Wednesday, 26 March 2014

வெற்றி


 

வெற்றிக்கு எதிரான சூழ்நிலை


              உலகில் வெற்றி பெற தயாராய் இல்லாத எல்லோரிடமும் ஒரு காரணம் எப்பொழுதும் தயாராகவே இருக்கும், அதில் பிரதானமான காரணம் சூழ்நிலை, உண்மையில் சூழ்நிலை அத்தனை வலுவானதா..........

         ஜெயித்தவர்களுக்கு மட்டும் இந்த சூழ்நிலை எப்படி, சாதகமாகியது, நமக்கு மட்டும் ஏன் இதனை பாதகமாக மாறியது என்பது உங்கள் கேள்வியாக இருக்கும் பட்சத்தில் இந்த பதிவை தொடர்த்ந்து படியுங்கள் ஒரு வேலை உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

அப்படி என்ன சூழ்நிலை:

               வெற்றியை அடைய முடியாமல் அதை தொடக்கூட முடியாத அல்லது அதற்கு முயற்சிகூட எடுக்க முடியாத படி நம்மை தடுக்கிற சூழ்நிலைகள் கிழே குறிக்க பட்டுள்ளன.
  • குடும்ப பொருளாதாரம் 
  • படிப்பு 
  • உடல் ஊணம்
 நான் அறிந்தவரை வெற்றி எட்டதவர் சொல்கிரகாரணங்கள் இதில் எத்தவது ஒன்றை சார்ந்ததகதான் இருக்கும், அப்படியானால் இந்த சூழ்நிலைகளை வெற்றி கொள்வது தான் எப்படி?

ஒரு கதை:

                      ஒரு கிராமத்தில் பிறந்த இளைஞன், நன்கு படிக்கக்கூடியவன், I.I.T . எனும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் மேலாண்மை படிப்பை படிக்கும் வாய்ப்பை தன் திறமையாலும், படிப்பாலும் பெற்றான், படித்து முடித்ததும் பல லட்சங்களில் வேலை வந்தும், அதை  தள்ளிவிட்டு, இருபது வருடம் தன்னை இட்லி வித்து படாதபாடு பட்டு இன்னும் அந்த இட்லி வியபரதாலையே தன் குடும்பத்தை நடத்திவரும் தன் தாய் இடம் சென்று. அம்மா எனக்காக நீ இருபது வருடம் கஷ்டப்பட்டு என்ன வளத்துட்ட இன்னும் கொஞ்சம் வருஷம் இந்த கஷ்டத்த எனக்காக பொறுத்துக்க அம்மா என்று கூற, தன் மகனின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தார் முடிவு, இன்று இந்திய நாட்டில் உள்ள தலை சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக மாறிபோனர் அவர் வேறு யாரும் அல்ல சரத் பாபு எனும் இளம் தொழிலதிபர்தான் அவர். இவர் வாழ்கையில் இவருக்கு வறுமை ஒரு தடையாய் இல்லை காரணம் இவர் வறுமையை கண்டு பயபடாமல் அதோடு போட்டிபோட்டு ஜெயித்தார்,  இன்று அவர் அம்மாவின் இட்லியை உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்ததோடு foodking என்னும் பட்டத்திற்கும் உரியவரானார்,
திரு.சரத் பாபுவும் அவர் தாயாரும் 

              இவர் மட்டும்மல்ல இந்தியாவில் ஏன் உலக நாடுகள் பலவற்றில் ஜெயித்தவர்கள் தங்கள் வாழ்கையை வறுமையில் இருந்து தான் ஆரம்பித்தனர், பின்பு வறுமை உங்களுக்கு மட்டும்தான் தடையாய் இருக்கிறது என்றால் பிரச்சனை வறுமை அல்ல. நீங்கள் தான் என்பதை உணருங்கள்.

படிப்பு:

                    பலர் தங்களை நொந்துகொள்வதும், தங்களை தாழ்வாக எண்ணுவதற்கும் காரணம் அவர்களிடம் படிப்பு இல்லை என்பதாகத்தான் இருக்கும் என் நண்பர்கள் சிலர் பள்ளி படிப்பை பாதியில் நிறுதினவர்கள், அவர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம் "நானும் உன்னை மாதிரி படித்திருந்தால் இன்னைக்கு வாழ்கைல ஜெய்திருப்பென் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள், உண்மையில் படிப்பின்மை வெற்றிக்கு எதிரியா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது, அதோடு ஜெயித்தவர்கள் எல்லோரும் படிப்பினை கொண்டுதான் வெற்றியை ருசிதார்களா என்ற என் கேள்வியோடு என் தேடலை தொடங்கினேன் அதற்கான பதில் கிழே பதிவிட்டுள்ளேன்.

இவர்கள் படிப்பை ஜெயித்தவர்கள்:

பெருந்தலைவர் காமராஜர்

 

  •   பெருந்தலைவர் காமராஜர் , இவர் 5ம் வகுப்புகூட தாண்டாதவர், ஆனால் இன்று இவரை மறைத்து தமிழகத்தின் வரலாற்றை எழுத எவராலும் முடியாது ர=என்னும் நிலையை ஏற்படுதிருகிறார், இந்தியாவின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேகர் என்னும் புகழுக்கு சொந்தமான காமராஜர் ஒரு படிக்காத ஏழை குடும்பத்தில் பிறந்த சாதாரண தமிழன், அவருக்கு நீங்கள் [பார்க்கும் சுழ்நிலையைவிட பாதகமான சூழ்நிலைதான் அமைந்தது அதை அவர் அறிவுதிறதால் வென்றாரே தவிர படிபில்லையே என்று காரணம் சொல்லி ஓடி ஒளியவில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                                   
    திரு.கோபால்சாமி டி. நாய்டு[G .D .நாய்டு ]
  • திரு.ஜி.டி.நாய்டு, இந்தியாவிற்கு கிடைத்த அறிவு பொக்கிஷம், ஜப்பானியர்களால் இந்தியாவின் ஐன்ஸ்டின் என்று கொண்டடபட்டவர், இவர் படித்து 4ம் வகுப்பு, அப்பொழுதே படிப்பு பிடிக்காமல் வெளியேறிய அவர் கோவையில் பல கடைகளில் வேலை செய்து ஒரு சிறு தொகையை சேர்த்து ஒரு இருசக்கர மோட்டர் வாகனத்தை ஒரு வெள்ளைகாரரிடம் இருந்து பெற்றார், அவருக்கு அதை ஓட்ட தெரியாது இருப்பினும் அதை பலமுறை கழட்டி மீண்டும் ஒன்றுசேர்த்து, அதில் இருந்து யார் உதவியும் இல்லாமல் மோட்டர் தொழிநுட்பத்தை தன் வழியிலேயே கற்றுக்கொண்டார், அது மட்டுமல்ல், இன்று நாம் பயன்படுத்தும் ballpoint pen வெளிநாட்டவர் கண்டுபிடிபென்று பலரும் நினைகின்றனர் உண்மையில் அதை கண்டுபிடித்தவர் திரு.ஜி.டி.நாய்டு, அவர்கள் தான், அவர் வாழ்நாளில் பல சரித்திர சாதனைகளை செய்தவர், அவர் இறந்த பின் அவரது மூளையை ஆய்வு செய்ய ஜப்பானியர்கள் பல முறை கேட்டிருகின்றனர், இப்படி பட்ட அந்த மாமேதை, பள்ளி வாழ்கையை வெறுத்தவர், படிப்பது தன் வெற்றிக்கு தடை என்று தூக்கி எறிந்தவர் அவர். அவருக்கு படிப்பு எந்தவகைலும் தடையாக ம்=நிற்கவில்லை.....            
    அடிமைகளின் சூரியன் அபிரகாம் லிங்கன்
  • அமெரிக்க முன்னால் அதிபர். திரு ஆபிரகாம் லிங்கன், பள்ளி படிப்பை அறியாதவர், சாதாரண செருப்பு தைக்கும் கூலி வேலை செய்பவரின் மகன், செருப்பு தைத்தல், மரம் வெட்டுதல் என்ற ஒரு ஏழ்மை வாழ்வையே வாழ்ந்தவர், ஆனால் இன்று அவரை யாரும் செருப்பு தைப்பவர் என்று சொல்வதில்லை, அடிமைகளின் சூரியன் என்று, உலக மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்க படுகிறார்,இவர் தான் நினைத்த இடத்தை அடைய படிப்பு அவருக்கு உறுதுணையாக இல்லை, ஆனால் அதற்காக அவர் தன் ஓட்டத்தை நிறுத்திடவும் இல்லை, படிப்பை வென்றார் பலர் வாழ்கையையே மாற்றினர் இந்த படிக்காத மாமனிதர்.......
                                                   
                                       இப்படி இன்னும் பலர் உலகில் படிப்பை ஜெயித்து இந்த உலகத்தையே, மாற்றி இருகின்றனர், அவர்களுக்கெல்லாம் தடையை இல்லாத படிப்பு உங்களுக்கு மட்டும் தடையை இருக்கிறது என்றல் தவறு படிபினுடையது அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

உடல் ஊனம்: 

                    மாற்றுதிரனாளிகள் பல பேர் இந்த உலகில் அரிய பெரும் சாதனைகள் படைதுள்ளர்கால் ஆனால் நம்மில் சிலரோ வெகுசிறிய அங்க ஈனத்தை எல்லாம் ஊனம் என்று கருதி, தங்கள் வெற்றியை தாங்களே தொலைதுவிடுகிரர்கள், நான் சிறிது காலத்திற்கு முன்பு ஒரு பார்வை திறம் அற்ற பிள்ளைகள் இருக்ககூடிய விடுதிக்கு அவர்கள் படிக்க உதவக்கூடிய வாய்ப்பு கிடைத்தது, அங்கு இருக்கும் பிள்ளைகள் அனைவரும் பெண்பிள்ளைகள் அத்தோடு முற்றும் பார்வை திறம் அற்றவர்கள், ஆனால் உங்களுக்கு தெரியுமா, அவர்களிடத்தில் ஒருநாளும் தாங்கள் பார்வை திறன் அற்றவர்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்ற போக்கை நான் பார்த்ததே இல்லை, தங்களிடம் உள்ள அந்த குறையை அவர்கள் பெரிதாக அவர்கள் நொந்ததுகூட கிடையாது, அவர்கள் ஒவ்வொருவரும் படிப்பில் படுசுட்டி, அவர்களுக்கு முன்னால் நம் மனன சக்தியும், படிப்பு திறமும், தோற்றுவிடும், அத்துணை அறிவு கொண்டவர்கள்.
                                     இவர்கள் மட்டுமல்ல, இந்த உலகில் பலர் ஊனத்தை வென்று, மன உறுதியை நிலைநாட்டி இருக்கிறார்கள், அவர்களில் ஒருவரை நிச்சயம் நான் உங்களுக்கு சொல்லியே அக வேண்டும். ஒரு அருமையான பெற்றோர், நடுத்தர குடும்பம், அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது, அது நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துவந்தது, ஆனால் அந்த குழந்தையால் நடக்க மட்டும் முடியவில்லை, மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு இளம் பிள்ளைவாதம்[polio ] என்று சொல்லி கை விரித்துவிட்டார், அந்த குழந்தைக்கு உலகம் புரிய ஆரம்பித்த பொது, தன்னால் நடக்கமுடியாது என்கிற கசப்பான உண்மை அந்த பெண்ணை கொன்றது, ஆனாலும், தன் வாழ்கை இதோடு முடிந்துவிட்டது என்று ஓய்ந்துவிடாமல், தன் ஊனத்தோடு போராடினால், முடிவு, நம்மால் கற்பனைகூட செய்யமுடியாத ஒன்று, ஆம் 1956 ஒலிம்பிக் போட்டிகளில், கலந்துகொண்டு, ஓட்டபந்தயத்தில், தங்க பதக்கம் வென்றால், இன்று ஷெரின் எனப்படும் அந்த சாதனையாளர் தன் ஊனத்தை வென்று, இன்று உலகத்திற்கே முன்னுதாரணமாய் இருகின்றார்...

                                 இந்த பதிப்பை படித்த பின்பும், என் சூழ்நிலை உங்களுக்கு வெற்றியை தர தடையாய் இருக்கிறது என்று கூறுவீர்களானால், பிரச்சனை சூழ்நிலை அல்ல, உங்கள் சொம்பரிதனமும், அறியாமையும், முட்டாள்தனமுமே ஆகும்........................

                                                                                                                      இப்படிக்கு,
                                                                                                                         நான்......!

No comments:

Post a Comment