காதல்
இந்த அற்புத உலகில், அனைத்து இளைஞர்களின் ஓட்டமும், துடிப்பும் ஒன்றை நோக்கியதாகவே உள்ளது. அது இறைவனில் தொடங்கி சாமானியனையும் அடிமை ஆக்கிவைத்து இருக்கிறது, அத பெயர் முன்பு காமமாய் இருந்து, இன்று காதலாய் திரிந்திருகிறது, உண்மையில் காதல் இன்றைய இளையர்களின் உணர்வை இருக்கிறதா அல்லது வெறும் கொண்டடதொடு முடிந்து விடுகிறதா?
இந்த கேள்விக்கு விடைகாணும் நோக்கோடு இந்தபதிவை எழுத முடிவு செய்தேன், இடையில் எனக்கு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது, அந்த வாய்ப்பு காதலை பற்றிய என் எண்ண ஓட்டத்தையும் சற்று மாற்றிவிட்டது, அதில் இருந்து ஒரு உண்மையும் தெரிந்து கொண்டேன் . காதல் என்பது தாஜ்மஹாலிலும், கடற்கரை , பூங்காலில் சுற்றி திரியும் இளைஞர்களிடமும், திரைப்படங்களிலும், நான் நாம் படிக்கும் கதைகளிலும் இல்லை என்பதை, பின்பு வேறு எங்கு தான் காதல் இருக்கிறது என்ற உங்கள் கேள்வி நானும் என் மனதிடம் எழுப்பினேன், அதுவும் மிக திடமாக சொன்னது காதல் உன் வீட்டிலேயே இருக்கின்றது என்று..........
ஆம் என் மனம் இந்த பதிலை சொல்லியதும் நான் என் வீட்டில் என் அறையை விட்டு வெளிவந்து பார்த்தேன், அங்கு தலைவலியில் படுத்திருக்கும் என் அம்மாவுக்கு மருந்து கொடுத்து தூங்கவைத்துவிட்டு கவலையோடு பார்த்து கொண்டிருந்த என் அப்பாவை, காதல் இதோ என் வீட்டில் என் அப்பாவுக்கும் ,அம்மாவுக்கும் இடையில் சற்றும் இடைவெளிவிடாமல் நிறைந்திருப்பதை கண்டேன், அவர்கள் இருவருக்கும் திருமணமான நாள் முதல் இன்று வரை ஆயிரம் சண்டைகள் வந்திருக்கும், ஆனால் இதுவரை என் அம்மா அவர் பிறந்த வீட்டுக்கு என் அப்பா இல்லாமல் போனதே கிடையாது. இதையெல்லாம் நான் அறிந்தும் காதலை தேடிய என்னை, என் வீட்டில் ஒளிந்திருக்கும் காதலை நினைவு படுத்தியது, இந்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம்,
இன்றைய இளைஞர்கள், திருமணத்தின் பின்பு அவர்களுக்கு இடையேயான யார் பெரியவன் என்ற போட்டியலும், படிப்புதந்த அதிமேதாவிதனத்தால் காதலை தொலைத்துவிட்டு நீதிமன்றம் நாடுகிறார்கள், தயவு செய்து, இன்றைய இளையர்கள் திரைப்படங்களையும், நாவல்களையும், தெருக்களிலும் பார்த்து காதலை தேடாமல், ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, அன்பை பொழியும், நம் பெற்றோரை பார்த்து காதலை கற்றுகொள்வோம்............
ஆதலால் காதல் செய்வீர்.....................!
இப்படிக்கு,
நான்...........


No comments:
Post a Comment