ஒரு இளம் மாலை நேரம்.. ரம்மியமான காற்று... ஒரே ஒரு மரம் மொத்த ஊருக்கும்... அதுவும் இன்றோடு கடைசி... நாளை எங்கள் வீட்டு பலகணிகளையும், முற்றத்தையும், வரவேற்பரையையும்... பல்வேறு கலங்களாய் மாறி ஆக்ரமிக்க போகிறது இந்த மரம்... என் நண்பனோடு உரையாடல் முடிவு செய்தோம் நாளை வேலையை முடிப்பது என்று... இனி மாலை பொழுதில் எங்கள் ஊரின் கடைசி மரத்தின்... கடைசி நாளின் கொஞ்சம் காற்றை ரசித்து ஸ்லோகித்து துயில் கொள்ள போகிறேன்.. உறக்கம் எத்தனை இனிமையானது.. உறக்கம் என்று ஒன்று இல்லாமல் போனால் மனம் அமைதி கொள்வதுதான் எப்படி, உணர்வடக்கி, ஆழ தூங்கி, கனவுகள் அற்ற வேற்று தூக்கம் கவலையை மறக்கும் ஒளஷதம்...
நல்ல தூக்கம், எதோ ஒரு சத்தம் உடம்பை உசுப்பி விட்டு எழுப்ப செய்கிறது, தொலைக்காட்சி ஒளி ஒலி, மனிதனின் படைப்பில் இடையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி இன்று பார்க்க ஆளின்றி நிற்காமல் ஓடி ஒலி எழுப்பி கொண்டிருக்கும், தினமும் ஓடிகொண்டிருக்கும் தேவை அற்ற ஒலி ஒளி எதோ, அட இது என்ன உலகம் திடீரென்று இத்தனை பரபரப்பாகி இருப்பதாய் தோன்றுகிறது... அத்தனை ஆர்ப்பாட்டத்திலும் மனம் முதலில் தேடியது அலைபேசி எனும் ராட்சசனை தான்... ஆம் நேரம் கொள்ளும் ராட்சசன், காலை எழுவது துவங்கி, இரவு சாய்வது வரை கரங்களை விடாது பிடித்திருக்கும் தொழில்நுட்ப பேய்.. அந்த பேயிடம் தான் வெளியில் நடக்கும் கலவரத்திற்கு காரணம் தேட போகிறேன்...
அட என்ன இது இங்கு இருந்த மரத்தை காணவில்லை... என் நண்பன் எத்தனை வேகமானவன், அதிகாலையிலே வேலையை துவங்கி விட்டான் போலா.. வெட்டிய மரதுண்டங்கள் இங்கு இருக்கிறது வெட்டிணவர்களை காண வில்லையே... இது என்ன புது வலி தலைக்குள் மூச்சு முட்டும் படி வேறு இருக்கிறதே... இத்தனை நேரம் பரபரப்பாய் இருந்தா ஊரில் நிசப்தம் குடியேறியது எதனால், என் கவனம் வீட்டின் தொலைக்காட்சி ஒலியில் சாய்ந்தது
தொலைக்காட்சியில் : இன்று திடீரென்று ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை விரிவடைய துவங்கி இருப்பதாக தகவல்கள் வர துவங்கி இருக்கிறது, இதன் விலைவாக மரங்கள் அற்ற பகுதியில் ஆக்சிஜென் அளவு குறையும் என்றும், நேரடியாக சூரிய வெட்பம் தாக்கும் அபாயம் இருப்பதால், மக்கள் மரங்கள் சூழ் பகுதியில் தஞ்சம் அடைய கேட்டு கொள்ளப்படுகின்றனர், உயிர் இழப்பு அபாயங்கள் பெரியளவில் எதிர்பாக்கப்படுவதாக ஐ நா அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது... உயிர் இழப்பை தவிர்க்க மக்கள் தயவுசெய்து மரங்களின் கீழ் தஞ்சம் புக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்... ஒரு முதிர்ந்த மரம் 2 நபர்களுக்கான பிராண வாயுவை கொடுக்கும் தன்மை உடையது, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரு மரங்களாவது இந்த சூழ்நிலையில் காக்க தேவைப்படும் என்று ஐநா கூறியுள்ளது, இந்த அறிக்கை அடுத்து நாட்டில் ஆங்காங்கே மரங்களை கைப்பற்ற கொலைகளும் கலவரங்களும் நடக்க துவங்கி உள்ளது, மக்கள் கூட்டம் கூட்டமாய் அருகில் உள்ள காடுகள் மற்றும், மலைபகுதி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.. இதனால், மலைவாசி மக்களும், காட்டில் வசிக்கும் ஆதிகுடிகளும் தடுப்புகள் ஏற்படுத்தி மக்கள் வரவை தடுக்க முயல்கின்றனர், விலங்குகள் கூட்டம் கூட்டமாய் ஒற்றை இடத்தில் சேர துவங்கி உள்ளனர்... இதனால் விலங்குகளாலும் மக்கள் கொள்ளப்படும் ஆபாயம் அதிகரித்துள்ளது... அதோடு ஆக்சிஜென் சிலிண்டர்களை ஒரு பக்கம் பதுக்க துவங்கி உள்ளனர்... அதோடு ஆக்சிஜென் சிலிண்டர் விலை 10லட்சங்களை தாண்டி விற்பனை ஆகிறது.. இதனால் பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழக்கூடிய சூழல் உருவாகி உள்ளது... ஏழைகள் கொத்துகொத்தாய் சாகும் கொடூரம் உலகெங்கும் அரங்கேர துவங்கி உள்ளது, இதுவரை உலகில் 10 கோடி மக்கள் உயிர் இழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, இன்னும் சிலநிமிடங்களில் அது நூறு கோடியை கடக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது...
தொலைக்காட்சி அலறல் செவிகளில் மரண ஓலமாய் எழுந்தது... இதோ உலகின் முடிவு என் கண்கள் அதை பார்க்கிறது... இத்தனை நாள் இல்லாமல் என் மரம் போனதும் என் மரணம் வருகிறது... ஐயோ என் குடும்பம் என்னானது... இதோ தாய் மூச்சு முடிந்து கிடக்கிறாள்... நீயும் மரமும் ஒன்றாய் இந்த வீட்டில் நுழைந்ததாய் சொன்னாய்... நான் மரத்தை கொன்றேன் நீயும் உடன் சென்றுவிட்டாய.. என்னைவிட மரம் உன்னை அதிகம் நேசித்த்து விட்டதோ... வெறும் மரத்தின் அன்பில் கூட நான் தொற்றுவிட்டேனா...? என் அன்பு பெரிதில்லையா அம்மா... என் மனம் அரன்றுகிறது, என்னைவிட மரம் உயர்ந்ததுதான்... எனக்கு சுவாசம் கொடுத்த உனக்கும் சேர்த்து சுவாசம் கொடுத்த பிரபஞ்ச தாய் மரம், அவளை கொன்றது பாவம் தான், ஆனால் அதற்கு தண்டனை என்னை கொள்வது தானே.. தாய் என்ன செய்வாள் தனையனின் தவறுக்கு...
இதோ என் கண்களும் சொருகுகிறது, என்னையும் மரணம் ஆற தழுவுகிறது... மரமே நீ என்னை விட்டு என் தாயை பிரித்தால் ஆனால் பார் என் தாய் குரல் கேட்கிறது சொர்க்கத்திலுருந்து... என்னையும் அழைக்கிறாள் நானும் செல்கிறேன்... உன்னை வீழ்த்திய பாவத்திற்கு நரகம் கேட்கிறேன்... என் தாயை கொன்ற பாவத்திற்கு அதனினும் கொடுமையான இடம் வேண்டுவேன்... வருகிறேன் இயற்கையே என்னை மன்னித்து விடு...
அம்மா : எரும மாடு இன்னுமா தூங்குற எழுந்துரு உன் பிரண்ட் வந்துருக்கான் பாரு மரத்தை வெட்ட ஆள கூட்டிட்டு... வேண்டாம் சொன்னாலும் கேக்குறதுல...வான ஒசர மரம் என்ன பாவம் பண்ணுச்சோ இவன் கண்ணுல விழுந்துருக்கு... இதோட சேர்த்து அதையும் புள்ளைய வளத்த, இப்போ ஒண்ணுத சாய்க்க இன்னொன்னு வந்து நிக்குது... டேய் எழுந்து தொலை ஆள் வந்துருக்கு பாரு...
எது இவ்வளவும் கனவா... ஆத்தாடி... என்ன கொடூரம்... டேய் மரத்தை வெட்டிடாதாடா... இதோ வந்துட்டான்...
முற்றும்...
நான் விஜய்
No comments:
Post a Comment