன எனக்கு மொழிவெறி புடிச்சுருக்கு, உச்ச நீதி மன்றம் சொன்னலும், காவிரி நமது சொல்றவன் தேசியவாதி, அவன்கிட்ட அடிவாங்கி பொத்திகிட்டு இருக்க நாங்க பிரிவினைவாதி, நல்லா இருக்குடா உங்க நியாயம், அப்துல் கலாம், இந்தியன், எ.ஆர்.ரஹ்மான் இந்தியன். அஸ்வின் ரவிச்சந்திரன் இந்தியன், ஆனா, நாகை மீனவர்கள், ராமேஸ்வர மீனவர்கள், தமிழர்கள், நாங்க வாய தொறந்தா வன்முறை, எங்க வீர விளையாட்டு, உங்களுக்கு மிருகவதை, ஏன் ஊருல என்ன வெளையாடனும், வேலையாடகூடாதுன்னு முடிவெடுக்க கண்ட நாய்க்கெல்லாம் உரிமை இருக்கு, எங்களுக்கு இல்ல, ஒருவேளை இந்த இந்திய தாய்க்கு வாய் இருந்த சொல்லி இருக்கும் டா அவல பெத்தது என் தமிழ் தாய்ன்னு, இன்னும் சகாதொரதுவதூடையே நாங்க கை நீற்றோம், ஆனா நீங்க அத பயன் படுத்தி, மறுபடி மறுபடி உங்க பெரம்பாலையே அடிகுரிங்க,
இந்தியாவையும், ஹிந்தியர்கள மட்டும் கொரசொல்லி என்ன பிரயோஜனம், நாம என்ன ஒழுங்கா...? வோட்டுக்கு 500-1000, இதுல, செத்து போன பாட்டி உயிரோட இருக்குனு சொல்லி அதுக்கும் ஒரு அமௌன்ட் தேத்துறது, தெருக்கு தெரு, டாஸ்மாக் இருக்குரதாலதான் இவனுக குடிக்க போரனுங்கலாம், எங்க தெருல கூட ஒரு நூலகம் இருக்கும், ஆனா ஐயோ நூலகம் இருக்கேனு, ஒரு நாயும் படிக்கவர்லையே, அட ச்சி என்ன கேவலமானவங்க டா, கர்நாடககாரன் திட்ட தெரியுது, அதுக்கு பஞ்சாயத்து, பேச ரஜினி போகலன்னு, கோவம், நடிகர் சங்கம் போரடலைன்னு வருத்தம், நான் தெரியாமதான், கேக்குறான், ரஜினிய இப்ப பிரதமரா இருக்காரு, இல்ல நடிகர் சங்க செய்சு ஆட்சி நடத்துதா, அரசாங்கத்த எதிர்த்து, கேள்வி கேக்க வக்கு இல்ல, இளிச்சவாயன் சினிமாகாரன் சொன்னது எரிமிதிக தோனுது, நல்ல வீரம் டா நமது. ஆத மூடி கள்ள நட்டு ஊருக்கு ஊரு வீடுகட்டிடோம், இப்ப மழை பெஞ்சா, ஐயோ வெள்ளம் வந்துடுசெனு புலம்பவேண்டியது, தாமிரபரணி பாதில கோல கம்பனிகாரன் திருடுறான், அவன் தண்ணிய உரிஞ்சதுகு அப்புறம் இருக்குற மணல இன்னொருத்தன் திருடுறான், அப்புறம் விவசாயத்துக்கு தண்ணி எங்க இருந்து வரும், காமரஜர்க்கு பிறகு, இந்த மண்ணுல எத்தனை, ஏறி தூர்வரபற்றுக்கு, எத்தன புது குளங்கள் வேட்டபற்றுக்கு, எத்தனை அணைகள் கட்ட பற்றுக்கு, தெற்குலையே அதிகமா மழை பொழியுறது நமக்குதான், ஆனா அத சேர்த்து வெச்சு, விவசாயத்துக்கு பயன்பட்ரமாதிரி இதுவரைக்கும் நாம என்ன செஞ்சுருகோம், அதிக பட்சம், எவனோ போட்ட மீமீ பகிர்ந்துருப்போம், அத தவிர...? இவ்ளோ பேசுறியே நீ என்னடா பண்ணணு தான கேக்குறிங்க, நானும் ஒன்னு பண்ணலைங்க, ஆனா ஒண்ணுமே பண்ணாம செத்துடுவேநோன்குற பயதோடவே வாழ்ந்துகிட்டு இருக்கன்...!
இலட்சக்கணகான நம் ரத்த உறவுகள் சாகும்போதும் இப்புடி வாயமூடிக்கிட்டுதான் இருந்தோம், பக்கத்துக்கு மாநிலத்துல அடிக்கும் போதும் இப்புடியேதான் இருக்கோம், ஆனா நாளைக்கு, எறங்கி அடிக்கணும் சொல்லல எதாவது செய்யணும் யோசிக்குரன்....! நாளைக்கு காலைல வேளைக்கு போரவரைகும்தான் யோசிப்பனு நினைக்குறன்...! என்ன பண்றது மறதி ஒரு தேசியவியாதி....!
என்னமோ போங்க பாஸ்...!
நான் விஜய்.....!


No comments:
Post a Comment