தொலையாத கனவுகள்
ஏதோ ஒரு முறை, ஒரு சீண்டல் பார்வையில், விழ்த்திய என்னை, மீண்டும் எழுப்பாமல் போனதேன்னடி....!
இதயம் தவித்து, துடிதிருக்கும்படி நான் செய்த தவறுதான் என்ன என்று கொஞ்சம் சொல்லடி...!
கண் இமையில் கருத்தொன்றை மறைத்து, அதை என்னிடம் சொல்லாமலே சென்றதேனடி....!
தோணாமலே, என் உள்ளகீற்றை பிரித்து, அதில் காதல் தேனை மட்டும் உறிஞ்சு, விட்டு சென்றதேனடி...!
இதழ் பசித்து காதல் சொல்லவரும் வேளையிலே, நா கடித்து, அதை மறைக்கும் சோதனை ஏனடி...!
விட்ட இடம் தொடரும் ஏன் காதலும், தொட்டவுடன் மலரும் உன் பெண்மையும், இணைவதெப்போது சொல்லடி...!
காத்திருப்பேன் உன் காதலுக்காக...!
என் காலம் முடிந்தபின்னும், இம்மண்ணில் உரமாய்...!
!...............நான் விஜய்
நல்லாருக்கு ண்ணா
ReplyDeleteஇந்த காதல் ஏன் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது புரிதலினாலா ?
ReplyDeleteஇனிமை அண்ணா💛
ReplyDeleteஅருமை அண்ணா 😍🥰
ReplyDelete