Tuesday, 5 April 2016

Rabne Banathi Jodi Movie View

பார்த்ததில் ரசித்தது....!


ரப் நே பனாதி ஜோடி...

ஏதோ ஒரு படம் பார்ப்போம் என்றும் கணினியில் உள்ள திரைப்பட வரிசைகளில் சிலநாட்களாய் பார்காமலே வைக்கபட்டிருந்த படம்தான் "ரப் நே பனாதி ஜோடி"      என் நண்பன் பெரியதாக இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியது நினைவுக்கு வந்தது.. இதுதான் நான் படம் பார்க்க தொடங்கி கதை..

மிக எளிய கதை ஆனால் ஒரு திரைப்படமாக சொல்ல நிச்சயம் எளிதான கதை அல்ல, திரைகதை கொஞ்சம் சொதப்பினாலும் கதையின் கருவே கலைந்துவிடும்.. ஆனால் இயக்குனர் அங்குதான் தான் தன் கொடியை உயர்திபிடிதிருகிறார் என்றும் சொல்லும் அளவுக்கும் அற்புதமான திரைகதை அமைப்பு, அதிலும் காட்சி படுத்திஇருக்கும் முறை மேலும் சிறப்பு...!

தானி[அனுஷ்கா ஷர்மா] சந்தோசத்தின் உச்சத்தில் தான் காதலித்தவனையே திருமணம் செய்துகொள்ளும் சொந்தசதில் இருக்கிறார்... தன் ஆசிரியர் மகளான தானியின் திருமணத்திற்கு வந்து சேர்கிறார் சுரிந்தர்[ஷாருக்கான்] 
எதிர்பாராத விபத்தில் மாப்பிள்ளை விட்டில் அனைவரும் ஒரு விபத்தில் மரணிக்க.. இதை அறிந்த தானியின் அப்பாவும் நோய்வாய் படுகிறார் பிறகு, தன் மாணவனான சுரிந்தரிடம் தன் மகளை திருமணம் செய்யுமாறு கேட்க... அவரும் சம்மதிக்க.. தானியும், சுரிந்தரும் அவரின் அந்த இறுதி ஆசையை நிறைவேற்றி வைக்கின்றனர்... பின்புதான் கதையே தொடங்குகிறது... சிரித்து பேசி சந்தோசமாய் இருந்த தானி மீள முடியாத சோகத்தில் இருப்பதை பார்க்கும் தானி அவள் இயல்புநிலைக்கு கொண்டுவந்து தன்னை காதலிக்ககவைக்கும் போராடும் கற்பனைதான் இந்த திரைப்படம்

சுரிந்தர் என்னும் ஒருவர் தன் கணவர் என்பதைத்தாண்டி எந்த ஈர்ப்பும் இல்லமால் வாழத்தொடங்க முடிவு செய்கிறாள் தானி... முதல் பார்வைலையே அவளை காதலிகதொடங்கிய சுரிந்தர் அவளை பழைய நிலைக்கு கொண்டுவந்து தன் காதலை புரியவைக்க... அவள் ரசித்து பார்த்த ஒரு திரைபடநாயகனை போல் தன்னை மாற்றிக்கொள்ள, வந்திருப்பது தன்கணவன் என்றுதெரியாது... வேறுஒருவராக நினைத்து பழகதொடங்குகிறாள் தானி... இதையே பயன்படுத்தி அவள்மீது கொண்டுள்ள காதலையெல்லாம் கொட்டித்தீர்க்க தொடங்குகிறான் சுரிந்தர்... இறுதியில் அவள் காதலை சுரிந்தர் எப்படி பெற்றான், அந்த வேடம் என்ன இன்னல்களை கொண்டுவந்தது என்பது மீதிகதை...!

ஷாருக்கான் சுரிந்தராக நம்மை அனுதாப படுத்தி பின்பு, ராஜ் வேடத்தில் கலக்குகிறார், இடைவேளையில் ராஜ் தன் காதலை சுரிந்தர் சொல்லி பெருமைப்படும்போதும், தானி சுரிந்தரை விரும்பாமல் ராஜ் விரும்புவதை நினைத்து வேம்பும்போது நடிப்பில் பின்னி எடுக்கிறார், ராஜ் காதலிபதாக தானி சொல்லும்போது தன்னுள் இருக்கும் சுரிந்தரை மறைத்து ராஜ் மாறி பேசும் தருணம்... அந்த வலியை நமக்கும் உணரவைத்துவிடுகிறார், தன்னால் வெளிபடுத்த முடியாத காதலுக்கு வேஷமிட்டு அதை ரசிக்கும்போது, அந்த வேஷம் தன்னையே வெற்றிகொள்கிறது என்னும்போது வலிகொளோடு சிரிக்கும்போதும்... ஷாருக்கான் நடிப்பில் தன்னை யாரென்று மீண்டும் ஒருமுறை நிருபித்துவிடுகிறார்....

மிக சிறந்த காதல் திரைப்படமாய்... நான் பார்த்ததில் ரசித்தது....


                                                                                                     நான் விஜய்............!

No comments:

Post a Comment