Thursday, 5 May 2022

சீதையின் துக்கம், தமயந்தியின் ஆவேசம்

 63/100


#NaanVijay


#நான்விஜய்


முதலில் இந்த புத்தகத்தை ஒரு நாவல் என கருதி தான் எடுத்தேன், முன்னுரையில் தெரிந்தது இது நாட்டார் வழக்கு பற்றிய புத்தகம் என்று... இன்னும் படிக்க படிக்க ஆச்சரியங்கள் கூடிக்கொண்டே போனது.. இது நம்மூர் நாட்டார் வழக்கை பேசிய புத்தகம் என்றாலும் இதில் வரும் மனிதர்கள் பாரதம், ராமாயணம் சார்ந்தவர்கள் என்பது


இந்த நூல் 4 மனிதர்களை குறித்து அதிகமாக பேசுகிறது, அரவான், கர்ணன், அரிச்சந்திரன், நளன், அதோடு சீதா தேவியும் இணைந்து கொள்கிறார்..


அரவான் என்னும் திரைப்படம் பார்க்கும் போது இதுதான் அவனது வாழ்வியல் அவன் ஒரு குற்றபரம்பரை சேர்ந்தவன் போல என நினைத்து இருந்தேன், அதை உறுதி படுத்துவது போல காவல் கோட்டம் நாவளில் படித்த சில பக்கங்களும் மனதில் ஓடின, ஆனால் கூத்தாண்டாவர்க்கும், அரவானுக்கும் இருக்கும் தொடர்பும், அவனை பற்றிய நாட்டார் கதைகளும், அவனது பிரம்மாண்ட அமைப்பை விவரிக்கும் பக்கங்களும் அதிசயம் மிக்கவை, இதுவரை பாரத கதைகளில் கர்ணனை போல என்னை ஈர்த்தவர்கள் யாரும் இல்லை, ஆனால் இந்த புத்தகத்திற்கு பின்பு அரவானின் பெரிய ரசிகனாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம்..


உலகம் ஒரு பார்வையில் பார்க்கும் போது தமிழ் மக்கள் வேறு ஒரு கோணத்தில் பல சம்பவங்களை அணுகியதை நான் உணர்ந்திருகிறேன்.. அப்படியாய் பாரத, ராமாயண கதைகளை பிறரோடு ஒப்பிடும் போது தமிழர்கள் கடத்திய செவி வழி கதைகளும், வில்லுப்பாட்டுக்களும், தோர்பாவை நிகழ்வுகளும், தெருகூதுக்களும் வேறு ஒரு ஒரு பார்வையை முன் வைக்கின்றனர் அப்படி அவர்கள் கொண்டாட நினைத்த மனிதர்களும் மற்றவர்களில் தாழ்வானவர்கள் என்று கருத்தப்பட்டவர்களும், மக்களுக்காய் தியாகங்கள் செய்தவர்களும், அநீதியை பொறுத்துக்கொண்டவர்களும் ஆவர்.. அப்படி பட்டவர்கள் தான் கர்ணன், அரவான், தமயந்தி, அரிச்சந்திரன், சீதை..


அரவான் சுற்றிய கதைகள் பல பாரத்தயிலேயே பலவாறு இருக்கிறது ஒன்று அவன் போற்கு முன்னே களப்பலி ஆனான் என்று இன்னொன்று போரில் 8ம் நாள் இறந்தான் என்றும், துரியோதனன் வதைத்தான் என்றும், கிருஷ்ணனே சூழ்ச்சி செய்து கொன்றான் என்றும் இப்படி பலவகை கதைகள் இருக்கிறது, இதில் பெரும்பாலும் கதைகள் அவனுக்கு மரணத்திற்கு முன்பு திருமணம் நடந்தது என்பதை கூற்கிறது, அதில் ஒரு கதை கிருஷ்ணனே பெண்ணாகி அவனை மணம் செய்து கொண்டான் என்றும் அவன் இறப்பிற்கு பின் மாரில் அடித்துக்கொண்டு அழுது புலம்பினான் என்றும் வருகிறது இதுவே இன்று வரை கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்று வருகிறது, அரவான் என்னும் பெயரில் இருந்துதான் 3ம் பாலினத்தவர் அரவாணி என்னும் பெயரை அடைந்திருகின்றனர்... இப்படி 3ம் பாலினத்தவரை அரவாணி என்று கூப்பிடுவதால், அவர்களை மத அடையாளங்களுக்குள் சுருக்கும் வேலை இருப்பதை அறிந்த பலர் போராடி இன்று திருநங்கை, திருநம்பி என்று அழைக்கும் சொல்பதம் வந்திருக்கிறது, இப்படி அரவானின் கதையில் 3ம் பாலினதவரின் செய்திகளையும் படங்களையும் ஆசிரியர் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு...


கர்ணனை நமக்கு நன்றாக தெரியும், அவனின் மீது கொனரப்பட்ட தீண்டாமை கொடுமைதான் தெருகூத்து கலைஞர்கலை அதிகம் பேசவைத்திருக்கிறது... தமிழகத்தில் மட்டும் 25 வகையான பாரத கதைகள் கர்ணனை வைத்து சொல்லப்பட்டிருக்கிருக்கிறது, இதில் எட்டில் எழுதமல், வாயிவழியே பேசி வழக்கொழிந்து போனவை இன்னும் ஏராளம் யாரெல்லாம் கர்ணனின் சாதியை காட்டினர் என்றால் வில்லிபாரதத்தில் அர்ஜுனன் மனைவி அல்லியை தவிர அனைவரும் அவனை அவனது ஜாதி பற்றி பேசி அவமானபடுத்தியுள்ளனர், துரியோதனன் ஒரு சமயத்தில் தன் மகள் கர்ப்பதிற்கு காரணம் கர்ணன் என்று முடிவு செய்து உன் ஜாதி புத்தியை காட்டிவிட்டாய் என்றும் திட்டி இருப்பதாக கதைகள் இருப்பதை ஆசிரியர் விளக்குகிறார்... இப்படி ஒடுக்கப்பட்ட ஒருவனை தமிழினம் கொண்டாடுவது இயல்பு


அரிச்சந்திரன் நாடலும் மன்னன் பொய்யுறையாதான் இவனை கொண்டு வசிட்டர்க்கும், விஷ்வாமித்திரர்க்கும் ஏற்படும் போட்டியே அரிச்சந்திர புராணம், தமிழகத்தில் மட்டும், வில்லுபட்டுக்காரர்கள், தோர்பாவை கலைஞர்கள், தெருகூது கலைஞர்கள் 14 வகை அரிச்சந்திர புராணம் பாடுகிறார்கள், இதிலும் பல வழக்கில் கிடைக்காத கதைகள் இருக்கின்றன, விசுவாமித்திரர் பூமியை உதைக்க அதில் இருந்து 2 பெண்கள் பிறக்கின்றனர் பிறப்பில் இவர்கள் 5ம் வர்ணத்தினர் ஆவர், இவர்களை அரிச்சந்திரனிடம் அனுப்பி அவரை கலைகளால் ஈர்த்து 2 வரம் கேட்க சொல்கிறார்... ஒன்று அவரது வென்கொற்ற குடை அல்லது ஒரு இரவு இவர்களுடன் உறவு கொள்ளுதல் என்று.. அரிச்சந்திரன் இவர்களின் கலையில் மயங்கி வரம் கேட்க சொல்ல, இரண்டையும் மறுக்கிறான், அதோடு பரப்பெண்களுடன் நாய் கூட உறவுக்கொள்ளது, நான் அதை செய்ய மாட்டேன் என்று கூறி அவமானப்படுத்தி அனுப்புகிறான், இதை அறிந்த விசுவாமித்திரர், அவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட, அதை தவிர வேறு எது சொன்னாலும் செய்கிறேன் என்று வாக்கு கொடுக்க, அவன் நாடு பதவி எல்லாவற்றையும் இழந்து ஒரு சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாய் போகிறான்  இதன் பின் பல கதைகள் நடந்து இறுதியில் தன் மனைவியை கண்டுபிடித்து அவன் பொய்யுறையாத நல்லோன் என்று தேவர்கள் வாழ்த்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருகிறார்கள்... இந்த கதை தமிழகத்தில் வரும் போது, இதை கேட்கும் மக்கள் அனைவரும் கீழ்நிலை மக்களாய் இருப்பதை உணர்ந்த கலைஞர்கள் கதையில் சிறு மாற்றங்கள் செய்கின்றனர், குறிப்பாக பரப்பெண்களோடு உறவு கொல்லமாட்டேன் என்பதை நீக்கி, அவர் ஒரு ஏகபத்தினி விரதன் அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று திரிகின்றனர்... இதனால் அரிச்சந்திரன் தமிழகத்தில் நிலைபெறுகிறான்... ஜாதியை பற்றி பேசி ஒதுக்கிய அரிச்சந்திரன் இன்று அந்த ஜாதி மக்களுக்கே கடவுளாகி இருப்பது முரண்களின் உச்சம்


தமயந்தி, திரவுபதி, சீதை மூவரும் தமிழகத்தில் கைவிடப்பட்ட பெண்களின் ஆதரஸ்ஸமாய் நிற்கின்றனர், அடங்கிய பெண்களாய் புராணங்களில் வரும் பெண்கள், நாட்டார் வழக்குகளில் ருத்ர தேவியாய் மாறுகின்றனர், அவர்களின் நியாயங்களை இந்த கலைஞர்கள் பேச வைக்கின்றனர்... தமயந்தி பல நாள் கழித்து நளனை கண்டுபிடிக்கிறாள், அப்போது நளன் சந்தேகமுறுகிறான், அங்கு தமயந்தி, குதிரைகளை அறிந்த உனக்கு என்னை அறிய அறிவில்லாமல் போனதே என்று கூறுகிறாள், வசை சொற்களை வீசுகிறாள், கோபத்தின் உச்சத்தில் திட்டி தீர்கிறாள், இதெல்லாம் புராணங்களில் வருவதில்லை, அதை போல, சீதையின் நிலையை அறிந்த சத்ருக்கன் மனைவி சுபகீர்த்தி ராமனை வசைமாரி பொழிகிறாள், நீயெல்லாம் ஒரு மனிதான என்று கடவுள் என்று அறிந்தும் திட்டி தீர்கிறாள்... இதெல்லாம் தமிழக நாட்டார் வழக்கு பாடல்கள், கலைகளில் மட்டுமே சாத்தியம்


இப்படி ஒவ்வொரு கதையின் பின்புலத்தையும் தேடி அலைந்து பல அறிய தகவலை கொண்டு இந்த புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் ஆசிரியர்... 2 பெரும் புராணங்களின் மறுப்பக்கத்தை அறிய இந்த புத்தகம்மிக முக்கியமானவை.


புத்தகம் : சீதையின் துக்கம், தமயந்தியின் ஆவேசம்


ஆசிரியர் : அ. கா. பெருமாள்

பக்கங்கள் : 192

விலை 225

2 comments:

  1. 🔥🖤அருமையா இருக்கு.

    ReplyDelete
  2. சிறப்பு தலைவா

    ReplyDelete