Saturday, 21 May 2022

வெண்மணி : நெஞ்சில் நின்ற தீ


3 வருடங்கள் முன்பு குஜராத் கலவரம் புத்தகம் படித்து அதன் வலியில் இருந்து மீள பல மாதங்கள் எடுத்துக்கொண்டேன்.. அப்படியான ஒரு வலியை மீண்டும் புகுத்தி இருக்கிறது இந்த புத்தகம்... புத்தகம் குறித்து பார்ப்பதற்கு முன்பு ஆசிரியர் பற்றி பேசுவது மிக முக்கியமாகபடுகிறது..

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திருமதி. மைதிலி அவர்கள் ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவில் சென்று படித்து, அந்த கனவு தேசத்தில் ஐ. நா. அமைப்பில் இந்திய தூதரகத்தில் பணிபுரிந்தவர்... கியூபாவின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, அமெரிக்கா அரசுக்கு தெரியாமல் அங்கு பயணித்து, அதன் புரட்சியின் தாகத்தில், தனக்கான இடம் இதுவல்ல என்று உணர்ந்து இந்தியாவிற்கு ஓடிவந்து புழுதியிலும், வரப்புகளிலும் நடந்து இந்த மண்ணுக்கான விடுதலையை தேடி, எழுதி, பேசி, போராடி ஒரு முன்னோடி பெண்ணாய், பாரதியின் புரட்சி மகளாய் என் மனகண்ணில் ஒளிருகிறார்...

சத்தியத்தில் இதுவரை எந்த ஆசிரியர்க்கும் நான் இவ்வளவு பெரிய உரை இதுவரை எழுதியதில்லை, இவரை பற்றி எழுதாது இந்த புத்தகத்தை குறித்து பேசுவது கொஞ்சமும் நியாயம் சேர்க்காது என்பதாலே அவரை கொண்டே தொடங்குகிறேன், மைதிலி அவர்கள் எழுதியா 7கட்டுரைகளின் மொழிபெயர்பே இந்த புத்தகம் ஆகும், இதில் கடைசி தலைப்பு அவரே நேரடியாக எழுதியது...

இனி புத்தகத்திற்குள்...

ஒரு சமூகம் தாழ்ந்தது ஒன்று உயர்ந்தது என்று சொல்லும் ஐயோக்கியா நிலைமை தான் இன்றைய அணைத்து சமூக பிரச்சனைகளுக்கும் காரணம்... ஒரு கிராமம் எரியுட்டபடுகிறது, 44 உயிர்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறது, அரசோ, வேறு எந்த அமைப்போ நீதியை தேடி தருவதற்கு பதில், அவர்கள் எதனால் கொள்ளப்பட்டார்கள் தெரியுமா என்று கொலைக்கான நியாயம் பேசுகிறது... என்ன காரணம் இறந்தவர்கள் யார் ஒன்றும் அறியாத குழந்தைகள், இளம் பெண்கள், முதிர் ஆண்கள், வாயோதிக பாட்டிகள், இல்லை அவர்கள் அரிஜனங்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அதனால் அவர்களை கேக்க நாதி இல்லை இந்த நாட்டில்...

சமத்துவம், சமதர்மம் பேசும் ஒரு கட்சியின் ஆட்சியில் நடந்த கொடூரம் தான் கீழ் வெண்மணி சம்பவம், எதற்க்காக இந்த கொலைகள், உழைத்த சம்பளத்தை உயர்த்தி கேட்டதற்கு என்பது பொதுவான கருத்து... நேற்றுவரை அடிமையாய் இருந்தவன், பின் வாசலில் கைகட்டி சேவகம் பண்ணவன், இன்று எதிர் கேள்வி கேட்கிறான், முன் வாசலில் செருப்போடு வந்து நிக்கிறான், குடியானவன் தெருவில் போராடுகிறான், அதாவது இங்கு பிரச்சனை கூலி உயர்வு அல்ல இது, ஒரு சமூக எழுச்சியை கொள்ளும் துணிவு, அடிமையை அடிமையாகவே வைக்க செய்யும் பிரயர்த்தனம், இதற்கு ஆதரவு யார் நம் வாழ்க்கை இவர்கள் மாற்றி விடுவார்கள் என்று நம்பிய அரசியல்வாதிகள்,

வெறும் கீழ்வெண்மணி கதை மட்டுமல்ல இந்த புத்தகம் பேசுவது, ரத்தினகிரி கொடுமைகளை சொல்கிறது, காருக்குடி மக்கள் தங்கள் சவங்களை புதைக்க இடுகாடு கேட்டதற்கு, போராடினால் வாழ்க்கை முழுக்க வழக்குகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கலெக்டர்ரால் மிரட்ட படும் கொடூரத்தையும் பேசுகிறது...

இவைகள் 70களில் நடந்துவிட்டது இப்பொது என்ன இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம், பொள்ளாச்சி சம்பவத்தை மறந்துவிடாதீர்கள் இன்னும் இந்த ஆண்டைகளின் ரத்தவெறி அடங்கவில்லை, தொடர்ந்து போராடுவது, பாதிக்கப்படும் மக்களுக்கு கைகோர்த்து நம்பிக்கை அளிப்பதுதான் இந்த பிரச்சனைகளை தீர்க்கும், என்பதைத்தான் இந்த புத்தகம் ஆணிதாரமாக பேசுகிறது... நிலவுடய்மை என்னும் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தனை கொடூரங்களை ஒரு பிரிவு மக்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் புள்ளிவிவரத்தோடு அலசுகிறார் ஆசிரியர்.. உண்மையில்

வெண்மணி நெஞ்சில் ஓங்கி எரிந்து கொண்டிருக்கும் தீ தான்...

புத்தகம் : வெண்மணி : நெஞ்சில் நின்ற தீ
ஆசிரியர் : மைதிலி சிவராமன்
பக்கங்கள் : 96
விலை : 90
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

No comments:

Post a Comment