பயம்
இன்று பலர் தங்கள் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாமல் இருப்பதற்கான ஒரே காரணம் இந்த பயம், இந்த பயம் எங்கு எப்பொழுது யாருக்கு ஏற்படும்? நிச்சயம் அனைத்து சமயங்களிலும் அனைவருக்கும் இந்த பயம் ஏற்படும், இதனால் ஒருவன் தன் வாழ்நாளில் காத்திருந்த பல வெற்றிகளை இழந்திருக்கிறான் என்பது, வருத்தத்திற்குறிய செய்தி ஆகும்.
எதற்கு எல்லாம் மனிதன் பயபடுகிறான், என்று ஒரு அட்டவணை தயார் செய்ய முடிவு செய்தால், அது இந்த நாடு கொள்ளாது, அத்தனை நீளமானது, இந்த பயத்தின் வலிமை, உண்மையில் பயம் என்பது நம்மை நாமே சுற்றி போட்டுக்கொண்ட மாயாவேலி அது இன்று நம்மை அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்பது தான் உண்மை, ஒருவனுக்கு காலையில் எழுந்ததும் ஆரம்பிக்கிறது இந்த பயம், அது இரவு தூங்க போகும் வரையில் நீடித்து கொண்டேதான் இருக்கிறது, இந்த பயமானது, எல்லா மனிதனையும் எதோ ஒரு பரிமாணத்தில் அக்கரமித்து கொண்டுதான் இருக்கிறது, கலையில் எழுந்ததும் இன்று அலுவலகத்தில் நேரம் ஆகிவிடுமே என்ன சொல்வது என்பதில் ஆரம்பிக்கும் பயம் இரவில் மீண்டும், நாளைக்காவது சீக்கிரம் செல்ல வேண்டும் என்று இரவு படுக்கையில் யோசிப்பது வரை தொடர்கிறது,
எப்படி இந்த பயம் நம்மை அடுத்தநிலை கொண்டுசெல்ல தடையாய் இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம், இந்த பயம் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிடும் என்ற நிலை வரை சரி தான், ஆனால் அதுவே அன்றாட அனைத்து நிகழ்வுகளிலும், பழக்க பட்டுவிட்டால், அது மிகபெரும் ஆபத்தாக முடியும், நாளை உங்கள் அலுவலகத்தில், உங்களுக்கு ஒரு உயர் பதவி கிடைப்பதாக இருந்தால் அதை ஏற்றுகொல்வதின் மூலம், பணி சுமையும், அதனோடு, பொறுப்பும் அதிகமாகிவிடும் என்ற பயம் அங்கு உங்களை தொடர அதிக வாய்ப்பு இருக்கிறது, இதை நான் பல என் சக நண்பர்களிடம் இருந்து தெரிந்துகொண்ட உண்மை, என் நண்பர்கள் பலர் அடுத்த உயர் பதவிக்கு தகுதி பெற்றும், அவர்கள் பணிபுரியும் நிறுவனமே அந்த பொறுப்பை தர முன்வந்தும் ,அவர்கள் அதை மறுத்து, தாங்கள் இருக்கின்ற நிலையிலேயே தொடர முடிவு எடுத்தனர், இந்த நிலைக்கு காரணம், அவர்களது இயலாமை அல்ல, அவர்களது பொறுப்புகள் மீதான பயம். இந்த பயம் அவர்களை, அடுத்த நிலைக்கு துணிந்து செல்ல வழிகொடுக்காமல், ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறது, இது பின்னாளில் அவர்கள் செயல் திறன் அற்றவர்கள் என்ற ஈழி சொல்லையே தேடித்தரும், போராட நினைபவனுக்கு பயம் இருக்க கூடாது, பயம் இருப்பவனால் போராட்டக்களத்தை பார்க்க கூட முடியாது, இன்று உங்களுக்குள் இருக்கும் பயத்தை உணர முயற்சி செய்து பாருங்கள், அது உங்களை எங்கு எல்லாம் தோற்கடித்தது என்ற உண்மை உங்களுக்கு புரியும்,
பயம் என்னும் இருட்டை தன்னம்பிக்கை என்னும் தீக்குச்சியின் வெளிச்சத்தை கொண்டே அகற்ற முடியும்.............!
தன்னம்பிக்கையுடன்,
நான்...............!




No comments:
Post a Comment