#NaanVijay
#movies
#parking
கடைசியா தோனி தயாரிப்பில் ஹரிஷ் நடித்திருந்த திரைப்படம் LGM எனக்கு பெரிதாக விருப்பமில்லை, இருந்தாலும் ஹரிஷ் கதை தேர்வின் மீது எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு, என்னை பொறுத்தவரையில் இளம் தலைமுறை நடிகர்களில் சிறந்த கதை தேர்வு செய்யும் நடிகர்கள் ஹரிஷ் மற்றும் மணிகண்டன், இருவரும் தனக்கு எதில் சிறந்த பங்கு கொடுக்க முடியும் என்பதில் ஒரு அளவுக்கு தெளிவோடே இருக்கிறார்கள் என்றே தோன்றியது..
பல வீடுகளில் இருக்கும் சிறு பிரச்சனை தான் பார்க்கிங்.. ஒரே வீட்டில் கீழ் மட்டும் மேல் தளங்களில் வசிக்கும் இருவருகிடையில் ஏற்படும் பார்க்கிங் பிரச்சனை தான் இந்த படம், இன்னொரு வகையில் சொல்ல போனால், 60+ மற்றும் 25+ இடையில் இருக்கும் ஈகோ பிரச்சனை இந்த படம், அந்த ஈகோ வெளியில் அப்பட்டாமாக தெரிய பார்க்கிங் ஒரு சின்ன காரணம் மட்டுமே...
Spoiler alert
முதல் நாள் நாயகன் மேல் வீட்டிற்கு குடிவந்ததில் இருந்தே அவரைபற்றிய பெருமையை தனது வீட்டில் இருப்பவர்கள் பாட துவங்குவதில் இருந்து தொடங்குகிறது இந்த பிரச்சனை, தன்னால் தான் எல்லாம் நடக்கிறது, என்ற கர்வமுடைய ஒருவர் முன் அவரால் தான் அந்த குடும்பம் அழகாக இருக்கிறது என்று சொல்லும் போதே இவரின் ஈகோ வெளிப்பட துவங்குகிறது, இருப்பினும் எந்த முகாந்திரமும் இல்லாமல் அதை வெளியில் காட்டவும் முடியாமல் பிறர் மீது எரிந்து விழும் குணம் ஒருநாள் அதை தீர்த்துக்கொள்ள ஒரு சிறிய காரணத்தை பிடித்து கொள்கிறது, அதுதான் பார்க்கிங்...
பாஸ்கர் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஈகோவில் தன்னை பொறுத்திக்கொண்டு குணமாற்றம் அடைவதை நடிப்பில் மிக தெளிவாக காட்டுகிறார்.. அவரின் அந்த நடிப்புதான் இந்த படத்தை சரியான எமோஷனல் ட்ராமாவாக மாற்றுகிறது, அவர்க்கு எதிரில் நின்று அந்த எமோஷனல் moment தாங்கி நிற்பதற்கே ஹரிஷை பாராட்ட வேண்டும், இரு துருவங்களும் அந்த கதாபத்திரத்தில் சரியாக பொருந்தும் போது படம் தன்னை தானாகவே காப்பாற்றிக்கொள்ள தயாராகி கொள்கிறது..
இயக்குனரின் எழுத்தை பார்ட்டியே ஆகவேண்டும், ஒரு சின்ன விஷயத்திற்குள் ஒரு ஆழமான psychology வகுப்பெடுத்திருக்கிறார், இருவரும் கெட்டவர்கள் இல்லை, இருவரும் நல்லவர்களும் இல்லை, இருவரும் சூழலில் தங்கள் மனம் போன போக்கில் தன்னை சுற்றி இருப்பவர்கள், ஏன் தங்கள் நிம்மதி பற்றி கூட கவலைபடாமல் எடுக்கின்ற முடிவுகளால், பல மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர்.. இந்த மன நிலையை தனது தெளிவான எழுதுகல்லாலும், நேர்த்தியான காட்சி அமைப்பாலும் நமக்கு தெளிவாக கடத்துகிறார்.. இதுவே மிக முக்கியமானது.. அதே போல ஒரே கதையில் பயணிக்கிறார்.. எந்த பக்கமும் படம் திசை திரும்பவில்லை, காதல், கல்யாண போராட்டம், குழந்தை சிக்கல் இப்படி பல விஷயங்களை கொண்டு ஒரு இடியப்ப சிக்கல் திரைக்கதை அமைக்க வாய்ப்பிருந்தும், சொல்லவந்த கதையில் மட்டும் கவனம் செலுத்தியது நம்மையும் அந்த கதையில் மட்டும் கவனம் செலுத்த உதவுகிறது...
ஹரிஷ் கல்யான், பாஸ்கர் இவர்களை தாண்டி பாஸ்கர் அவர்களின் மனைவியாக நடித்தவரும் ஒரு இடத்தில் கணவனை திட்டுவது, ஒரு இடத்தில் கணவனுக்காக திட்டுவது, தன் மகள் விஷயத்தில் பாஸ்கரின் தவறான முடிவை சுட்டிக்காட்டுவது, தன் மகளை கொண்டு நடத்தப்பட்ட நாடகத்தை நிறுத்த தன் சொந்த தம்பியையே விரட்டுவது என்று ஒரு சரியான மனைவி அம்மா கதாபாத்திரதை நடத்தி இருக்கிறார்.. ஹிந்துஜா ஒரு வழக்கமான மனைவியாவே தெரிகிறார்.. இன்னும் கூட கொஞ்சம் காட்சிகள் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றினாலும், அது ஒருவேளை திரைக்கதையை தொய்வில் கொண்டுபோய் இருக்கலாம் என்கிற இயக்குனரின் யோசனையாக இருக்கும் என்றே தோன்றுகிறது..
மொத்தத்தில் மனங்களின் பிரச்சனைகளை பேசும் பார்க்கிங் இந்த வருடத்தின் இன்னுமொரு முக்கிய படம்
No comments:
Post a Comment