Saturday, 10 February 2024

காதல் சரித்திரம் - முகில்

#புத்தகம் : 10

#NaanVijay #நான்விஜய்

#valentinesmonth #valentinesday2024 #valentines #stories

பிப்ரவரி என்றாலே காதலை கொண்டாடும் மாதம் அதை புத்தகத்தில் இருந்து தொடங்குவது தானே வாசிப்பலனின் மன நிறைவாக இருக்க முடியும். எத்தனையோ காதல் கதைகள் புனைவுகள், வரலாற்று கதைகள் இருப்பினும், இந்த புத்தகம் தனி சிறப்பு பெரும், காதல் எல்லா சூழ்நிலையிலும், எல்லா மக்களுக்கும் இல்லை இல்லை எல்லா உயிர்களுக்கும் இனிக்க கூடியது என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதியவைக்கிறது இந்த காதல் சரித்திரம் புத்தகம்..

சினிமாக்களில் நாம் கேட்டிருப்போம் நீ எங்க போனாலும் நான் வருவேன், எத்தன கண்டங்களை வேணும்னாலும் தாண்டுவேன்னு, இதெல்லாம் கேட்க ஆக சிறந்த உருட்டுக்கள் அப்படினு நாம இவ்வளவு நாள் நெனச்சுக்கிட்டு இருந்தா ஒரு மனுஷன் கண்டங்களை தாண்டி போய் நிக்கிறான் அதுவும் வெறும் சைக்கிள 7000மைல் தள்ளி இருக்க தன் காதலை தேடி ஓடுறான், யோசிக்கவே அந்த காதல் கவிதையா விரியுது, யார்யா நீ எனக்கே உன்ன பாக்கணும் போல இருக்கேனு சொல்ல தோணுது.

உனக்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருப்பேன் என்பது இன்னொரு காதலின் ஆக சிறந்த உருட்டு.. சரி எவ்வளவு நாள் காத்திருக்க முடியும் 2வருஷம் இல்ல அதிகபட்சம் 10வருஷம் அப்படியே காத்திருந்து சேர்ந்தாலும் அந்த காதல் அதே அளவுக்கு இனிக்குமா? இனிக்கும் 1946ல் பிரிந்தவர்கள் 2007ல் சந்திக்கிறார்கள், நிச்சயமாக எதார்த்தமாக இல்லை, அவர்கள் காதல் குடிகொண்ட இடத்தில் அவர்கள் அவர்களை தொலைத்த இடத்தில் தேடிகண்டுபிடிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் மீண்டும் விட்ட இடத்தில் இருந்தே தனது எண்பதுகளில், இன்னும் காதல் அவர்களால் வாழ்ந்துக்கொண்டே தான் இருந்தது.

ஒரு காதல் என்ன செய்யும், அது புரட்சி செய்யும், ஒரு சமூகத்தை மாற்றும், கேள்விகேட்கும், சட்டத்தை நெடிந்து நிற்கவைக்கும்.. லாவிங் விர்ஜினியா என்று புது வரலாற்றை படைக்கும், காதளுக்கும் சாதி மதம் மொழி இனம் நிறம் என்று எதுவுமில்லை அது காதல் அதற்க்கு தேவை அன்பு ஒன்றுதான் என்று உலகிற்கு சொல்லவைக்கும்.

திருமணம் முடிவான ஒரு பெண் தன் சொந்த நாட்டில் அகதி ஆகிறாள், அவளது கனவு காதலை ஒரு பெட்டியில் சுமந்துகொண்டு ரயில் ஏறுகிறாள் அந்த ரயில் வன்முறையால் நொறுங்குகிறது, அவள் எல்லாமும் இழக்கிறாள் ஒன்றுமில்லாமல் ஆகிறாள், ஆனால் காதல் அவளை கண்டடைக்கிறது முடிந்த இடத்தில் தொடங்குகிறது.. அது மீண்டும் புதிதாய் பூக்கிறது.

உனக்காக எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வருவேன் இது இன்னொரு மகா உருட்டு காதலில், ஆனால் இதுவும் உண்மைதான் என்று ஒரு காதல் பேசுகிறது, எதையெல்லாம் தூக்கியெறிய முடியும், அவன் நாளைய அரசன் அதிகாரத்தை தூக்கி எரிந்தான், அவளை விடு இல்லை நாட்டை விட்டு வெளியேறு என்றதும் உயிராக நினைத்த நாட்டை தூக்கியேரிந்தான், இவ்வளவு செய்தவனுக்கு காதல் என்ன திருப்பி கொடுக்கும் அவனை நாட்டில் அதிபதியாக மீண்டும் நிலைநிறுத்தும், அவன் நாட்டை அவனை கொண்டாடவைக்கும், வரலாற்றில் அவன் பெயரை அழுதமாக எழுதும்.

ஒரு பெண் இறப்பினால் வலியை சுமந்து ஒரு ஆண் தானே தாஜ்மஹால் காட்டினான் என்று காலம் காலமாக பேசும் நம்மை பாவமாக பார்த்துக்கொண்டிருக்கிறது சிகப்பு தாஜ்மஹால், ஒரு மனைவியின் காதலுக்கு மவுன சாட்சியாக நின்றுக்கொண்டு

உலகின் உயரத்தில் இவர்கள் காதல் நிச்சயம் இருக்கும், இந்த உயர்ந்த காதலை உயர்த்தி சொல்லவே உலகிலே உயரமான இரண்டு பேரை இயற்கை கொடுக்கிறது, தீராத காதலை அவர்களின் உயரத்தில் விதைக்கிறது.. எவ்வளவு உருகி காதலித்தாலும் அவர்கள் காதல் உயர்ந்துக்கொண்டே போகிறது.. அதனால்தான் ஆசிரியர் இந்த காதலுக்கு உயர்ந்த காதல் என்று தலைப்பு கொடுத்திருக்கிறார் போல.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வார்கள், ஒரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னும் அப்படி சிலர் இருக்கலாம், பெரும்பாலான பெண்கள் அவர்கள் கனவுகளை துரத்த இரண்டு தடைகற்கள் உண்டு ஒன்று அவரது தாய் இன்னொன்று கணவன், தாயிடம் தப்பிய பின் கணவனும் அப்படி இருந்துவிட்டால் முடிந்தது கதை, ஒருவேளை கணவன் உதவியும் உலகம் தடுத்தால், இந்த கதையில் காதல் கணவன் உலகை மறைத்து நடுவில் நிக்கிறான் அவள் வெற்றிபெறுகிறாள், வெற்றி பெற்றவளை கொண்டாடும் உலகை மட்டும் அவன் வழிவிட்டு காட்டுகிறான். அங்கு அவன் தாயாகவும் கணவனாகவும், ஒரு தோழனாகவும் நிற்கிறான்... இல்லை இல்லை எல்லாம் சேர்ந்த காதலானாக நிற்கிறான்.

கலைகளில் சிக்கிய ஒருவனை கரம்பிடித்து நடத்துவது ஆசாத்தியமான ஒன்று அதை செய்ய தீரா காதல் வேண்டும் பாரதியின் செல்லமா போல, ஹிட்லரின் காதலி போல, அவனை பொறுத்துக்கொள்ள வேண்டும், அவன் ஓடிவந்து மடிசாய தேடும் போது தலைகோதி அமைதிப்படுத்த வேண்டும், ஏனெனில் அவன் ஆங்காரம் கொண்டவனாக இருந்தாலும் சரணடையும் இடத்தில் குழுந்தையாக இருப்பான், ஒரு உன்னத கலைஞனை அந்த காதல் தான் புதுப்பிக்கும் உயிற்பிக்கும் வளர்க்கும் வாழவைக்கும்

தொலைந்தவள் ஒருத்தி தான் முடிய போகிறோம் என்ற நிலையில் கனவு போல ஒருவன் வருகிறான் காக்கிறான் அன்பை பொழிக்கிறான், காதல் இங்கு மரணத்தில் இருந்து துவங்குகிறது.. மரணத்தை ஜெயித்து தொடங்கிய காதலை என்ன வென்று சொல்வது அது அமரத்துவம் வாய்ந்தது என்று நீடித்து நின்று சாட்சி சொல்லும்.

எல்லாமும் காதல் தானே, உன்னோட வாழ விரும்புகிறேன் என்று சொல்லும் போது இதை ஒரு ஆண் பெண்ணிடம் சொன்னால் தான் நியாயமாகுமா, ஏன் ஒரு பெண் இன்னோர் பெண்ணிடம் சொல்லக்கூடாதா அங்கு காதல் மலராதா? சராசரி காதலே பெரும் புரட்சிகளை செய்யும் போது இதை உலகமே இந்த காதலையே புரட்சியாக பார்க்கும் போது, அது எப்படி அமைதியாக இருக்கும், தன்னை போன்ற காதலை தேடி சேர்க்கும் அரவணைக்கும், போற்றும் பாதுகாக்கும் நூற்றாண்டை தாண்டியும் வாழும்.

பூவே உனக்காக படத்தில் விஜய் பேசும் வசனம் மதங்குறது மனுஷன்கிட்ட மட்டும்தான் இருக்கு ஆனா காதல் காக்க குருவிகிட்ட கூட இருக்கு. இந்த வசனத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு அழகான பென்குயின் காதலை லாயமாக இறுதியில் வைத்து நம்மையும் கொஞ்ச நேரம் ஆண்டர்டிக்க பக்கம் கூட்டி சேர்த்து ஆசுவாசபடுத்துகிறார்.. உடன் எந்த உயிரினத்திற்கும் காதல் எளிதில் அமைவதில்லை என்பதை புரியவைக்கிறார்..

வரலாற்றை ஒரு கதை படிப்பதை போல எளிமையாக எழுதுவத்தில் தான் எப்படிபட்ட ஆள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஆசிரியர்... காதலை கொண்டாட இதைவிட சிறந்த காதல் பரிசு என்னவாக இருக்க முடியும்..

எங்கேயும் காதல், விழிகளில் வந்து சட்டென்று மோத...!

புத்தகம் : காதல் சரித்திரம்
ஆசிரியர் : Mugil Siva
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 208
விலை : 288

No comments:

Post a Comment