Sunday, 1 May 2022

கருப்பு சட்டை- சுகி சிவம்

65/100

#NaanVijay

#நான்விஜய்

வேர்ட்ஸ் ஒர்த் புத்தக நிலையம் சார்பில் 03.01.16 அன்று நடைபெற்ற புத்தக கண்காட்சியில் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 11, நூலை வெளியிட்டு ஐயா சுகி. சிவம் பேசிய உரையே இந்த புத்தகம்..

பொதுவாக அவரது காணொளி பேச்சுக்களில் நீங்கள் கேட்கும் தகவல்களே புத்தகமாக வெளி வந்திருக்கிறது.. சுகி. சிவம் அய்யா ஒரு ஆன்மிக பேச்சாளர் என்றாலும் சிறந்த பகுத்தறிவாலர் என்பதை அவரது பேச்சில் நம்மால் உணரமுடியும் அதனாலே பல சர்ச்சைகளில் ஒரு கூட்டம் அவரை சிக்க வைக்க பலநாட்களாக போராடி கொண்டிருக்கிறது...

அப்படி இருக்க இந்த புத்தகத்தில் பெரியார் சிந்தனைகள் ஏன் இந்த நாட்டுக்கு தேவை என்றும், விவேகானந்தர் அசைவம் சாப்பிட்டவர் என்று  பல கருத்துகளை முன் வைப்பதோடு அதற்கும் இன்றைய முட்டாள் தனமான அரசியல்கும் சம்மந்தம் இல்லை என்பதையும் புரிய வைக்கிறார்..

கி. வீரமணி அவர்கள் எழுதிய புத்தகம் என்பதால் நாத்திகத்தை தூக்கி பிடிக்கும் செயலாக இல்லாமல் பகுத்தறிதல் என்ற தளத்தில் இதை படிக்கும் பொழுது.. ஒரு சிறந்த சிந்தனையாளனின் பேச்சாக நிச்சயம் இந்த புத்தகம் மிளிரும்...

புத்தகம் : கருப்பு சட்டை
பக்கங்கள் : 32
ஆசிரியர் : சுகி. சிவம்
பதிப்பகம் : திராவிடர் கழகம்.
விலை : 30

No comments:

Post a Comment