குழந்தைகளின் திரைப்படம்...!
இன்றைய தமிழ் சமுகத்தில்
திரைபடத்தின் பங்கு அளப்பரியது. திரைப்படங்கள் எத்தனையோ பல உயரிய கருத்தை, சமுக
பிரச்சனைகளை மேடை எற்றிருகிறது. இருப்பினும் யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல்
ஆங்காங்கே இச்சமுகம் இடறுமலவுக்கும் சில திரைப்படங்கள் வெளிவந்து கொண்டுதான்
இருக்கின்றன.
குழந்தை திருமணம் என்னும் மிகபெரும்
கொடுமையிலிருந்து நம் சமுகத்தை எத்தனையோ பெரும் தலைவர்கள் அரும்பாடுபட்டு மீட்டெடுத்துள்ளனர்.
அனால் இன்று 16 வயதுப்பெண் கழுத்தில் தாலியுடனும் கையில் குழந்தையுடனும்
திரிவதை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. இந்த அவலத்திற்கு காரணம் என்ன என்று
சிந்தித்து பார்த்தால்...! பூதாகரமாக இருப்பது அதன்பின் இருக்கும்
திரைப்படங்கள்தான்
முற்காலத்து இளைஞர்கள் தம் விருப்ப நாயகர்களின்
நடை, உடை, பாவனைகளை கற்று கொள்வதோடும், அவர்கள் சிகை அலங்காரங்களை பூணுவதொடும்,
நிறுத்திக்கொண்டனர். ஆனால் சமகால இளையோர்களோ, பதின் பருவதோர்களோ, அப்படி ஒரு
வாழ்வை வாழ வேண்டும் என்னும் எண்ணமே கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவர தொடங்கிய
பெரும்பாலான திரைப்படங்களில் 11ம் வகுப்பு மாணவனும், 10ம் வகுப்பு மாணவியும் காதலிப்பது போன்று காட்சிகள் அமைய
தொடங்கின. “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தில் தொடங்கி பல படங்கள் உதாரணமாய்
நம்மிடத்தில் இன்றும் இருக்கிறது. இந்த திரைப்படங்களின் வரவே இன்று நடக்கும்
பெரும்பாலான 16வயது இளம் பருவத்தினரின் திருமணத்திற்கான காரணங்களுள் ஒன்று.
பெண்ணின் திருமண வயது 21என
நிர்ணயத்ததின் பின் உள்ள உளவியல் காரணம், 21வயதை எட்டும் பெண் ஒரு குடும்பத்தை
நிர்வகிக்கும் திறனை எட்டுகிறாள், ஆனால்அப்படியான ஒரு திறனை ஆண் தன் 24 வயதுக்குப்பிறகே அடைகிறான். இத்தகைய வயதில்
தோன்றும் காதல், தங்கள் பாலின ஈர்ப்பையும் தாண்டி, எதிர்காலத்தைக் குறித்த ஒரு
வினாவையும் அவர்களுக்குள் வைக்கும். அதனால் அவர்கள் திருமண வாழ்வும் சுபமாக
மாறும், ஆனால் இன்றைய பதின்பருவத்து திருமணங்கள் எதிர்பாலின ஈர்ப்பின்
அடிப்படையிலேயே அமைபவை, அவர்களுக்கிடையிலான காமத் தேவை பூர்த்தியடைந்ததும்,
அக்காதல் பெரும் வெறுமையை அடைகிறது, பின்பு அவர்கள் திருமண பந்தம் பூண்டாலும் அது
அத்தகைய இன்பத்தை அவர்கள் வாழ்நாள் முழுவதும் தருவதில்லை, அவர்கள் காதலும்,
திருமணமும் தோல்வியிலேயே முடியும்.
இன்றைய
திரைப்படங்கள் இந்த சமுக மாற்றத்தை கவனிக்காமல் அடுத்த கட்டதிற்க்கே
முன்னேறிவிட்டது, இது இன்னும்பெரும் வெட்ககேடு, சமிபத்தில் வெளிவந்த “பூவாரம்
பிப்பி” என்னும் திரைப்படத்தில் 1௦ வயதை எட்டிய சிறுவர்களின் சமுகபார்வையும்,
அவர்களின் அசாத்திய முயற்சியும் பாராட்டுக்குரியது, ஆனால் அந்த வயதில் அவர்களுக்கு
காதல் என்பது உள்ளத்தை நெருடுவதாக இருக்கிறது. இதன் தாக்கம் “பருத்திவீரன்” போன்ற
படங்களில் தொடங்கியது.“மூடர் கூடம்” என்னும் திரைபடத்தில் சிறுவர்கள் வாழ்வில் விதைக்கப்படும் சிறு சொல்லும், அவர்கள் வளர்ந்தபின் பெரிய மாற்றத்தை அவர்கள் வாழ்வில் கொண்டுவந்துவிடும் என உணர்த்தும் காட்சிகள் அமையப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் [பார்த்தால்கூட, இப்படிப்பட்ட காதல் காட்சிகள் நாளைய சமுதாயத்தை நிச்சயம் சீரழித்துவிடும் என்பதை படைப்பாளிகள் உணர்ந்து அதிக நோக்கோடு செயல்பட வேண்டும் என்பதே என்னை போன்றவர்களின் விருப்பமாகும்.
-நான் விஜய்.
No comments:
Post a Comment