#Scam2003 #TheTelgiStory #SonyLIV #NaanVijay
ஹர்ஷத் மேத்தா கதைக்கு பிறகு அதே குழு மீண்டும் இணைந்து தயாரித்திருக்கும் இன்னொரு உண்மை சம்பவம் இந்த ஸ்கேம் 2003, பள்ளிக்கூட நாட்களில் முத்திரைத்தால் மோசடி என்கிற வார்த்தை மிகவும் பிரபலம், பலமுறை பல செய்தித்தால்களிலும், தொலைக்காட்சியிலும் கேட்டது உண்டு, ஆனால் அதன் பின் இருக்கும் இந்த பிரமாண்ட கதையும் கேட்கும் போது ஒரு நிமிடம் ஸ்ஸ்த்தம்பிதே போய்விட்டேன்.
ரயிலில் பழம் விற்கும் ஒரு பட்டதாரி எப்படி இந்தியாவின் மிக பெரும் ஊழலை செய்தான் என்பதை மிகுந்த சுவரசியமிக்க திரைக்கதையுடன் சொல்லி இருக்கின்றனர், நிஜத்தில் இருக்கும் டெல்கியை போலவே ஒருத்தரை கொண்டுவந்து நம் கண்முன் நிறுத்தியத்தோடு அவரது நடிப்பு திறனும் வியக்க வைக்கிறது..
இதுவும் சரி இதுக்கு முன்பு வந்த ஹர்சத் கதையும் சரி ஒன்றை மட்டும் தெளிவாக விளக்குகிறது அது.. அரசியல்வாதிகள் என்றுமே பாதிக்க படுவதில்லை, அவர்கள் எளிமையாக இதில் இருந்து தப்பித்து கொள்ளுவார்கள்,
இந்த கதையில் ஒரு வசனம் வரும்.. நான் ஒரு எலியாக மட்டும் இருக்கும் வரை இந்த சட்டத்தின் ஓட்டையில் ஓடி ஒளிந்துகொண்டு தப்பித்து கொள்ளுவேன் என்று, ஆனால் அந்த எலி பெரிச்சாளியாக மாறாமல் யானையாக மாறினால் யாரால் தான் ஒளித்து வைக்க முடியும், இன்னும் இது போன்ற எத்தனையோ பெரிச்சாளிகள் கிங் கொங் உருவத்தில் இருந்தும் சட்டத்தின் ஓட்டையில் பெரியதாக்கி கொண்டு தப்பித்து கொண்டுதான் இருக்கின்றன, அதிகபட்சம் இன்னும் சில வருடங்கள் கழித்து இது ஒரு content ஆக மாறி இது போல இணைய தொடறாகவோ அல்லது திரைப்படமாகவோ வரும் போது எப்படில்லாம் பண்ணி இருக்கானுங்க பாரேன் அப்புடின்னு உச்சுக்கோட்ட தான் முடியுமே தவிர வேறு ஒன்னும் செய்ய போவதில்லை..
இந்த ஊழளுக்கெல்லாம் பின்னால் மறைந்து நிற்கும் அரசியல்வாதிகளை மீண்டும் வெட்கம் இல்லாமல் ஒட்டு போட்டு நாமும் பதவியில் உட்கார வைக்கதான் போகிறோம், காரணம் கேட்டால், ஒரு கும்பல் மதத்தை காப்பாற்ற என போகிறது இன்னொரு கும்பல் மதவாதிகளிடம் இருந்து காப்பாற்ற என்று சொல்ல போகிறது, ஆனால் யார் கண்ணுக்கும் பின்னால் நடக்கும் இந்த எகனாமிக்கல் crime எப்போதும் தெரியப்போவதில்லை...
So we will wait for another interesting scam story in coming days
No comments:
Post a Comment