Saturday, 8 March 2014

Nimirnthu Nil

                                        








                                   நிமிர்ந்து நில் 

                     என் வலைபதிவுகளில் திரைபட விமர்சங்கள் வேண்டாம் என்ற என் முடிவை முதல் நாளே முடித்து வைத்துவிட்டது திரு,சமுத்திரகனி அவர்களின் திரைப்படமான "நிமிர்ந்து நில்" நிச்சயம் மெட்சிக்க வேண்டிய ஒரு தைரிய முயற்சி, என் மனதில் பல நாள் என் மேலும் நான் வாழும் என் சமுகத்தின் மேலும் எனக்கும், எனை போன்றோர்க்கும் இருக்கும் ஒரு கோபத்தினை, இந்த திரை படத்தில் என்னால் உணர முடிந்தது,

                              நிச்சயம் இது வேதனை படவேண்டிய நிலை தான், காரணம் இன்னும் திரைப்படங்களில்  மட்டுமே என் கோபத்தை  பார்த்து அதை பாராட்டிவிட்டு, என் தினசரி அலுவலை பார்க்க கிளம்பிவிடும் அந்த சுயநல மனோபாவம்,  நான் மட்டுமல்ல என்னை போல எத்தனையோ இளைஞ்சர்கள் இந்த பாரத நாட்டின் ஒவ்வொரு தெருவில்லும் ஒளிதிருகிரார்கள்.
      
                             இந்த  திரைபடத்தில் ஒரு வசனம் "நம்ம இனத்தையே அங்க கொன்னுகுவிசுகிட்டு இருந்தப்ப அத பாத்து பதறி பொய், அப்புறம் IPL SCORE பாக்க போய்ட்டோம்" என்று சொன்னது, என்னை நாடு ரோட்டில் நிற்கவைத்து செருப்பால் அடித்தது போன்று இருந்தது, இந்த பதிவு நிச்சயம் இதை படித்தபின்பு நிமிர்ந்து நில் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, பார்த்தல் நன்றாக இருக்கும் என்பதற்காக........................
     
                                                              நன்றி!!!!!!!!!!!!!
                                                                  
                                                                                                                          இப்படிக்கு,
                             
                                                                                                                           நான்.........


No comments:

Post a Comment