Tuesday, 31 October 2023

காலப்பாணி இணையத்தொடர் விமர்சனம்

காலாபாணி என்றால் கொலை நீர் என்று அர்த்தம், அதாவது ஒரு தப்பி செல்ல முடியாத சுவர், அந்தமான் இருக்கும் செல்லுலர் சிறைக்கு காலப்பாணி என்ற பெயர் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அங்கு இருக்கும் மக்கள் அந்த மொத்த தீவையே அப்படித்தான் பார்க்கின்றனர் என்பதை இந்த இணைய தொடர் பேசுகிறது..

2027ல் நடக்கும் இந்த கதையில் கொரோனா போல ஒரு அசாதாரண சூழல் உருவாகிறது, அதில் சிக்கிக்கொள்ளும் அந்தமான் மக்கள் அதில் எப்படி மீண்டனர், எப்படி அதை சமாளித்தனர், அதன் பின் இருக்கும் அரசியல் என்ன? என்று பல கதாபத்திரங்களை கொண்டு பேசுகிறது இந்த இணைய தொடர்..

இதெல்லாம் ஈர்த்தது என்றால் இந்த கதை களம் அதுவே மிகுந்த சுவரசியமான ஒன்று, அதற்கு எழுதப்பட்ட நேர்த்தியான திரைக்கதை நம்மை ஒவ்வொரு பகுதியிலும் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது

மனைவியின் கட்டளையின் கீழ் குடும்பத்தை நடத்தும் ஒரு தந்தை அங்கே சுற்றுலாவுக்கு வருகிறார், வருகிறவர் இந்த நோய் தோற்று பகுதியில் சிக்கி கொள்ள, அவரது பிள்ளைகள் இன்னொரு பகுதியில் சிக்கி கொள்கின்றனர், அதாவது இவரும் இவர் மனைவியும் நீல் தீவிலும், அவரது பிள்ளைகள் போர்ட் ப்ளாயிர்ம் சிக்கி கொள்கின்றனர், அங்கிருக்கும் தன் பிள்ளைகளை இவர் எப்படி மீண்டும் சந்திக்கிறார், எப்படி திரும்புவார் என்பது அவர் பக்கத்து கதை, இதில் என்ன சுவாரஷ்யம் என்றால், அவர் நோய் தொற்றில் மனைவியை இழந்து விடுகிறார், பின் முதல் முறையாக தண்ணிச்சையாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் ஆளாகுகிறார், இதனால் அவர்பட்ட பாடுகள், ஒரு தந்தையாக அவரது பரிதவிப்பு என்று விகாஸ் நடிப்பில் கலக்குகிறார்,

இன்னொரு பக்கம் தன் கண் எதிரே தான் செய்த தவறுக்காக தன் நண்பனை இழந்த ஜோஸ்னா, அதன் பின் கார் ஓட்ட பயந்து ஒதுங்கி இருக்கிறார், ஆனால் ஒரு புள்ளியில் வேறு வழி இல்லாமல் ஒரு குழந்தையை காப்பாற்ற கார் ஓட்டுவதும் அந்த பிள்ளைகளை பத்திரமாக திருப்பி அனுப்ப போராடுவதும் இடையில் தன் காதலை மீண்டும் தேடி பிடிக்க முயற்சி செய்வதும் என்று அதே கதையில் இன்னொரு பரிணாமத்தில் அருஷி கலக்குகிறார்

மற்றொரு பக்கம் சுற்றுலா வருபவர்களை ஏமாற்றி அவர்கள் மூலம் கடத்தல் வேலை செய்யும் ஒருவன் இறுதியில் தன் உண்மையான பின்புலத்தை கண்டுபிடிக்கும் தருணமும், தன் வாழ்நாள் முழுக்க நான் எடுத்தே பழக்கபட்டுருக்கன், என்ன ஒருவாட்டியாவது கொடுக்கவிடுங்கனு, தியாகம் பண்ண கெஞ்சுற காட்சியிலும் சுகந்த் ஆஹா போட வைக்குறாரு

இந்த தொடரில் மிக முக்கியனான பாத்திரம் ரிட்டு காக்ரா, தன் அப்பா ஒரு மதிப்பு மிக்க உயர் அதிகாரியாக இருந்தும் தலித் என்னும் ஒரு காரணத்திற்காக வாழ்வின் கடைசிவரை நிமிரமுடியாமல் போன வேதனையை பார்த்து வளர்ந்த பெண், நீ எவ்வளவு படிச்சாலும் உன் surname வெச்சு உன்ன கீழ தள்ளிக்கிட்டே இருப்பானுங்க, ஒரு நாள் நீயும் என்ன மாதிரி ஒரு தோத்துப்போனவளா நிப்பன்னு அப்பாவே சொல்ல, அதை ஜெயிக்க ஓடிக்கிட்டே இருக்கா ஒருத்தி, கடைசியா ஒரு கட்டத்துல அவ படிச்சு மேல மட்டும் வரல அந்த படிப்பாள ஜெயிக்கிறா அப்போ அவளை Dr. காக்ரா என்று அழைக்கும் போது உடைந்து அழுது இன்னொரு செய்தியை நம்ம மனசுல ஆழமா பதிய வைக்குறா அது என்னனா, நீ படிச்ச மட்டும் போதாது நீ ஜெயிச்சாகனும் அப்போதான் உன் ஜாதியை தூக்கிட்டு ஒருத்தனும் உன்ன இரக்க முடியாது, மற்ற ஜாதிகாரங்க படிச்சா போதும் ஆனா நாம ஜெயிச்சாகனும், ஏனா படிச்ச போதும்னு நெனச்சோம் அவங்க திருப்பி அதிகாரத்துல உக்காந்துட்டு நசுக்குவாங்க, அதனால இப்போ ஜெயிக்கவும் வேணும், இது ஒருவகையான சமுதாய அழுத்தம் அவர்களுக்கு தெரியாமலே அவங்கமேல விழுந்துருக்குனு ரொம்ப தெளிவா புரியவைக்குது இந்த தொடர்.. Dr. ரிட்டு காக்ராவாக வாழ்ந்து ஆச்சரியப்படுத்திட்டர் ராதிகா

கடைசியா ASOP கேட்டேன், உணவு சங்கிலியில சின்ன பூச்சிங்க தான் முதலில் சாகும்னு உணவு சக்கரத்தோட விளக்கத்தோட சிரிச்சுகிட்டே எல்லாபகுதியிலும் வில்லத்தனத்தை வாரி வழங்குகிறார், என்னை கேட்டால் இந்த மொத்த தொடரிலும் சிறப்பாக நடிச்சவரு கண்டிப்பா இவருதா, ஒரு கார்பொரேட் கம்பெனிக்கு ஓடிப்போய் தானாவே உதவி பண்ற காரியக்கார போலீஸ் காரன், corruption பண்ணி punishment வாங்கி அந்தமானல் சீக்கிட்டு இருக்க அவரு திருப்பி வெளிய வர பண்ற செயல்கள் தான் இந்த மொத்த இணைய தொடர்ல நடக்குற பிரச்சனைக்கும் மூலகாரணம், கிட்டத்தட்ட ஒரு butterfly effect மாதிரி, ஆனா அவரே தான் இந்த pandamic முடிய கண்டிப்பா 2வது சீசன்ல காரணமா இருப்பாருன்னு இப்போவே கணிக்க முடியுது, அமே கேட்டன் சார் வந்து சிறப்பான சம்பவம் பண்ணிருக்காருனு தான் சொல்லணும்..

மொத்தத்தில் காலப்பாணி கண்டிப்பா பாக்கவேண்டிய ஒரு இணையத்தொடர், பல வகையான அரசியலை, உறவு சிக்கல்களை, காதலை, பழி உணர்வை, ஒரு காலாச்சார அழிப்பை இப்படி பல அரசியலை ரொம்ப இலகுவ பேசிட்டு போகுது, இதைவிட சிறப்பான தரமான சம்பவதை இரண்டாம் சீசன் செய்யும்னு நம்புவோம்..

பெயர் : காலப்பாணி
OTT: Netflix

#நான்விஜய் 

No comments:

Post a Comment