Sunday, 9 July 2023

மாமன்னன் பார்வை

குறிப்பு : திரைக்கு பின் எந்த அரசியல்வாதி வரலாறு என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு திரைப்படமாக மட்டும் பார்த்தபோது நான் உணர்ந்தவையை பகிர்ந்துக்கொள்கிறேன், இந்த விலக்கலில் தேவர் மகன் பஞ்சாயத்தும் அடங்கும்..

முதலில் இந்த திரைப்படத்தை இரண்டுவிதமாக அணுகலாம் ஒன்று, மாரிசெல்வராஜ் நேரடியாக பேசிய அல்லது உணரவைக்க முயற்சித்த சாதிய குறியீடுகள் உள்ள திரைப்படமாக, இன்னொன்று ஒரு மகனுக்கும் தந்தைக்கும் இடைப்பட்ட படமாக...

தான் ஒரு வலியை அனுபவிக்கும் போது அதை மகன் தந்தையிடம் சொல்கிறான், அந்த நேரத்தில் தந்தை சிலமுயற்சிகள் எடுக்கிறார் ஆனாலும் அது சாத்தியப்படவில்லை, இதனால் அந்த உறவு முறிகிறது, சில காலத்திற்கு பின்பு அதே போல ஒரு ஆசாதாரண சூழல், இம்முறை அந்த தந்தை அதை தன்னால் சரி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை கொடுக்க, அந்த மகனும் வருகிறான், அங்கு அவர் முயல்கிறார் ஒருவேளை அவர் அதை சரிசெய்திருக்க கூடும், ஆனால் அங்கு மகன் தந்தையின் சுயமரியாதை இழந்த ஒரு நிலையை காண அதை மீட்டு தர வருகிறான், போராடுகிறான் அதில் ஜெயித்தானா இல்லையா என்பதே மீதி கதை..

இன்னொரு பக்கம், காலம் காலமாய் அடிபட்டு அடிமையாக்கப்பட்ட ஒரு சமூகம் மேல வர அவர்கள் குரல், சட்டம் இயற்றப்படும் அரங்கில் ஒலிக்கப்பட வேண்டும் என்னும் உன்னத நோக்கோடு அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள் போராடி தனி தொகுதி என்னும் அமைப்பை தேர்தலில் கொண்டுவருகின்றனர், அது எந்த அளவுக்கு அந்த தலைவர்கள் நினைத்தது போல வலிமையாக செயல்படுகிறது என்பதை தான் இந்த திரைப்படம் கேள்விக்குட்படுத்துகிறது,

Spoiler alert (ஒருவேளை இன்னும் படம் பாக்கலைன்னா)

தான் ஒரு MLA என்ற உணர்வு அந்த MLA வுக்கு இருக்கிறதா என்றால் இல்லை ஏன் இல்லை, ஏனெனில் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர், அவர் அதை இன்னொரு சமூகம் அதை தனக்கு கொடுத்ததாக அதற்கு அவர் நன்றிகடன்பட்டவறாக உணர்கிறார், அந்த உணர்ச்சியை தான், இந்த பதவி என் உரிமைனு தெரியாம அவங்க கொடுத்த பிச்சைனு நெனச்சிட்டேப்பா என்று வடிவேல் பேசும் வசனம் காட்டுகிறது,

நிஜத்தில் இப்படிதானா என்றால் அது அந்த அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வெளிச்சம், ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், அந்த வீட்டிற்க்குள் அவர் உட்காரமாட்டார் அது பழக்கம் என்று சொல்லும் போது, அது என் சுயமரியாதை இழப்பு என்பதை மகன் தந்தைக்கு புரியவைக்கும் அந்த பகுதி கிளாஸ் ரகம், பல வசனங்கள் காட்சிகள் என்று தான் கொட்ட வேண்டிய மொத்த அரசியலை பேசி பேசி தீர்த்திருக்கிறார் மாரி என்றே சொல்லவேண்டும்..

உன்னை உட்காரக்கூடாதுனு சொன்னவன், நாளைக்கு நீ கை காட்டி உட்கார்னு சொன்னாதான் உட்காரணுங்குற அளவுக்கு உயர்ந்து காட்டு என்பது இந்த கதையோட one line சொல்லலாம்..

படமாக எப்புடி இருக்கு?

மூன்று பேர் இந்த படத்தை தோலில் சுமக்கிறார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும், முதலில் வடிவேலு, ஒவ்வொரு காட்சியிலும் மின்னுகிறார், அதிலும் தன் மகன் அடிபட்டு கிடக்க நியாயம் கேட்டு நிற்கும் தந்தையாக, தனது வலி, இயலாமை, கோபம் என்று ஒரே காட்சியில் கலந்துகட்டி எப்படி பட்ட நடிகன் ப்பா அப்படினு கண்டிப்பா சொல்ல வெச்சுடுவாரு... அப்பா உட்காருப்பானு சொல்லும் போதும் உட்கார்ந்த பின்னும் ஏதோ தப்பு பண்ணிட்டோம்னு ஒரு வகை குற்றவுணர்ச்சியில் இருப்பது போன்ற அந்த நடிப்பு அந்த காட்சிக்கே வேற ஒரு ரகம் காட்டிடுது, ரொம்ப அமைதியா நிதானமா யோசிச்சு செயல்படுற ஒரு அரசியல்வாதியா மனதில் நிக்கிறார்,

பகத் பாசில் மனுஷனா இவங்குற அளவுக்கு performance பின்றான் மனுஷன், அவர் அண்ணனை திட்டும்போது ஒரு அதிகார தோரணை, மிக முக்கியமா உங்க அப்பா யார் சொன்னாலும் உட்காராமாட்டார் நீ உட்காருன்னு சொல்லும் போது ஒரு ஏளன சிரிப்பு, அப்புடியே cut பண்ணா பாத்தியாண்ண உட்காந்ததும் வாடா போடான்னு சொல்றங்குற transformation அதுவும் அந்த சீன்னோட மூடுக்கு எற்றாற்போல கொஞ்சம் கொஞ்சமா develop பண்ணி கடைசியா துப்பாக்கி எடுக்க ஓடுற வரை மனுஷன் rule பண்றான் அந்த scene, இரண்டாம் பாதியில கார்ல மிரட்டுற scene, சங்கத்துக்காரங்க கால்ல விழுற scene இப்படி ஒவ்வொண்ணும் நான் யாருனு காட்ரன் பாருங்கடா ரகம்,

அடுத்து கண்டிப்பா ARR மனுஷன் BGM ல சக்கப்போடு போட்டுருக்காரு, படம் ஆரம்பிக்கும் போதே வடிவேலுவோட வாய்ஸ் background கொண்டுவந்து அந்த மனுஷன் இந்த படத்துல சீரியஸ் தான் பாக்கணும்னு ஒரு mindset கொண்டுவந்துடுறாரு, அதே டோன்ல வடிவேலு பாக்குறதால ஆரம்பிக்கும் போதே வடிவேல் கூட நாம ஈஸியா ஒன்றிக்க முடியுது, கிணத்து காட்சி மியூசிக்ல ஒரு elevation கொடுத்து ஏற்கனவே பயங்கர intense இருக்க scene இன்னும் கொடூரமா மாத்திடுறாரு, பாட்டு எல்லாமே பட்டைய கிளப்புது, ஒண்டிவீரன் பாட்டு சிங்கப்பெண்ணேக்கு மேல கொண்டாட படவேண்டிய பாட்டு, நெஞ்சமே நெஞ்சமே ஒரு 90s feel போட்டு தாக்கிட்டான் மனுஷன், வடிவேல் பாடுன பாட்டு கேட்கும்போது இருந்த impression காட்சியா பாக்கும் போது பெருசா எடுப்படலை மற்றபடி மாஸ்டர் அவரு வேலைய வேற level பண்ணி இருக்காரு..

கீர்த்திக்கு பெருசா நடிக்க ஒன்னும் இல்ல படத்துல, படம் முழுக்க உதயநிதி இருந்தாலும், வடிவேல், பகத் ரெண்டுபேரும் அந்த பக்கம் திரும்ப விடாம நம்மள பாத்துக்குறாங்க, அவங்க ரெண்டுபேரும் இருக்கும் போது இவர் நடிப்பு பெருசா எடுப்படலை, ஆனாலும் ரொம்பவே மேனக்கெட்டு சில காட்சிகளெல்லாம் நடித்திருக்கிறார், குறிப்பாக, அப்பாவை உட்கார சொல்லும் காட்சியில் அவர் யார் சொன்னாலும் உட்காரமாட்டாறான்னு ஒரு மூட் elevation கொடுக்கும் போது அங்க இருந்து பகத் அந்த scene அவர் பக்கம் திருப்பிடுறார்..

அடுத்து முழுபடமாக முதல் பாதி கொடுத்த வலியை பாதிப்பை இரண்டாம் பாதி கொடுக்கவில்லை, அது ஏதோ ரெகுலர் cat and mouse போட்டி கதையா மாறிடுச்சு, அந்த intense ரொம்பவே ரெண்டாம் பாதில missing, அது மட்டும் இருந்திருந்தா இது ஒரு வேற level படம், ஆனால் overall ரொம்ப நல்ல மேக்கிங், அருமையான காட்சி அமைப்பு

குறியீடுகள் அநியாயத்துக்கும் போட்டு வெச்சுருக்காரு மனுஷன், அய்யா எங்களுக்கு அவ்வளவு அறிவேல்லாம் இல்லைங்க எத சொல்றதா இருந்தாலும் நேராவே சொல்லிடுங்க, அதை புரிஞ்சு படத்தை follow பண்றதுக்குள்ள அடுத்த show போட்டாங்க.. கொஞ்சம் அடுத்தவாட்டி பாத்து பண்ணுங்க... அப்புறம் உதயன்னா ஏன் பன்னிங்களா செத்துப்போற சீன்ல உள்ள போனதும் சிரிச்சாருன்னு தான் இப்போவரைக்கும் புரியல... அதை அழுகைனு மட்டும் சொல்லி கொலவெறி ஆக்கிடாதீங்க சொல்லிட்டேன்...

நான் விஜய் 

No comments:

Post a Comment