Friday, 16 February 2024

மரிஜாப்பி : CPM அரசின் தலித் இனப்படுகொலை

#புத்தகம் : 11

#மரிஜாப்பி #படுகொலை #CPM #CommunistPartyOfIndiaMarxist #WestBengal #riots

#NaanVijay #நான்விஜய்

#ReadingMarathon2024

#24RM029 

உலகம் முழுக்க பரவி ஒரு வலிமையான சித்தாந்தமாக இருப்பது கம்யூனிசம், அனைவரும் சமம், அவனவன் உழைப்பிற்கு ஏற்ற கூலி கிடைத்திடல் வேண்டும் என்ற ஒற்றை குரல் ஒலித்தாலும், கம்யூனிசம் பேசும் தகுதியை இந்தியா இன்னும் பெறவில்லை அவர்கள் இருக்கும் நிலை இன்னும் கேவலமானது, சகமனிதனை மனிதனாக கூட பார்க்காத கொடூரமானவர்கள் அவர்கள் என்று சொன்னவர் மார்க்ஸ் அவர்கள். அந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபித்து காட்டி இருக்கின்றனர் மேற்கு வங்க கம்யூனிஸ்ட்க்கள்.

நாமசூத்ரா என்கிற ஒரு குழு தாழ்த்தப்பட்ட ஜாதியாக இருந்தவர்கள் காலனிய இந்தியாவில் முஸ்லிம்களுடன் இணைந்து வலிமையான ஒரு அரசியல் இயக்கமாக இருந்திருகின்றனர், எந்த அளவிற்கு என்றால், அம்பேத்கர் தேர்தலில் நிற்க இயலாமல் காங்கிரஸ் செய்தபோது, வங்காலத்தில் தங்கள் பகுதியில் நிறுத்தி அவரை ஜெயிக்க வைத்து அதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதும் வாய்ப்பை அம்பேத்கர் பெறுகிறார். ஒரு வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட இந்த நிகழ்வே முக்கிய காரணம். இத்தனை வலிமை வாய்ந்த இந்த அமைப்பை காங்கிரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை, இந்த நிலையில் தான் இந்திய பிரிவினை பற்றி பேச்சு வரும் போது நாமசூத்ரா மக்கள் அதிகம் இருந்த கிழக்கு வங்காலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க அங்கிருக்கும் காங்கிரஸ் வலியுறுத்துகிறது, ஏனென்னில் நமசூத்ரா அமைப்பு அங்கிருக்கும் வரையில் காங்கிரசால் அங்கு ஆட்சிக்கு வர முடியவில்லை, காங்கிரஸ் அங்கிருக்கும் உயர்ந்தசாதி ஹிந்துக்கலால் அந்த மாநிலத்தில் செயல் பட்டு கொண்டிருந்தது. பிரிவினையில் கிழக்கு பாக்கிஸ்தான் சென்ற நாமசூத்ரா மக்கள் அங்கிருந்த இஸ்லாம் மக்களால் மீண்டும் இந்தியாவிற்கு துரத்தப்பட 1950 முதல் அகதிகளாக மீண்டும் தாய் நாட்டிற்கே வருகின்றனர், அங்கிருந்து வந்த உயர்ந்தசாதி ஹிந்துக்கள், கல்கத்தாவில் இருக்கும் தனது உறவினர்கள் மற்றும் அரசின் உதவியோடு மீள் குடியமர்வு பெறுகின்றனர் ஆனால் அதன் பின் வரும் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை அவர்கள் அங்கிருந்து பிகார் மற்றும் சதீஸ்கர் மாநிலங்களுக்கு அகதி முகாமில் தங்கவைக்கபடுகின்றனர், அங்கு பல வேதனைகளை மக்கள் அனுபவிக்கின்றனர்.

இந்த நேரத்தில் மேற்குவங்கத்தில் தேர்தல் வருகிறது அன்று ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் எதிராக இடத்துசாரி அமைப்புகள் முக்கியமாக ஜோதிபாசு அவர்களின் தலைமையில் இருக்கும் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பினர், பல இடங்களில் அதிலும் தண்டகாருண்யவில் இருக்கும் அகதிகளை மீண்டும் மேற்கு வங்கத்துலயே குடியமர வைப்பாதக பிரச்சாரத்தை செய்து ஆட்சிக்கும் வருகின்றனர், இதை நம்பி பல ஆயிரகணக்கான அகதிகள் தண்டகாருண்யத்தில் இருந்து புறப்பட்டு 1975களில் மீண்டும் வங்கத்தை நோக்கி வருகின்றனர் இதில் பலபேர் வழியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர் தப்பித்தவர்கள் சுந்தர்பான் காடுகளில் இருக்கும் மரிஜாப்பி என்கிற தீவில் குடியேறுகின்றனர், சுமார் இரண்டாண்டுகளில் அந்த காட்டை சீற்படுத்தி அங்கு தொழிர்ச்சாலைகள், மருத்துவமனை, மீன்பிடி துறைமுகம், பள்ளிக்கூடம் என்று ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய அனைத்தையும் தாங்களே செய்துகொள்கின்றனர், இதை கவனித்த ஜோதிபாசு அரசு மாரீஜாபி ஒரு பாதுகாக்கப்பட்ட வனபகுதி அதில் இந்த தாழ்த்தப்பட்ட அகதிகள் அத்துமீறி நுழைந்து குடியேறி இருக்கின்றனர், உடனே அவர்கள் வெளியேற வேண்டும் என்று மிரட்டுகிறார், 1978ல் 144 தடையுதரவும் அங்கு போட படுகிறது, அதோடு பொருளாதார தடை விதிக்கப்படுகிறது, இதனால் அங்கிருக்கும் ஆயிரகணக்கான குடும்பங்களுக்கு உணவு மருந்து எதுவும் கிடைக்காமல் நோய்வாப்பட்டு இறக்கின்றனர், அதன்பின் காவல் துறை கட்சி தொண்டர்கள் உதவியுடன் அந்த தீவில் இருக்கும் அனைவரையும் வெளியேற்ற உள்ளே நுழைகிறது, அங்கிருக்கும் அனைவரையும் சுட்டுதள்ளுகின்றனர், குடிசைகளை கொளுத்துகின்றனர், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்கின்றனர், கிட்டத்தட்ட 17000 உயிர்களை அங்கு காவுவாங்குகிறது கம்யூனிஸ்ட் அரசாங்கம்.

எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒரு சின்ன தகவல் கூட வெளியில் போகாமல் இன்றுவரை பார்த்துக்கொள்கிறது, அரசு தரப்பில் வெறும் இருவர் இறந்ததாக பொய்யான தகவலை தந்து முடித்துக்கொண்டது ஒரு இன அழிப்பை. இடதுசாரிகள் நல்லவர்கள் என்கிற எண்ணம் எப்போதும் எனக்கும் நம்பிக்கை கொடுத்ததில்லை தன்னை அனைவருக்குமாணவர்கள் என்று சொல்லிகொண்டிருக்கும் எந்த இடத்துசாரிகளும் இதை கேள்விகேட்கவே இல்லை, பதிலாக அவர்களோடு சேர்ந்து மூடிமறைகின்றது , பிஜேபியின் குஜராத் கலவரத்தை போன்ற கொடூரம் மரிஜாபி ஆனால் யாருக்கும் தெரியாமலே போய்விட்டது, ஒருவகையில் இவர்கள் வலதுசாரிகளை விட கேவலமானவர்கள், ஜாதிய எண்ணம் இத்தனை உயிர்களை பலிக்கொடுத்தும் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இன்னொருவன் தவறை இன்று சுட்டிக்காட்டி கொண்டு அதில் மகிழ்ந்திருக்கிறார்கள்.

இடத்துசாரியோ வலதுசாரியோ அனைத்து அரசியல்வாதிகளும் ஐயோக்கியர்கள் தான்... ஜாதி கொலைகாரர்கள் தான்.

புத்தகம் : மரிஜாபி : சிபிஎம் அரசின் தலித் inaபடுகொலை.
ஆசிரியர் : ராஸ் மாளிக்
பதிப்பகம் : கருப்பு பிரதிகள்
பக்கங்கள் : 120
விலை : 120

No comments:

Post a Comment